முத்த மழை - 10
அடுத்து வந்த நாட்கள் மிகவும் அமைதியாகவே கழிந்தது. அன்றைய நாளுக்குப் பிறகு கர்னன் கல்யாண பேச்சையே எடுக்கவில்லை.
கேட்ட பெரியவர்களிடமும் “வல்லி சொல்லும் போது ஆரம்பிக்கலாம்” என்று மட்டும் சொல்லிவிட்டான். அதனால் அனைவரின் பார்வையும் இப்போது வல்லபியின் பக்கம் திரும்பி விட்டது.
அவர்கள் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறார்கள் என்று அவளுக்கே புரிந்தது.
அடுத்தநாள் டிஸ்சார்ச் என்ற நிலையில், இந்த கவலையில் சொக்கலிங்கத்திற்கு மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அது வேறு கர்னாவிற்கு கோபத்தைக் கொடுத்தது.
இவளுக்காக உடம்பை கெடுத்துக்கனுமா? என்ற எரிச்சல் வேறு.
ஆனால் அவருக்கோ ‘இப்போது விட்டால் மகன் இனி திருமண பேச்சையே எடுக்கமாட்டான்’ என்ற பயம். அதுதான் அவரது மனதை படுத்தி எடுத்தது.
இத்தனை நாட்கள் மகன் தூரமாக இருக்கிறான், அவனிடம் கோபமாக பேசி வருத்தப்படுத்தக்கூடாது என்று நினைத்து பொறுமையாக இருந்தார்.
இப்போதுதான் இங்கு வந்து விட்டான், இனி போகவும் மாட்டேன் என்றும் சொல்லிவிட்டான். வேறு என்ன வேண்டும் அவருக்கு. ஒரே பிடியாய் நின்று திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
அதனால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தரம் ‘நீ என்ன சொல்ற? உனக்கு விருப்பம்தான..’ என்றார்.
பின் ஒரு தரம் ‘என்கிட்ட சரின்னு சொல்லிட்டு வல்லிக்கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டியா? அதனாலத்தான் வல்லி சொல்லட்டும்னு சொன்னியா?” என்றார்.
“ப்பா.. நீங்களே எதையாவது யோசிச்சு பேசாதீங்க. அந்த பொண்ணு டைம் கேட்டா. அப்போ கொடுக்கத்தானே வேண்டும். அதை விட்டுட்டு அவளை கட்டாயப்படுத்த முடியுமா?” என்றான் கோபமாக.
“உன் பேச்செல்லாம் நான் நம்பமாட்டேன். நீதான் அவளிய ஏதோ சொல்லி மிரட்டிருக்க..” என்றார் விடாமல்.
இப்படி பேசுபவரிடம் அவனால் என்ன பேச முடியும். ‘நீங்க என்னமோ நினைச்சிக்கோங்க’ என அமைதியாகி விட்டான்.
இதற்கிடையில் வெற்றி ட்ரெயினிங்க் கிளம்பிவிட்டான். சென்னையிலிருந்து மீண்டும் திருப்பூர் வந்து விடலாம் என சிவகுரு தம்பதியர் முடிவெடுத்திருக்க, அதற்கான வேலைகளில் இறங்கினார்கள்.
கர்னனும் ராமசாமியும் கார்மென்ட்ஸ் வேலையாக அலைந்து கொண்டிருந்தனர். இந்த அலைச்சலைப் பார்க்கும் போது தந்தை எந்தளவிற்கு இந்த கார்மெண்ட்ஸ் மேல் பற்று வைத்திருக்கிறார் என்று கர்னனுக்கு புரிந்தது. அதற்காகவேனும் அந்த கார்மெண்ட்ஸை மீண்டும் சரி செய்து அவரிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்.
அன்று காலை வழக்கம்போல கர்னன் திருப்பூர் கிளம்பிக் கொண்டிருக்க, அவன் அறையில் வந்து நின்றாள் யாழினி.
இந்த ஓட்டத்தில் அவன் யாழியிடம் கூட அதிகம் பேச முடியவில்லை. ஆனால் இரவு எந்நேரம் ஆனாலும் அவன் வந்து சாப்பிடும் வரை விழித்திருந்து, அன்றைய நாளைப் பற்றிக் கேட்டு தான் சென்று படுக்கிறாள்.
ஆனாலும் இருவரிடமும் ஒரு வெற்றிடம் இருப்பது போல் உணர்ந்தாள் யாழி.
