• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 21

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
53
26
18
Tamilnadu
இதுல நீங்களும், உங்க குடும்பமும் இந்த ஊர் பெரிய மனுஷனுங்க, பெரிய குடும்பம் உங்களுக்கு மரியாதை அதுவும் முதல் மரியாதை வேற. உன் அப்பன் இவ்வளவு கேவலமான வேலை செஞ்சும் சபையில் கூச்சமே இல்லாமல் என் பொண்டாட்டியை தைரியமா சத்தமா மாட்டி விடுறான்.
அவன் சொல்லுற கதையை நம்பி வேடிக்கை பார்க்க நான் என்ன உங்களை மாதிரியா டா என நாக்கை மடித்த படி எழுந்து நின்றான் ஈஸ்வரன்.”



ஈஸ்வரனின் கோவத்தில் அனைவரும் ஆடி போனார்கள் இத்தனைக்கும் அவன் குரலை மட்டுமே உயர்த்தி இருந்தான் முகத்தில் கோவத்தை காட்ட வில்லை. உத்தமன் துடிக்கும் இதயம் நின்று விடுமோ என தன் இதயத்தில் கை வைத்து சோதித்து கொள்ள முகில் முகத்தை திருப்பியவர் திரும்பவே இல்லை.


“உங்களால சுயமா சம்பாதிச்சு வாழ முடியாதப்போ எதுக்கு உங்களுக்கு வெள்ளை துணி, துண்டு, முதல் மரியாதை, உங்க வீட்டு பெண்களுக்கு பட்டு புடவை, நகை. அம்மன் நகையை போட்டு கிட்டு என் பொண்டாட்டியை நக்கல் பண்ணுறீங்க நீங்க? முகில்வாணன் உன் கழுத்துல கிடக்குற வெள்ளை துண்டை கழட்டி கீழ போடு இனி துண்டோ, வெள்ளை வேட்டியோ நீ கட்டாத, நம்ப ஊர்ல இனி உனக்கும், உன் மகனுக்கும் எந்த மரியாதையும் கிடையாது.” என்றான்.


முகில் துண்டை மண்ணில் எடுத்து போட்டார் பூசாரி. அவமானம் பிடுங்கி தின்றது மொத்த குடும்பத்துக்கு.
“உங்களை கட்டி வைத்து அடிக்கிறதோ, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறதோ எந்த பயனும் இல்லை. உன்னுடைய மகள் முல்லை கொடி இந்த ஊர்ல இருபத்தாறு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையை நீங்க இனி வாழ போறீங்க.” என்றவன் முகில்வாணன் துண்டை விரித்து போட்டான்.


உன் வீட்டு பொம்பளை உடம்பில் கிடக்கும் நகைகளை கழட்டி போட சொல்லு இதுல, கழுத்துல தாலி மட்டும் தான் இருக்கணும், அதுவும் கயிறுல தான் போட்டு இருக்கணும், திருடி வாழ்ந்த குடும்பத்துக்கு பகட்டு எதுக்கு?” என்றதும் பெண்கள் அனைவரும் வேறு வழி இல்லாமல் ஒவ்வொரு நகையாக கழட்டி போட்டனர்.


அங்கு நின்று இருந்த வாலிப பசங்களை அழைத்த ஈஸ்வரன், “முகில்வாணன் வீட்டை சோதனை பண்ணுங்க, அங்க இருக்க நகை, பணம் அனைத்தையும் வெளிய கொண்டு வாங்க.” என்றவன், “மீதம் உள்ள அம்மன் நகைகள் எங்க முகில்வாணன்.” கர்ஜனையாக ஒலித்தது ஈஸ்வரனின் குரல்.


