அவள் முகத்தில் பிரதிபலித்தது அவளின் சந்தோஷம். இருவரும் சென்று கொண்டிருக்கும் போதே, “மாமா மாமா வண்டியை நிறுத்துங்க.” என்று அவசரமாக கூறினாள்.
அவனும் என்னமோ என சடன் பிரேக் அடித்து பட்டென்று நிறுத்த கொடி முழுவதும் ஆணவன் மேல் சரிந்தாள் கொடி போன்று.
அவள் எங்கே கீழே விழுந்து விட போகிறாள் என கையை பின்னுக்கு கொடுத்து பிடித்தவன் அவளின் வெற்று இடுப்பை அழுத்தமாக தன் முரட்டு கையால் பற்றிக் கொண்டான். அவன் பற்றிய பிறகே தெரிந்தது அது அவள் இடுப்பு என்று ஏற்கனவே தன் முழு பாரத்தையும் அவன் மேல் போட்டு அவனை அட்டை போல் ஒட்டிக் கொண்டிருந்த பெண்ணவளுக்கு அவனின் இந்த செயல் மூச்சடைக்க செய்தது.
இது இருவருமே திட்டமிட்டு செய்தது இல்லை என்பதால் அவனிடம் இருந்து விலகி கீழே இறங்கினாள். ஈஸ்வரன் பெண்ணவள் இடுப்பு மடிப்பை உரசியே அவளிடம் இருந்து கைகளை எடுத்தவன் தன் முடியை கோதிக் கொண்டான்.
முல்லை நெஞ்சம் பட படக்க சாலையை கடந்து சென்றவளை வளரும் மீசையை முறுக்கி கொண்டே பார்த்தான் கண்களில் ரசனையுடன். இப்போது தான் மீசையை கம்பீரமாக வளர்க்க துவங்கி உள்ளான் அதுவும் நாற்காலிக்காகவும், தன் மனைவிக்காகவும் தான்.
அவள் என்ன செய்கிறாள் என பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வாங்கி வரும் பொருளை கண்டு அவனையே அறியாமல் அவனின் உதடுகள் நெளிந்தது சிரிப்பில்.
வேகமாக வந்தவள், “மாமா இந்தாங்க. இதை போட்டுக்கோங்க.” என அவன் முன்பு கண்ணாடியை நீட்டினாள் கருப்பு நிறத்தில்.
சாலை ஓரம் விற்கும் நூறு ரூபாய் கண்ணாடி அது.
அவளாக வாங்கி தரும் முதல் பொருள் என்பதால் கண்ணாடியை கையில் வாங்கியவன் அதையும் அவள் வாங்கிய சாலை ஓர கடையையும் சிரிப்போடு பார்த்தான். அவன் சிரிப்புக்கு பின்னால் என்ன உள்ளதோ அவனே அறிவான்.
கண்களில் மாட்டிக் கொண்டவன் கொடியை போலவே கேட்டான். “அழகா இருக்கா கொடி?” கண்ணாடி போட்டதும் ஈஸ்வரனின் கம்பீரம் கூடுதலாக தெரிந்தது. அவளோ இரு கையால் அவனுக்கு திருஷ்டி முறித்தவள், “ரொம்ப அழகா இருக்கீங்க மாமா.” வெளிப்படையாக கூறியவளை மிதமான சிரிப்போடு கண்டவன், “வா போகலாம் இன்னைக்கு திருவிழா பத்தி முடிவு பண்ணனும்.” என்றான்.
வேகமாக மண்டையை ஆட்டியவள் சட்டென்று வண்டியில் அமர்ந்து கொண்டாள்.
மனம் நிறைய இருவரையும் பார்த்தனர் ஊர் மக்கள். ஈஸ்வரனின் வண்டி வீட்டு வாசலில் நின்றதும் கார்த்திகா வேகமாக வீட்டிற்குள் இருந்து ஓடி வந்தவள் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த நகைகளை கண்டு வயிறு கொழுந்து விட்டு எரிந்தது தீ போல்.
கழுத்து நிறைய நகையா அதுவும் இவளுக்கா நெஞ்சம் ஏற்க்க மறுத்தது.
அதுவும் ஈஸ்வரன் கையில் தொங்கிக் கொண்டிருந்த நகை பையை கண்டவள்
அதிலும் நகை இருக்கும் என்று அறிந்து கொண்டாள்.
கொடி சந்தோஷத்தை கண்டவளுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தானாக தலையை குடுத்தாள்,
"மாமா என் அக்காக்கு நகை கொஞ்சம் கூட நல்லா இல்ல, அவ நிறத்துக்கு நகை தான் தனியா தெரியுது, அவளுக்கு கருப்பு கலர் கயிரு தான் நல்லா இருக்கும்.”
