• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 09

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur

முத்த மழை - 09


“கல்யாணமா? நானா? உங்களயா?” என அதே அதிர்வுடன் வல்லபி கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் வல்லபியையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் கர்னன்.

“இது.. இது நடக்காது.. எனக்கு விருப்பமில்ல..” என்றாள் நொடி தாமதித்து.. அப்போதும் கர்னனிடம் பதில் இல்லை.

“நான் மார்னிங்க் அப்பாக்கிட்ட தெளிவா சொல்லிருந்தேன். இந்த கல்யாணம் வேண்டாம்னு..” என்றாள் திணறிய குரலோடு.

“அப்போ உனக்கு இந்த பேச்சு வார்த்தை முன்னமே தெரிஞ்சிருக்கு.. ஆனாலும் தெரியாத மாதிரி எங்கிட்ட பேசிட்டு இருக்க..” என்றான் தன் பார்வையை மாற்றாமல்.

“அவங்க பேசுறது உங்களுக்கு தெரியாதுனு நினைச்சேன். உங்களுக்கும் இதுல விருப்பம் இருக்காதுனு நினைச்சேன்..” என்றாள் வல்லபி.

அவளுக்கு இந்த பேச்சே பிடிக்கவில்லை.

“ஓ… ஆனா நீயா எப்படி நினைச்ச..? ம்ம் அது எப்படி எங்கிட்ட கேட்டு கிளியர் பண்ணாம நீயா ஒன்ன நினைக்க முடியும்..” என்றான் நிதானமாக.

“அது.. நீங்க தான் ஆல்ரெடி ஆள் வச்சிருக்கீங்களே.. உங்களுக்கு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கவும் இந்த மேரேஜ் பேச்சு உங்களுக்கு விருப்பம் இல்லாம நடக்குதுனு நினைச்சேன்.” என்றாள் எரிச்சல் குரலில்.

“ஓ.. அப்படி..! எனக்கு விருப்பமில்லாத ஒன்னை என்னால செய்ய வைக்க முடியும்னு நீ நினைக்கிறியா?” என்று கிண்டலாக சிரித்தவன், “நீயா நினைக்கிறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது வல்லிக்கண்ணு. அப்புறம் நீ ரொம்ப பாலிஷான வார்த்தையில பேச வேண்டாம். அவ என்னோட கேர்ள் ஃப்ரண்டோ, லவ்வரோ கிடையாது. அவ என்னோட பெட் ஷேரிங்க் பெர்சன். அவ கூட ஒன் யேரா லிவிங்க்ல இருந்தேன். இப்போ இல்ல.. வேற எந்த பொண்ணோடவும் ரிலேஷன்ஷிப்ல இல்ல..” என்றான் அதே நிதானத்துடன்.

“வாட்.. என்ன பேசுறீங்க.. இவ்ளோ தப்பையும் பண்ணிட்டு எப்படி எங்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்பீங்க.” என்றாள் ஆத்திரமாக.

வல்லபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏறிக் கொண்டிருந்தது.

“ஹலோ வல்லிக்கண்ணு மேடம்.. இது தப்புன்னு யார் சொன்னா? என்னோட வயசென்ன தெரியுமா? எனக்கும் ஹார்மோன் வேலை செய்யும். பின்ன அதை எப்படி நான் சாக்ரிஃபைஸ் பண்ண. இதெல்லாம் அங்க சகஜம். அப்படி பார்த்தா நான் ஒரே பொண்ணு கூடதான் பெட் ஷேர் பண்ணிருக்கேன். அதுக்கே நீ என்னை பாராட்டலாம்..” என்றான் கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.

“போதும் நிறுத்துங்க.. எங்கிட்ட இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்லையா? இவ்வளவையும் சொல்லிட்டு என்னை கல்யாணம் பண்ண கேட்குறதுக்கு உங்களுக்கு அசிங்கமா இல்லையா?” என எரிக்கும் விழியோடு கேட்டவள் “எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். ஒழுக்கம் தவறின ஒருத்தரோட என்னால வாழ முடியாது. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..” என்றாள் கோபமாக.

