அத்தியாயம் – 42
ஈஸ்வரன் இரவு தான் வீட்டிற்கு வந்தான் அதுவும் கையில் சில கவர்களுடன். வீட்டிற்குள் நுழைந்தவன் வீட்டின் அலங்காரத்தை கண்டு எல்லாமே தயார் போல, கொடியை போய் பார்க்கணும் என ஈஸ்வரனின் கால்கள் ஆவலுடன் மனைவியை தேடி அவசரம் அவசரமாக சென்றது.
வேகமாக அறை கதவை திறந்து கொடி என சத்தமாக அழைத்தவனுக்கு இப்போதும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எங்க போனாள் கொடி என யோசித்துக் கொண்டே கட்டிலில் வாங்கி வந்த கவர்களை வைத்து விட்டு வெளியேறினான்.
“அண்ணா கெஸ்ட் எல்லாரும் வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க, சீக்கிரம் நீங்களும் போய் தயாராகுங்க. துரு உங்களுக்காக உங்க ரூம்ல வெய்ட் பண்ணுறான்.”
“நான் கிளம்புறேன் கொடி எங்க?” என கண்களால் மனைவியை தேடிய படி கேட்டான்.
“அண்ணி வருவாங்க, நீங்க போய் சீக்கிரம் தயாராகுங்க.” ஈஸ்வரன் அப்போதும் அசையாமல் கொடியை தேடிக் கொண்டே நிற்க,
“என்ன பர்த்டே பாய் இன்னும் நீங்களே தயார் ஆகலயா? நாங்க தான் சீக்கிரம் வந்துட்டோமா?” நக்கலாக கேட்ட ஷாருக்கை திரும்பி முறைத்த ஈஸ்வரன் ஷாருக் அருகில் நின்று இருந்த அவன் மனைவிக்கு சிறு தலை அசைப்பை கொடுத்தவன்,
“சோயா கெஸ்ட் எல்லாரையும் கவனி நான் போய் ரெடி ஆகிட்டு வரேன், கொடிக்கு புடவை வாங்கிட்டு வந்து வச்சி இருக்கேன். அவளை அதை கட்டிட்டு வர சொல்லு சோயா.”
“ஓகே அண்ணா, அண்ணி கிட்ட சொல்லிடுறேன் நீங்க சீக்கிரம் தயார் ஆகி வாங்க.”
“ஹாய் ஷிவ் ஹேப்பி பர்த்டே!” என சோயாவின் கணவன் கிங்ஸ்லி கை நீட்டியபடி நின்று இருந்தான்.
ஈஸ்வரன் கிங்ஸ்லி முகம் பார்த்தவன், “தேங்க்யூ!” என கூறியவன், “என்ஜாய் பண்ணுங்க.” என்றான் சாதாரணமாக.
சோயா கணவனிடம் தேவைக்கு மட்டுமே ஈஸ்வரன் பேசுவான் அதுவும் கிங்ஸ்லி பேசினால் மட்டுமே. சோயா, கிங்ஸ்லி திருமணம் முழுமையான காதல் திருமணம். திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. சிறு வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தவன் இன்று ஈஸ்வரன் பிறந்தநாள் என்பதால் வந்து விட்டான்.
“சோயா இன்னைக்கு உன் அண்ணன் நல்ல மூடுல இருக்கார் போல கோவபடாம கை குடுத்துட்டு போறாரு. தன் அண்ணனை கிண்டல் செய்த தன் கணவன் இடுப்பில் கிள்ளியவள்,
“அண்ணாவை கூப்பிடவா?” என கேட்க, "அச்சோ வேண்டாம்." என பதறினான் கிங்ஸ்லி.
கிங்ஸ்லி பதட்டத்தை கண்டு சோயா, ஷாருக், அவன் மனைவி அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
ஈஸ்வரன் கருப்பு வண்ண கோட் சூட்டில் கம்பீரமாக ஒரு கையால் தண்டையை தூக்கி விட்டபடி இறங்கி வர அனைவரின் பார்வையும் அவன் கையில் இருந்த தண்டை மீதே இருந்தது. கிராமத்தில் தண்டையை தூக்கி விட்டு பழகியதால் இங்கேயும் அதையே செய்கிறான்.
