• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 29

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
68
29
18
Tamilnadu

அத்தியாயம் – 29





முதல் முதலில் தண்டையை கையில் ஏந்தி கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்து இருப்பவர் பெயரும் பரமேஸ்வரன். அப்படியே ஈஸ்வரனை போலவே உள்ளார். அதை விட அதிர்ச்சி. அவர் அருகில் நிற்கும் அவர் மனைவியை கண்டு தான்.


மல்லிகொடி அவரின் பெயர். அப்படியே கொடியை போலவே நிறம், உயரம், உடை, நகை என அனைத்தும் பொருந்தியது. கணவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டு இருந்தார். அவர் முகத்தில் எவ்வளவு சந்தோஷம், அவர் கண்களில் தான் எவ்வளவு காதல், இருவருமே மிக நெருக்கமான தம்பதிகள் என்பது புரிந்து போனது.


முதல் முதலில் இவர்களிடம் இருந்து ஆரம்பித்து இப்போது என்னிடம் வந்து நிற்கிறது. எனக்கு கொடி தான் என விதி முடிவு செய்தது உண்மை தானா என அவன் மனம் முதல் முறை நம்ப துவங்கியது.


எதுவும் பேசாமல் இருவர் முகத்தையும் பார்த்தபடி நகர்ந்து சென்றவன் அங்கு இருந்த அலமாரியை திறந்தான். ஆடம்பரமான, விலை உயர்ந்த பாரம்பரிய உடைகள். அங்கு சில குறிப்பேடுகள் அடுக்க பட்டு இருந்தனர்.


ஆண்டாண்டு காலமாக, வம்சா வழி வம்சமாக பெண்கள், ஆண்கள் அணிந்து உபயோகித்த ஆபரணங்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தது. அதில் இருந்த நகைகள்களை வைத்து ஒரு நகரத்தை விலைக்கு வாங்கி சீரமைத்து விடலாம் அவ்வளவு நகைகள்.


அதிலும் ஒவ்வொருவர் கால கட்டத்தை குறிப்பதை போன்று ஏதேனும் ஒரு நகை அவர்களின் பெயர் பொறிக்க பட்டு விட்டு சென்று இருந்தனர், அடுத்த, அடுத்த தலைமுறைக்கு. சித்தப்பு கொத்து சாவி தேடியதில் தப்பு இல்லை என நினைத்துக் கொண்டவன் கண்களை கூசும் நகைகளை அப்படியே மூடி வைத்தான்.


அடுத்த பெட்டியை திறக்க அதில் அம்மனுக்காக உருவாக்க பட்ட நகைகள் அடுக்கி வைக்க பட்டிருந்தது. அதையும் ஈஸ்வரன் ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்து விட்டு மூடி வைத்தான்.


இவ்வளவு விலை உயர்ந்த நகைகள், இவ்வளவு நகைகளை பாதுகாப்பதில் தவறு இல்லை அதற்கு தகுந்த இடம் தான், ஆனால் வெறும் நகைகள் மட்டுமா உள்ளது இங்கு என யோசித்தபடி திரும்பியவன் கண்களில் சிக்கியது அங்கு இருந்த குறிப்பேடுகள். முதல் குறிப்பேட்டை கையில் எடுத்தான்.


ஓலை சுவடி போல் அமைப்பில் இருந்தது, மிக பழமையானது. ஈஸ்வரன் முதல் பாகத்தை பிரித்தான் அவனின் கெட்ட நேரம் தமிழில் எழுதி இருந்தது. ஆனால் ஈஸ்வர் இப்போது ஓரளவுக்கு தமிழ் படிக்க கற்றுக் கொண்டதால் பொறுமையாக படிக்க துவங்கினான். "ஓம் நமச்சிவாயா!" என்ற மந்திரத்தில் ஆரம்பம் ஆகி இருந்தது.


