• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 49

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
67
28
18
Tamilnadu
அத்தியாயம் – 49



முல்லை தோட்டத்தில் உள்ளவர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்க, ஈஸ்வரன் எந்த வேலையும் செய்யாமல் முல்லையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.

கோவில் திருவிழா இருந்தவரை நாள் முழுக்க எதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது இப்பொழுது எந்த வேலையும் இல்லை.

விவசாயம் பற்றி எதுவும் தெரியாது என்பதை விட விவசாயத்தை முல்லை மூச்சாய் நேசித்து அவளே அனைத்தையும் பார்த்துக் கொள்ள ஈஸ்வரன் முல்லையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

நீண்ட நேரம் அமர்ந்து இருந்து கடுப்பானவன் மனைவிக்கு தன் கையால் இளநீர் வெட்ட துவங்கினான்.

“கொடி.” என சத்தம் கொடுக்க, வேகமாக வந்தவள் கையை இழுத்து இளநீரை திணித்தான்.

மெல்லிய புன்னகையோடு நன்றி கூறி வாங்கிக் கொண்டவள் பாதிவரை குடித்துக் கொண்டு இருக்க மிச்சத்தை பிடுங்கி ஈஸ்வரன் குடிக்க துவங்கினான். அவன் செயலில் தன் மாமனையே சில நொடிகள் வெறிக்க பார்த்தவள் அவனிடம் எதுவும் கூறாமல் நடக்க துவங்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், ‘நீ எங்க போறன்னு எனக்கு தெரியும் டி. சீக்கிரம் உன் மனசுல இருக்க குழப்பம் நீங்கனும், அப்போ தான் நம்ப வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். நீ போற இடத்துல உனக்கு நல்ல பதில் கிடைக்கும்.’ என நினைத்துக் கொண்டவன் அவளை பின் தொடர நினைத்த கால்களை கட்டாயபடுத்தி வேறு பக்கம் நடந்தான்.

முல்லை நேராக வந்தது அம்மன் சன்னதிக்கு தான். மனம் சஞ்சல பட்டாலோ, மனதில் தாங்க முடியாத பாரம் இருந்தாலும், சந்தோஷம் இருந்தாலும் இந்த தாயிடம் வந்து இறக்கி விடுவாள். இன்றும் அங்கேயே வந்து அம்மன் முகம் பார்த்தபடி அமர்ந்தவள்,

"அம்மா நான் எதுக்கு வந்து இருக்கேன்னு உனக்கு தெரியும், மாமா நடவடிக்கை எதுவும் சரி இல்ல. மனுஷன் நல்லா தான் இருந்தாரு, திடீர்னு என்ன ஆச்சு அவருக்கு. என் மேல இரக்க படுறாரு. அவருக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லம்மா. எப்பேர்பட்ட வாழ்க்கையை விட்டுட்டு இந்த கிராமத்துக்கு நல்லது செய்ய வந்து இருக்காரு தெரியுமா? அப்படி பட்டவருக்கு நான் எப்படி பொருந்துவேன். நான் அவருக்கு கொஞ்சம் கூட பொருத்தம் கிடையாது.”

“இன்னைக்கு நீ சொன்னது நூறு சதவிகிதம் சரி முல்லை.”

கார்த்திகா குரல் கேட்டு முல்லை மனம் உடைந்து போனாள். தினம் தினம் ஏதாவது கூறி முல்லையை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

“கார்த்திகா இப்போ உன் பேச்சை கேக்குற மனநிலையில் இல்ல நான், தயவு செஞ்சி இங்கேந்து போ.” முல்லை குரல் கெஞ்சலாக ஒலித்தது.

“உண்மையை சொன்னா வலிக்க தான் செய்யும் உனக்கு. என்னால ஈஸ்வரன் மாதிரி பொய் சொல்ல முடியாது. நீ ஒரு ராசி இல்லாதவள், அதனால தான் அப்பா, அம்மா எல்லாரும் உன்னை ஒதுக்கி வச்சாங்க. உன் முகத்தை பார்த்தா யாருக்கும் உன் கிட்ட பேச கூட தோணாது, ஈஸ்வரன் உன் மேல இரக்க பட்டு தான் உன் கூட வாழுறான்.

இல்லைன்னா உன்னை மாதிரி ஒரு பொண்ணை பிச்சைக்காரன் கூட சீண்ட மாட்டான். அவனுடைய நகம் கூட உன் மேல படுறத விரும்ப மாட்டான். இந்த ஈஸ்வரன் நல்லவனா இருக்கான் அதனால தான் கொஞ்சமாவது உன் மேல அவனுக்கு இரக்கம் வருது. இந்த ஊருகுள்ள இருக்க நல்ல பேரை கெடுத்துக்க கூடாதுன்னு தான் உன் கூட வாழுறான்.