அனைவரின் பார்வையும் முரடன் மீது நிலைத்து இருக்க முரடனின் பார்வையோ, தன் கொடியை தேடிக் கொண்டு இருந்தது.
நண்பனின் தேடலை கண்டு சிரித்த துருவன், “ஷிவ் வா சீக்கிரம் ஏற்கனவே நீ லேட் பண்ணிட்ட உனக்காக தான் எல்லாரும் வெய்ட் பண்ணுறாங்க, கேக் கட் பண்ணு.” என ஈஸ்வரனை அழைத்து சென்று கேக் முன்பு நிற்க வைத்தான் துரு.
“துரு கொடி எங்க? கொடி இல்லாம கேக் கட் பண்ண மாட்டேன்.”
கொடியை பார்க்க முடியாத கோவத்தில் கர்ஜித்தவனை கண்டு புருவம் உயர்த்தி பார்த்தான் ஷாருக், துரு இருவரும்.
அதே நேரம், “மிசஸ் ஷிவ்!” என சோயா மைக்கில் கூற கொடி மெதுவாக நடந்து வந்தாள் நடக்க முடியாமல்.
இவ்வளவு நேரம் கொடியை பார்க்க ஏங்கிய கண்கள் இப்போது அவளை கண்டதும் ஈஸ்வரனின் விழிகள் சிவக்க துவங்கியது. கை விரல்களை மடக்கி நரம்புகள் புடைக்க நின்று இருந்தான்.
மிஸ்ஸஸ் ஷிவ் என்றதும் அனைவரும் ஆவலாக கொடியை பார்த்து கை தட்டிக் கொண்டிருக்க ஷாருக் கண்கள் மட்டும் ஷிவின் கட்டுகடங்கா கோவத்தை கண்டு கொண்டது. அவனுக்குள் தூங்கும் முரடன் வெளிவர போகிறான் என நினைத்துக் கொண்டான் ஷாருக்.
ஊதா நிற தரையில் பிரளும் நீண்ட கவுனில், முகத்துக்கு மேக்கப் போட்டு கழுத்தில் ஈஸ்வரன் கட்டிய மஞ்சள் தாலியும், அதனுடன் கழுத்தை ஒட்டியது போல மெல்லிய சங்கிலி அணிந்து ஹீல்ஸ் அணிந்து நடக்க தெரியாமல் கையில் ஒரு பூங்கொத்துடன் தட்டு தடுமாறி, தன்னையே பார்த்து நிற்கும் கூட்டத்தை கண்டு மிரண்டபடி அடி மேல் அடிவைத்து நடந்து வந்தாள் கொடி.
அவளுக்கு பின்னால் ஈஸ்வரன் கொடிக்காக வாங்கி அவள் அறையில் வைத்து விட்டு வந்த புடவையை நேர்த்தியாக கொஞ்சம் மாடனாக கட்டிக் கொண்டு நடந்து வந்தாள் சில்லு. துரு, சோயா அனைவரும் சில்வியா செயலை எதிர்பார்க்கவில்லை.
ஈஸ்வரன் பார்வை முழுக்க கொடி மீது தான் கொடூரமாக நிலைத்து நின்று இருந்தது. அவள் நெருங்கி வர வர நெருப்பில் நிற்பது போன்ற உணர்வு ஈஸ்வரனுக்கு. ஈஸ்வரன் முன்பு அழகாக வடிமைக்க பட்டு இருந்த வெள்ளை நிற கேக்கை எட்டி உதைத்தான் ஈஸ்வரன். அவனின் முழு பலத்தை உபயோகித்து ஈஸ்வரன் விட்டு உதையில் டேபிள் உடைந்து அதன் ஒரு பாகம் முல்லையை நோக்கிச் சென்றது.
கேக் மூலைக்கு மூலை சிதறி அருகில் நின்று இருந்தவர்கள் மீது அபிஷேகம் செய்ய, முல்லை மீதும் முகம் கழுத்து உடம்பு என சந்தனம் போல் அப்பி இருந்தது.
அனைவரும் ஈஸ்வரன் செயலை கண்டு அதிர்ந்து நிற்க, ஷாருக் கொடி கையை பிடித்து இழுத்து தன் மனைவி அருகில் நிற்க வைத்தான் அவளை நோக்கி வந்த பாகம் தனியே சென்று விழுந்தது.
