• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 48

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
67
28
18
Tamilnadu
அத்தியாயம் – 48



இன்று ஒரு முடிவோடு வீட்டிற்குள் நுழைந்தவன் தன் போன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தான். துரு அனுப்பிய நன்றியை கண்டு, ‘இவன் நன்றி யாருக்கு வேணும். எதுவும் பண்ணாம இவனுக்கு லவ் செட் ஆகிடுச்சு. இவ்வளவு பண்ணி என் பொண்டாட்டி லவ்னா என்னனு தெரியாம முழிக்கிறா. விவசாயத்தை கத்துக்கும் போது கொஞ்சமா வாழ்க்கை பாடத்தையும் கத்துருக்க கூடாது இவ. என்ன புள்ளையா போ. இனி உன்னை விடுறதா இல்ல டி உன் மாமன்.’ என்ற முடிவோடு நிமிர, ஈஸ்வரனின் நாற்காலியில் சித்தப்பு அமர்ந்து இருந்தார்.

“வா ஈஸ்வரா வந்ததே தெரியல. என்ன போன வேகம் வந்துட்ட ஷிவ்.

அவனுக்கு முன்பு கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி அதிகாரமாக கேட்டார். அவர் குரலில் உன்னை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டேன் என்ற கர்வம்.

ஈஸ்வரனோ தன் சித்தபனை தன் செருப்புக்கு கொடுக்கும் மரியாதை அளவு கூட மதிக்காமல் மனைவியை கண்களால் தேடியபடி, "என் பொண்டாட்டி எங்க? நீங்க பாத்தீங்க." என்றவனை சித்தப்பு கொடூரமாக முறைக்க நனி கிளுக்கென்று சிரித்து விட்டாள்.

“ஈஸ்வரா!” என சித்தப்பு சத்தமிட.

“நீங்க என்னை பத்தி என் கிட்டையே கேட்டு இருக்கலாம். எதுக்கு இவ்வளவு கஷ்ட படணும். நீ எவன் கிட்ட தகவல் விசாரிச்சியோ அவனே எனக்கு சொல்லிட்டான். ஷாருக் எனக்கு தொழில் முறை எதிரி தான். அவனும் நானும் துரோகிகள் இல்ல.

நீ உயிரோட இருக்க வரைக்கும் இந்த நாற்காலில உக்காரலாம். நானே அனுமதி தரேன், ஆனா என்னைக்கும் நாற்காலி உனக்கு சொந்தம் ஆகாது. நீ நினைக்கிறதும் நடக்காது.” என்றான் அதிகாரமாக.

“எல்லாமே உனக்கு சாதகமா எப்பவும் நடக்காது ஈஸ்வரா. என்னுடைய இத்தனை வருஷ கனவை, லட்சியத்தை தரமட்டமாக்கிட்ட. ஆனா பூமிக்கு அடியில் இருக்கது எனக்கு தான் சொந்தம்.”

முகத்துக்கு நேரே துணிச்சலாக சவால் விடும் சித்தப்பனை நேர்கொண்ட பார்வை பார்த்தவன், "நான் இருக்க வரைக்கும் எதுவுமே நடக்காது, அதுக்கு நான் விடவும் மாட்டேன்." என கர்ஜித்தான்.

"பாக்கலாம் ஈஸ்வரா நீயா, நானான்னு, உன் சாவு என் கையால தான் குறிச்சி வச்சுக்கோ."

ஈஸ்வரன் காதில் வாங்காதது போல் தன் அறை நோக்கி சென்றான்.

திடீர் என சித்தப்பனுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது, எப்போதும் கோழை போல் மறைந்து மறைந்து அனைத்தையும் செய்பவர் இன்று முகத்துக்கு நேராக சவால் விடுகிறார் என்ற யோசனையோடு அறைக்குள் நுழைந்தவன் சிந்தனை முழுவதும் கொடியை பார்த்ததும் சிதறி போனது. கொடியோ அறைக்குள் வந்த தன் மாமனை கண்டு கொள்ளாமல் படுக்க பாய் விரித்தாள்.