முகில் வாயை திறக்க வில்லை. “மாமா அது எல்லாத்தையும் அப்பா வித்துட்டாரு எதுவும் இல்லை.” என்றான் உத்தமன் தலை குனிந்த படி. “யாருக்கு யார் டா மாமா பச்ச துரோகிகள் நீங்க உங்களுக்கு நான் மாமாவா? இவ்வளவு நேரம் இந்த பஞ்சாயத்தை எனக்கு எதிரா திருப்ப பார்த்துட்டு இப்போ வந்து மாமான்னு உரிமை கொண்டாடுறீயா? நீங்க எல்லாம் தண்டனைக்கு உரியவங்க இனி உங்களுக்கும், எனக்கும் எந்த உறவும் கிடையாது. தப்பு பண்ணுனா தண்டனை அனுபவிச்சு தான் ஆகனும்.


என்னை உறவு சொல்லி அழைக்கவோ, உறவுன்னு சொல்லிக்கவோ உங்களுக்கு உரிமை இல்லை அதை மீறி உறவு சொல்லி அழைத்தாள் நாக்கை அறுத்து எடுத்துடுவேன்.” என்றான்.



“இனி இந்த ஊரில் உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் எந்த மரியாதையும் கிடையாது. நீங்க ஊர் பொது கூட்டத்திலோ, பஞ்சாயத்திலோ கலந்துக்க கூடாது. ஊருல நடக்குற எந்த நல்ல காரியத்துக்கும் இவுங்களை அழைக்க கூடாது. இனி இந்த ஊரை விட்டு வெளிய போகவும் கூடாது அதை மீறி போனால் நீங்க திருடுன திருட்டுக்கு கம்பி என்னனும்.



இனி தினமும் கோவிலை சுத்தம் பண்ணி சாமிக்கும், கோவிலுக்கும் சேவகம் பண்ணனும் உங்க குடும்பம் முக்கியமா முகில்வாணன் ஒரு நாள் கூட தவற கூடாது.
அதே போல் அவுங்க விளை நிலம் எல்லாம் அவுங்க கிட்ட தான் இருக்கும் ஆனா அதை விற்க எந்த உரிமையும் கிடையாது. அதில் விவசாயம் பண்ணி அதில் இருந்து வரும் முதலீடு எல்லாம் கோவிலுக்கு தரணும். தினமும் வயல்ல இறங்கி மொத்த குடும்பமும் வேலை செய்யணும்.



இன்னையில் இருந்து எண்ணி பத்தாவது நாள் கோவில் திருவிழா துவங்கும். அதுகுள்ள கொடியை நான் கண்டு பிடிக்கிறேன். கோவிலுக்கு அன்னதானத்துக்கு தேவையான நெல்லு நம்ப ஊரில் நானே பணம் குடுத்து வாங்குறேன் யாராவது விக்க விருப்பம் இருந்தால் நம்ப வீட்டுக்கு எடுத்துட்டு வாங்க.


அதை எல்லாத்தையும் உத்தமன் நீ தான் தூக்கிட்டு வரணும். நம்ப ஊர்ல சிறு தொழில் அதாவது சிறு விவசாயம் பண்ணுறவங்க தோட்டத்தில் என்ன காய்கறி விலையுதோ அதை எல்லாம் தினமும் நானே வாங்கிக்கிறேன் கோவில்ல சமைக்க. தினமும் தோட்டத்தில் காய்கறி கார்த்திகா, யவனிகா, உலகரசி தான் பறிக்கணும். தோட்ட உரிமையாளர்கள் முன்னாடி நாள் சொல்லிடுங்க. திருவிழா வேலை முழுக்க முகில்வாணன் குடும்பமும், நம்ப ஊர் வாலிபர்களும் செய்வாங்க.


கோவிலை சுற்றி இருக்க இடத்தில் இந்த வருசம் கடை போட ஏற்பாடு பண்ணுங்க. நம்ப ஊர், சுத்து பட்டு மூன்று கிராமத்தை சேர்ந்தவர்கள் இலவசமா போட்டுக்கலாம்.
மூன்று வேலை அன்னதானம் தினமும் முகில்வாணன் குடும்பம் தான் சமைக்கனும், சமைக்கிறவங்களுக்கு உதவி செய்யணும் முக்கியமா பந்தி பரிமாறி அந்த இலையை இவுங்க தான் எடுக்கணும்.


