• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 11

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
முத்த மழை - 11

“வல்லி ரெடியா? அவங்க வந்துட்டாங்க..” என்று வந்தனா கத்த,

“ஹான் ரெடி ரெடி?” என்றபடியே வந்த வல்லபியை பார்த்து ‘வாவ்’ என கத்தினாள் வந்தனா.

“ஹேய் வல்லிக்கண்ணு.. கலக்கற போ.. இந்த ட்ரெஸ் எப்போ எடுத்த.. உனக்கு செம்மையா இருக்கு.. அதும் அந்த டாப் நெக் டிசைன் சூப்பர்டி..” என்று வல்லபியைச் சுற்றி சுற்றி வந்து விசில் அடித்தாள்.

“அடச்சீ.. சும்மா இரு டி..” என்று வந்தனாவை அடக்கிய வல்லி “ஏன் அவங்க உள்ள வரமாட்டாங்களா?” என்றாள் பொதுவாக..

“ம்ம் வருவாங்க வருவாங்க… திரும்பி வரும் போது வருவாங்க. இப்போ நம்மளை விட்டுட்டு அவங்க கார்மென்ட்ஸ் போகனுமாம்..” என்றபடியே வந்தனா முன்னே நடக்க, வல்லியோ கிச்சனில் இருந்த சீதாவிடம் சொல்லிக்கொண்டு வந்தாள்.

வந்தனா சென்று காரில் அமர, “வல்லி எங்கடி..?” என்ற யாழியின் கேள்விக்கு,

“உனக்குத் தெரியாதா? அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் வருவா..?” என உதட்டைச் சுழிக்க,

“அப்போ நீ சொல்லல..”

“க்கும் ஒரு மணி நேரம் அட்வைஸ் பண்ணுவாங்க. அவ அளவுக்கு எல்லாம் எனக்கு பொறுமை இல்ல.. நான் ஷாப்பிங்கே போகல விடுங்கன்னு கத்துற அளவுக்கு பேசுவாங்க..”

“ஹ்ம்ம் இரு டி ஆன்டிக்கிட்ட சொல்றேன்..”

“அவங்களுக்கு இன்னுமா தெரியாம இருக்கும்..” என இவர்கள் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து வழக்காடி கொண்டிருக்க, தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்தாள் வல்லபி.

அவளைப் பார்க்க போகிறோம் என்றதுமே தன்னுடைய ரேபான் கண்ணாடியை எடுத்து மாட்டியிருந்தான் கர்ணன். அவன் பார்வை மொத்தமும் அன்ன நடை நடந்து வரும் வல்லபியின் மேல்தான்.

அவளின் உடையைப் பார்த்தும் மீசையைத் தாண்டாத மென் புன்னகை. அதைக் காட்டிக் கொள்ளாமல் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

காரின் அருகே வந்து பின்னிருக்கையைப் பார்க்க, யாழியும் வந்தனாவும் இருக்க தலை சுற்றி விட்டது. இப்போது முன்னிருக்கையில் தான் அமர வேண்டும்.

முடியாது என்றெல்லாம் பிகு செய்ய முடியாது. அது அவனை அசிங்கப்படுத்துவது மட்டுமல்லாமல் தந்தைக்கும் வருத்தத்தைக் கொடுக்கும் என புரிந்து, தன்னை நிலைப்படுத்தி ஆழ மூச்செடுத்து முன் கதவை திறந்து கர்ணனுக்கு அமர்ந்து பொறுப்பாக சீட் பெல்டையும் மாட்டினாள்.

அந்த நேரம் வேகமாக வந்தார் சீதா. அவர் கையில் நெருக்கி கோர்த்த மூன்று ஜாதிமல்லிச் சரம்.

அதைப் பார்த்ததும் ‘இதுக்குத்தான் நான் சொல்லாம எஸ்கேப் ஆனேன்.’ என முனங்க,

சீதாவோ வந்தனாவை முறைத்தபடி மூன்று பேருக்கும் பூவை நீட்டினார்.

“ம்மா..” என வந்தனா பாவமாக பார்க்க,

“ஒரு நாளைக்கு இருக்கு உனக்கு. நைட் பூ கோர்க்கும் போதே என்ன சொன்னேன்..” என முறைக்க,

“ம்மா நாங்க என்ன கோவிலுக்கா போறோம்.. பூவெல்லாம் வச்சிட்டு..” என சினுங்க

“வந்து..” என்ற வல்லபியின் குரலில் ‘கப்சிப்’ ஆகிவிட்டாள்.