அருகில் இருந்த அழகு செடிகளை ஆக்ரோஷமாக தள்ளி விட்டவன் கெட் அவுட் ஆல் என முழு அதிகாரத்தில் கத்தினான். அவனின் முரட்டு தனமான கோவத்தை கொடி முதல் முறை நேரில் காண்கிறாள். அவனின் கோவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தவள் பார்வை முழுவதும் தன் மாமனின் சிவந்த கண்கள் மீதே நிலைத்து நின்றது.
பிரமை பிடித்தது போல் நின்று இருந்தாள் முல்லை. ‘எதற்காக இந்த கோவம் மாமாவுக்கு?’ என யோசித்தவள் மீண்டும் அதிரும் படி ஈஸ்வரன் பளார் என துருவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். சோயா பயத்தில் நடுங்கியபடி தன் கணவன் பின்னால் ஒளிந்து அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள். மனைவியை காப்பாத்த கிங்ஸ்லி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஈஸ்வரனை விட்டு தள்ளி சென்றான்.
துருவன் வாங்கிய அறையை கண்டு முல்லை ஆடி போனாள். நாக்கு ஒட்டிக் கொண்டது. தான் போட்டு இருந்த கவுனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு முதல் முறை ஈஸ்வரனை பார்த்து பயந்தபடி ஷாருக் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
ஈஸ்வரனின் பார்வை முழுக்க, முழுக்க கொடி மீதே ஆத்திரத்துடன் படிந்து இருக்க தான் என்ன தவறு செய்தோம் என தெரியாமல் குழந்தை போல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்று இருந்தாள் முல்லை. ஷாருக்கின் மனைவி கொடியை தட்டி கொடுத்து அவளின் பயத்தை போக்க நினைக்க ஈஸ்வரன் அழுத்தமான பார்வையுடன் கொடியை நெருங்கி வந்தான்.
ஈஸ்வரன் தன் முரட்டு தனமான கோவத்தில் நிதானத்தை இழந்து இருப்பதை உணர்ந்த ஷாருக் ஈஸ்வரனை கொடியை நெருங்க விடாமல் அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவன்,
"முல்லைக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்ல ஷிவ், அது உனக்கும் நல்லா தெரியும், முல்லை இன்னசெண்ட், உன்னுடைய முரட்டு தனத்துல நிதானம் இழந்து அவங்களை காயபடுத்தாத, நீ ரொம்ப வருத்த படுவ.”
தன்னை கண்டு பயந்து நிற்பவளை கண்டு இதயம் வலித்தது ஈஸ்வரனுக்கு. தன்னுடைய கோட்டை கழட்டி விசிறி அடித்தவன் வீட்டை விட்டு வெளியே சென்று நின்றான்.
ஷாருக் பார்வை துருவனை துளைத்து எடுத்தது. சில்வியா பயத்தில் அப்படியே சுவற்றுடன் ஒட்டி நின்று கொண்டாள்.
முல்லை வேகமாக தன்னுடைய அறைக்கு ஓடியவள் தான் போட்டு இருந்த துணியை கழட்டி எறிந்து வழக்கம் போல் தன்னுடைய கண்டாங்கி புடவைக்கு மாறிக் கொண்டாள். முகத்தில இருந்த மேக்கப் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தவள் நெற்றியில் பொட்டு மட்டும் வைத்துக் கொண்டாள்.
இப்போது தான் தன்னையே பிடித்தது அவளுக்கு. முல்லை பழையபடி வெளியே வர பார்ட்டிக்கு வந்த அனைவரும் கிளம்பி இருந்தனர் ஷாருக் தவிர. சோயாவை கிங்ஸ்லி அறைக்கு அழைத்துச் சென்று விட்டான் ஈஸ்வரன் கண்ணில் படகூடாது என்று. கணவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவளுக்கு இன்னும் பயம் போகவில்லை. அவள் உடல் நடுக்கத்தை உணர்ந்த கிங்ஸ்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,
“டோண்ட்வொரி சோயா ஷிவ் பத்தி தெரிஞ்சது தானே. அவனுடைய முரட்டு குணம் பத்தி தெரிஞ்சும் எதுக்கு நீயே இப்படி பயப்படுற?”
“இல்ல கிங்ஸ்லி அண்ணன் அண்ணி கிட்ட கோவப்பட மாட்டான்னு நினைத்தோம். ஆனா அவுங்க ரொம்ப பயந்துட்டாங்க.”
