ஈஸ்வரனின் பார்வை மனைவி முகத்தை தாங்கி நின்றது. “உன் அப்பா
முகில்வாணன் அம்மன் நகை எல்லாம் உன் கிட்ட தான் இருக்குன்னு சொல்லுறாரு. அதாவது அவர் கோவில்லிருந்து நகையை எடுத்ததும் உன் கிட்ட கொடுத்துட்டாருன்னு சொல்லுறாரு. பதில் சொல்லு நகை எல்லாம் உன் கிட்ட தான் இருக்கா?”
முல்லை தலை நிமிர்ந்து நின்றாள் இன்று தான் தலை குனிந்தாள் தன் கணவனும் தலை குனிந்து நிற்க்க வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும், அதிலும் தவறு செய்யாமல் எதற்காக தலை குனிந்து நிற்க்க வேண்டும், பெண் என்ற கூச்சத்தில் நின்றாலும் அது இன்று நிற்க கூடாது என்ற உறுதியோடு நிமிர்ந்து நின்றவள் சற்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும் படி "இல்லை என் கிட்ட எந்த நகையும் இல்ல, யாருடைய நகையும் இல்ல, ஒரு கிராம் குண்டுமணி கூட கிடையாது தங்கத்தில், என் புருஷன் வாங்கி குடுத்ததை தவிர்த்து.
அப்பறம் எப்படி அம்மன் நகை என் கிட்ட இருக்கும் இவர் அம்மன் நகையை ஊர் தலைவர் இறந்ததும் எடுத்தாரு அப்போ நான் குழந்தையா இருந்தேன் குழந்தை கிட்டையா நகையை கொடுத்தாரு?"
நச்சென்று கேட்டாள் கொடி.
“என் கிட்ட நகை இல்ல இவுங்க சம்பந்த பட்ட ஒரே ஒரு தகரம் கூட கிடையாது. எனக்கு காது கூட இவுங்க குத்தி விடல, நம்ப ஊருல இருந்த பாட்டிகிட்ட நானே குத்திகிட்டேன் அப்பவும் தோடு போடாமல் குச்சி தான் போட்டு இருந்தேன், இத்தனை வருஷமா கருப்பு கயிறு மட்டும் தான் போட்டு இருந்தேன். இது இந்த ஊர்ல இருக்க ஒவ்வொருத்தருக்கும் தெரியும். இவுங்களா எனக்கு ஒரு துணி கூட வாங்கி குடுத்தது கிடையாது அப்படி இருக்கும் போது அம்மன் நகையை என் கிட்ட கொடுத்தேன்னு சொல்லுறாரு.
நகை என் கிட்ட இல்ல அதை மறைக்கவும் என் கிட்ட இடம் இல்ல எனக்கு அக்கவுண்ட் கூட கிடையாது. ஒரு ஏக்கர் நிலம் அதுவும் நானா உழைச்சு சம்பாதிச்சு வாங்கினேன். அது இந்த ஊர்ல இருக்க எல்லாருக்குமே தெரியும்.
இப்போ என் கழுத்துல தொங்குற நகை முழுக்க என்னுடைய புருஷன் அவருடைய பணத்தில் தனிப்பட்ட முறையில் வாங்கிக் கொடுத்தது. இது யாருடைய உழைப்பும் கிடையாது, யாருடைய பணமும் கிடையாது எங்க பணத்தில் தான் என் கிட்ட நகை எதுவும் இல்லன்னு வாங்கி கொடுத்தாரு.
நல்ல புடவையில் இருந்து கைல போட்டு இருக்க வளையல் வரை எல்லாம் என் புருஷன் வாங்கி கொடுத்தது. அந்த வீட்டுல இருந்து நான் எதையும் கொண்டு வரல கொண்டு வர எனக்கு அங்க எதுவும் சொந்தமா இல்ல. அவரு என் புருஷனை பழி வாங்க, எல்லார் முன்னாடியும் என்னை வச்சி நாடகம் போடுறாரு. நீங்க எத்தனை பேர் வேணாலும் போய் எங்க வீட்டை, என் வயலையும் சோதிச்சு பாருங்க எனக்கு எந்த கவலையும் இல்ல.” என்றாள் திருத்தமாக.
