முத்தம் - 03
பெராலிசிஸ் அட்டாக்கால் ஹாஸ்பிடலில் சொக்கலிங்கம் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் உடலின் இடது பக்கம் முழுமையாக செயல்படாமல் போய்விட, ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள்.
செய்தி கேள்விப்பட்டு கர்ணனும் உடனே வந்துவிட்டான். அவன் முகம் மிகவும் இறுகிப் போயிருந்தது. யாழினியைத் தவிர யாரும் அவனை நெருங்கவில்லை. நெருங்கவும் அனுமதிக்கவில்லை அவன்.
அன்றே வீட்டில் நடந்த பிரச்சினைகளை யாழினி தெரிவித்திருக்க, அனைவரின் மீதும் அவனுக்கு கோபம். எப்படி தந்தையைப் பற்றி அப்படி பேசலாம் என ராஜலட்சுமியின் மீது ஆத்திரம், சுமித்ராவை பேசவிட்டு வேடிக்கை பார்த்ததோடு தந்தையை எதிர்த்து பேசிய சுந்தரை அடித்து நொறுக்கும் அளவிற்கு ஆவேசம் வேறு. ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல் இறுகிப் போய் நின்றான் கர்ணன்.
இப்போது வீட்டினருக்கு சொக்கலிங்கம் படுக்கையில் விழுந்தது கூட பெரிதாக தெரியவில்லை. கர்ணன் வந்ததுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது.
“இவனுக்கு யார் சொன்னா? இத்தனை வருசம் வராதவன், இப்போ ஏன் வந்தான்..?” என ராஜலட்சுமி மகனிடமும், மகளிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.
“எல்லாம் நீங்க பெத்து வச்சிருக்கீங்களே ஒருத்தி, அவதான் ஆளுக்கு முன்னாடி அவனுக்கு சொல்லிருக்கா? அவன் அமைதியா இருக்குறதைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு..” என சுந்தர் சொல்ல,
“அவனுக்கு பயப்படனும்னு அவசியமே இல்ல. நாம இத்தனை பேர் இருக்கோம். அவன் ஒருத்தன்.. அப்படி என்ன செஞ்சிடுவான்.. பார்த்துக்கலாம்..” என வனிதா சாதாரணமாக சொல்ல, சுந்தருக்கு கரணனை அப்படி சாதாரணமாக எடுக்க முடியவில்லை.
தன்னைவிட ஆறு வயது பெரியவன். இன்னும் திருமணம் ஆகவில்லை. அதுவே சுந்தருக்கு யோசனைதான். எப்படி இத்தனை வயது வரை திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்று. அவ்வளவு கட்டுப்பாடாக இருக்கிறான் என்றால் அவனிடம் முதிர்ச்சியும் அளவுக்கதிகமாகத்தானே இருக்க வேண்டும்.
அவனை சாதாரணமாக எடை போட்டு விட்டோமோ என யோசனை வேறு வந்தது. உண்மைதான்.. அனைவருமே அவனை மிகவும் சாதாரணமாக எடை போட்டுத்தான் வைத்திருந்தனர்.
சொக்கலிங்கத்திற்கு அது தெரியாதா என்ன? அதனாலே வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை ஆதி முதல் அந்தம் வரை அனைத்தயும் சொல்லி விடுவார்.
மகனிடம் பேசும் போதெல்லாம் ‘அவர்களிடம் நீ கவனமாக இரு’ என்பது மட்டும்தான் அவரின் முதலும் கடைசியும் வார்த்தையாக இருக்கும்.
அப்போது ‘அப்பா பயத்தில் பேசுகிறார்’ என்று மட்டும் தான் கர்ணன் நினைத்தான். ஆனால் தான் இருக்க சுந்தருக்கு பெண் பார்த்தது அவனை யோசிக்க வைத்தது.
அப்போதிருந்தே யாழினியிடம் பேசும் போது வீட்டுப் பிரச்சினைகளை ஓரளவிற்கு கேட்டு கொள்வான்.
ராஜலாட்சுமி வாரம் ஒருமுறை பேசுவார், அதில் அக்கரை சிறிதும் இருக்காது. தந்தையைப் பற்றி புகார்தான் அதிகமாக இருக்கும்.