பல்லை காட்டிக் கொண்டே முல்லையை கண்களால் எரித்துக் கொண்டிருந்தவளை நிதானமாக பார்த்தவன். “கண்ணு தெரியாத குருட்டு முண்டங்களுக்கு அழகு கூட அசிங்கமா தெரியும். அதிலும் நீயும், உன் குடும்பமும் ரொம்ப மோசம். நீ என்ன பண்ணுற. இன்னைக்கு வீட்டு வேலை முழுக்க நீ தான் செய்ற. தோட்டம் முழுக்க சுத்தம் பண்ணி வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடு, துணி எல்லாத்தையும் சுத்தமா துவச்சி, அப்படியே மாட்டு கொட்டகை சுத்தம் பண்ணுற. ராத்திரிக்கு சாப்பாடு நீ தான் தயார் பண்ணுற. நாளைக்கு ஸ்கூல்ல எல்லா மாணவர்களுக்கும் நீ தனி ஆளா தான் சமைக்கணும்.
இதுல ஒரு வேலை கூட மிஸ் ஆக கூடாது. அதே சமயம் சுத்தமா இருக்கணும் வேலை எல்லாம் புரியுதா.. கொடி இன்னைக்கு நீ ஒரு துரும்பை கூட அசைக்க கூடாது. தோட்டத்துல ஆளுங்களுக்கு சம்பளம் தரணும் நீ குடுத்துடு.” என்றான்.
கார்த்திகா மயங்கி விழவில்லை அவ்வளவு தான் உறைந்த பார்வையுடன் நின்று இருந்தாள் ஈஸ்வரன் சொன்ன வேலைகளை கேட்டு. ஏற்கனவே பள்ளிக் கூடத்தில் கத்தி கத்தி வெறுத்து போய் இருந்தாள். வந்து கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை அதற்குள் இவ்வளவு வேலைகளா மயங்கி விழுந்தாலும் எழும் வரை காத்திருந்து செய்ய சொல்வானே ஆண்டவா.. என் புருஷன் கிட்ட சொன்னா.. அவர் வேற அப்பு அப்புன்னு அப்பிடுவாரு என தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள் கையில் கொண்டு துடைப்பம், தண்ணீர் வாளி இரண்டையும் கொடுத்தாள் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்.
கார்த்திகா அந்த பெண்ணை முறைக்க. “ஐயா உத்தரவு. முதல்ல வீட்டை கழுவி சுத்தம் பண்ண சொன்னாங்க. ஜன்னல், கதவு எல்லாமே சேர்த்து தான் நீங்க ஒழுங்கா வேலை செய்றீங்களான்னு பார்க்க சொன்னாங்க என்னை. ரொம்ப முக்கியமான செய்தி சொல்ல சொன்னாங்க. எஜமானி அம்மா தூங்குறாங்க. அவுங்க தூக்கம் களைய கூடாதுன்னு சொன்னாங்க.. எதையும் உருட்டாமல், சத்தம் வராமல் செய்ய சொன்னாங்க.” என்றவள் ஓரமாக நின்று கொண்டாள்.
வேலை துவங்கும் முன்பே கார்த்திகா கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது ஐந்து பெண்கள் சேர்ந்து செய்தாலே முடியாத வேலையை தன்னை ஒருத்தியை செய்ய சொல்லி விட்டானே என நொந்து கொண்டாள். அழுது கொண்டே கார்த்திகா வேலையை துவங்கியவளுக்கு தெரியவில்லை அடுத்த ஆப்பு ஆன்தி வே என்று.
தூங்கும் மனைவியை பார்த்தவன் அவள் காலுக்கு, கைக்கும் மருந்து பூசி விட்டு சாவி கொத்தை தேட துவங்கினான். அவன் எவ்வளவு முயன்றும் அது கண்ணில் அகப்படவில்லை.
"நமக்கு சேர வேண்டியது நம்பளை விட்டு எங்கேயும் போகாது மாமா." கொடி வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்தது நேரத்தை பார்த்தான் அனைவரும் வந்து இருப்பார்கள் பஞ்சாயத்துக்கு போக வேண்டும் என்பதால் மனைவியை தொந்தரவு செய்யாமல். கதவை மூடி விட்டே கீழே இறங்கினான்.
கார்த்திகா மேல் பகுதியை கழுவி சுத்தம் பண்ணி விட்டு கீழே சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள். “நான் அந்த பக்கம் போனதும் நீ கொடியை எழுப்புறதோ இல்ல ரூம்குள்ள போய் கொடி நகை மேல கை வைக்கிறதோ பண்ணுன ஒரு மாசத்துக்கு உன் புருஷன் பண்ணுன வேலையை செய்யனும்.” என எச்சரித்து விட்டே அங்கிருந்து சென்றான்.
“பொல்லாத கொடி அந்த கருவண்டுக்கு வந்த வாழ்வு பாரு எல்லாம் என் நேரம்.
ராஜேந்திரனை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊரையே ஆளலாம்னு கனவு கண்டு எல்லாம் பண்ணினேன். இப்படி ஒருத்தன் வந்து நிப்பான்னு கனவா கண்டேன். கடைசில இந்த வீட்டு வேலைகாரி ஆகிடுவேன் போல. ஆண்டவா.” அவரை அழைத்து தான் அவர் தண்டனை கொடுக்க ஆள் தயார் செய்து வைத்திருக்கிறார்.