“ஹான்.. ஒழுக்கம்… ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. ஒழுக்கம் தவறின என்கூட உன்னால வாழ முடியாது.. அப்பா.. இந்த டைலாக் எல்லாம் இன்னுமா பேசிட்டு இருக்காங்க. நார்மலா காலேஜ் லைஃப்லயே இப்போ இருக்குற பொண்ணுங்க தன்னோட வெர்ஜினிடிய இழந்துடுறதா சர்வே சொல்லுது.. ஆனா நீ கன்னகிக்கும் மேல டைலாக் விடுறியேமா.. இந்த டைலாக்ஸ்க்கு கண்டிப்பா கைத்தட்டலாம் தான். ஆனா இது ஹாஸ்பிடல் கேன்டீன்.. எல்லாரும் நம்மளையே பார்ப்பாங்க. என்ன பண்ணலாம்.” என நக்கலாக கூறியபடியே தன் மீசையை முறுக்க,

“ஓ.. உங்களுக்கு எப்படி தெரியும். உங்க தங்கச்சிங்க அப்படித்தானா? ஆனா நான் அப்படி இல்ல..” என சொல்லி முடிக்கும் முன்னே அவளை அறைய கையை ஓங்கியிருந்தான் கர்னன்.

வல்லபியும் அப்படி பேச வேண்டும் என்று பேசவில்லை. கோபத்தில் வார்த்தைகள் வந்துவிட்டது.

கர்னனின் இந்த செயலில் வெற்றி பதறி எழுந்து ஓடிவர, வல்லபியோ அதிர்ந்து போய் அவனைப் பார்த்திருந்தாள்.

“நான் இனி இந்த மேரேஜ் பத்தி பேச மாட்டேன். யாருக்கிட்டயும் பேசமாட்டேன். ஆனா நீ வருவ.. நீயா வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்ப..” என்று நிறுத்த, வல்லபியும் வெற்றியும் அவனை திகைத்துப் பார்க்க, “அப்போ உன்னை மாதிரி நான் டைலாக் பேசமாட்டேன். போனா போகுதுனு உன்னை கல்யாணம் செஞ்சிப்பேன்..” என்றவன், வெற்றியைப் பார்த்து “கூட்டிட்டு கிளம்பு, இனி என் முன்னாடி இவ வந்துடக்கூடாது..” என விறுவிறுவென வெளியில் சென்றுவிட,

“என்ன பாப்பா நீ..?” என்ற வெற்றி தளர்ந்துதான் போனான்.

கர்னன் கேட்கும் போதே இவள் சரியென்று சொல்லியிருக்கக்கூடாதா என்றுதான் வெற்றி நினைத்தான். அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளை நினைக்கும் போதே இதயம் சற்று நடுங்கித்தான் போனது.

வல்லபியை எப்படியோ மிரட்டி அவனிடம் வர வைக்க நினைக்கிறான். வெளியில் வர முடியாத ஒரு சுழலுக்குள் வல்லபி மாட்டிக்கொண்டது அவளுக்கு புரிந்ததோ இல்லையோ வெற்றிக்கு புரிந்தது.

கர்னன் என்ன செய்வான் என்று தெரியாமல் வல்லியை எப்படி பாதுகாப்பது என்ற பயமும் சேர்ந்து கொண்டது வெற்றிக்கு.

வெற்றியின் எண்ணங்கள் இப்படி சுழல, வல்லபியோ அவள் கொட்டிவிட்ட வார்த்தைகளை நினைத்து கலங்கிப் போனாள்.

அவன்தான் முட்டாள் போல பேசினால், நானும் அப்படி வார்த்தைகளை விட்டுவிட்டேனே. இனி எப்படி யாழினி முகத்தில் விழிப்பது என யோசித்தவளுக்கு மனதில் ஒரு வித பாரம் ஏறி அமர்ந்து அவளை மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளியது.