“வா யாழி.. ஏன் அங்கையே நின்னுட்ட..?” என தங்கையை அழைக்க,
தயங்கியபடியே அவனிடம் வந்தவள் “வெற்றி ரொம்ப நல்லவங்கதான் அண்ணா..” என்றாள் கரகரப்பாக.
“நான் எப்போடா இல்லைன்னு சொன்னேன்..” என்றான் சிரிப்புடன்.
“இல்ல.. அன்னைக்கு பிறகு நீங்க எங்கிட்ட சரியாவே பேசல, அதுதான் கோபமோன்னு..” என இழுக்க,
“அன்னைக்கே உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? அவன் நல்லவனா இருக்கப் போய்தான் நீ அவன்கூட பேசிட்டு இருக்க. இல்லைன்னா நான் விட்டிருப்பேனா.?” என்றான் புன்னகையுடன்.
“உங்ககிட்ட மறைக்கனும்னு நான் நினைக்கல. கல்யாண பேச்சு எடுக்கும் போது கண்டிப்பா உங்ககிட்டதான் சொல்லிருப்பேன். அம்மா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரியும். அதிலும் சிவா அங்கிள் பையன்னா கண்டிப்பா முடியவே முடியாதுன்னு தான் சொல்வாங்க.” என்றதும்,
“ஓ.. உன் லவ்க்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்னு நீ முன்னாடியே யோசிச்சு வச்சிருந்தியா என்ன? நான் முடியாது, அவன்கூட பேசாதன்னு சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப..” என்றான் புருவம் உயர்த்தி.
“அது.. அது அப்படி இல்லண்ணா.. ஆனா நீங்க நோ சொல்லமாட்டீங்கன்னு நினைச்சேன்..” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
இங்க பார் யாழி. லவ் பண்ற வரைக்கும் தான் யோசிக்கனும். அதுவே நீ இன்னொருத்தருக்கு ஓகே சொன்ன பிறகு யோசிக்கக்கூடாது. அது உனக்கு மட்டுமல்ல, அவருக்கும் நீ செய்ற துரோகம். லவ்ங்கிறது ரெண்டு பேருக்குமான ரெஸ்பான்ஸ்.. உனக்காக அவனும், அவனுக்காக நீயும் எந்த சூழல்லையும் விட்டுக்கொடுக்காம, புரிஞ்சு, அட்ஜஸ்ட் பண்ணி போகனும். இதுல ஒன்னு தப்பா நடந்தாலும் அந்த லவ் ஃபெயில்தான். கல்யாணம் செய்தாலும் பாதிலயே பிரிஞ்சிடுவீங்க. சோ இன்னும் டைம் இருக்கு. ரெண்டு பேரும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க….” என்றதும், யாழிக்கு தலை சுற்றிவிட்டது.
‘நல்லாத்தான பேசிட்டு இருந்தான், திடீர்னு ப்ரேக்கப் பண்ணுன்னு யோசிக்கிற அளவுக்கு அட்வைஸ் பண்றான். இவன்கிட்ட வந்து பேசின என்னை’ எனபுலம்பியபடியே நின்றிருக்க,
“இன்னும் என்ன சொல்லனும் யாழி?” என கேட்க,
“அது.. அது வந்து ண்ணா.. நானும் திருப்பூர் வரவா.. வந்தனாவும், வல்லியும் நாளைக்கு சென்னை போறாங்க. அடுத்து எப்போ வருவாங்களோ தெரியல. இந்த டைம் நாங்க அவுட்டிங்க் கூட போகல. அதுதான் சும்மா வின்டோ ஷாப்பிங்க் போலாம்னு ப்ளான்..” என்றாள் வாய்க்குள்ளே.
“ஹோ… அப்போ நீ இதை கேட்கதான் வந்துருக்க..” என இழுக்க
“ண்ணா.. நிஜமாவே நான் ரொம்ப கில்ட்டா ஃபீல் பண்ணேன். நீங்க நம்பலன்னாலும் அதுதான் நிஜம்..” என முகத்தைச் சுருக்க,
“சரி எங்க போறீங்க.. ப்ளான் என்ன?” என்றான் சிரிப்புடன்.
“அதெல்லாம் தெரியல ண்ணா. வல்லி அப்செட்டா இருக்காளாம். அதனால வந்தனா தான் ப்ளான் பண்ணா. நான் அவக்கிட்ட கேட்டு சொல்லவா..?” என்றாள்.
“ம்ம்.. கிளம்பலாம் கார்ல போக போக கேட்டுக்கோ. அப்பா கூட யார் இருப்பா.. அந்த மேல் நர்ஸ் ஓக்கேவா..” என்றபடியே பர்ஸை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்தான்.