“இங்க இருக்குற வரை இப்படித்தான். சும்மா என்னை ஏமாத்தனும்னு நினைச்சா மிளகா பொடியை கண்ணுல போடுவேன் பார்த்துக்க..” என்றவர்,

“தம்பி.. லஞ்ச் இங்கதான். மூனு மணிக்குள்ள இதுங்களை இழுத்துட்டு வந்துடுங்க.. நாம விட்டா கடக்காரன் துரத்துற வரை அங்கேயேதான் இருப்பாங்க..” என்று வழிவிட,

“நான் பார்த்துக்கிறேன் ஆன்டி..” என்று வண்டியை எடுத்தான்.

இப்போது மூவரின் தலையிலும் பூ அமர்ந்திருந்தது. மூவரில் வல்லிக்குத்தான் முடி அதிகம். அதனால் பூவின் அளவும் அதிகம்.

காரின் உள்ளே அந்த பூவின் வாசம் மனக்க, கர்ணனுக்கு இதெல்லாம் மிக மிக புதிது. இப்படியான பயணமும் புதிது.

இத்தனை நாட்களில் வனியும், சுமியும் பூ வைத்து பார்த்ததில்லை. ஆனால் யாழினி தலையில் ஒரு இனுக்காவது மல்லிப் பூ இருக்கும். கவனித்திருக்கிறான். சீதாவின் வளர்ப்பு என்று புரிந்தது.

சில நிமிடங்களில் மூவரும் பேச ஆரம்பித்து, அது அரட்டையாக மாறிவிட, இது எதிலும் தலையிடாமல் தன் அருகில் இருந்தவளை மட்டுமே கவனித்துக் கொண்டு வந்தான் கர்ணன்.

திடிரென “மாமா நீங்க எனக்கு ஸ்பான்ஸர் பண்றீங்களா?” என வந்தனாவின் கேள்வியில் புரியாமல் பார்க்க, யாழினியும் வல்லபியும் உதட்டுக்குள் சிரிப்பை அடக்குவது புரிய, தன்னால் வல்லபியின் பக்கம் பார்த்து ‘என்ன.?’ என்றான்.

வல்லபி பதில் சொல்லும் முன்னே “எனக்கு ஒரு ஃபைவ் தவுசண்ட் கடன் கொடுங்க.. நான் சாலரி வாங்கி தரேன்..” என்றாள் வந்தனா.

“என்ன ஃபைவ் தவுசண்டா.. அதுவும் கடனா அவ்ளோ அமவுன்ட் எங்கிட்ட இல்லையே.?” என்றான் சிரிப்பை அடக்கி,

“ம்ம் நிஜமாவா?” என்றவள் “அப்போ யாருக்கிட்ட கேட்க..” என யோசித்து “வல்லி நீயே கொடுடி.. நான் கண்டிப்பா தருவேன்..” என்றதும்,

“இதுவரைக்கும் தர்டி டூ தவுசன்ட் வாங்கிருக்க.. அதெல்லாம் திருப்பி கொடு.. அப்புறமா நான் தர்ரத பத்தி யோசிக்கிறேன்..” என்றாள் வல்லியும்.

“உங்கிட்ட கேட்டேன் பார் என்னை சொல்லனும்..” என்று வல்லியை முறைத்துவிட்டு யாழினி பக்கம் திரும்ப “எனக்கு ட்வென்டி சிக்ஸ் தவுசன்ட் தரனும்..” என வந்தனா கேட்கும் முன்னே யாழினி சொல்லிவிட,

“ச்சீ.. நீங்க எல்லாம் என்ன ப்ரண்ட்.. செஞ்சதை சொல்லிக் காட்டுறீங்க..” என புலம்பியபடியே வெற்றிக்கு அழைத்தாள்.

அவனோ எடுத்ததுமே “கடன் மட்டும் கேட்காத.. எங்கிட்ட காசு இல்ல..” என ஹலோ கூட சொல்லாமல் இதை சொல்ல,

“போடா பைத்தியம்..” என போனை வைக்க இப்போ மூவருமே வாய்விட்டு சிரித்துவிட்டனர்.

“ஆமா எதுக்கு உனக்கு பணம். அதுவும் இப்படி எல்லாருக்கிட்டயும் வாங்கி வச்சிருக்க. கண்டிப்பா உனக்கும் தான பாக்கெட் மணி கொடுத்துருப்பாங்க. அதெல்லாம் என்ன செய்வ..” என சிரித்துக் கொண்டே கர்ணன் கேட்க,

“அது ஒரு சோக கதை..” என இழுக்க,

“சும்மா சொல்லு கேட்போம். இந்த ட்ராஃபிக் பார்த்து டென்சன் ஆகுறதுக்கு உன் கதையை கேட்கலாம்..” என்றான் அதே சிரிப்புடன்.

