அத்தியாயம் – 41
“மாமா, மாமா!” என அழைத்தபடி ஈஸ்வரன் அறை வாசலில் நின்று இருந்தாள் பால் டம்ளருடன். தன் கொடி வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்தான் போல அவளின் இரண்டாவது மாமா என்ற அழைப்புக்கே,
"உள்ள வா கொடி." என சத்தமாக அழைத்தான் ஈஸ்வரன்.
மாமன் குரல் கேட்டதும் மெதுவாக அறைக்குள் அடி வைத்து உள்ளே நுழைந்தவள் அறையின் குளுமையில் சிலிர்த்து போய் நின்று விட்டாள். வீட்டை விட ஈஸ்வரனின் அறை ஆடம்பரமாக இருந்தது. அறைக்குள்ளே மாமனை தேடியவள் பின்னால் இருந்து அவளுக்கு போர்த்தி விட்டான் ஈஸ்வரன்.
அவள் கையில் இருந்த பாலை வாங்கியவன், “உக்காரு கொடி ஏசி நிறுத்திட்டு வரேன்.” என்றவன் அவளுக்காக ஏசியை நிறுத்தி விட்டு அவள் கொடுத்த பாலை குடிக்க துவங்கினான்.
“இவ்வளோ பெரிய அறைல நீங்க மட்டும் தனியா இருக்கீங்களா மாமா?” கண்களை விரித்து ஆச்சர்யமாக கேட்டாள்.
“ஆமா கொடி இது நம்ப அறை எனக்கு பிடிச்சா மாதிரி பார்த்து பார்த்து உருவாக்கினேன். வா சுத்தி பாரு, உனக்கும் பிடிச்சி இருக்கான்னு சொல்லு.” என்றவன் அவளை அழைத்து சென்று அறையை சுற்றி காட்டினான்.
அறைக்குள்ளேயே பல அறைகள் இருந்தது. முதலில் ஒரு அறைக்குள் அழைத்து சென்றவன் இது என்னுடைய வோர்க்கிங் ரூம் கொடி, உள்ளே கணினி சில இருந்தனர். அடுத்த அறை இது ஓய்வெடுக்க, துணி மாற்றும் அறையை காட்டியவன் கடைசியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றான். இது என்னுடைய பொருள் எல்லாம் வைக்கிறதுக்கு.
அந்த அறையை கண்டவள் அப்படியே சிலையாக நின்று விட்டாள். செருப்பு, ஷூ ஒரு பக்கம் தனி தனியாக அடுக்க பட்டு இருந்தது வித விதமாக. வாட்ச் பல விதங்களில் கண்ணாடி ரேக்குள் அழகாக ஜொலித்து கொண்டு இருந்தது.
ஈஸ்வரனின் துணிகள் துணி கடையில் அழகுக்கு அடுக்குவது போல் அடுக்கி இருக்க அதில் ஒரே ஒரு வேட்டி சட்டை கூட காணவில்லை.அனைத்துமே விலை உயர்ந்த பொருட்கள். அதிலும் இங்கு இருக்கும் பொருட்களை வைத்து தனி தனியாக கடையே வைக்கலாம் போல அவ்வளவு பொருட்கள் தனி தனியாக நேர்த்தியாக அடுக்கபட்டு இருந்தது. இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்த தன் மாமன் எப்படி அந்த கிராமத்தில், அந்த சின்ன வீட்டில் வசிக்கிறார் என்று தான் தோன்றியது முல்லைக்கு.
யோசித்துக் கொண்டே திரும்பியவள் கண்ணில் சிக்கியது கண்ணாடி பெட்டிக்குள் தனி தனியாக அடுக்கபட்டு இருந்த கூலிங்கிளாஸ். இவ்வளவு கண்ணாடியா கண்டிப்பா இதுவும் விலை உயர்ந்ததாக தான் இருக்கும் என்று யோசித்தவளுக்கு தான் வாங்கி கொடுத்து சந்தோஷ பட்டுக் கொண்ட நூறு ரூபாய் கண்ணாடி நினைவில் வந்தது.
‘எதுவும் சொல்லாமல் மாமா வாங்கி போட்டுக் கொண்டாரே. இவ்வளவு பெரிய கோடீஸ்வரருக்கு நான் நூறு ரூபா கண்ணாடி வாங்கிக் கொடுத்து இருக்கேன்.’ என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஷிவ் என சில்வியா குரல் கேட்டது.