மொத்த பஞ்சாயத்தே கொடியை வியந்து பார்த்தது. இவளுக்கு இவ்வளவு பேச தெரியுமா? எதை கேட்டாலும் அமைதியை மட்டுமே பரிசாக தருபவள் இன்று அழுத்தம், திருத்தமாக பேசியது அனைவரையும் கவர்ந்தது.
ஈஸ்வரன் கூட தன் மனைவியை கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கும் சிறு வியப்பு தான் தன் மனைவி நிறைந்த சபையில் இவ்வளவு தெளிவாக பேசியதில், அதிலும் அவள் கூறிய, "என் புருஷன்!" அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
முகில் மகளை அதிர்ச்சியாக பார்த்தான் எப்படியும் அவள் வழமை போல் அமைதியாக இருந்து விடுவாள் நாம் நம் மனதுக்கு தோன்றிய கதையை வழக்கம் போல் அவள் தலையில் கட்டி விடலாம் என கோட்டை கட்டியவர் கோட்டை அவளின் அடுத்த கேள்வியில் தகர்ந்து போனது.
"ஒருவேளை அவர் பெயர் மாத்தி சொல்லி இருக்கலாம் மாமா, என் கிட்ட நகை இல்ல நான் சத்தியம் பண்ணவும் தயார்."
“அதுக்கு அவசியம் இல்ல முல்லை உன்னை நம்பலன்னு யாருமே சொல்லவே இல்ல உன்னை எல்லாருமே நம்புறோம் இன்னைக்கு உண்மை கட்டாயம் வெளிய வரும், வெளிய கொண்டு வருவாரு உன் புருஷன்.” என முகில்வாணனை முறைத்துக் கொண்டே கூறினான் கம்பன்.
ஈஸ்வரன் தன் தண்டையை வருடிய படி, “என்ன முகில்வாணன் உன் பொண்ணு பதிலை தெளிவா சொல்லிட்டா, ஒருவேளை என் பொண்டாட்டி சொன்னா மாதிரி நீங்க பெயரை மாத்தி சொல்லிட்டீங்களா?”
கார்த்திகா கை, கால் உதறல் எடுத்தது, வியர்வை வழிந்தோடியது பயத்தில்.
“நாங்க எதுக்கு அடுத்தவங்களை ஏமாத்த போறோம் ஈஸ்வர் உன் பொண்டாட்டி நகை எல்லாத்தையும் கடையில் வித்து இருப்பாள் இல்லன்னா நகையை மாத்தி செஞ்சி இருப்பாள்.” என மீண்டும் அதே பொய்யை தொடர்ந்தார். “உண்மை தான் முகில்வாணன் நீ சொன்னது மாதிரி நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு. கம்பா கூப்டுடா அவரை.”
ஈஸ்வரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கம்பன் ஒருவனை இழுத்து வந்து சபையில் நிறுத்தினான். அவனை கண்டதும் கந்தப்பன், முகில் இருவரின் முகமும் அரண்டு போனது.
உத்தமன் கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடும் போல் முழியை முழித்துக் கொண்டிருந்தான். ராஜேந்திரன் தந்தைக்கு அருகில் சென்று நின்று கொண்டான்.
அனைவருக்கும் அவனை தெரியும் இந்த ஊரின் நகை ஆசாரி. காலம் காலமாக அவர்களின் குடும்ப தொழில் அது. பல குடும்பங்களுக்கு இவர்கள் குடும்பம் தான் நகை செய்து தருகிறது. இவனின் தந்தை நகை செய்தால் மிகவும் ராசியானது, மாங்கல்யம் அவரிடம் தான் செய்து வாங்குவார்கள்.
