• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

முரடன் 22

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
55
26
18
Tamilnadu

“நீ இப்படி ஒரு பச்ச மண்ணா இருக்க கூடாது கொடி.
ஈஸ்வரனின் சரி பாதி நீ அவனின் ஒரு பகுதியை மட்டும் தான் பார்த்து இருக்க மறு பகுதியை பாக்கல நீ.


புருஷன் ஒக்காந்தா, நின்னா, நடந்தா, சாப்பிட்டா இப்படி எல்லாத்துக்கும் அர்த்தம் சொல்லுற நீ அவனுடைய இன்னொரு உண்மையான முகத்தை தெரிஞ்சிக்க வேண்டாமா?”



“வேண்டாம் அண்ணா!” சட்டென்று வந்தது பதில் முல்லை வாயில் இருந்து. “அதை தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன். எனக்கு இந்த ஊர்ல இருக்க என் மாமனை தெரிஞ்சுகிட்ட வரை போதும். ஏன்னா மாமாவை முழுமையா தெரிஞ்சிக்க எனக்கு உரிமை இல்லை. அது எல்லாத்தையும் மாமா விரும்புறவங்க தெரிஞ்சுகிட்டும்.


எனக்கு நான் தெரிஞ்சுகிட்ட வரை போதும். பாதியில் போக போற நான் தேவை இல்லாத ஆராய்ச்சி பண்ண விரும்பல. மாமா மனசுல வேற ஒருத்தவங்க இருக்காங்க அவுங்களுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு அண்ணா எனக்கு இல்லை. நமக்கு உரிமை இல்லாத பொருள் மீது ஆசையை வளர்த்துக்க கூடாது, விடுங்க.” என்றவள் அவன் நெற்றியில் திருநீறு வைத்து விட்டு கம்பனை கடந்து சென்றாள்.



“வினை விதைத்தவன் வினை அறுவடை செய்து தானே ஆகனும், என்ன ஈஸ்வர் நான் சொன்னது உண்மை தானே!” என்றான் கோவில் பின்னால் பார்த்தபடி. கொடி பேசிய அனைத்தையும் கேட்ட படி நின்று இருந்தவன் வெளியே வந்து நிற்க. “என்ன ஈஸ்வர் முகம் வாடி இருக்கு.”


“கம்பா உன்னை குழி தோண்டி புதைக்க போறேன் பாரு.” பல்லிடுக்கில் கடித்து துப்பினான் வார்த்தைகளை.


“என் தங்கச்சி முன்னாடி நடக்கட்டும் அந்த அற்புதமான நிகழ்வு.” என ஈஸ்வரனை வெறுப்பேற்றினான் கம்பன்.
பல்லை கடித்தவன் முகத்தை கூர்ந்து பார்த்தவன், “என்ன ஈஸ்வர் வலிக்குதா?” ஈஸ்வர் பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றான்.


“எங்க ஈஸ்வர் வாயையே முல்லை அடைச்சிட்டா? அருமை, அற்புதம்.”
கம்பன் விளையாட்டை கை விட்டவன், "நீ சொன்ன வார்த்தைகளை மறக்காத ஈஸ்வர், இந்த ஊர் உனக்கு நிலையானது இல்லை, இந்த பதவியும் தான், கூடவே முல்லையும் தான்."


ஈஸ்வர் கண்கள் சிவக்க அங்கு இருந்த சூலத்தை பிடுங்கினான் கோவத்தில்..
அதற்குள் கம்பன் அங்கிருந்து மறைந்து இருந்தான். பிடுங்கிய சூலத்தை அதே இடத்தில் வைத்தவன் கண்கள் தண்டையை வருடியது, அப்படியே அவன் கண்கள் மனைவியை தேட விழி உயர அவளின் கரங்கள் ஈஸ்வர் நெற்றியில் திருநீறு பூசியது.