வல்லபி ஒரு பக்கம் சாய்ந்து பின்னே இருப்பவர்களை பார்ப்பது போல் தான் அமர்ந்திருந்தாள். அதனால் அவளுக்கு கர்ணனை நன்றாக பார்க்க முடியும்.

ஆனால் அவன் பக்கம் பார்வையைத் திருப்பாமலே, மிகவும் பிரயத்தனப்பட்டு வந்தனாவை பார்த்தாள். ஆனாலும் அவனின் வாசம் அவளை நிலை குலையச் செய்தது உண்மை.

அவளுக்கே அந்த நிலை என்றால் கர்ணனுக்கு சொல்லவே வேண்டாம். அவன் மனைவி என்று நினைத்த பெண், அழகுப் பதுமையாக அவனருகில் அமர்ந்து வர, அவனின் மொத்த உணர்வுகளும் எப்போதடா வெடித்து சிதறலாம் என காத்துக் கிடந்தது.

“நாங்க மூனு பேரும் எங்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் ரெண்டு பேருக்கு ஃபீஸ் கட்டுறோம். அதனால எங்க பாக்கெட் மணி எல்லாம் அதுல போய்டும். இவங்க அதிகம் செலவு பண்ணமாட்டாங்க. நான் ஒரு ஃபுட்டி கேர்ள்(Foody Girl) அதனால நான் செலவு பண்ணிடுவேன்..” என முகத்தை சுருக்க,

“அதுக்காக அவ்வளவையுமா செலவு செய்வ?” என கர்ணன் கேட்க,

“ம்ம்ச்ச் நான் மட்டுமா சாப்பிடுறேன் இவங்க ரெண்டு பேரும் தான் சாப்பிடுறாங்க.. இவங்களிய விட்டு தனியா எல்லாம் சாப்பிட மாட்டேன்..”

“ஹ்ம்ம் நீ தான் நிறைய Food Vlog பண்றியே அவங்க பே பண்ண மாட்டாங்களா.?” என்றதும், மற்ற இருவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

“ஏய்..” என சிரித்த இருவரையும் அதட்டியவள், “பணமெல்லாம் வாங்க மாட்டேன். அதுக்கு பதிலா அங்க எப்போ போனாலும் ஃப்ரீயா சாப்பிட்டுக்குவேன்..” என சீரியசாக சொல்ல, கர்ணன் வெடித்து சிரித்தான்.

அவன் அப்படி சிரித்து யாழினி கூட பார்த்ததில்லை எனும்போது மற்றவர்கள் எப்படி பார்த்த்ருக்க முடியும்.

என்ன முயன்றும் வல்லியின் பார்வை அவனை நோக்கி பாயத்தான் செய்தது.

சில நொடிகளிலேயே அவளது விரிந்த விழிகளில் தெரிந்த ரசனையான பார்வையை கர்ணன் கண்டுகொண்டான். அது மேலும் அவனுக்கு வசீகரத்தைக் கொடுக்க, ஒரு கையால் தலையைக் கோதிக்கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பி கொள்ள, அவன் திரும்பவும் தான் வல்லிக்குமே என்ன செய்தோம் என்று புரிய, சட்டென முன்னால் திரும்பி தலையைக் குனிந்து கொண்டாள்.

‘அய்யோ வல்லி என்னடி இதெல்லாம். நீ அவனை வேண்டாம்னு சொல்லிருக்க. இப்போ ‘ஆ’ன்னு பார்த்துட்டு இருக்க. உன்னை என்ன நினைப்பான். சரியான வழிஞ்சான்டி நீ..’ என தன்னைத்தானே திட்டிக்கொண்டு மொபலை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

பின்னால் இருந்த இருவரும் வேறு ஏதோ வாக்குவாதத்தில் இருப்பது புரிய, முன்னாடி இருந்த இருவருக்கும் இந்த நொடியை கடக்க மிகவும் கடினமாக இருந்தது.

இது என்ன உணர்வென்று வல்லிக்கு புரியவில்லை. ஆனால் இதமாக ஒருவித பரவசமாக இருப்பதை போல் உணர்ந்தாள்.

‘வல்லி.. வல்லி..’ என யாழினியின் அழைப்பில் வேகமாக திரும்பி என்னவென்று பார்க்க,

“என்ன யோசனை இறங்க வேண்டாமா?” என்றாள்.