“ம்ம்.. ஓகேதான். அம்மாவும் அண்ணியும் வனி க்கா வீட்டுக்கு போறாங்களாம்.” என்றபடியே அவன் பின்னே வர,
“அப்போ வீட்டுல யார் இருப்பா?” என்ற கேள்வியோடு டைனிங்க் கால் வர, அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.
ராஜலட்சுமியைப் பார்த்து “வனி வீட்டுல எதும் விசேசமா?” ஏன்று சாப்பிட்டபடியே கேட்டான் கர்னன்.
“இல்ல தம்பி.. வனி போய் ஒரு வாரமாச்சு. அதுதான் போய் பார்த்துட்டு வரலாம்னு..” என்றார் ராஜலட்சுமி.
“ஹ்ம்ம்.. நீ அடிக்கடி உங்க அம்மா வீட்டுக்கு போவியா? இல்ல வனி மாதிரி அங்கேயே டேரா போட்டுப்பியா?” என்றான் சுமித்ராவைப் பார்த்து,
“அதெல்லாம் எங்க அம்மா விடமாட்டாங்க..” என வெடுக்கென சுமி சொல்ல,
“அப்போ எங்க அம்மா அப்படி விட்டுட்டு இருக்கன்னு சொல்றீயா.?” என்றான் மீண்டும்.
“அப்படி எங்க சொன்னேன்..” என திணறியவள், “உள்ளூர்லதான் இருக்கு எப்போ வேணும்னாலும் போவேன் வருவேன். ஆனா காரணம் இல்லாம அங்க இருக்கமாட்டேன்..” என்றாள் எரிச்சல் குரலில்.
அதிலிருந்த கடுப்பு கர்னனுக்கு புரிந்தது. ராஜலட்சுமி மகளுக்கு கொடுக்கும் சுதந்திரம் மருமகளுக்கு கொடுப்பதில்லை என்று. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
அதன்பிறகு அதைப் பற்றி கேட்கவில்லை. “யாழியை நான் என்கூட கூட்டிட்டு போறேன். அப்பா தனியா இருப்பார். நீங்க இருங்க. வேணும்னா வனியை இங்க வந்து உங்களை பார்த்துட்டு போக சொல்லுங்க..” என்றான் அவர் பதில் சொல்ல முடியாத குரலில்.
ராஜலட்சுமி அமைதியாகவே இருக்க சுந்தர்தான் “யாழினி எதுக்கு ண்ணா..” என தைரியத்தை வரவைத்து கேட்க,
“எனக்கு கொஞ்சம் ஷாப்பிங்க் பண்ணனும். அவளுக்குத்தான் இங்க எல்லாம் தெரியும். அதோட ப்ராண்டேட் எல்லாம் பார்த்து வாங்குவா.. நான் போய் தேட முடியாது பார்.” என்றான் அவன் நம்பும்படி.
கர்னன் ஷாப்பிங்க் என்றதும், ஊருக்கு கிளம்புகிறான் போல என அந்த குருப் நினைத்துவிட்டது. அனைவரின் முகமும் மலர்ந்து போனது.
அதை கர்னன் கவனித்தாலும், கண்டுகொள்ளாமல் யாழினியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“ம்மா அவன் கிளம்பறான் போல.. ஷப்பா. இப்போதான் நிம்மதியா இருக்கு. நல்லவேலை சொத்தைப்பத்தி கேட்டு நாங்க எந்த பிரச்சினையும் செய்யல, அப்படி ஆரம்பிச்சிருந்தா இவன் கிளம்பவே யோசிச்சிருப்பான். நீங்க சொன்னதுதான் சரிம்மா..” என்றான் சுந்தர்.
“ம்ம்.. நான்தான் சொன்னேன்ல அவனால இங்க இருக்க முடியாதுன்னு. ஒரு மாசம் கூட ஆகல, பெட்டியைக் கட்டிட்டான்..” என நிம்மதியாக மூச்சுவிட்டு சிரித்தார் ராஜலட்சுமி.
“ம்ம் அண்ணிக்கு போன் பண்ணி இங்க வரச் சொல்லுங்க அத்தை. மதியம் விருந்து ரெடி பண்ண சொல்றேன்.” என சுமித்ரா கிச்சன் செல்ல, சுந்தரும் ஆஃபிஸ் கிளம்ப, ராஜலட்சுமியோ ஹாலில் மாட்டியிருந்த வரலட்சுமியின் புகைப்படம் முன் வந்து நின்றார்.