எப்போதும் போல் இறுகிய உதட்டோடு, கசங்கிய முகத்தோடு இல்லாமல் இன்று அவள் முகத்தில் ஓர் தேஜஸ் தோன்றியது,
அவளின் உதடுகள் இறுக்கத்தை விட்டு மெல்லிய புன்னகையை பரிசாக கொடுத்தது. அந்த மெல்லிய புன்னகையே ஆயிரம் செய்திகள் கூறியது ஈஸ்வரனிடம். அவளின் இத்தனை வருட வேதனை விலகியதின் முதல் படி தான் அவளின் உதட்டில் உறைந்த மெல்லிய புன்னகை.



“மாமா ரொம்ப நன்றி.” என்றவள், “வாங்க போகலாம்.” என முன்னால் நடந்தாள். அவளின் நன்றி கேட்டு அவன் காதில் ஈயத்தை ஊற்றியது போல் உணர்ந்தான்.


மனைவி காலடி தடத்தை பின் பற்றி ஈஸ்வரன் நடக்க துவங்கினான்.
“இப்படி தான் இருக்கணும் ஈஸ்வரா.” என கம்பன் குரல் கேட்க பல்லை கடித்து கொண்டு, ஈஸ்வர் கையை முறுக்கி கொண்டு திரும்பினான். கம்பனோ, “ஈஸ்வரா, ஈஸ்வரா!” என கடவுளை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டான்.


ஈஸ்வர் மீண்டும் முல்லை பின்னால் செல்ல. “உனக்கு தலை எழுத்து இது தான், பின்னாடியே போக வேண்டியது தான்.” என மீண்டும் கம்பன் கூறி விட. இம்முறை தண்டையை உயர்த்தியபடி திரும்பிய ஈஸ்வரன் கண்டது வெறும் இடத்தை தான் கம்பன் ஓடி விட்டான். “கைல சிக்காமலா போய்டுவ, அப்போ இருக்கு உனக்கு.” என்றவன் மனைவியை காணாமல் தேடினான்.


உலகு, யவனிகா இருவரும் கோவில் வாசலை பெருக்கி கொண்டிருந்தனர். முல்லை அவர்கள் இருவரையும் கடந்து தான் சென்றாள், அதுவும் தலை நிமிர்ந்து சென்றவளை அங்கிருந்த அவளின் குடும்பத்தால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
நிமிர்ந்து பார்க்கும் தகுதியை தான் இழந்து இருந்தார்களே அனைவர்கள்.


தன் குடும்பம் வேலை செய்தாலும் யாரையும் ஓர் பார்வை கூட பார்க்காதவள் தன் மாமன் வண்டி அருகில் நின்று கொண்டாள். கொடி வாங்கி கொடுத்த 100 ரூபாய் கண்ணாடியை மாட்டியவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


இருவரும் வீட்டு வாசலில் இறங்க நனி இருவரையும் பெருமையாக பார்த்த படி நின்று இருந்தார். பல வருஷம் நடந்த கொடுமையை ஒரே நாளில் மாற்றி அமைத்து விட்டு வருபவனை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரனும் அவரை பார்த்தான் ஆனால் என்ன பேச அமைதியாக அவரை கடந்து சென்று விட்டான். முல்லை நனி தோள் தொட்டு, “அத்தை.” என அழைத்தாள்.


“சொல்லு முல்லை! இன்னைக்கு நீ ரொம்ப தைரியமா பேசுன. இனி இதே மாதிரி இரு எனக்கு அது போதும்.” என அவளின் கன்னம் வழித்து முத்தமிட்டவர் பால் பாயாசம் பண்ணி வச்சி இருக்கேன் போய் சாப்பிடுங்க என உள்ளே அனுப்பி வைத்தவர் அங்கு அமர்ந்து இருந்த கணவனை கண்டு கொள்ளாமல் சென்றார்.


கந்தப்பன் கண் மூடி சாய்ந்தார். எதோ யோசனையாக. ராஜேந்திரன் செருப்பை தெறிக்க விட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் தன் தந்தையை கண்டதும் உச்ச கட்ட கோவத்துக்கு சென்றான். “அப்பா!” என சத்தம் வராமல் அழைத்தவன் அவர் கை பிடித்து இழுத்துக் கொண்டு யாரும் இல்லாத இடத்துக்கு சென்றான்.