சுந்தரும், வனிதாவும் அவனிடம் கடைசியாக எப்போது பேசினார்கள் என்ற நினைவே இல்லை.
சொக்கலிங்கமும், யாழினியும் நினைத்த நேரம் போன் செய்து பேசுவார்கள்.
இதையெல்லாம் யோசித்தபடி நின்று கொண்டிருக்கும் போதுதான் ராமசாமியும், சிவகுருவும் வந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் ராஜலட்சுமிக்கு கோபம் வர, சிவகுருவை விட்டுவிட்டு ராமசாமியிடம் “உங்களுக்கு இப்போ திருப்தியா? உங்களாலத்தான் என் புருசன் இன்னைக்கு படுத்த படுக்கையாய்ட்டார். அன்னைக்கு திருப்பூர் வந்துட்டு வந்ததுமே படுத்தவர்தான். என்ன நடந்துச்சுனு சொல்லுங்க. என்ன செஞ்சீங்க என் புருசனை..” என கத்த, ராமசாமிக்கு சர்வமும் ஒடுங்கிவிட்டது.
‘என்ன பேசுகிறார்கள் இவர்கள்?’ என அதிர்ந்து நிற்க,
“என்னம்மா பேசுறீங்க? என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க..?” என்ற சிவகுருவிடம் வந்த கர்ணன்,
“எதுக்கு குரலை உயர்த்துறீங்க.. பொம்பளைங்ககிட்ட இப்படித்தான் பேசுவீங்களா?” என அதட்ட, சிவகுருவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘இல்லப்பா ராமுவை பேசவும்,..” என சிவகுரு சொல்ல,
“அவங்க கோபத்துல பேசுறாங்க. அதுக்கு அவர் பதில் சொல்லட்டும்.. நீங்க் அகுரலை உயர்த்தாம பதில் சொல்ல முடிஞ்சா சொல்லுங்க, இல்ல கிளம்புங்க..” என அதே குரலில் கூற, இருவருக்கும் அங்கு நிற்கவே பிடிக்கவில்லைதான்.
ஆனால் உள்ளே இருப்பது அவர்களின் நண்பராச்சே, அதோடு அவர்களிடம் சொல்லவும் ஒரு செய்தி இருந்ததே.. அதனால் “தம்பி.. அவங்க ராமுவை தப்பா நினைச்சு பேசுறாங்க..” என்றவர், “அன்னைக்கு லிங்கா கிளம்பி போன பிறகு என்ன நடந்தது தெரியுமா? கம்பெனில ஃபைர் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு, குடவுன் முழுக்க தீ பிடிச்சு சரக்கெல்லாம் எரிஞ்சிடுச்சு. கிட்டத்தட்ட ஒரு கோடி மதிப்புள்ள சரக்கு.. அது இன்னும் ஒரு வாரத்துல நாம எக்ஸ்போர்ட் பண்ணனும்.. இல்லைன்னா அவன் நம்ம மேல கேஸ் போடுவான். பணமும் ரெண்டு மடங்கா கொடுக்கனும். அதையெல்லாம் நானும் ராமுவும் பேசி சரி பண்ணிட்டு வந்துருக்கோம். அதை லிங்காகிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்துருக்கோம்..” என சிவகுரு சொல்ல,
“நினைச்சேன்.. இப்படித்தான் ஏதாவது நடந்துருக்கும்னு நினைச்சேன்..” என ஆவேசமான ராஜலட்சுமி, “அவரை ஏமாத்தை நீங்க போட்டத்திட்டம் தான இது.. நான் அந்த கம்பெனி ஆரம்பிக்கும் போதே சொன்னேன். யாரையும் நம்பாதீங்கன்னு கேட்கவே இல்ல. இப்போ இவங்களே ஏதோ பண்ணிட்டு, தீ பிடிச்ச்சிருச்சுன்னு வந்து சொல்லி ஏமாத்துறாங்க. அது தெரிஞ்சுதான் உங்க அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்துருக்கு..” என வாய்க்கு வந்ததை பேசி, இத்தனை நாள் இவர்கள் மேல் இருந்த வன்மத்தைக் கொட்டிவிட்டார்.