உன் முகத்துக்கு எல்லாம் கல்யாணம் நடந்ததே பெருசு, இதுல உன் கூட சந்தோஷமா எவன் வாழுவான்? ஒரே ஒரு நாள் கூட எவனும் உன்னை பார்க்க ஆசைபட கூட மாட்டான்.” மனம் முழுவதும் வக்கிரத்துடன் முல்லையை காயப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

பாவம் தன் மீதே நம்பிக்கையற்றவளுக்கு கார்த்திகாவை எதிர்த்து பேச துணிவு இல்லை. தன் மாமனை பற்றி பேசி இருந்தாள் வெடித்து இருப்பாள். தாழ்வுமனப்பான்மை முல்லையை யோசிக்க விடவில்லை. தன் கண்ணீரை வெளிப்படுத்தாமல் கல் போல் நின்று இருந்தவள் உள்ளத்தில் இன்னும் தாழ்வு மனப்பான்மை தலை விரித்தாடியது.

இத்தனை வருடங்களாக இப்படிப் பட்ட விஷ சொற்களை கடந்து வந்தவள் சில காலம் தன் மாமனால் அனைத்திலும் இருந்து விடுபட்டு சுதந்திரமாக, நம்பிக்கையாக வாழ்ந்தாள். முல்லையின் சந்தோஷம், சுதந்திரம், நிமிர்வு, அவள் உதட்டில் பூத்த புன்னகை, அதிகாரம் அனைத்தையும் கண்டு கார்த்திகா உள்ளத்தில் பேய் பிடித்து ஆட்டியது.

ஏற்கனவே உடன் பிறந்த அக்கா என்ற பாசம் அன்றவள் இப்போது அவள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட வாழ்க்கையை முல்லை வாழவும் பொறாமையை தாண்டி முல்லையை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவிரித்தாடியது. அதன் விளைவு ஈஸ்வரன் இல்லாத நேரத்தில் முல்லையை மனதால் காயப்படுத்தி கொல்ல துவங்கினாள்.

அனைத்தையும் தன் மாமனின் கண்களை பார்த்து பகிர்ந்து கொள்பவள் கார்த்திகாவை பற்றி மட்டும் சொல்ல மறுத்தாள். ஒருவேளை தன் மாமனும் தன்னை பற்றி இதே போல் நினைத்தால் தாங்க முடியாது என்பதால். அவன் வாயால் கேட்பதற்கு முன்பே அவனை விட்டு பிரிந்து விட வேண்டும் என்றே சில்வியாவை உடன் அழைத்து வந்தாள்.
இப்பொழுது ஈஸ்வரன் கூறும் வார்த்தைகளை நம்ப முடியாமல் தவிக்கிறாள் பெண்ணவள்.

"முல்லை உன்ன எந்த ஆங்கில்ல இருந்து பார்த்தாலும் பொண்ணாவே தெரியல, அப்பறம் எப்படி உன்னை பிடிக்கும், நீ எல்லாம் சாகுற வரைக்கும் கன்னி கழியாமல் தான் சாகனும். உன்னை எவனாவது தொட்டா தானே."

"பளார்…” என்ற சத்தம் காதை கிழித்தது.

ஈஸ்வரன் தன்னுடைய நெற்றிக் கண் திறக்க ருத்ரதாண்டவம் ஆட தயாராக கார்த்திகா முன்பு நின்று இருந்தான்.

ஈஸ்வரனை கண்டு பயத்தில் நடுங்கி போனாள் கார்த்திகா. ஈஸ்வரன் வருவான் என எதிர்பார்க்க வில்லை. முல்லைக்கு எதிர் திசையில் ஈஸ்வரன் சென்றதை கவனித்து தான் முல்லையை பின் தொடர்ந்து வந்தாள். இப்போது கையும்,களவுமாக கொத்தாக சிக்கிக் கொண்டாள்.

ஈஸ்வரனை கண்டு முல்லையும் பயந்து போனாள்.

“மாமா.” என பத பதைப்போடு அழைக்க.

உதட்டில் விரல் வைத்து ஸ்... என்றான். நீ பேச கூடாது என்பது போல.

ஈஸ்வரன் முகத்தில் கொந்தளித்த கோவக்கனலை கண்டு பின் வாங்கி நின்றாள் முல்லை. ஷிவ்வாக நின்று இருந்தான் ஈஸ்வரன்.