உலகு வீட்டில் கத்திக் கொண்டிருந்தார்.
“வீட்டுல சமைக்க ஒன்னுமே இல்ல இன்னமும் சம்பளத்தை வாங்கி பொண்டாட்டி கைள கொடுத்தா சோறு தட்டுக்கு சும்மா வருமா டா. சரியான நேரத்துக்கு சோறு வேணும், சோப்பு வேணும், டீ வேணும்னு எல்லாத்தையும் என் கிட்ட கேக்குற. உன் பொண்டாட்டி கிட்ட கேக்க வேண்டியது தானே. முல்லை இந்த வீட்டை விட்டு போனதில் இருந்து கோவில் மூலமா வர வருமானம் மட்டும் தான் வீட்டுக்கு. அதையும் நீ உன் பொண்டாட்டியும் தின்னே காலி பண்ணிடுவீங்க போல. அடுத்த மாதத்தில் இருந்து சம்பளத்தை என் கைல கொடுக்கணும். இனி வீட்டு வேலை எல்லாம் உன் பொண்டாட்டி பாக்கணும். ஆட்டிகிட்டு ஏமாத்திட்டு சுத்துனீங்க வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவேன் உங்களை. பிள்ளையோட போய் நடு தெருவுல கிடங்கன்னு விட்டுடுவேன்.”
உத்தமன் வாயை கூட திறக்க வில்லை. யவனிகா தான் தன் மாமியாரை முறைத்துக் கொண்டிருந்தாள் சம்பளத்தை அவரிடம் கொடுத்தால் தன் நிலை மோசமாகி விடுமே என்ற பயம் அவளுக்கு. ஈஸ்வரன் தண்டையை தூக்கி விட்டபடி கூட்டத்துக்குள் நடக்க துவங்க அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
நான்கு கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் இருந்தனர்.
கந்தப்பன் கூட இருந்தார். முகில்வாணன் மட்டும் இல்லை இன்று இங்கு முக்கிய நபரே முகில்வாணன் தான் அவரோ ஈஸ்வரனை மதிக்க கூடாது என்றே சபைக்கு வராமல் வீட்டில் அமர்ந்து இருந்தார்.
அனைவரையும் வணங்கி நாற்காலியில் அமர்ந்தவன்.
“எல்லாரும் சேர்ந்து நின்னு போன கோவில் திருவிழாவை கொண்டாடலாம்.
இந்த வருஷம் கட்டாயம் திருவிழா நடக்கும்.
எனக்கு வழிமுறை எதுவும் தெரியாது. தெரிஞ்ச பெரியவங்க சொல்லுங்க.” என்றான் அங்கு அமர்ந்து இருந்த வயதானவர்களை பார்த்தபடி.
ஒருவர் பேச துவங்கினார்.
“தம்பி நம்ப ஊர் திருவிழா ஒரு வாரம் நடக்கும் அதாவது ஏழு நாள் நடக்கும்.
முதல் நாள் தீபாஞ்சத்தை சேர்ந்த தலைவர் அதாவது உங்களை நாங்க மூன்று கிராமமும் நேர்ல வீட்டுல வந்து மேள, தாளத்தோடு அழைப்போம் விழாக்கு.
உங்களுக்கு புது துணி எடுத்துட்டு வருவோம், கூடவே புது துண்டும் அதை உங்க மனைவி உங்க தலைல பரிவட்டம் மாதிரி கட்டி உங்க வீட்டுல இருந்து கொடியை எடுத்துட்டு வந்து கோவில் பூசாரி கிட்ட ஒப்படைப்போம்.
அதே போல அடுத்த நாள் தீபாஞ்சாத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மத்த மூன்று கிராமத்து தலைவர்களை போய் அழைக்கணும். பரிவட்டம் கட்ட கூடாது அது உங்களுக்கு மட்டும் தான் சொந்தம். அந்த அந்த ஊர் கொடியை கொண்டு வந்து மூன்றாவது நாள் கொடியேற்றி வைப்போம்.. உங்களை முதல் நாள் அழைச்சிட்டு வரும்போதே நீங்க அன்னதானம் துவங்கி வைப்பீங்க.
அதுக்கான அரிசி, செலவு எல்லாத்தையும் காலம் காலமா நீங்க தான் செஞ்சீங்க.”
ஈஸ்வரன் கம்பீரமாக அனைவரையும் பார்த்தவன். “நீங்க எதுக்காகவும் கவலை பட வேண்டாம். இத்தனை வருஷம் நடந்ததை விட இனி சிறப்பா நடக்கும். ஏழு நாள் திருவிழா செலவு மொத்தமும் என்னுடையது. அது அன்னதானமா இருந்தாலும் சரி. அலங்காரமாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு நாளும் வழி வழியா பின் பற்றிய அனைத்தும் மாறாமல் அப்படியே செய்வோம்.
தொடரும்...