ராஜலட்சுமியின் பேச்சில் இரு ஆண்களும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, “அம்மா போதும்.. எந்த நேரத்துல என்ன பேசுறீங்க. அவங்க நமக்கு உதவி செஞ்சிருக்காங்க..” என யாழினி பேச,
“நீ வாயை மூடு..” என சுந்தர் தங்கையை அதட்ட,
“இங்க பாருங்க.. எங்க அப்பாக்கிட்ட இருந்து இன்னும் என்ன என்ன சொத்தெல்லாம் வாங்கிருக்கீங்கன்னு சொல்லிடுங்க. நாங்க கேஸ் கொடுத்தா உங்களுக்குத்தான் அசிங்கமா போயிடும்..” என வனிதாவும் பேச,
“முதல்ல அதை செய்யனும்.. அப்போதான் உங்க அப்பா என்ன கூத்தெல்லாம் பண்ணிருக்காருனு தெரியும்..” என்ற ராஜலட்சுமியை கூர்மையாக பார்த்தான் கர்ணன்.
பின் “நீங்க கிளம்புங்க.. அப்பாவை ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணதும் சொல்றேன் வந்து பாருங்க. அந்த கம்பெனி பத்தி நாளைக்கு பேசலாம். நான் நாளை திருப்பூர் வரேன். இப்போ கிளம்புங்க. இங்க நடந்ததையோ, இவங்க பேசினதையோ மனசுல வச்சிக்காதீங்க..” என்ற கர்ணனிடம், ‘சரி’ என்று அமைதியாகவே சென்றுவிட்டனர் ராமசாமியும், சிவகுருவும்.
அவர்கள் கிளம்பும் வரை அமைதியாக இருந்த கர்ணன், ராஜலட்சுமியைப் பார்த்து, “அப்படி என்ன கூத்தெல்லாம் பண்ணாரு..? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.?” என இறுக்கமாக கேட்க, ராஜலட்சுமிக்கு மூளையில் மணியடித்தது.
‘அய்யோ இவன் இருக்குறதை மறந்து பேசிட்டேனே’ என நொந்து கொண்டவர், “அது அதெல்லாம் ஒன்னுமில்ல தம்பி.. அவங்களை பார்த்ததும் ஒரு கோபத்துல அப்படி பேசிட்டேன்..” என திணற,
“ஹ்ம்ம்.. அப்பா இப்படி இருக்கும் போது அவரை யாரும் பேசக்கூடாது.. அவர் வந்து சொல்லும் போது கேட்டுக்கோங்க. வர்ரவங்க போறவங்ககிட்ட எல்லாம் இனி இப்படி பேசவேக்கூடாது..” என நிறுத்தியவன், சுந்தரையும் வனிதாவையும் பார்த்து “இத்தனை வயசாகிடுச்சு. பெரியவங்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கனும்னு தெரியாதா? ஹான் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க..” என அதட்ட,
“அதை நீ சொல்லாத.?” என வனிதா வாய் துடுக்காக பேச,
“ஏய்..” என அதட்டியவன் “உன்னை விட ஏழு வயசு பெரியவன், அதை மனசுல வச்சிப் பேசு. மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம். அண்ணன்னு கூப்பிட பிடிக்கலன்னா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. ஆனா இன்னொரு முறை இப்படி பேசினா, கண்டிப்பா பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன். கன்னம் பழுத்துடும்.. புரியுதா.?” என சத்தம் போட,
“அவ ஏதோ ஆதங்கத்துல பேசிட்டா விடு தம்பி.” என ராஜலட்சுமி சமாதானம் செய்ய,
“என்ன ஆதங்கம்.. இந்த பழக்கம்தான புகுந்த வீட்டுலயும் வரும். அங்கேயும் இப்படித்தான் பேசுறாளா..?” என கேட்க
“இல்ல.. இல்ல அப்படியெல்லாம் பேச மாட்டா.?” என ராஜலட்சுமி பதட்டமாக கூற,
“அப்போ ஏன் எங்கிட்ட இப்படி பேசுறா..? என்ன பிரச்சினை இவளுக்கு.. இல்ல நான் வந்ததுதான் பிரச்சினையா? நானும் கவனிச்சேன், நான் வந்ததுல உங்க யார் முகமும் சரியில்ல.. அப்படித்தான..” என்று கவனித்ததை கூற,
“அப்படி எதுவும் இல்லண்ணா.. அப்பாவுக்கு சடனா இப்படி ஆகவும், அந்த அதிர்ச்சியிலதான் எல்லாரும் இருக்கோம்..” என சுந்தர் தடுமாற, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், தந்தையின் கையைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்த யாழினியை அழைத்தான்.