காது கொய் என்ற சத்தம் மட்டுமே கேட்டது கார்த்திகாக்கு. ஒரு அறைக்கு சுருண்டு விழுந்தவள் எழுந்து நின்று ஈஸ்வரனை முறைக்க மறுகண்ணத்தில் மீண்டும் அறைந்தான். உதடு கிழிந்தது கார்த்திகாக்கு.

அறை வாங்கிய வேதனை இருந்தாலும், முல்லை கண் முன்பு அடிவாங்கியது அவமானத்தை கொடுத்தது கார்த்திகாக்கு.

“டேய்…” என கத்திக் கொண்டு திமிரி எழுந்தவள், “இப்போ எதுக்கு டா என்னை அடிக்கிற, உனக்கு என்ன உரிமை இருக்கு.

அவ என்னுடைய அக்கா அவளை பேச எனக்கு முழு உரிமை இருக்கு. நான் என்ன தப்பா சொல்லிட்டேன், உண்மையை தானே சொன்னேன். இவளை நீயே இதுவரை.”

அதற்கு மேல் அவளை ஒரு வார்த்தை பேச விடாமல் அவள் தொண்டையை பிடித்து நெரித்தான். முல்லை கை பிடித்து தன் அருகில் நிறுத்தி நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தவன் "இவள் என்னுடைய பொண்டாட்டி, முழுக்க முழுக்க எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு இவ கிட்ட, வேற யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.” என உருமியவன் கார்த்திகாவை கீழே தள்ளி விட்டான்.

நடப்பதை சாந்தமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கும் அம்மனை திரும்பி பார்த்தவன் கார்த்திகா கூந்தலை பற்றி தர தரவென கோவிலுக்கு பின் பக்கம் இழுத்து சென்றான்.

அவள் கத்த வேண்டும் என முயற்சி செய்தாலும் சத்தம் வெளியே வர வில்லை கையை மட்டுமே அசைக்க முடிந்தது. ஈஸ்வரன் இழுத்து சென்றதில் கால் தேய்ந்து இரத்தம் வந்தது.

கோவிலுக்கு பின்னால் மண்ணில் கார்த்திகாவை தள்ளி விட்டவன், “இப்போ பேசு." என்றான் ஆங்காரமாக.

மண்ணில் விழுந்தவள் முகம் முழுவதும் மண். வாய்க்குள் புகுந்த மண்ணை துப்பி விட்டு விழிகளை உருட்டி ஈஸ்வரனை முறைத்தவள் வாய் திறக்க மீண்டும் அவளின் கழுத்தை பிடித்து நெரித்தான்.

அப்படியே அவளை மேலே தூக்கியவன் கண்களில் இரக்கம் என்பதே இல்லை.
முல்லை தன் மாமன் அருகில் செல்லவே நடுங்கி போனாள். ஈஸ்வரனின் ஒற்றை கையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தவள் கண்கள் சொருகியது.

அவள் உடனே சாக கூடாது என்று முடிவு செய்தவன் கார்த்திகாவை கீழே போட்டான். கோவம் கொஞ்சம் கூட அடங்காமல் நெஞ்சம் ஏறி இறங்கியது. கார்த்திகா கன்னத்தில் முகமே வீங்கி போகும் அளவுக்கு வெறிக் கொண்டு அறைந்தவன் பேசிய வாய்க்கு தண்டனை கொடுக்க நினைத்தான்.

“இனி நீ பேசவே கூடாது. இந்த வாய் எதுக்கும் பயன் இல்லாம போகனும். உன்னுடைய தேவையை கூட சொல்ல முடியாமல் போகனும்.” என்றவன்.

கோவிலை சுத்தம் செய்து விட்டு மீதம் இருந்த தண்ணீர் வாலியை கண்டான். வேகமாக சென்று எடுத்து வாந்தவன் கீழே கிடந்த மண்ணை அள்ளி கார்த்திகா வாய்க்குள் திணித்தான். மண்ணை வாய்க்குள் திணித்து தண்ணீர் ஊற்றி அவளை விழுங்க வைத்தான். கார்த்திகா விழுங்காமல் துப்ப அவள் வாய்க்குள் மீண்டும் மீண்டும் மண்ணை கொட்டி அடைத்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தான்.

கார்த்திகா தன் காலால் ஈஸ்வரனை உதைக்க முயற்சி செய்ய ஈஸ்வரன் தன் ஒற்றை காலால் கார்த்திகா காலை அழுத்தமாக மிதித்த படி மீண்டும் மீண்டும் அவள் வாய்க்குள் மண்ணை திணித்து தண்ணீர் ஊற்றி அவளை விழுங்க வைத்தான்.