‘ஓ.. நீ தனியா படுக்க போறியா டி? நம்ப நெருக்கத்தை முதல்ல பாயில இருந்து தொடங்குவோம்.’அவள் விரித்த பாயை வேகமாக சுருட்டினான் ஈஸ்வரன்.

"மாமா எதுக்கு பாயை சுருட்டுறீங்க?"

"வேற எதுக்கு கட்டில்ல படு."

"என்னால முடியாது மாமா அது நீங்க தூங்குற இடம்."

"நீ தூங்க கூடாதுன்னு படுக்கையில் எழுதி இருக்கா கொடி‌?"

"மாமா என்னால உங்களை பேசி ஜெயிக்க முடியாது."

அவன் சுருட்டி வைத்த பாயை எடுத்து மீண்டும் விரித்தாள். அதை மீண்டும் சுருட்டி வைத்தவன் தன் தண்டையை தூக்கி விட்டு, வேட்டியை மடித்துக் கட்டியவன் கொஞ்சமும் யோசிக்காமல் கொடியை கொத்தாக தூக்கி தன் தோளில் போட்டான். தன் மாமன் செயலில் அதிர்ந்தவள், தூண்டிலில் சிக்கிய மீன் போல் அவன் தோளில் துடித்துக் கொண்டு இருந்தாள்.

“மாமா என்ன பண்ணுறீங்க? என்னை இறக்கி விடுங்க நான் கீழ படுக்குறேன்.”

அவள் கத்தல், துடிப்பு எதையும் கண்டு கொள்ளாதவன் அவள் துடிக்க துடிக்க கட்டிலில் படுக்க வைத்தான். முல்லை உருண்டு ஓடும் முன்பே அவள் மீது தொப்பென்று விழுந்தவன் தன் உடல் அவள் உடல் மீது அழுத்தாமல் உரசியது போல் இரு கைகளை கட்டிலில் அழுத்தி தன் உடல் பாரத்தை தாங்கியவன்

"நீ அமைதியா படுத்தா நல்லது, கத்துனாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, உன் தொண்டை தண்ணி தான் வத்தி போகும். நீ கத்திகிட்டே இருந்தா உன்னை தூக்கிட்டு கொல்லைக்கு போடுவேன்.

"எதுக்கு?”

“நல்லா வசதியா இருக்கும் உன்னை கட்டிபோட்டு உன் மேல படுத்துக்குவேன்.
இயற்க்கை காத்து, சுத்திலும் தென்னை மரம், நிலா வெளிச்சம், பூச்சிகள் சத்தம்,
இயற்க்கை பூக்கள் வாசனை சூப்பரா இருக்கும் எப்படி வசதி தூக்கிட்டு போகவா? கத்து இப்போ கத்து எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல கத்து கொடி, கத்து கொடி.” என ஈஸ்வரன் கத்தினான்

முல்லை வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள் தன் கையால். மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை. மருண்ட விழியால் தன் மாமனின் நடவடிக்கையை புரியாமல் பார்த்தாள். அவனின் நெருக்கம் பெண்ணவளை தடுமாற வைத்தது.

‘எதுக்கு மாமா இப்படி நடந்துக்கிறாங்க, இத்தனை நாள் நல்லா தானே இருந்தாங்க, திடீர்னு மாமாக்கு என்ன ஆச்சு, ஒருவேளை பேய் புடிச்சி இருக்குமோ? நாளைக்கு மாமாவை கோவிலுக்கு அழச்சிட்டு போய் மந்திரிச்சி விடனும் இல்லன்னா முத்திடும்.’ என நினைத்துக் கொண்டாள்.

அவளின் எண்ண போக்கை படித்தவன், “கொடி எனக்கு பேய் பிடிக்கல, நான் தான் உன்னை பிடிச்சி இருக்கேன். இல்லாத மூளையை போட்டு கசக்காம தூங்கு.”

"என்னை விடுங்க மாமா நான் கீழ போய் தூங்குறேன்.” கெஞ்சிக் கேட்டாள்.