இருவரும் இப்படியான யோசனையில் இருக்க, வந்தனா அவர்களிடம் வந்தாள். இருவரின் முகமும் கலக்கமாக இருக்க, “என்ன வல்லி.?” என தோழியிடம் கேட்க,

“ம்ச்.. அவளை அப்படியே விடு.. கர்னன் எங்க இருக்கார்..?” என்றான் அந்த பேச்சைத் தவிர்த்து..

“அவர் கார் எடுத்துட்டு கிளம்பிட்டார். அதனாலத்தான் இங்க வந்தேன்.” என வெற்றிக்கு பதில் சொல்லிவிட்டு, வல்லியிடம் “நீ ஓக்கே சொல்லிட்டியா? உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் வல்லி. இங்க பார் உங்க ரெண்டு பேரையும் நான் போட்டோ எடுத்தேன்..” என அவர்கள் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்கும் போது எடுத்த போட்டோவைக் காட்ட,

“ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க?” என வெற்றி கத்த,

“ம்ச் அண்ணா விடுங்க..” என்றாள் வல்லி சலித்த குரலில்.

“இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க.. கர்னா மாமா எப்படியும் பேசி ஓக்கே பண்ணிடுவார்னு அங்க எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க. அதுதான் நானும் கேட்டேன். நான் என்ன தப்பா கேட்டேன்..” என இருவரையும் முறைத்துவிட்டு போக,

“அண்ணா.. நான் தப்பு பண்ணிட்டேனா?” என்றாள் வல்லி கலக்கமாக.

“ஆம்.” என்று எப்படி சொல்வான். “உனக்கு பிடிக்கல.. அதை சொல்லிருக்க. இதுல என்ன தப்பு இருக்கு.. அப்படியெல்லாம் இல்ல.. ஆனா அவர் அப்படியே விடமாட்டார்..” என்று தீர்க்கமாக சொல்லிவிட, வல்லிக்கும் இப்போது அப்படித்தான் தோன்றியது.

இங்கு வீட்டில் மீண்டும் அந்த ஐவர் கூட்டணி ஒன்றாக அமர்ந்திருந்தது.

இப்போது அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை. கர்னன் இருப்பானா? இல்லை சென்று விடுவானா? என்ற கேள்விக்கு பதில் தெரிந்தால் மட்டுமே அவர்கள் அடுத்து என்ன செய்வது என யோசிக்க முடியும்.

“அம்மா… நான் கொஞ்ச நாள் எங்க வீட்டுல இருந்துட்டு வரேன். அவன் மூஞ்ச பார்த்துட்டு என்னால இங்க இருக்க முடியாது. சுமி நீயும் வரதுன்னா அங்க வந்துடு…” என்ற வனிதாவிடம்,

“எனக்கும் அப்படித்தான் தோனுது அண்ணி.. ஆனா அத்தை அமைதியா இருக்கிறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு..” என சுமித்ரா பதில் கூற,

“அம்மா என்ன யோசிக்கிறீங்க நீங்க.?” என சுந்தர் கேட்க,

“ம்ச்.. அவனை ஏன் கொல்லாம விட்டோம்னு யோசிக்கிறேன்..” என்றார் பட்டென..