"இந்த குறிப்பேட்டை திறப்பவர்கள் கட்டாயம் நம் வம்சத்தின் பாரம்பரியத்தை அறியாதவர்களாக மட்டுமே இருக்க முடியும், அதிலும் காலங்கள் மாற மாற ரகசியங்களும், வழிமுறைகளும் மாறலாம் இல்லை அழியலாம் யார் கண்டது நாம் வம்சத்தின் தொப்புள் கொடியாக விளங்கும் தண்டை கூட நம்பை விட்டு பறிபோகலாம். தண்டை மகத்துவமும், அதன் நோக்கமும் புரியாமல், தெரியாமல் கூட போகலாம்.


அப்படி ஒரு நிகழ்வு நிகழ கூடாது என்பதற்காகவே நானே என் கையால் இந்த குறிப்பேட்டை எழுதுகிறேன். முதல் முதலில் என் கைக்கு வந்த தண்டை இந்த தண்டைக்கான, அலங்கரிக்க பட்ட நாற்காலிக்கான நோக்கம் ஊரையோ, மண்ணையோ ஆளுவது கிடையாது.


நாம் முதலாளிகளும் கிடையாது, இந்த ஊரும் சுற்று பட்டு கிராமங்களும் நமக்கு அடிமைகள் கிடையாது. நாம் தான் அடிமைகள், சிவனின் அடிமைகள், அந்த பரமேஸ்வரனின் அடிமைகள். அவரின் கட்டளையை நிறைவேற்றும் அடிமைகள். இந்த ஊரையும், இந்த மண்ணையும், இந்த ஊரில் கொட்டி கிடக்கும் ரகசியங்களும் நம்பை தாண்டி வெளியே போகாமல் காவல் காக்கும் காவலாளிகள்.


நம் ரத்தத்தில் பணமோ, ஆதிக்கமோ, ஆசையோ, பேராசையோ, உரிமையோ, சுயநலம் இப்படி எதுவும் கலக்காமல் வாழ வேண்டும் ஊருக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் காலம் மாறும் போது நம்மிடம் இருக்கும் செல்வங்களை கண்டும், நாம் பாதுகாக்கும் ரகசியங்களை கண்டும் நம் ரத்தத்தில் ஓர் துர் இரத்தம் கலக்கும் என்பதை விதி முடிவு செய்து விட்டது. அது எந்த ஜென்மத்தில், எந்த வம்சத்தில் என்பதை கணிக்க முடியவில்லை.


அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் காலம் காலமாக பசுமை மாறாமல் பலபேருக்கு உணவளிக்கும் இந்த ஊரும் சாப்பாட்டுக்கு கை ஏந்தும் நிலை உண்டாகும். விலைபதிப்பற்ற பொக்கிஷம் நம்மை விட்டு சென்று விடும். மக்கள் பசி, பட்டினியால் சாக நேரிடும்.


மிகவும் புகழ் பெற்ற பல மக்களை வாழ வைக்கும் தீபாஞ்சத்தில் தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் உருவாகி நம் மக்களை அழிக்கும். அப்படி ஒரு காலகட்டம் வரவே கூடாது நமக்கு. நம் மக்கள் எப்போதும் போல தலை நிமிர்ந்து வாழ வேண்டும் ஒருவர் மற்றவருக்கு கூலியாக வாழவே கூடாது.. அதற்கு நம் குடும்பம் ஒத்துக்கவும் கூடாது.


தண்டையை வைத்து மண்ணை ஆளவோ, மக்களை ஆளவேண்டும் என்ற மோகம் கொள்ள கூடாது.” இப்படிக்கு பரமேஸ்வரன் என்ற கையெழுத்துடன் முடிந்து இருந்தது.


முதல் குறிப்பேட்டில் இருந்தவைகளை படித்து முடித்தவன் கண்கள் தண்டையை வருடியது. தண்டை வெறும் வார்த்தை இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் மீண்டும் தேட துவங்கினான். ரகசியங்கள் என்ன? இந்த ஊரில் என்ன உள்ளது? இந்த இரவுக்குள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தேடிக் கொண்டு இருந்தான்.


மற்ற குறிப்புகளில் கோவில் உருவான விதம், திருவிழா பற்றிய வழிமுறைகள். ஊரில் இதுவரை நடந்த திருவிழாக்கள் இவையே இருந்தது. அதில் ஒரு குறிப்பேடு மட்டும் பாதிக்கு மேல் காணாமல் போனதை அறிந்து கொண்டான்.