"முடியாது, நம்ப ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டி ஒன்னா தான் தூங்கனும், தனி தனியா தூங்க போடாது. சாமி கண்ணை குத்திடும். ஒழுங்கா படுத்து தூங்கு எழுந்து ஓட முயற்சி பண்ணுன நான் சொன்ன மாதிரி செஞ்சிடுவேன் சொல்லிட்டேன்.” என விழிகளை உருட்டி மிரட்டினான்.

“மாமா நீங்க பண்ணுறது தப்பு.”

அதுவரை கை ஊன்றி தன்னையே தடுத்து இருந்தவன் தன் கைகளை எடுத்து உடலை அவள் மீது போட்டான். அத்தோடு முல்லை பேச்சு நின்று போனது. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டவள், வாயையும் மூடிக் கொண்டாள். அவள் உடல் பனியில் உறைந்த உடல் போல் கிடந்தது. பேச்சு, மூச்சு இல்லாமல் கிடக்கும் தான் கொடியை கண்டு மென்மையாக சிரித்தவன் சரிந்து அவளின் பக்கவாட்டில் படுத்துக் கொண்டான் அவளை அணைத்தபடி.

“கொடி.” என அவள் காதருகே சென்று மிக உருக்கமாக அழைத்தான்.

காதில் விழுந்தும் வாயை திறக்காமல் படுத்துக் கிடந்தவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன், "நான் உன்னை மட்டும் தான் டி விரும்புறேன். இதை நீ என்னை நம்புற வரைக்கும் சொல்லிகிட்டே இருப்பேன்.

சீக்கிரம் நம்பிடு அப்போ தான் என் டார்ச்சர் இல்லாமால் இருக்க முடியும், சீக்கிரம் நம்ப வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்.”

முல்லை கழுத்தை வளைத்து புரியாமல் பார்த்தாள். அவளின் அப்பாவி தனத்தை கண்டு ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் ஒரு பக்கம் அவள் குடும்பத்து மீது கோவமாக வந்தது.
இப்போது அவர்களை பற்றி நினைக்க கூடாது என முடிவு எடுத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து மூச்சை நன்றாக உள்ளே இழுத்தவன்,

"நல்லா வாசனையா இருக்க டி நீ!"

"அது சோப்பு வாசனை மாமா, ஹமாம் சோப்பு."

சட்டென்று தலை உயர்த்தி தன் கொடியை செல்லமாக முறைத்தவன், "எனக்கு தெரியும், ஆமா நீ ஹமாம் சோப் போட்டா குளிக்கிற?”

"ஆமா மாமா! உங்களுக்கு தெரியாதா?”

"இல்ல கவனிக்கலை."

"நீங்க கேட்ட கேள்விக்கு தான் பதில் சொல்லிட்டேனே இப்போ போய் கீழ படுக்கவா?"

"முடியாது கொடி. இன்னைக்கு மட்டும் கிடையாது இனி வாழ்நாள் முழுக்க என் கூட இந்த கட்டில்ல தான் நீ தூங்கனும்."

முகத்தை திருப்பிக் கொண்டு தன் மாமனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள் முல்லை. அவள் முதுகை ரசனையாக பார்த்தவன் அவனின் விருப்பமான முந்தானையை
எடுத்து இல்லை அவளின் இடுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக உருவி தன் உடலில் போர்த்திக் கொண்டவன் அவள் இடையில் கை போட்டு நிம்மதியாக கண் மூடிக் கொண்டான்.

அவன் நிம்மதியாக கண் மூட, இவளோ ஆந்தை போல விழியை முடிந்த வரை விரித்து முழித்தாள் அதிர்ச்சியில்.

“மாமா.” என திக்கி திணறி அழைத்தவளை இன்னும் முதுகோடு ஒட்டி படுத்துக் கொண்டவன்,

"உன் பக்கத்துல தான் டி இருக்கேன், இன்னும் நெருங்கி வரணும்னா நான் உன் மேல படுக்கனும், இல்ல நீ என் மேல படுக்கணும். இதுல எது உனக்கு வசதி சொல்லு.” என தன் சூடான மூச்சுக்காற்று அவளின் காதில் படும்படி கூறினான்.