“இட்ஸ் ஓகே விடு.” என மனைவி பயத்தை போக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் கிங்ஸ்லி.
முல்லை வீட்டை விட்டு வெளியே வந்து கண்களால் மாமனை தேடிக் கொண்டு இருந்தாள். பயம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்று தன் மாமனின் பிறந்தநாள் ஒரு வாழ்த்தாவது கூற சொல்லி அவளின் மனம் போராடியது.
அவள் வாங்கி வைத்திருந்த பரிசை முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டே திரும்ப வெய்ட்டர் ஒருவன் வேகமாக வந்து முல்லையை இடித்தான். முல்லை படியில் நின்று இருந்ததால் அவன் இடித்த வேகத்துக்கு நிலை தடுமாறி விழ போனவளை தாங்கி பிடித்து தூக்கி விட்டவன் கைகள் முல்லை கழுத்தை தடவியது.
முல்லை உணரும் முன்பே கையை எடுத்தவன், “சாரி, சாரி மேடம்!” என அவசரமாக கேட்டவன் பார்வை தன் மீது தவறாக படிவதை கண்டவள் அவனிடம் இருந்து விலகி சென்றாள் தன் மாமனை தேடி.
கொடுமை இந்த சீனும், அவனின் பார்வையும், தொடுகையும் ஈஸ்வரன், துரு, ஷாருக் கண்களில் பட்டு விட்டது. ஆனால் மூவரும் தனி தனியாக இருந்தனர். அவனை அடிக்க துரு, ஷாருக் இருவரும் நெருங்கி வரும் போதே ஈஸ்வரன் அவனின் வாயை பொத்தி தர தரவென இழுத்து சென்றான்.
துரு, ஷாருக் இருவரும் அதிர்ச்சியாக ஷிவ் பின்னாடியே ஓடினர். அதற்குள் ஷிவ் அவனை வாயை கட்டி வெளுத்து வாங்க துவங்கியவன் கொடியை தொட்ட கையை உடைத்து விட்டான். ஆத்திரம் கொஞ்சமும் அடங்கவில்லை வெறி கொண்டு இருந்தவன் கையில் சிக்குன எலி போல் ஆனது மாட்டியவன் நிலை. வெறி கொண்டு அடித்தவனுக்கு வெறி ஒரு சதவிகிதம் கூட குறையவில்லை.
துரு, ஷாருக் இருவரும் தடுக்க இருவரும் தூரமாக தள்ளி விட்டவன் தன் மனைவியை பார்த்த கண்களில் தன் விரல்களை விட்டு குத்தினான் வெறி பிடித்தது போல. துருக்கு பழைய ரவுடி ஷிவ்வை பார்ப்பது போல் இருந்தது.
ரவுடியாக வாழ்க்கையை துவங்கிய காலகட்டத்தில் இப்படி தான் வெறிபிடித்த முரடனாக இருந்தான் ஷிவ். காலமும் மாறியது, சமுதாயத்தில் அந்தஸ்த்தை மாறியது.
அதன் பிறகு தன்னுடைய வெறித்தனமான முரட்டு தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டவன் இப்போது பழைய ஷிவ்வாக தோன்றினான் துரு கண்களுக்கு. ஷாருக் மீண்டும் தடுக்க ஓட துரு தடுத்தான்.
“இனி ஷிவ் அடங்க மாட்டான் அவனை கொல்லாம.” என்றவன் அமைதியாக வேடிக்கை பார்க்க துவங்கினான்.
துரு கூறியது போலவே அவனின் கண்ணை குத்தியே பிடுங்கி எடுத்தவன் துடித்துக் கொண்டு இருந்தவன் கழுத்தை ஒரே திருகு திருகி உயிரை அடக்கினான் ஈஸ்வரன்.
இறந்து கிடப்பவனையும், ஷிவ்வையும் மாறி மாறி உறைந்து போய் பார்த்துக் கொண்டு இருந்தான் ஷாருக். ஈஸ்வரனின் உண்மை முகம் ஷாருக் உள்ளத்தை அதிர செய்தது.
இவர்களுக்கு பின்னால் இருந்து கொடியும் பார்த்துக் கொண்டு இருந்தாள் உறைந்த பார்வையோடு.
தொடரும்...