• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 13

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
53
26
18
Tamilnadu
ஏன் முல்லை பார்வையே கணவன் மீது பெருமையாக படிந்தது மீளாமல். ஈஸ்வரனின் புல்லட் கிளம்பிய பிறகே அனைவரும் அங்கிருந்து விலகினர். கம்பன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். “சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடுவ ஈஸ்வரா, ரகசியத்தை வெளியே கொண்டு வந்துடுவ நீ!” என்றவன் சாந்தமான முகத்துடன் கோவிலுக்குள் நுழைந்தான்.




வீட்டு வாசலில் மனைவியை இறக்கி விட்டவன், “உள்ள போ கொடி வண்டியை நிறுத்திட்டு வரேன்.” என்றவன் வண்டியை அதன் இடத்தில் நிறுத்தி அந்த வண்டியை வருடிக் கொடுத்து விட்டு வர கொடி அதே இடத்தில் அப்படியே நின்று இருந்தாள் கணவனை பார்த்தபடி.



“என்ன கொடி ஏன் இப்படி நிக்கிற?”



“ரொம்ப நன்றி மாமா.” உள்ளம் குளிர முழு மனதாக கூறினாள். அவள் கூறிய நன்றி அவனை அந்நிய படுத்துவதாக தோன்றியது ஈஸ்வரனுக்கு. அவள் நன்றியை முழுதாக ஏற்க முடியாதவன் உள்ள வா என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான்.



அறைக்குள் கண் மூடி சாய்ந்து இருந்தவனை இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ மனம் கட்டி இழுத்தது. அதுவும் சுத்தமான பசும் பாலில் போட பட்ட டீ.



“மாமா குடிங்க.” என்றதும் மறுக்காமல் வாங்கி கொண்டவன் கொடி கீழே அமர்வதை கண்டான் இந்த அறையை தாண்டினால் உரிமை உள்ள மனைவியாக நடந்து கொள்கிறாள்.


அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே மூன்றாவது மனிதனை போல் நடந்து

கொள்கிறாள். அருகில் வரவும் இல்லை ஆனால் என்னை கவனித்து கொள்வதை நிறுத்தவும் இல்லை. ஈஸ்வரன் கூறிய வார்த்தை தான் அவளை விலக்கி வைக்கிறது என்பதை அவன் அவளுடைய அருகில் இருக்கும் தருணங்களில் மறந்து போகிறான்.




கொடி தன்னுடைய நோட்டு, புத்தகத்தை எடுத்து வந்து அமர்ந்தவள், “மாமா படிக்கலாமா?” ஈஸ்வர் நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தான். அவள் படிக்கும் நேரம் இது. கொடிக்கு படிப்பில் இருக்கும் ஆர்வத்தை கண்டு ஈஸ்வர் வியந்து போனான்.



கீழே இறங்கி அவள் அருகில் அமர்ந்தவன் பாடம் நடத்த துவங்கினான். பாடம் எடுக்கும் நேரத்தில் மட்டும் தான் அருகில் அமர முடியும் மற்ற நேரம் அவள் கொடுத்த வாக்குறுதி படி நடந்து கொள்வாள். பாவம் ஈஸ்வரன் கொடுத்த வாக்குறுதி தான் தளர்கிறது. அவனே உணரவில்லை அப்புறம் எப்படி அவள் உணர்வாள்.



கொடிக்கு தமிழ் முழுதாக தெரிந்தது அதனால் அதை பற்றி ஈஸ்வரனிடம் கேட்க வில்லை. கணக்கும், ஆங்கிலமும் தான் அவன் சொல்லி தருகிறான். கணக்கு பாடத்தில் புலியாக இருப்பவள் ஆங்கிலத்தில் திணருகிறாள். ஈஸ்வரனை தமிழ் பாடம் எடுக்க கூறி இருந்தால் அவன் நிலை தெரிந்து இருக்கும் கொடிக்கு. பாடம் கற்றுக் கொண்டே, "மாமா நானும் பள்ளிக் கூடம் போகவா?" ஈஸ்வரன் வாய் ஒட்டிக் கொண்டது.