“யாழிமா இங்க வா.” எனவும்,
“எனக்கு உங்க யாரையும் பிடிக்கல. நீங்க எல்லாரும்தான் அப்பா இப்படியாக காரணம். எல்லாரும் அவர் பணத்துக்காகத்தான் இப்படி சண்டை போட்டுக்குறீங்க, அவரை யாருமே நினைக்கல.. உங்க யாரையுமே எனக்கு பிடிக்கல..” என தேம்பி தேம்பி அழ,
“ஏய் என்னடி பேசுற..?” என்ற ராஜலட்சுமியை தன் பார்வையால் அடக்கிய கர்ணன்,
“கூப்பிட்டா வரனும்..” எனக் கோபம் குறையாத குரலில் கூற,
“ம்ம் ஹ்ம்ம் ப்பா…” என தேம்பியபடியே வந்த தன் குட்டித் தங்கையை அனைத்துக் கொண்டவன் “ஒன்னுமில்ல யாழிம்மா.. அப்பா சரியாகிடுவார். சீக்க்கிரம் நம்மக்கிட்ட பேசுவார். நீ அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியாகுமா என்ன? அப்பாவை யார் பார்த்துப்பா.. என்னை யார் பார்த்துப்பா.? ஹ்ம்ம் சொல்லு.. நான் வந்து ரெண்டு நாளாச்சு.. இன்னும் நல்ல சாப்பாடே சாப்பிடல..” என சோகமாக பேசி தங்கை மனதை மாற்ற முயற்சி செய்தான்.
ராஜலட்சுமிக்கும் சேர்த்துதான் அந்த செய்தி என புரிய, “அப்பாவுக்கு இப்படியாகவும் என்னால வேற யோசிக்க முடியல கர்ணா.. அம்மாவை மன்னிச்சிடுப்பா.. எவ்ளோ வருசம் கழிச்சு வந்துருக்க.. உன்னை நான் யோசிக்கவே இல்ல..” என வருத்தமாக பேச, அதற்கு அமைதியாக நின்றானே தவிர பதில் சொல்லவில்லை.
யாழிதான் “அண்ணா போலாமா?” என்றதும்,
“ம்ம்..” என்றவன் மற்றவர்களிடமும், “நீங்களும் கிளம்புங்க.. ஹாஸ்பிடல்ல எல்லாரும் பார்த்துப்பாங்க..” என்றதும், சுந்தருக்கும், வனிதாவிற்கும் புகைச்சல்தான். ஆனால் அதை அவனிடம் காட்டாமல் தலையை மட்டும் ஆட்டினர்.
“ஹ்ம்ம்..” என்றவன் வெளியில் நடக்க, யாழினியும் அவனோடு நடக்க,
“ரெண்டு பேரும் அவன் போற வரைக்கும் அமைதியா இருந்து தொலைங்க. நீங்க ஏதாவது பேசி, அவன் இங்கேயே இருந்திட போறான்..” என பிள்ளைக்ள இருவரையும் பார்த்து ராஜலட்சுமி அதட்ட,
“க்கும்.. அவன் இங்க இருந்தா மட்டும் என்ன செஞ்சிட முடியும். அவனுக்கு இங்க என்ன தெரியும். எல்லாம் தெரிஞ்சி, பழகி அவன் செய்றதுக்குள்ள இன்னும் நாலு வருசம் போயிடும். அவனால அதெல்லாம் முடியாதும்மா.. நீங்க பயப்படாம இருங்க..” என சுந்தர் அதட்ட, வனிதாவும் அதேயேதான் கூறினாள்.
ஆனால் கர்ணன் ஒரு முடிவோடு வந்திருப்பது இவர்களுக்குத் தெரியவில்லை. தெரியும் போது.?