அங்கே நிற்பவனின் தந்தை மகனை அதிர்ச்சியாக பார்த்தார். ஈஸ்வரன் பார்வையில் தனி திமிர் தோன்றியது. “என்ன முகில்வாணன் இவனை யாருன்னு தெரியுதா?” ஈஸ்வரன் கேட்ட கேள்வியில் உலகரசி நடுங்கி போனாள்.
“அது எப்படி ஈஸ்வர் தெரியாமல் இருக்கும் இத்தனை வருஷமா இவருக்கு விசுவாசமாக உழைத்தவனை எப்படி தெரியாமல் போகும்?” என கம்பன் ஏற்றி விட்டான் நண்பனை.
“முகிலனின் கை கூலி இவன். அம்மன் நகையை இவன் கிட்ட தான் குடுத்து உருக்கி அவருடைய மகளுக்கு அதாவது அவருடைய இரண்டாவது மகள் கார்த்திகாக்கு. இல்ல நானே எல்லாத்தையும் சொல்லவா இவனை கண்டு பிடிச்சுசோம் அவனே சொல்லுவான்.
சொல்லுடா.” என மீசையை முறுக்கி விட்டு
கம்பீரமாக அமர்ந்தான் ஈஸ்வர்.
“கொடி என் பக்கத்துல வந்து நில்லு இனி உனக்கு அங்க வேலை இல்லை.” என்றான் மனைவியை பார்த்து. மாமனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மெதுவாக நடந்தவள் சலங்கை சத்தம் தான் முழு பஞ்சாயத்தில் கேட்டது. அனைவரும் அடுத்து என்ன நடக்கும் என ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சொல்லு…” என்று மீண்டும் ஈஸ்வரனின் குரல் ஒலிக்க. “ஐயா நாங்க பரம்பரை பரம்பரையாக நகை செய்றவங்க. ஆனா அதனால எங்களுக்கு பெரிசா வருமானமோ, லாபமோ வரல, என் அப்பா இந்த தொழிலை ஒரு சேவையா தான் செஞ்சிட்டு இருந்தாரு எனக்கு அதுல விருப்பம் இல்லாமல் வேண்டா வெறுப்பா இந்த தொழிலை செய்யும் போது தான் முகில்வாணன் என்னை தேடி வந்தாரு.
அம்மன் நகை எல்லாம் உருக்கி மாத்தி தரணும்னு கேட்டாரு. முதல்ல பயந்துகிட்டு வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனா அவுங்க நிறைய பணம் தரேன்னு சொன்னாங்க. இன்னொன்னு உங்க சித்தப்பா தான் ஊர் தலைவர் அவுங்க குடும்பம் வச்சது தான் சட்டம் அவுங்களை பகைச்சிகிட்டு வாழ முடியாதுன்னு தினமும் மிரட்ட ஆரம்பிச்சாங்க.
எனக்கும் வேற வழி தெரியாமல் ஒத்துகிட்டேன். எங்க வயல் முழுக்க இவுங்க எடுத்துகிட்டாங்க வருமானம் இல்லாமல் குடும்பம் திண்டாடவும் நானும் அந்த பாவத்தை செய்ய ஒத்துகிட்டேன்.
தங்க நகை மட்டும் உருக்கி கொடுத்தேன் கொஞ்சம் கொஞ்சமாக. வைர நகை கொஞ்சமா டவுன்ல இருக்க ஒரு கடைல வித்துட்டு புது நகை வாங்கிகிட்டாங்க.
அந்த நகை தான் அவர் பொண்டாட்டி, பொண்ணு, மருமகள் கழுத்துல கழுத்து நிறையா தொங்குவது. என் குடும்பத்துக்கும் வருமானம் கிடைச்சது. என்னால இவுங்களை பகச்சிக்க முடியலை என்ன மன்னிச்சிடுங்க ஐயா.” என மண்ணில் மண்டி இட்டு இரு கை கூப்பி கேட்டான்.
அவனின் குடும்பமே அழுதது, பஞ்சாயத்தில் தலை குனிந்து நின்றது. அதே நேரம் இன்னும் சிலரை அழைத்து வந்தான் கம்பன்.