“நீ எதுக்கு அங்க போகனும் உனக்கு தான் நானே இங்க சொல்லி தரேன். அங்க போய் நீ என்ன பண்ண போற?”



“இல்ல மாமா டீச்சர் நிறைய சொல்லி தருவாங்க, நானும் நிறைய கத்துப்பேன் சீக்கிரம் படிச்சா சீக்கிரம் நீங்க எனக்கு வேலை போட்டு தருவீங்கல்ல, நம்ப பிரிந்த பிறகு எனக்கு அந்த வேலை உதவும் அதுக்கு தான்.



அவள் வார்த்தைகளில் ஈஸ்வரின் கண்கள் சிவந்தது, அவளிடம் கோவத்தை வெளிக்காட்டாதவன், நீயும் மத்தவங்களும் ஒன்னு கிடையாது கொடி. நீ வேற மத்தவங்க வேற இனி ஒருமுறை இப்படி கேட்காத.



உனக்கு நான் சொல்லி தரது போதும் நீ அங்கலாம் போக தேவை கிடையாது.

எதுவா இருந்தாலும் நடக்கும் போது பார்த்துக்கலாம் அதுகுள்ள உனக்கு என்ன அவசரம் அமைதியா படுத்து தூங்கு.” என்றவன் எழுந்து கீழே சென்றான்.




வீட்டின் பின் புறம் கால் தேயும் அளவு நடந்தவன் மனம் அவள் கேட்டதிலேயே சுழன்றது. மற்றவர்களுடன் சமமாக இருப்பதை அவள் விரும்பினாலும் ஈஸ்வரன் விரும்பவில்லை. அவளை அவன் மனம் உயர்வாக பார்க்கிறது. அதிலும் அவள் நாள் முழுவதும் பள்ளிக் கூடத்தில் இருந்தால் தன்னுடன் இருக்க மாட்டாள் என்பதை யோசித்து யோசித்து தலை வலி எடுத்தது.



அவன் போன் விடாமல் கத்திக் கொண்டு இருந்தது அதை தூக்கி எரிந்தவன் தங்கள் அறைக்கு சென்றான்.

அவள் தூங்கியதை உணர்ந்தவன் அவள் கால் வெடிப்புக்கு மருந்து தடவி விட்டு, அதன் பிறகே அவன் கட்டிலில் படுத்தான். அவனுக்காக வாங்கிய பஞ்சு மெத்தை கூட உடலுக்கு உறுத்தலாக இருந்தது. ஒரு நாள் தான் கிடைத்தது அவளின் முந்தானை சுகம் அது தினமும் வேண்டும் என்று தோன்றியது.



‘என்னடா வந்து சில நாள் தான் ஆகுது அதுகுள்ள உன் மனசு இப்படி மாறுது இது நல்லதுக்கு இல்ல கொடியே ஒரு வார்த்தை சொன்னதுக்கு உறுதியாக இருக்காள் நீ எதுக்கு சரிற நம்ப வாழ்க்கை வேற இது கிடையாது.’ என்று மனதை சமாதானம். செய்தவன் கண்களை மூடியபடி கட்டிலில் சாய்ந்தான்.


ஈஸ்வரன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துவங்கினான். காலையில் வீட்டின் முன்பு கூடி இருந்த மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். “நான் பஞ்சாயத்துல சொன்னது தான் ஒரு வருஷம் இலவச விவசாயம் பண்ணலாம், அதுக்கப்புறம் பணம் கட்டணும்.”



“சரிங்க ஐயா.” என்று பணிவாக வணங்கி சந்தோஷமாக வாங்கி கொண்டனர். வந்தவர்கள் அனைவருக்கும் காலை உணவு முல்லை ஒரு ஆளாக அதுவும் தனியாக தயார் செய்து இருந்தாள்.