“என்ன ராஜேந்திரா எதுக்கு இப்போ என்னை இங்க இழுத்துட்டு வர. எதுவுவா இருந்தாலும் வீட்டுல வச்சி சொல்ல வேண்டியது தானே.”


“அப்பா நான் இருக்க கோவத்துக்கு உங்களை எதாவது செஞ்சிட போறேன். உங்க மேல எவ்வளவோ மரியாதை, மதிப்பு வச்சி இருந்தேன் தெரியுமா? உங்களை தான் ஹீரோவா நினைச்சேன். ஆனா நீங்க ஜீரோவா இருக்கீங்க.


இந்த ஈஸ்வரன் வந்ததில் இருந்து உங்களுக்கு மரியாதையும் இல்லை உங்களை யாரும் மதிக்கவும் இல்ல வீட்டுலயும் மதிக்கல, வெளியவும் மதிக்கல. நீங்க எதையும் கண்டுக்காம அமைதியா இருக்கீங்க.
இப்போ அத்தை குடும்பம் இந்த ஊர் வேலை காரர்கள் மாதிரி ஆகிட்டாங்க. அதுல என் பொண்டாட்டி, நம்ப யவனிகா வேற இருக்காங்க. நீங்க எதுவுமே கேட்க மாட்டேங்குறீங்க. இப்படியே இருந்தா என்ன அர்த்தம். இன்னும் நீயும்
நானும் மட்டும் தான் அடிமை ஆகள.


யாருக்கு தெரியும் நாளைக்கு நம்ப கூட அந்த முல்லைக்கு அடிமையா சேவகம் செய்யலாம். அப்பவும் இப்படி அமைதியாகவே இருப்பா.
அந்த தண்டையை போட்டுகிட்டு அவன் ஆடுற ஆட்டமும் அதுக்கு இந்த ஊர் மக்கள் போடுற ஜால்ராவும் சுத்தமா தாங்க முடியல என்னால. ஒரு இடத்தில் கூட நமக்கு மரியாதை இல்ல.


இந்த திருவிழாவை மட்டும் ஈஸ்வரன் நல்ல படியா முடிச்சிட்டா அதுக்கப்பறம் அவனை ஊரே கடவுளா பார்க்க ஆரம்பிச்சுடும்.
நம்ப கோவில் வாசல்ல பொட்டலம் போட்டு பிழைக்க வேண்டியது தான் ப்பா.”


“நம்ப எதுக்கு டா பொட்டலம் போடணும், இந்த ஊரையே வாங்கனும் டா நம்ப. சீக்கிரமே நடக்கும். அந்த தண்டைக்கும், நாற்காலிக்கும் என்ன மதிப்பு இருக்கு ஒன்னும் கிடையாது. அதையும் தாண்டி பொன் விளையுற பூமி இது. எல்லாமே எனக்கு கிடைக்கட்டும் அப்புறம் நம்ப ஆடுற ஆட்டத்தை இந்த ஊரே வேடிக்கை பார்க்கும் டா.”


“என்னப்பா சொல்லுற ஒன்னுமே புரியல எனக்கு?”


“உனக்கு சொன்னா புரியாது ராஜேந்திரா, இந்த திருவிழா நடக்கட்டும். இந்த திருவிழா முடியுறதுகுள்ள எனக்கு வேண்டியதை நான் எடுத்துகிறேன்.” என்றார் கண்கள் மின்ன. தந்தை எதோ திட்டத்தில் இருப்பது தெரிந்தாலும், திருவிழாவில் என்ன செய்யலாம் என ராஜேந்திரன் மனம் கணக்கு போட்டது.



“அப்பா இந்த ஈஸ்வர் உண்மையாவே உன் அண்ணன் மகன் தானா? நீ என்னமோ உன் அண்ணன் உயிரோட இல்ல செத்துட்டான் எல்லாமே நமக்கு தான்னு சொன்ன. நீ சொன்னா மாதிரி உன் அண்ணன் சொத்துட்டான், ஆனா அவன் வாரிசுன்னு ஒருத்தன் வந்து நிக்கிறான்.”