அவள் குரல் கேட்டதும், “மாமா நான் கிளம்புறேன்.” என அவசரமாக அவன் முகம் பார்க்காமல் கூறியவள் தான் கொண்டு வந்த டம்ளரை எடுக்கும் போது அதன் அருகில் இருந்தது அவள் வாங்கிக் கொடுத்த நூறு ரூபாய் கண்ணாடி.
சில்வியாவை பார்த்து மென்மையாக சிரித்தபடி அங்கிருந்து வெளியே செல்லும் மனைவியை பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் ஈஸ்வரன்.
கொடி அறையை தாண்டியதும், "என்னுடைய அமைதியை நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட சில்வியா, இந்த ரூம்குள்ள அனுமதி இல்லாம வர உரிமை என் கொடிக்கு மட்டும் தான் இருக்கு, வேற யாருக்கும் கிடையாது. உன் கிட்ட இவ்வளவு பொறுமையா பேச காரணமே எனக்கும், கொடிக்குமான விரிசலை நீ தான் சரி பண்ண போற அதுக்காக மட்டும் தான் விட்டு வச்சி இருக்கேன். உனக்கு கொடியை பத்தி தெரியல, தெரிஞ்சிக்க கூடிய நேரம் வரும், இப்போ என் ரூம் விட்டு வெளிய போ.” சில்வியா முகம் மாறி போனது. அவன் இவ்வளவு பொறுமையாக பேசுவதே முதல் ஆச்சர்யம்.
"எதுக்காக முல்லையை உனக்கு பிடிச்சி இருக்கு ஷிவ்?"
“உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது, கெட் அவுட்!” என உறுமியவன் தன்னுடைய கணினியை எடுத்துக் கொண்டு ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
கொடிக்கும், எனக்குமான தனிமையான நேரத்தை கெடுத்ததில் சில்வியா மீது கொலை வெறியே உருவானது. முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வெளியே வந்தவள் முன்பு மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நின்று இருந்தான் துரு.
“ரொம்ப அசிங்கமா நடந்துக்குற சில்லு நீ, கொடி ஈஸ்வரன் கூட இருந்தா உனக்கு என்ன? அவுங்க ஒன்னா இருக்குறது பிடிக்காமல் நீயும் உள்ள போய் இருக்க, கொஞ்சம் கொஞ்சமா உன்னுடைய நல்ல குணத்தை இழந்துட்டு வர நீ.”
“உன் வேலையை மட்டும் பாரு துரு என் விஷயத்தில் தலையிடாத, எனக்கு தெரியும் என்ன பண்ணனும், பண்ண கூடாதுன்னு. நீ எனக்கு கிளாஸ் எடுக்காத.” என வெடுக்கென்று கூறியவள் துருவனை கடந்து சென்றாள். சில்வியா முதுகை வெறிக்க பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் துரு.
“துரு சீக்கிரமே எல்லாமே சரி ஆகிடும் விடு.” என துருவனின் தோளில் தட்டி ஆறுதல் கூறினாள் சோயா.
“ஷிவ் இப்படி மாறுவான்னு நம்ப எதிர் பார்க்கல அதுவே நடந்துடுச்சி, சில்லுவும் மாறிடுவா.”
“நடந்தா நான் ரொம்ப சந்தோஷ படுவேன். சில்லு தன்னை தானே அசிங்க படுத்திக்கிறா சோயா.”
“சரி வா பார்ட்டிக்கு தேவையான எல்லாத்தையும் பார்ப்போம்.” என அவன் கவனத்தை திசை திருப்பி அழைத்து சென்றாள் சோயா. இருவரும் நல்ல நண்பர்களை போல் பழகுவார்கள் வயது வித்தியாசம் பார்க்காமல்.
சில்லு நினைப்பது நடக்குமா? துரு நினைத்தது நடக்குமா? ஈஸ்வரன் நினைத்தது நடக்குமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் முல்லை மட்டும் தான்.
அடுத்த நாள் அவசரமாக கிளம்பி வந்த ஈஸ்வரன் தன் மனைவியை தேடினான்.
சமையல் அறையில் அவள் இல்லாமல் போக அவளின் அறை நோக்கிச் சென்றவன் அவளை போல் அனுமதி கேட்டு நிற்காமல் வேகமாக கதவை திறந்து, “கொடி!” என சத்தமாக அழைத்தான்.
"மாமா இங்க இருக்க, கொஞ்ச நேரம் இருங்க துணி மாத்திட்டு வரேன்." துணி மாற்றும் அறைக்குள் இருந்து சத்தம் வந்தது.
“ஓ..சரி கொடி, நான் அவசர வேலையா வெளிய போறேன், வர ராத்திரி ஆகிடும். நீ சோயா, துரு கூட இரு பத்திரமா சரியா?”