நிலம் வாங்கியவர்கள் அனைவரும் கிளம்ப நினைக்க, “எல்லாரும் சாப்பிட்டு கிளம்புங்க வாங்க.” என்று இன்முகமாக அழைக்கவும் ஈஸ்வரன் முல்லையை ஆச்சரியமாக பார்த்தான். குறைந்தது நூறு பேர் இருப்பார்கள் எஜமானி வார்த்தையை மீற முடியாதவர்கள் காலை உணவை முடித்து விட்டு நிறைவாக கிளம்பினர்.



“மாமா வாங்க வந்து நீங்களும் சாப்பிடுங்க.” என்று கணவனை அமர வைத்து பரிமாற துவங்கினாள். ஈஸ்வரன் அதிகம் சாப்பிட மாட்டான் அளந்து குறைவாக சாப்பிட கூடியவன். “எல்லாருக்கும் தனியா எப்படிப் கொடி சமைச்ச?”



“எப்பவும் போல தான் மாமா அது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. நம்ம வீட்டுக்கு வந்துட்டு யாரும் கை நனைக்காமல் போக கூடாது. நீங்க தான் இந்த ஊர் தலைவர். எப்பவும் வந்தவங்களை சாப்பிட வச்சி அனுப்பி வைங்க மாமா.” என்றாள் கனிவாக.



இன்றைய பாடத்தை சிறப்பாக கற்றுக் கொண்டான். அவர்களிடம் சாப்பிட கூறும் எண்ணம் ஈஸ்வரனுக்கு கிடையாது. அவன் பிறப்பில் இருந்தே அந்த பழக்கம் இல்லாததால் இன்றும் வரவில்லை ஆனால் அது எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் நன்றி கூறி விட்டு செல்லும் போது தெரிந்தது.



கம்பன் காலையில் இருந்து பம்பரமாக சுழன்றான். முதல் நாளே முப்பது பெண்கள் சில சிறுவர்கள் வந்து இருந்தனர். அதே போல் புது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் அதுவும் இரு விதமாக

சிறுவர்களுக்கு தனி ஆசிரியர்கள், தனி வகுப்பு, பெண்களுக்கு தனி ஆசிரியர்கள், தனி வகுப்பு என்று.



சிலர் வீட்டில் மட்டும் ஏற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். பலர் வீட்டில் மறுப்பு தெரிவிக்க அவர்களை எதிர்த்து வந்து இருந்தனர். ஈஸ்வரன் கொடுத்த வாக்கின் படி பெண்களுக்கு மட்டும் இலவச கல்வி வழங்க பட்டது.


ஈஸ்வரன் பணத்தை எண்ணியபடி கட்டிலில் அமர்ந்து மனைவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கூட முகம் சொடுங்காமல் அந்த வெயிலிலும் முந்தானையை சொருகியபடி அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் காலில் செருப்பு இல்லாததை கண்டவன், “கொடி!” என்று சத்தமாக அழைத்தான். கணவன் குரலுக்கு வேகமாக வந்தவள், “சொல்லுங்க மாமா.”

“செருப்பு போடு தரை சுடுது பாரு.”



“மாமா வயல்ல செருப்பு போட கூடாது. விவசாயம் நம்ப தொழில் நம்ப சாமி மாதிரி எப்படி கோவில்ல செருப்பு போட கூடாதோ அதே மாதிரி இங்கேயும் போட கூடாது மாமா. இது எல்லாம் என்ன சூடு நீங்க நிழல்ல இருங்க ஆளுங்க களையிற நேரம் அனுப்பி விட்டுட்டு வரேன்.” என்றவள் அங்கிருந்து சென்றாள்.