வலி பாதி, போராட்டம் பாதி என வாய்க்குள் சிக்கிய மண்ணோடு மயங்கிய சரிந்தாள். பெரிய தண்டனையாக தராமல், சின்ன சின்ன தண்டனைகளாக கொடுத்ததால்
ஈஸ்வரனை குறைத்து மதிப்பிட்டு விட்டாள் கார்த்திகா.

அவன் தான் அடிக்கடி கூறினானே நான் இரக்கம் காட்ட மாட்டேன், உறவு என்றும் பார்க்க மாட்டேன் என்று. அப்போதும் ஈஸ்வரனை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டாள். ஈஸ்வரனை காயப்படுத்தி இருந்தால் கூட விட்டு இருப்பான். அவனின் கொடியை அல்லவா கார்த்திகா காயப்படுத்தி இருக்காள் எப்படி விடுவான்.

முல்லைக்கு கார்த்திகா நிலையை விட தன் மாமனின் வெறி அடங்காத கோவத்தை கண்டு தான் உள்ளம் துடித்தது. தனக்காக இவ்வளவு கோவ படுகிறார். எனக்காக மட்டுமே இந்த கோவம் என ஒரு பக்கம் பயத்தை தாண்டி மனம் ஆர்பரித்தது முல்லைக்கு.

கோவம் அடங்காமல் கார்த்திகாவை காலால் உதைத்து தள்ளியவனை நெருங்கி நின்றவள், “மாமா!” என தைரியமாக அழைத்தாள்.

சட்டென விழிகள் சிவக்க திரும்பியவன் கோவத்தை கண்டு இம்முறை முல்லை பயப்டவில்லை. தனக்காக இவ்வளவு கோவத்தை கொண்டவன் தன்னிடம் கோவ பட்டாலும் பரவாயில்லை என தோன்றியது.

“மாமா!” என அவன் கண்களை பார்த்து அழைத்தாள்..

"என்ன டி மாமா, மாமான்னுட்டு அவ…” என ஆரம்பித்தவன் பார்வை முல்லைக்கு பின்னால் நின்று இருந்த கம்பன் மீது விழுந்தது.

கம்பன் அண்ணனாகவே இருந்தாலும் கார்த்திகா பேசிய வார்த்தைகளை பற்றி கம்பன் முன்பு பேச விரும்பவில்லை ஈஸ்வரன்.

“வா!” என இழுத்துக் கொண்டு கம்பனை தாண்டி நடந்தான்.

ஓட்டமும் நடையுமாக மாமன் இழுத்த இழுப்புக்கு ஓடியவள் கம்பனை கண்டதும் அண்ணாவென அழைத்தாள். அவள் அழைத்த வேகத்தில் ஈஸ்வரன் கம்பனை தீயாக முறைக்க, கம்பன் முல்லையை காணாமல் திரும்பி நின்று கொண்டான். ஈஸ்வரன், முல்லை இருவரும் சென்ற பிறகு மூச்சை நன்றாக இழுத்து விட்டு திரும்பியவன் மயக்கத்தில் கிடக்கும் கார்த்திகாவை பார்த்த படி நெருங்கினான்.

"முல்லையை உன்னுடைய உடன் பிறந்தவளாக பார்க்கவில்லை என்றாலும் அவளும் ஒரு பெண் தான் என்பதை நினைத்துப் பார்த்து இருக்க வேண்டும். அவளுக்கும் ஆசைகள் உண்டு, வலிகள் உண்டு, அனைத்தையும் தாண்டி உணர்வுகள் உண்டு என்பதை உடன் பிறந்த நீயே மறந்து விட்டாயே. உங்களிடம் இருந்து காக்க தான் அவளை ஈஸ்வரன் பொறுப்பில் ஒப்படைத்தேன். உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்தேன்.

எல்லை மீறிய வார்த்தைகளால் முல்லையை காயப்படுத்தி நீ என்ன கண்டாய், இதுவரை அடுத்தவரை இழிவு படுத்தி என்ன சுகம் கண்டாய். இதற்கு மேல் அடுத்தவரை இழிவு படுத்தவோ, காயப்படுத்தவோ இனி உன்னால் பேசவே முடியாதே, இனி நீ சுய சிந்தனையில் இருக்க போவதில்லை. ஈஸ்வரனின் கோவத்திற்கு முழுதாக பலியாகாமல் போய் விட்டாய்.”

அவளை அப்படியே விட்டு விட்டு மெல்லிய நிறைவான புன்னகையோடு கிளம்பினான் கம்பன்.

முல்லையை தர தரவென வீட்டிற்கு அழைத்து வந்த ஈஸ்வரன் அவர்களின் அறை நோக்கிச் சென்றான். அறைக்குள் நுழைந்தவன் அறை கதவை மூட மறந்து விட்டான்.



தொடரும்...