ஈஸ்வரன் கேட்டதில் முல்லை மூச்சுகூட சத்தமாக விட மறுத்து கண் மூடிக் கொண்டாள். அவளை அதற்கு மேல் படுத்த விரும்பாதவன் அவள் முந்தானை கொடுத்த சுகத்தில் நிம்மதியாக தூங்கினான். ஆழ்ந்த தூக்கத்தில் கூட முரடனின் பிடி முரட்டு பிடியாக இருந்தது. தன் மாமன் கையை விலக்க படாத பாடுபட்டவள் சோர்ந்து போய் அமைதியாக தூங்கி போனாள் அந்த முரடனுடன்.

முல்லை வழக்கம் போல் அலாரம் இல்லாமல் காலை மூன்று மணிக்கே எழுந்தவள் மெதுவாக விழிகளை திறந்தாள். கடவுளை வேண்டிக் கொண்டு எழ அவளால் எழ முடியவில்லை. அப்போது தான் உணர்ந்தாள் முரடன் பிடிக்குள் இருப்பதை. மீண்டும் ஒரு முயற்சியாக அவன் கையை நகர்த்தி பார்த்தாள், அசைக்க கூட முடியவில்லை.

வேறு வழயின்றி மெதுவாக, "மாமா!" என அழைத்தாள்.

அவளின் மெல்லிய குரல் அவன் காதுகளில் இசையாக இறங்கியது. மெதுவாக விழிகளை திறந்தவன் அன்றய நாளின் முதல் முகமாக தன் கொடியை தான் பார்த்தான். அவள் முகம் கண்டதும் சொல்ல முடியாத இன்ப உணர்வு அவனுக்குள். இத்தனை வருடங்கள் இந்த உணர்வுகளை தொலைத்து விட்டேனே என வருந்தியவன் முதல் முதலில் பல் தெரிய அவளை கண்டு மென்மையாக சிரித்தான்.

சிரிப்போடு அவளை கண்டு கண் சிமிட்டியபடி, "காலை வணக்கம் கொடி." என்றான்.

அவனின் சிரிப்பில் தன்னை தொலைத்தாள், அவன் விழிகளில் ஊடுருவி போனவள், "மாமா உங்க சிரிப்பு ரொம்ப அழகா, உயிர்ப்போடு இருக்கு.” எப்போதும் போல் மனதில் பட்டதை அவன் விழிகளை பார்த்து கூறினாள்.

"நீ தான் டி என்னுடைய உயிர்ப்பு, இந்த சிரிப்பு கூட நீ தந்த பரிசு. சொல்லு கொடி"

“அவளோ குழப்பமாக என்ன சொல்லணும் மாமா?”

"காலை வணக்கம் சொல்லு."

மென்மையாக உதடு பிரியாமல் சிரித்தவள், "காலை வணக்கம் மாமா." என்றாள்.

“அப்படியே இதே மாதிரி நல்ல பிள்ளை மாதிரி இதையும் சொல்லு, நான் உங்களை காதலிக்கிறேன்."

முல்லை தன் முழியை எல்லா பக்கமும் உருட்டியவள், "மாமா நீங்க கையை எடுத்தா நல்லா இருக்கும், நிறைய வேலை இருக்கு மாமா." மிக மிக நல்ல பிள்ளை போல் கண்களை சுருக்கி கேட்டாள்.

அவளின் முக பாவனையில் விழுந்தவன், “அழகி டி நீ!" என்றான் அவள் முகத்தில் தன்னை தொலைத்தபடி.

மெதுவாக தான் கையெடுத்தான் அவளோ குருவி போல் சட்டென்று பறந்து சென்று விட்டாள். முல்லை குளித்து முடித்து தலைக்கு துண்டு கட்டிக் கொண்டு வெளியே வர,

"கொடி எனக்கு துண்டு எடுத்துட்டு வா." என்றபடி குளியல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் கூறியது போலவே துண்டை எடுத்து வந்து நீட்ட முல்லை கையை தடவியபடி துண்டை எடுத்துக் கொண்டான். எப்போதும் அவளை தீண்டாமல் தான் எடுப்பான் இன்று அவன் செயலில் அதிர்ந்தவள் அங்கிருந்து வேகமாக ஓடினாள். குளித்து முடித்து வெளியே வந்த உடன் மனைவியை தேடி ஆவலாக வந்தான். அவளோ காஃபி கலக்கி கொண்டு சமையல் அறையில் நின்று இருக்க, அவள் அருகில் அவளை உரசியபடி நின்றான். முல்லை தள்ளி நிற்க, ஈஸ்வரன் மீண்டும் அவளை உரசிக் கொண்டு நின்றான்.