“சரி மாமா நீங்க போய்ட்டு வாங்க.” என மீண்டும் குரல் மட்டும் கேட்க ஈஸ்வரன் ஏமாற்றமாக உணர்ந்தான்.
தன் கொடி முகத்தை பார்த்து விட்டு போகலாம் என்று வந்தான், இன்று அவனின் பிறந்தநாள், அவள் வாழ்த்து கூறுவாள் என எதிர்பார்த்தான். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்தவனுக்கு மனைவியிடம் மட்டும் ஆசையும், எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகிறது.
அவள் முகம் பார்க்க முடியாமல், காத்திருக்கவும் நேரம் இல்லாமல் வேகமாக கிளம்பினான். தன் மாமனை காண புடவையை சரி செய்த படி அவசரமாக ஓடி வந்தவள் ஈஸ்வரன் காரில் சிரித்தபடி ஏறும் சில்வியாவை கண்டு அமைதியாக நின்று கொண்டாள். வெளியே நிற்கும் மனைவியை பார்க்காமலே ஈஸ்வரனும் அவசரமாக கிளம்பினான்.
“முல்லை நீ தயார் ஆகிட்டியா? நம்ப கிளம்பலாமா?” கேட்டபடி முல்லை முன்பு வந்து நின்றான் துரு.
“நான் தயார் துரு சோயா எங்க?”
“நானும் ரெடி அண்ணி.” என துள்ளிக் குதித்து ஓடி வந்து இருவர் முன்பும் நின்றாள் சோயா. மூவரும் ஒன்றாக ஒரே காரில் கிளம்பினர்.
கொடியை அழைத்துக் கொண்டு ஒரு ஷாப்பிங்மால் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டு கலாச்சாரம், மாடர்ன் மங்கைகள், வெள்ளை தோள்கள், ஆண், பெண் என கூச்ச படாமல் நெருக்கமாக பழகுவது என அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருவருடனும் நடந்தாள் முல்லை.
சிலர் மட்டும் கொடியை வித்தியாசமாக பார்த்தனர். கொடியோ அனைவரையும் வித்தியாசமாக பார்த்தாள். துரு, சோயா இருவரும் அலைந்து, திரிந்து கொடிக்கு தேவையான பொருட்களை தான் வாங்கினர்.
எக்சலேட்டர் பார்த்து பயந்து பயந்து நின்றாள். ஈஸ்வரன் இருந்து இருந்தாள் கொடிக்கு எது தெரியும், தெரியாது என புரிந்து அதன் படி நடந்து இருப்பான், துரு, சோயா இருவருக்குமே முல்லையை பற்றி எதுவும் தெரியவில்லை, அவள் முகத்தையும் கவனிக்கவில்லை.
இருவரும் கீழே ஷாப்பிங் முடித்து விட்டு பார்லரை நோக்கி, "அண்ணி வாங்க." என அழைத்தனர்
நகரும் படிகட்டில் ஏறி சென்றனர். முல்லைக்கு அதில் செல்லவே பயம், அவள் அதில் ஏறாமல் அப்படியே நின்று விட்டாள். சோயா, துரு இருவருமே அவள் நின்றதை கவனிக்காமல் சென்று விட்டனர்.
முல்லை சுற்றும் முற்றும் பார்த்தபடி பயந்து கொண்டே நின்றவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. மனம் மாமனை தேடியது. இதுல எப்படி போகனும்னு கூட எனக்குத் தெரியலையே என தன்னை தானே திட்டிக் கொண்டு நின்றவள் மற்றவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்று கொண்டாள்.
மேலே சென்ற இருவரும் முல்லையை கவனிக்காமல் நடக்க துவங்க, முல்லை இருவரையும் அழைத்தும் அது அவர்கள் காதில் விழவில்லை. தனியாக நிற்க பயமாக இருந்தது, புது ஊர், புது மனிதர்கள், புது மொழி என்ன செய்வது என தெரியாமல் நின்றவள் வேறு வழி இல்லாமல் அந்த நகரும் படிக்கட்டில் ஒரு கால் மட்டும் வைக்க அது நகர்ந்த வேகத்தில் முல்லை கீழே விழ தடுமாறினாள், அப்போது ஒரு கரம் அவள் தோள்களை பிடித்து தாங்கி உள்ளே இழுத்து சரியாக நிற்க வைத்ததோடு,
“பயப்படாத மா!” என மென்மையான குரலில் கூற முல்லை மெதுவாக குரலுக்கு சொந்தகாரனை நிமிர்ந்து பார்த்தாள் ஷாருக் அழகாக சிரித்தபடி நின்று இருந்தான்.