கொடி குடும்பம் இருவரின் இணக்கத்தை கோவமாகவும், பொறாமையாகவும் பார்த்தது. ஈஸ்வரன் தன் காலில் இருக்கும் செருப்பை கழட்டி வைத்தான். இதுவரை இது கூடவா உங்களுக்கு தெரியல? இத்தனை வருஷம் என்ன பண்ணுனீங்க? என்ன கத்துகிட்டீங்க ? இப்படி எவ்வித கேள்வியும் கேட்காமல் ஒவ்வொன்றையும்

நிதானமாக புரிய வைத்தாள்.

ஈஸ்வர் பார்வையை சுழற்றினான். காலையில் இருந்து இந்த வெயிலில் மாடு போல் விவசாயம் பார்க்கும் யார் முகத்திலும் சோர்வில்லை. அமராமல் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருந்தனர். ஈஸ்வரன் ஆச்சர்யமாக பார்த்தான் அனைத்தையும்

தன் ஊரில் நெல், கடலை, மிளகாய், தேங்காய் அதிகம் விளைவதை இத்தனை நாட்களில் கண்டு கொண்டான் ஆனால் அதற்கான விலை கிடைக்கிறதா என்றால் இல்லை அதை பற்றி யோசிக்க துவங்கினான்.



“மாமா கிளம்பலாமா?”

“போகலாம் கொடி.” என்றவன் மனைவியை புல்லட்டில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். ராஜேந்திரன் வீட்டு வாசலில் அழுக்கு உடையுடன் நின்று இருந்தான். இன்றுடன் அவனின் தண்டனை காலம் முடிவதை உணர்ந்த ஈஸ்வரன், “கொடி பணத்தை எடுத்துட்டு போய் வை.” என்றவன் அவளிடம் கத்தையாக பணத்தை நீட்டினான். கார்த்திகா, கந்தப்பன், ராஜேந்திரன் மூவரும் கொடி கையில் இருக்கும் பணத்தை பார்த்தபடி இருந்தனர்.


“அண்ணா என்னுடைய தண்டனை முடிந்து போச்சு நான் உள்ள வரலாமா?” தலை குனிந்து நின்றபடி கேட்டவனை கூர்ந்து பார்த்தான். “உள்ள வரது முக்கியம் இல்ல அண்ணிக்கான மரியாதை என்னனு தெரிஞ்சிக்க இன்னொரு முறை கொடியை அவமான படுத்துன அடுத்த முறை வீட்டுக்கு அடிமையா இல்ல ஊருக்கு அடிமையா இருக்கணும்.” என்றான் அழுத்தமாக.

கார்த்திகா உள்ளுக்குள் கொழுந்து விட்டெரியும் பகையுடன் ஈஸ்வரனையும் கணவனின் தந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் வீட்டுக்குள் நுழையும் போது கந்தனை அழுத்தமான பார்வையுடன் கடந்து சென்றான்.

ராஜேந்திரன் குளித்து முடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு நாற்றம் இல்லாத புது துணியை மாட்டிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு சொர்க்கத்தை கண்டது போன்ற உணர்வு.


“கார்த்திகா சாப்பிட என்ன இருக்கோ அதை தட்டு நிறைய போட்டு எடுத்துட்டு வா.” என்றான். ராஜேந்திரன் என்று கந்தன் அழைக்க அவரை கொஞ்சம் கூட மதிக்கவில்லை ராஜேந்திரன். நனி நடப்பதை பார்த்தவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். “ஈஸ்வர்!” என்று நனி அழைக்க படி ஏறிய அவன் கால்கள் அப்படியே நின்றது.



அவன் திரும்பி பார்க்காமல் அப்படியே நிற்க மொத்த குடும்பமும் நனியை தான் பார்த்தது. “ஈஸ்வர் நானும் நம்ப ஸ்கூல்க்கு வேலைக்கு போகவா?”


“வாயை மூடு டி!” என்று கந்தன் சத்தமாக கத்த. “நீங்க படித்த படிப்பு யாருக்காவது உபயோக படனும்னு நினைச்சா தாராளமா நீங்க போகலாம் கம்பன் கிட்ட சொல்லுறேன்.”