அப்போதுதான் சுற்றும் பார்த்தாள் வல்லபியும். அவர்கள் வர வேண்டிய ஃப்ரோஷன் மால் வந்திருந்தது. கர்ணனை பார்ப்பதை தவிர்த்து மெதுவாக சீட் பெல்டை விடுவிக்க முயல, முடியவில்லை.

இருந்த பதட்டத்தில் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தது. சில நொடிகள் அவள் பதட்டத்தை உள்வாங்கி ரசித்தவன், பின் அவள் கையை தள்ளிவிட்டு, சீட் பெல்டை விடுவித்தான்.

அவன் கை பட்ட இடம் ஷாக் அடித்தது போல் இருக்க, கையை வேகமாக இழுத்துக் கொண்டு ‘தேங்க்ஸ்’ என அவனைப் பார்க்காமலே முணுமுணுத்து இறங்கினாள்.

கர்ணனின் முகம் மகிழ்ச்சியில் பூரிப்பாகவே இருந்தது. அந்த பூரிப்பு அவனுக்கு மேலும் மேலும் வசீகரத்தை கொடுத்தது.

‘டேய் கர்ணா என்னடா நீ.. சின்ன பையன் போல இவ்ளோ எக்சைட் ஆகுற.. இன்னும் அவ ஓக்கே சொல்லல. சொன்னாதான் நீ இப்படியெல்லாம் ஃபீல் பண்ணனும்.. ஆனாலும் இந்த ஃபீலிங்க் வேற லெவல்தான்.. இதையெல்லாம் எவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேன்..’ என தன்னை நினைத்து, தனக்குள்ளே புலம்பியபடியே காரை விட்டு இறங்கினான்.

சற்று தள்ளி இவனுக்காக மூவரும் காத்திருக்க, தன் கார்டை எடுத்து யாழினியிடம் நீட்டியவன் “இன்னைக்கு உங்க செலவு எல்லாம் என்னோடது. என்னோட ட்ரீட்ன்னு வச்சிக்கோங்க. விண்டோ ஷாப்பிங்க் பண்ணாம உருப்படியா எதாவது வாங்குங்க.” என்றதும்

“மாமா..” என வந்தனா சந்தோசத்தில் கத்த,

“இப்போ டைம் டென், நான் டூ தர்டிக்கு வருவேன்.. மூனு பேரும் வெளிய வந்திருக்கனும்..” என்றதும், வந்தனாவின் முகம் சூம்பிப் போனது.

“யாழி என்னோட சைஸ் உனக்கு மெசேஜ் பண்றேன். எனக்கும் கொஞ்சம் பர்ஸேஸ் பண்ணிடு..” என்றான்.

பேச்சு யாழினியிடம் இருந்தாலும், பார்வை வல்லபியிடம் இருந்தது. இப்போதுதான் மற்ற இருவருமே அதை கவனித்தனர்.

‘ஓஹோ கதை அப்படி போகுதா?’ என நினைத்துக் கொள்ள, வந்தனாதான் கர்ணாவின் அருகில் வந்து வல்லபியிடம் இருந்த அவன் முகத்தை திருப்பி யாழியினிடம் வைத்து “இது தான் யாழினி..” என புருவத்தை சுருக்க, வல்லபிக்கு முகமெல்லாம் சிவக்க, வேகமாக அந்த இடத்தை விட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.

கர்ணனோ வல்லபி சென்ற கடுப்பில், யாழினி கையில் இருந்த கார்டை பிடுங்கிவிட்டு “உங்களுக்கு வின்டோ ஷாப்பிங்க் தான் சரி.. போய்ட்டு வாங்க..” என திரும்பி நடக்க ஆரம்பிக்க,

‘அய்யோ வடை போச்சே’ மொமன்ட் தான் இருவருக்கும்.

வந்தனா வேகமாக ஓடிச் சென்று “ப்ளீஸ் மாமா.. பத்து செகண்ட்ல ஏகப்பட்ட ப்ளான் போட்டுட்டேன்..” என அவன் முன்னே மூச்சு வாங்க நிற்க,

“போய் தொலை..” என கார்டை அவளிடம் கொடுத்துவிட்டு காரை எடுத்தவன் முகம் புன்னகையில் நிறைந்து கிடந்தது.

அதே புன்னகை முன்னால் சென்று கொண்டிருந்த வல்லபியின் முகத்திலும் மின்னிக் கொண்டிருந்தது.

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

 
  • Love
Reactions: shasri