அவர் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை. ‘உன்னால என்னை ஜெயிக்கவே முடியாது’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.
கோவையில் “வல்லி.. நான் ஆல்ரெடி சொல்லிட்டேன். சும்மா நோ சொல்லி என்னை டென்சன் பண்ணக்கூடாது. யாழி வேற வந்துட்டு இருக்கா. இப்போ நீ வரலன்னு சொன்னா அவ என்ன நினைப்பா..?” என வந்தனா கடுப்பாக கேட்க,
“அது அவ மட்டும் வரான்னு நினைச்சுதான் நான் ஓகே சொன்னேன். இப்போ அவங்க அண்ணாவும் வராங்கன்னு சொல்ற. அவங்களை எப்படி என்னால் ஃபேஸ் பண்ண முடியும்..” என்றாள் வல்லபி தவிப்பாக.
“இங்க பார் வல்லிக்கண்ணு அவர் மேரேஜுக்கு கேட்டார், நீ நோ சொன்ன, அவரும் விட்டுட்டார். இப்போ நீ கர்னா மாமாவை அவாய்ட் பண்ற மாதிரி நடந்துக்கிட்டா, அவரை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்காதா. இது யாழிக்கு ஹர்ட் ஆகாதா? என்ன செய்ற வல்லி.. இதெல்லாம் ரொம்ப தப்பு. நாம இப்படியே இருக்கப் போறவங்க கிடையாது. நாளைக்கு யாழிக்கும் வெற்றிக்கும் கல்யாணம் நடந்தா, அவரும், அவங்க வீட்டு ஆளுங்களூம் இங்க அடிக்கடி வருவாங்க. அப்போவும் இப்படி நடந்துப்பியா?” என பொறுமையாக எடுத்துச் சொல்ல, வல்லிக்கும் தான் கொஞ்சம் அதிகமாகத்தான் நடந்து கொள்கிறோமோ என்று தோன்றத்தான் செய்தது. அதனால் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
அதோடு ‘நீயே என்னைத் தேடி வருவ’ என்ற கர்னனின் பேச்சு, அவள் இதயத்தை துளைத்துக் கொண்டே இருந்தது. அப்படி நடந்து விடுமோ என்று பயந்து பயந்தே, அவனைப்பற்றி யோசிக்கவே கூடாது, அவனை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்தே அதிகமாக அவனை நினைத்தாள்.
அன்றையா நாளுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்திக்கவில்லை. கர்னனுக்கு வாய்ப்புகள் இருந்தது, ஆனால் அவன் சந்திக்க முயற்சிக்கவே இல்லை. அதுவும் ஒரு பக்கம் ஏமாற்றமாக இருந்தது.
‘அவன்தான கேட்டான், அப்புறம் கண்டுக்காம இருக்கான்’ என்றும் நினைத்தாள்.
‘அய்யோ வல்லி உனக்கு என்னதாண்டி வேணும்..’ என அவளுக்கு அவளே பல முறைக் கேட்டு திட்டிக் கொண்டிருக்கிறாள்.
“என்ன வல்லி.. அடிக்கடி இப்படி ஃப்ரீஸ் ஆகிடுற..” என வந்தனாவின் சத்தத்தில் தான் நிகழ்வுக்கு வந்தாள் வல்லபி.
“ம்ச்.. சொல்ற அளவுக்கு ஒன்னுமில்ல..” என சலித்தவள், “நீ என்ன போட போற..” என கேள்வியை மாற்ற,
“கர்னா மாமா வரார். சோ கண்டிப்பா அம்மா ஜீன்ஸ் டிசர்ட் போட விடமாட்டாங்க. வழக்கம்போல டாப்பும் லெக்கின்ஸும்தான்..” என பெரு மூச்சு விட்டு “நீ..?” என கேட்க,
“தெரியலடி.. கண்டிப்பா ஜீன்ஸ் டிசர்ட் இல்ல..” என்றவள் “சரி நான் போய் கிளம்பறேன்..” என்று சிரித்தபடியே கிளம்புவதற்காக தன் அறைக்கு வந்தாள் வல்லபி.
கட்டிலில் காலை அவளின் தந்தை கொடுத்த பிஸ்தா வண்ண ஸ்கர்டும், டார்க் க்ரீன் டாப்பும் இருக்க, ஒரு மென் புன்னகை அவள் முகத்தில்.
‘இன்னைக்கே இதை போடலாம்’ என நினைத்து, அதை எடுத்து வருடியபடியே நின்றிருந்தாள் பெண்.