அப்போ சித்த்தப்புக்கு இதை வச்சி தான் ரகசியம் தெரிஞ்சு இருக்கு. என் தாத்தா எனக்காக எழுதிய கடிதத்தில் இருந்ததை கிழித்ததும் அவர் தான்.


நீ எதை மறைக்க நினைக்கிறியோ அதை தெரிந்தே தீருவேன் என்ற பிடிவாதம் தோன்றியது ஈஸ்வரன் மனதில். அறையை சுற்றி சுற்றி எவ்வளவு தேடினாலும் நகைகள், பணங்கள், நாணயங்கள், இது போன்று புதையல் போல் கிடைத்துக் கொண்டு இருந்தது. அவைகளை கண்டு ஈஸ்வரன் ஆச்சர்ய படவோ, ஆசைபடவோ இல்லை அவைகளை மதிக்க கூட இல்லை. வெறிக் கொண்டவன் போல் தேடினான். அவனின் ஈகோவை சீண்டியது போல் உணர்ந்தவன் அந்த அலமாரியை ஓங்கிக் குத்தினான்.


ஈஸ்வரனின் முழு பலத்தில் அலமாரி குலுங்கியது பக்கவாட்டில் ஓர் சிறிய மரபலகை வெளியே வந்து விழுந்தது. ஈஸ்வரன் சத்தத்தில் பக்கவாட்டில் எட்டி பார்த்தவன் அதற்க்குள் இருந்து தனியாக விழுந்து கிடந்த தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை கண்டதும் புரிந்து கொண்டான் அது தனக்கான ரகசியம் என்பதை.


தன் சிறு வயது போட்டோ வரை வைத்திருக்கிறார் என்றால் கட்டாயம் தங்களை பின் தொடர்ந்து இருக்கிறார். எதற்காக? தெரிந்தும் தெரியாதது போல் இருந்தார். ஒருமுறை கூட எங்களை சந்திக்காதது ஏன்?


பலகையுடன் எடுத்தான் அனைத்தையும். ஈஸ்வரனின் தந்தை புகைப்படம் இருந்தது. கூடவே ஒரு பெரிய புக் அளவுக்கு ஒரு குறிப்பேடு இருந்தது. கையில் எடுத்துக் கொண்டவன் புகைப்படங்களை அலமாரியில் வைத்து விட்டு குறிப்பேட்டில் முதல் பாகத்தை திறந்தான்.


"ஈஸ்வரா...பரமேஸ்வரா... நான் தான் டா உன் தாத்தா நாகமூர்த்தி. இது உன் கைக்கு கிடைக்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன், உன்னை பார்க்க மாட்டேன், நீயும் என்னை பார்க்க மாட்டாய்.


எங்க மேல நீ கோவமா இருப்பேன்னு தெரியும், அதே நேரம் நீ ரகசியங்களை தேடுறன்னா நீ நம்ப மண்ணையும், தண்டையையும் பாதி ஏத்துகிட்டன்னு அர்த்தம்.


ஈஸ்வர் நீ தேடும் ரகசியம் என்னன்னு தண்டையை கையில் போட்டு இருக்கவங்களுக்கு மட்டும் தான் இத்தனை வருஷம் தெரியும். விதி உன்னுடைய தலைமுறையில் எல்லாத்தையும் மாத்திடுச்சி ஈஸ்வர். இதில் விதியை மட்டும் என்னால குறை சொல்ல முடியாது, முழுக்க முழுக்க இதுக்கு நான் தான் காரணம்.


இன்னைக்கு இந்த மண்ணை பத்தியும், குடும்பத்தை பத்தியும், தண்டையை பத்தியும் எதுவுமே நீ தெரியாம நிக்க காரணம் உன் அப்பா இல்ல நான் தான். அதை நினைத்து வருந்தாதா நாள் இல்ல ஈஸ்வர்.


உனக்கு உண்மையை புரிய வைக்க பல வழியில் நான் முயற்சி பண்ணி வச்சிருக்கேன். அது எதுவும் உன் கைக்கு கிடைக்கலனா இது என்னுடைய கடைசி நம்பிக்கை. கட்டாயம் இது உன் கைல கிடைக்கும்.