“மாமா என்ன பண்ணுறீங்க, வீட்டுல எல்லாரும் எழுந்து வந்துட போறாங்க.”
அவனை விட்டு விலகி சென்று கொண்டே கூறினாள்.

“வரட்டும் கொடி நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டி பக்கத்துலயா நிக்கிறேன், என் பொண்டாட்டி பக்கத்துல தானே நிக்கிறேன்.”

"என் மேலேந்து வாசனை வருதா?"

" என்ன வாசனை மாமா?" கொஞ்சம் கூட புரியாமல் கேட்டாள்

"ஹமாம் சோப் வாசனை தான் "

"மாமா நீங்க என்னுடைய சோப் போட்டு குளிச்சீங்களா?"

"ஆமா, எதுக்கு தனி தனியா சோப் வாங்கிகிட்டு. விலைவாசி எல்லாம் அதிகம் ஆகிட்டு. இனி ஒரே சோப்ல குளிக்கலாம். ஒரே சோப் போட்டு குளிச்சா தான் உறவு ஜென்ம, ஜென்மமா தொடரும்." முல்லை ஈஸ்வரனை வித்தியாசமாக பார்க்க, அவள் பார்வையில் மீண்டும் பல் தெரிய சிரித்தவன் தன் தண்டையை தூக்கி விட்டு மீசையை முறுக்கிய படி வெளியே சென்றான்.

தன் மாமனின் நடவடிக்கைகளை கண்டு முல்லைக்கு ஒரு மாதிரி இருந்தது. விழிகளில் ஏமாற்றம் படர மாமனை கண்டவள் ஈஸ்வரன் திரும்பவும் விழிகளை தாழ்த்திக் கொண்டாள். அவனுக்கு கலந்த காஃபியை எடுத்து சென்று நீட்டினாள்.

"முல்லை அண்ணனை மறந்துட்ட போல."

இருவருக்கும் பின்னால் இருந்து கம்பன் குரல் கேட்டது. கம்பனை கண்டதும் முல்லை முகத்தில் ஒரு குதூகலம் தோன்றியது,

"வாங்க அண்ணா உங்களை நான் மறப்பேனா? இனி இப்படி கேட்காதீங்க,
எனக்கு கஷ்டமா இருக்கும். இங்கேயே இருங்க உங்களுக்காக ஒன்னு வாங்கிட்டு வந்தேன்.” என அவசரமாக உள்ளே ஓடினாள்.

‘கம்பனுக்காக என்ன வாங்கிட்டு வந்து இருப்பாள்?’ என்ற யோசனையோடு கம்பனை முறைத்தான் ஈஸ்வரன்.

“என்னை எதுக்கு முறைக்கிற ஈஸ்வர், உன் பொண்டாட்டி வந்ததும் தெரிஞ்சிடும் என்ன வாங்கிட்டு வந்தான்னு. பரவாயில்லை ஈஸ்வர் நான் சொன்னதை கற்பூரம் மாதிரி பிடிச்சி கிட்ட நீ.” முல்லை வருவதை கண்டு இருவரும் அமைதியாகி விட,

"அண்ணா இந்தாங்க.” என குட்டி பெட்டியை கம்பன் முன்பு நீட்டினாள்.

கம்பன் அந்த பெட்டியை வாங்கி திறந்து பார்க்க உள்ளே கருப்பு கயிற்றில் ருத்ராட்சம் கோர்க்க பட்டு இருந்தது.

ஆசையாக வருடிய கம்பன், “விலைமதிப்பற்ற பரிசு முல்லை.”

ஈஸ்வரன் அதன் மதிப்பு தெரியாமல் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.



தொடரும்...