கார்த்திகா எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி இருந்தாலும், யவனிகா என் சித்தப்பன் பொண்ணா இருந்தாலும் அவுங்க மொத்தமா தான் திருடி இருக்காங்க அதனால இந்த வேலை எல்லாம் இவுங்க செஞ்சி தான் ஆகனும்.
தினமும் கோவில் உண்டியல்ல வர பணத்தை அன்னைக்கு இரவே எண்ணி எடுத்து பூசாரிக்கிட்ட ஒப்படைக்கணும் உத்தமன் நீ அதுவும் பதினோரு மணிக்குள்ள.


உங்க வீட்டில அடுப்பு எரிய கூடாது, நல்ல துணி போட கூடாது, ஒரு பொட்டு நகை உங்க உடம்பில் மின்ன கூடாது, இனி இந்த ஊர் வேலை காரர்கள் நீங்க.
இனி என்னையோ, என் பொண்டாட்டியையோ முகம் பார்த்து பேச கூடாது, உங்க யாருடைய தலையும் நிமிர தகுதி கிடையாது. தலை நிமிர்ந்து வாழுற தகுதியை உங்க குடும்பமே இழந்துட்டீங்க.


என் பொண்டாட்டி முன்னாடி பேசவே கூடாது நான் இருந்தாலும் சரி இல்லனாலும் சரி. கொடி இந்த ஈஸ்வரனின் சரி பாதி. அவளுக்குறிய முழு மரியாதை எங்க இருந்தாலும் கிடைக்கணும். உழைப்புன்னா என்ன, உழைப்பு மூலமா கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பு என்னன்னு உங்களுக்கு இனி தெரியும்.


இருபத்தி நாலு மணி நேரமும் உழைக்கணும் கோவில்ல சாப்பிட்டு இங்கேயே தூங்கனும்.
கார்த்திகா தினமும் எழுந்து வீட்டுல பால் கறந்து என் மனைவி கிட்ட அளந்து வாங்கிகிட்டு கோவிலுக்கு வரணும். இது போக பள்ளிக் கூடத்தில் நீ சமைக்கணும்.


தண்டனை குறையாது, இது தண்டனையே கிடையாது ஆனா இருபத்தாறு வருஷம் என் பொண்டாட்டி எந்த கோலத்தில் எத்தனை அவமானத்தை, முக சுழிப்பை பார்த்து வந்தாள்னு உங்களுக்கு புரியனும்.


இந்த வருசம் அம்மன் அலங்காரம் மட்டும் கிடையாது அம்மன் தேர் திருவிழாவும் நடக்கும்.” என்று தன் முடிவை இறுதியாக கூறினான் ஈஸ்வரன். இது முடிவல்ல பரமேஸ்வரனின் வாக்காக தோன்றியது அனைவருக்கும்.



முல்லை - 12


கம்பன் கண் மூடி அமர்ந்து இருந்தவன் உதடுகள் வளைந்தது.
“உன் மனைவி படாத அசிங்கம் இல்லை ஈஸ்வரா, உன் தம்பி காலில் கிடந்த செருப்பு வரை கழுவி கொடுத்தாள். இவர்களுக்கு நீ கொடுத்த தண்டனை குறைவு தான் ஆனால் இதன் மூலம் இவர்கள் அனுபவிக்கும் வலி அதிகம்.” என்றான் கம்பன்.


ஈஸ்வர் முல்லையை திரும்பி பார்த்தான் அவளோ மெல்லிய புன்னகையுடன் நின்று இருந்தாள். ஊரில் அம்மனுக்கு தேர் என்றதும் அனைவரும் கூச்சலிட்டனர். இன்னும் பத்து நாளில் திருவிழா துவங்க போகிறது என்பது கூடுதல் சந்தோஷம் அனைவருக்கும்.