உன் சித்தப்பன் முழுக்க முழுக்க விஷம் ஈஸ்வரா. அவனை ஒரு சதவிகிதம் கூட நம்பாத. அவனால தான் இன்னைக்கு நம்ப எல்லாரும் பிரிஞ்சி இருக்கோம். கூடவே இருந்து அமைதியா குழி பறிக்கிற குள்ளநரி, விஷ நாகம்.


அவனுடைய உண்மையான குணம் தெரியாமல் அவனை இத்தனை வருஷம் வளர்த்து ஆளாக்கி, அவன் பேச்சை நம்பி உன் அப்பாவை சந்தேக பட்டேன்.


எந்த உண்மையும் உனக்கு தெரிய கூடாதுன்னு அவன் தெளிவா இருப்பான், தண்டை உன் கைக்கு ஏறுனதில் இருந்து உன்னை கொலை செய்ய திட்டம் தீட்டிக்கிட்டே இருப்பான். நீ பாதுகாப்பா இரு ஈஸ்வரா.


என்னை மாதிரி முட்டாளா இருக்க கூடாது. உங்க அப்பா எவ்வளவு நல்லவன்னு எனக்கு அவன் போன பிறகு தான் டா தெரிஞ்சிது.


நாகமூர்த்தி மகன்கள் இருவர், மூத்தவர் தான் ஈஸ்வரனின் அப்பா கந்தர்வன், இரண்டாவது கந்தப்பன்.


கந்தர்வன் முரடன் எப்போதும் வாய் பேசுவதை விட கை தான் அதிகம் பேசும். அம்மா செல்லம், ஊரில் மதிப்பானவன். காரணம் முரடனாக இருந்தாலும் நேர்மையை பின்பற்ற கூடியவன். நம்பிக்கையானவன், சொன்ன வார்த்தையை காப்பாற்ற கூடியவன்.


ஆனால் தந்தைக்கு பிடிக்காத பிள்ளை. வீட்டின் மூத்த மகன், அடுத்து தண்டையை கையில் தாங்க கூடிய வாரிசு, இப்படி முரட்டு குணத்துடன் யாருக்கும் அடங்காமல், ஊர் வம்பை வாங்கி கொண்டு, குடும்பத்துக்கு பொருந்தாத பிள்ளையாக இருப்பதால் அவனை கண்டாலே பிடிக்காமல் போனது.


கந்தர்வனின் நேர்மறை கந்தப்பன் வீட்டின் பொறுப்பான பிள்ளை, அமைதியான பிள்ளை, வீட்டு வேலை, தோட்டத்து வேலை என அனைத்தையும் இழுத்து போட்டு செய்ய கூடியவன். தந்தைக்கு மிகவும் விருப்பமான பிள்ளை. தந்தை சொல்லே மந்திரம் என வாழும் பிள்ளையை யாருக்கு தான் பிடிக்காது.


ஆனால் நாகமூர்த்தி ஊர் தலைவராக இருந்தாலும், தண்டையை கையில் போட்டு இருந்தாலும் நன்மை, தீமையை யோசிக்க மறந்து போனார். ஊருக்கே நியாயம் கூறுபவர் எப்படி சொந்த மகன் செயலை புரிந்து கொள்ளாமல் போனார் என்று தெரியவில்லை.


கந்தப்பனால் வரும் பிரச்சனைகளை வீட்டுக்கு தெரியாமல் கந்தர்வன் சரி செய்கிறார். ஆனால் பழி அனைத்தும் கந்தர்வன் மீது. ஆனால் அவனின் தாய்க்கு கந்தர்வன் எது செய்தாலும் அது சரியாக தோன்றும். மகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டவர்.


ஊர், உறவு அனைத்து இடங்களிலும் கந்தர்வனுக்கு கிடைக்கும் மரியாதை,பெயர், புகழ் அனைத்தையும் கண்டு கந்தப்பன் பொறாமை கொண்டான். இவன் இவ்வளவு முரடனா இருந்தாலும் இவனுக்கு தான் எல்லாரும் முன்னுரிமை தறாங்க. அதுக்கு காரணம் அந்த நாற்காலியும், தண்டையும் தான்.