“பத்திரம் மா.”
புது ஆணை கண்டு முல்லை மிரண்டு தள்ளி நிற்க, “ரொம்ப ஓரமா நிக்காதமா விழுந்துட போற திரும்பவும்.” என ஷாருக் இதமாக கூறினான்.
முல்லை வேகமாக திரும்பியவள், “நீங்க தமிழ் பேசுறீங்க.” என்றாள் ஆச்சர்யமாக.
“ஆமா நான் தமிழ் தான் பேசுறேன், நான் கத்துகிட்டேன். என் மனைவிக்காக உங்க புடவையை வச்சி தான் நீங்க தமிழ் நாடுன்னு கண்டு பிடிச்சேன். என் மனைவி எப்போவாது இதே மாடல்ல புடவை கட்டுவாள், அவளுக்கு பிடிக்கும். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.”
“எனக்கும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.” என முல்லையும் கூறினாள்.
“நீங்க யார் கூட வந்தீங்க? எதுக்கு தனியா நிக்கிறீங்க?” என ஷாருக் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே
“அண்ணி!” என சோயா குரல் பதட்டமாக கேட்டது,
முல்லை, ஷாருக் இருவரும் ஒன்றாக நிமிர்ந்து பார்த்தனர். சோயாவை நன்றாகவே தெரியும் ஷாருக்கு.
“ஓ நீ தான் இவுங்களை அழைச்சிட்டு வந்ததா, கொஞ்சம் பொறுப்பா இரு சோயா. தனியா இதுல ஏற தெரியாம நிக்கிறாங்க.”
“சாரி ஷாருக் அண்ணிக்கு இதுல ஏற தெரியாதுன்னு எனக்கு தெரியல அதான். சாரி அண்ணி!” என சோயா முல்லையை அனைத்து மன்னிப்பு கேட்டாள்.
‘சாரி முல்லை.” என துருவனும் ஓடி வந்து மன்னிப்பு கேட்க, “துரு இவுங்க என்ன உறவு உங்களுக்கு?”
“ஷாருக் இவ முல்லை, ஷிவ் மனைவி.”
“என்ன ஷிவ் மனைவியா!” என முழு அதிர்ச்சியாக கேட்டான் ஷாருக்.
“ஷிவ் எல்லாமே மாடனா, டிரண்டிங்கா எதிர் பார்ப்பான். முல்லை கிராமத்து பொண்ணா இருக்காங்க எப்படி இந்த அதிசயம் நடந்துச்சு துரு?”
“எங்களுக்கும் தெரியல ஷாருக், ஆனா அதிசயம் மட்டும் நடந்துச்சு, முல்லையால தான் ஷிவ் நிறைய மாறி இருக்கான்.”
“ஆமா அந்த முரடன் முன்ன மாதிரி இல்ல தான் துரு.”
“முல்லை வா டைம் ஆகுது, ஷாருக் ராத்திரி பார்ட்டிக்கு வந்துடு மறக்காமல் இப்போ நாங்க பார்லர் போறோம்.”
“எதுக்கு துரு?”
“முல்லையை மாத்த ஷாருக்.”
“தேவை இல்லையே, முல்லை இப்படியே நல்லா இருக்காங்க. நீங்க முல்லையை மாத்த போறது ஷிவ்க்கு தெரியுமா?”
“தெரியாது ஷாருக், சர்ப்ரைஸ் பண்ண போறோம் நாங்க, பிறந்தநாள் பரிசு.”
“எனக்கு சரியா படல துரு, ஷிவ் பத்தி தெரிஞ்சும் இப்படிப் பண்ணுற.”
“எல்லாமே சரியா வரும் ஷாருக், தெரிஞ்சு தான் நானும், சோயாவும் பண்ணுறோம் சரி நேரம் ஆகிடுச்சு, நீ உன் மனைவியை மறக்காமல் அழைச்சிட்டு வா.”
“கண்டிப்பா குடும்பமா வரோம் துரு, உன் நண்பனை வெறுப்பேத்தி சூடாக்கி அதுல குளிர்காய வரேன்.” என்றவனை முறைத்து பார்த்தான் துரு.
இவர்களின் உரையாடல் முழுமையான ஆங்கிலத்தில் இருந்ததால் முல்லை பாதி புரிந்தும், புரியாமலும் நின்று இருந்தாள்.
“முல்லையை தனியா விடாதீங்க, பத்திரமா பார்த்துக்கோங்க. முல்லை நான் போய்ட்டு வரேங்க.”
ஷாருக் கூறவும் தலை அசைத்து விடை கொடுத்தாள்.
தொடரும்...