அனைவருக்குமே ஈஸ்வரன் மீது மதிப்பு கூடியது. அவன் மேல் நம்பிக்கை அதிகமானது. முகில்வாணன் வீட்டில் இருந்து எடுக்க பட்ட நகை, பணம் அனைத்தையும் ஈஸ்வரனிடம் ஒப்படைத்தனர். பஞ்சாயத்து முடிந்தது அனைவரும் ஈஸ்வரனை வணங்கி விட்டு கிளம்பினர்.


“மாமா நான் போய் அம்மனை பார்த்துட்டு வரேன் எனக்கு பாக்கணும் போல இருக்கு.” என்றாள். “போய்ட்டு வா கொடி.” என அனுப்பி வைத்தவன் அவமானத்தில் தலை குனிந்து நின்று இருக்கும் முகில் குடும்பத்தை நெருங்கினான்.



யாரும் ஈஸ்வரனை நிமிர்ந்து பார்க்கவில்லை. “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கா. தப்பு பண்ணி எத்தனை நாளைக்குத் நிம்மதியா வாழ முடியும் இனி முடியாது.”


உலகரசி அருகில் வந்தவன், "எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு." என்றான் பொடி வைத்து.


"உண்மையாவே கொடி உங்களுக்கு தான் பிறந்தாளா? என் பொண்டாட்டி உன் பொண்ணு தானா?"


“ஆமாம் என தலை அசைத்த உலகு. முல்லை என் பொண்ணு தான் நான் தான் பெத்தேன் அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். எல்லாருக்குமே இந்த சந்தேகம் உண்டு அவளை நாங்க படுத்தின கஷ்டத்தை பார்த்துட்டு எல்லாருமே இதை தான் கேப்பாங்க என் கிட்ட. சத்தியமா முல்லை எங்க பொண்ணு தான் ஐயா.” ஈஸ்வர் புருவங்கள் சுருங்க யோசித்தான். “அப்புறம் எதுக்கு அவளை இப்படி ஆக்கி வச்சி இருக்கீங்க?”
அதற்கான பதில் உலகு கூறவில்லை, அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.



முல்லை அம்மன் முன்பு மனம் உருகி நன்றி கூறி நின்று கொண்டிருந்தாள்.
“இத்தனை வருஷம் எனக்குள்ள அழுத்தி கிட்டு இருந்த பாரம் எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல, உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் தாயே.”


“அம்மனுக்கு இல்ல உன் மாமனுக்கு நன்றி சொல்லனும் முல்லை.” முல்லை விழிகளை திறக்க கம்பன் சிரித்த படி நின்று இருந்தான். “அண்ணா!” என அழைத்தவள் மெலிதாக சிரித்தாள்.


“இந்த சிரிப்புக்கு சொந்த காரனும் உன் மாமன் தான், இந்த ஊர் நல்லதுக்கு பண்ணுறானோ இல்லையோ உனக்காக
எல்லாத்தையும் பண்ணுவான் இந்த ஈஸ்வர். தேவைப்பட்டால் அந்த பரமேஸ்வரனை கூட எதிர்த்து நிப்பான் முல்லை.”



“அண்ணா மாமா ரொம்ப நல்லவங்க அண்ணா. ரொம்ப நேர்மையானவங்க
எல்லாருக்கும் நல்லது மட்டும் தான் செய்வாங்க. எனக்கு மட்டும் கிடையாது யார் கஷ்டத்தில் இருந்தாலும் செய்வாங்க.” என்றாள்.


கம்பனின் சிரிப்பு சத்தம் கோவில் முழுவதும் எதிரொலித்தது. யாரு உன் மாமன் நல்லவன், நேர்மையானவன், யார் கேட்டாலும் உதவி செய்வான்.” கம்பனால் சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.