அது இவனுக்கு கிடைக்க கூடாது என முடிவு செய்தான். மனதிற்குள் வஞ்சத்தை சிறு வயதில் இருந்தே வளர்த்துக் கொண்டு வெளியே அண்ணன் மீது உயிரையே வைத்திருப்பது நடிக்க துவங்கினான். தந்தையிடம் நல்ல பெயர் வாங்க மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டான். சிலரிடம் தேவை இல்லாமல் வம்பு வாங்கி அதில் கந்தர்வனை கோர்த்து விட்டான்.


நாகமூர்த்தி காதுகளுக்கு மகன் சண்டை போட்டது வரை சென்றது அது ஏன் என விசாரிக்காமல் மகனை வெறுக்க துவங்கினார். இதை முழுவதும் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டார் கந்தப்பன். கந்தப்பனை பற்றி தெரியாமல் கந்தர்வன், நாகமூர்த்தி இருவரும் அவன் மீது அதீத பாசத்தை வளர்த்துக் கொண்டனர்.


அந்த பாசத்தை வைத்தே குடும்பத்தை நிர்மூலம் ஆக்க போகிறான் கந்தப்பன். இதில் கந்தர்வனின் காதலையும் பறித்துக் கொண்டான் கந்தப்பன். தண்டையை கந்தர்வனின் கைக்கு மாற்ற வேண்டிய நேரமும், காலமும் நெருங்கியது. கந்தப்பன் தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான். நள்ளிரவு நேரம் அனைவரும் உறங்கும் போது கந்தர்வன் அறை கதவை தட்டி விட்டு ஒன்றும் தெரியாதது போல் தன் அறைக்கு ஓடியவன் தான் தூக்கு மாட்டிக் கொள்ள தயாராக போட்டு வைத்திருந்த தாய் புடவையில் தலையை விட்டான்.


கந்தர்வன் சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்தார். என்ன யாருமே இல்ல அப்பறம் யார் கதவை தட்டுனது என யோசித்துக் கொண்டே தம்பி அறையில் விளக்கு எரிவதை கண்டவர் இவன் தினமும் விளக்கை போட்டு விட்டுட்டு தூங்குறான் என்னைக்கு தான் திருந்த போறான்னு தெரியல என சிரித்துக் கொண்டே கந்தப்பன் அறையை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனார். கந்தப்பன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து வேகமாக ஓடி தம்பியை தூக்கி புடவையை வெட்டி எடுத்து தம்பியை காத்தவன் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் கன்னத்தில் அறைந்தார்.


“என்ன கந்தா இது உனக்கு எதாவது பிரச்சனை இருந்தா நீ என் கிட்ட சொல்ல வேண்டியது தானே அதுக்காக இப்படி ஒரு மோசமான முடிவா எடுப்ப. உனக்காக அண்ணன் இருக்கேன் டா. உனக்காக எதுவேனாலும் செய்வேன். நீ கோழை மாதிரி முடிவு எடுக்குற.”


கந்தர்வனுக்கு ஆத்திரம், வேதனை இரண்டும் அடங்க வில்லை தன் செல்ல தம்பி, தன் உயிர் தம்பி இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டானே என்ன ஆதங்கம் அவருக்கு.


“இல்ல அண்ணா உன்னால எதுவும் பண்ண முடியாது அண்ணா. நீ எனக்காக எதுவுமே பண்ண முடியாது அண்ணா.” என்றான் கண்களில் கண்ணீரை வைத்தபடி.


“என்னால் முடியாதா கந்தா? என்னால முடியாதா? உன்னுடைய வேதனை என்னுடைய வேதனை கந்தா, நான் உனக்கு வாக்கு குடுக்குறேன். நான் என்ன பண்ணனும்னு சொல்லு உனக்காக இந்த அண்ணன் சத்தியமா செய்வேன். உனக்கே தெரியும் கந்தா நான் குடுக்குற வாக்கை மீற மாட்டேன்னு.”


உண்மை அறியாமல் வாக்கு கொடுத்த கந்தர்வன் நிலை இன்றோடு இங்கு இறுதி அத்தியாயமாக மாறி போனது.



தொடரும்...