“ம்மா என்ன பேசுற நீங்க? அப்படி நடந்துருந்தா நீங்க நினைச்ச மாதிரி எதுவும் நடந்துருக்காது. அவரோட முதல் பொண்டாட்டி இறந்து, நீ வந்தும் கூட அஞ்சு வருசம் சன்னியாசி போல வாழ்ந்தார். கர்னனும் செத்திருந்தா கண்டிப்பா அவர் முழு சன்னியாசியா மாறி, தேசாந்திரம் போயிருப்பார். அப்புறம் நீங்க மட்டும் தான் இந்த வீட்டுல இருந்துருக்கனும். நீங்க உறுப்படியா செஞ்ச ஒரே வேலை அவனை, எங்ககூட இல்லாம வளர்த்தது மட்டும்தான்..” என வனிதா எரிச்சலாக கூற,

“ம்ச் வனி.. சும்ம இரு..” என அவள் கணவன் அதட்டிவிட்டு “அத்தை இப்போதைக்கு சொத்து பத்தியோ, தொழில் பத்தியோ எதுவும் பேச வேண்டாம். மாமா கியுர் ஆகி வீட்டுக்கு வரட்டும். அதுக்குப் பிறகுதான் கர்னன் என்ன முடிவெடுப்பாருன்னு தெரியும். அதைப் பொறுத்து நாம ப்ளான் பண்ணிக்கலாம். நாம அவசரப்பட வேண்டாம்னு எனக்கு தோனுது.” என்றான்.

“ஆமா ம்மா.. அவர் சொல்றதும் சரிதான். எப்படியும் ரெண்டு மூனு நாள்ல தெரிஞ்சிடும். அதுக்குப் பிறகு இதை யோசிப்போம். இப்போ அவருக்கு சந்தேகம் வராத மாதிரி இருக்கனும். அதை கவனமா செய்ங்க..” என்ற வனிதா கணவனோடு புகுந்த வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

சுந்தரும் சுமித்ராவும் தங்கள் அறைக்கு செல்ல, ராஜலட்சுமியின் பார்வை அந்த ஹாலின் நடு சுவற்றில் மாட்டியிருந்த வரலட்சுமியும் புகைப்படத்தின் மேல் விழுந்தது.

‘எப்பவும் உனக்கடுத்து தான் நான் இல்ல.. உன்னை என்னால ஜெயிக்கவே முடியாதா?’ என பார்வையாலே கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரையும், அவர் பார்வை சென்ற திசையையும் பார்த்தபடியே வீட்டுக்குள் வந்தான் கர்னன்.

அவனைப் பார்த்ததும் சட்டென பார்வையை விளக்கிக் கொண்ட ராஜலட்சுமி “என்ன தம்பி நீ மட்டும் வந்துருக்க? யாழி வரல?” என அவர் கேட்கும் போதுதான் யாழினியை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வந்து விட்டோம் என புரிந்தது.

“அவ வரல.. நான் இப்போ மறுபடியும் போகனும். அந்த கார்மெண்ட்ஸோட இன்சூரண்ஸ் பாலிசி அப்பாவோட ட்ராவ்ல இருக்காம், அதை எடுக்க வந்தேன்..” என வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு சொக்கலிங்கத்தின் அறைக்குள் நுழைந்தான்.

‘ஏன் இவன் இப்படி இருக்கான்? இவன் முகமும் சரியில்ல, குரலும் சரியில்ல. எதுவும் பிரச்சினையா? இல்ல அவருக்கு மறுபடியும் ப்ரஷர் கூடிருச்சா..’ என யோசித்தபடியே ராஜலட்சுமி நிற்க, அந்த அறையில் இருந்து வெளியில் வந்தான் கர்னன்.

“ஏன் தம்பி.. உன் குரலே சரியில்ல. அப்பா நல்லா இருக்கார்தானே. வேற ஒன்னும் பிரச்சினை இல்லையே..” என குரலில் பதட்டத்தைக் கொண்டு வந்து கேட்க,

“ம்ச்.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல. அவர் நல்லா இருக்கார். நாளைக்கு ஈவ்னிங்க் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் சொல்லிருக்காங்க.. நான் போய் யாழியை கூப்பிட்டு வரேன்..” என நகர்ந்துவிட, கர்னனின் இந்த போக்கில் புருவம் சுருக்கி யோசிக்க ஆரம்பித்தார் ராஜலட்சுமி.
































































 
  • Like
Reactions: shasri