முகில் குடும்பத்துக்கு சப்த நாடிகளும் ஒடுங்கி போனது.
காரணம் உத்தமனின் நண்பன் நின்று கொண்டிருந்தான்.
அவன் பெயரில் தான் வைர நகைகள் அனைத்தும் வெளி ஊர் பேங்கில் வைத்திருந்தான் உத்தமன்.
பேங்க் மேனேஜர் வரை வந்து நின்று இருந்தனர். மேனேஜர் கையில் இருந்த பையை ஈஸ்வரன் முன்பு நீட்டியவர், “ஐயா இது எந்த நகைனு எங்களுக்கு தெரியாது. நீங்க கேட்டீங்க நாங்க எடுத்துட்டு வந்துட்டோம்.” என்றார் மரியாதையாக.
“கொடி இந்த பையை வாங்கி பிரி.” என்றான் ஈஸ்வர். கொடி அந்த பையை வாங்கி பிரிக்க உள்ளே அம்மனின் வைர நகைகள் மின்னி கொண்டிருந்தது. கண்களில் ஒற்றிக் கொண்டாள் மெதுவாக. “மாமா இது தான் அம்மன் நகையான்னு பெரியவங்களை கூப்பிட்டு ஒரு முறை சோதிக்க சொல்லுங்க.” என்றாள். அம்மன் நகை வேண்டும் என்ற பெரியவரை அழைத்து நகைகளை சரிபார்க்க சொன்னான். அவரோ தெய்வங்களை கை எடுத்து வணங்கி விட்டு ஒவ்வொரு நகையாக சோதித்தவர், “தம்பி நகை குறையுது நீங்க உங்க மனைவிக்கு வாங்கி குடுத்த மாதிரி அம்மனுக்கு மூன்று அட்டிகை இருக்கும் ஒட்டியாணம் இல்ல, காசு மாலை மாதிரி காசுல வைர கல் பதிச்சு இருக்கும் அந்த மாலை இரண்டுமே காணும்.
மத்தபடி வளையல் ஒன்னு கூட இல்ல தம்பி.” என்றார்.
ஈஸ்வரனின் பார்வை யாமினி, கார்த்திகா கையில் கிடக்கும் வலையல்களில் நின்றது. ஈஸ்வரனின் பார்வையை உணர்ந்து இருவருமே கைகளை புடவைக்குள் மறைத்துக் கொண்டனர். மொத்த மக்களின் பார்வையும் முகில்வாணன் குடும்பத்து பக்கம் திரும்பியது.
“கோவில் நகைக்கு பதில் கண்டு பிடிச்சிட்டேன் முகில்வாணன். கோவில் உண்டியல் பணத்தை எடுத்து நீ உன்னுடைய குடும்ப செலவு பார்த்து இருக்க கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா உனக்கு? மக்கள் பணம், சாமி பணம் அது.
சாமி பணத்துல தான் உன் குடும்பம் செழிக்கணுமா? உன் வீட்டுல சாப்பாடு வேகனுமா? அப்படி தான் உன் பொண்டாட்டிக்கு, மருமகளுக்கு, மகளுக்கு புடவை வாங்கனுமா?
சுயமா அதை கூடவா வாங்கி தர உனக்கு உடம்புல சக்தி இல்லையா? ஏண்டா மாசம் ஆனா சம்பளம் வாங்குற தானே உனக்கு கூடவா அசிங்கமும், கூச்சமும் இல்ல கொஞ்சமாவது சுயமரியாதையுடன், சுய காசுல பொண்டாட்டிக்கு சோறு போடணும்னு தோணல.
அது என்ன டா ஒரு மானம் கெட்ட குடும்பம் நீங்க. புள்ளைக்கு போட்டு இருக்க டயப்பர்ல இருந்து பொண்டாட்டி கால்ல போட்டு இருக்க செருப்பு வரைக்கும் ஒன்னு கோவில் பணத்துல வாங்குனது, இன்னொன்னு உன் அக்கா இரத்தத்தை உறிஞ்சி வாங்குனது.