எனக்கு அது தான் புரியல ராஜேந்திரா, விசாரிக்க சொல்லி இருக்கேன். சீக்கிரம் பதில் கிடைக்கும். அதுவரைக்கும் நம்பளா எதாவது பண்ணி அவன் கிட்ட மாட்டிக்க கூடாது. நீ அவனை விட்டு தள்ளியே இரு நான் பாத்துக்கிறேன்.” என்றவர் பின் வாசல் வழியாக சென்றார்.


ராஜேந்திரன் அமைதியாக வீட்டை வெறிக்க பார்த்தான். ‘இவரு என்னைக்கு எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறது, நம்ப என்னைக்கு எல்லாத்தையும் அனுபவிக்கிறது. அதுகுள்ள இங்க இருக்க ஒவ்வொரு செங்கல்லையும் ஈஸ்வரன் அவனுக்கு சொந்தமா மாத்திடுவான் போல. நமக்குன்னு ஒன்னுமே இல்லாமல் நிக்கனும்.’ என நினைத்துக் கொண்டான்.



தந்தை, மகனும் பேசிக் கொண்டிருந்ததை தன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஈஸ்வரன்.


ஈஸ்வரனின் அறை சற்று வித்தியாசமானது. அந்த அறைக்குள் இருந்து பார்த்தாள் வீட்டை சுற்றி நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
அதே சமயம் அந்த அறைக்கு நிறைய ஜன்னல்கள் உண்டு ஒரு ஜன்னலில் இருந்து பார்த்தால் கோவில் கோபுரம் தெளிவாக தெரியும், பின் பக்கம் உள்ள ஜன்னலில் இருந்து பார்த்தாள் அவர்களின் தென்னதோப்பு தெரியும். ஊரே பாதி அடங்கி போகும். அங்கிருந்து தான் ஈஸ்வரன் தினமும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
வீட்டின் அமைப்பு சற்று மாறுபட்டதாக தோன்றும் அவனுக்கு.


“மாமா பால் இந்தாங்க.” மனைவி குரலில் திரும்பியவன் அவள் நீட்டிய பாலை வாங்கிக் கொண்டான்.


“உனக்கு?”


“நான் குடிச்சிட்டு தான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன் மாமா குடிங்க.”


தன்னுடைய பாயை எடுத்து விரித்தவள். “மாமா கோவில் திருவிழா துவங்குனதும், உங்க கைல காப்பு கட்டுவாங்க, காப்பு கட்டிட்டா நீங்க பஞ்சு மெத்தையில் படுக்க கூடாது மாமா, தரையில் தான் படுக்கணும். புருஷன் பொண்டாட்டி தனி தனியா இருக்கணும்னு சொல்லுவாங்க,
நம்ப தனியா தான் இருக்கோம் அதனால எந்த பிரச்சனையும் இல்ல.
ஆனா காப்பு கழட்டுற வரைக்கும் நீங்க தரையில் தான் தூங்கனும்.”


“என்ன!” என அதிர்ச்சியாக கேட்டான். அவனின் அதிர்ச்சி கண்டு மென்மையாக சிரித்தவள், “உண்மை தான் மாமா, நீங்க வெளியூர் ஆள் அதான் உங்களுக்கு தெரியல.”


“ஓ. இப்படிலாம் இருக்கா. அப்போ நீ கட்டில்ல படுத்துக்கோ, நான் பாய்ல படுத்துகிறேன்.”

“மாமா எனக்கும் தான் காப்பு கட்டுவாங்க, நானும் தரையில் தான் தூங்கனும் பஞ்சு மெத்தையில் தூங்க கூடாது.”


“நீ எப்பவும் கட்டில்ல தூங்க மாட்டியா கொடி?”


“நான் எப்பவுமே கட்டில்ல தான் மாமா தூங்குவேன் ஆனா கைத்து கட்டில்ல தூங்குவேன். இந்த பஞ்சு மெத்தை எனக்கு பழக்கம் இல்லை. அதுவும் வயக்காட்டுல கைத்து கட்டிலை போட்டு இதமான காத்துல சுகமா தூக்கம் வரும் மாமா. சொர்க்கத்துல இருக்கா மாதிரி அது. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசில் இருந்து அப்படி தான் தூங்கி இருக்கேன்.