அத்தியாயம் – 51
“நீ எல்லாம் இதை விட அதிகமா கேவலபடனும். நீ எல்லாரையும் உதாசீன படுத்துன மாதிரி, உன்னையும் உதாசீன படுத்தி உதறி தள்ள ஒருத்தன் இருக்கான் பாத்தியா. இந்த மாதிரி ஒரு மோசமான நிலைமை வரும்னு நீ நினைக்கவே இல்ல தானே.
என்ன பண்ண இந்த ஊர்ல நீ மட்டும் தான் ராஜாவா வாழுவன்னு கண்ட கனவு மொத்தமும் நாசமா போச்சு போ. இனி உன்னால எதுவும் பண்ண முடியாது. பிஞ்சு போன செருப்புக்கு சமம் நீ. இன்னும் இதை விட கேவலபடுற நாள் சீக்கிரமே வரனும், அதையும் நான் இதே மாதிரி ரசிச்சு பாக்கணும். என் புள்ளை கட்டாயம் உன்னை அசிங்க படுத்துவான் டா.” என ஆக்ரோஷமாக கூறினாள் நனி.
இத்தனை வருட வலி, காத்திருப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி கொண்டிருக்கும் சந்தோஷம் ஆர்பரிப்பாக நனி முகத்தில் தோன்றியது.
ஈஸ்வரன் தன் கண்களை நம்ப முடியாமல் நின்று இருந்தான். இதை கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. உதட்டை கடித்து வெக்க புன்னகை பூத்தவன் பின்னந்தலையை வருடினான் வலது கையால். ஈஸ்வரனின் வெக்க புன்னகை அவ்வளவு அழகாக இருந்தது.
மீண்டும் நிமிர்ந்து நேராக பார்த்தான், ஈஸ்வரனின் கொடி அவன் கொடுத்து சென்ற மஞ்சள் வண்ண புடவையில் மிதமான நகைகளை அணிந்து கொண்டு பார்வையை கீழே பதித்த படி தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க தயாராக அமர்ந்து இருந்தாள். இதை தான் ஈஸ்வரன் எதிர்பார்க்க வில்லை.
முல்லை வெட்கமும், அவள் முகத்தில் இருக்கும் பதட்டம், சந்தோஷம் அனைத்தும் ஈஸ்வரன் நெஞ்சுக்குள் ஆணிவேராக பரவியது.
‘கொடிக்கு வெக்கம் எல்லாம் வருது!’ என தனக்கு தானே கூறிக் கொண்டவன் அதி வேகத்தில் துடிக்கும் நெஞ்சத்துடன் அடி மேல் அடி எடுத்து வைத்து அவன் மனைவியை நெருங்கினான்.
எப்போதும் நேர் கொண்டு பார்க்க கூடியவள், இன்று அவனின் பாதங்களை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள். தன் மாமன் நெருங்கி வர வர முல்லை நெஞ்சம் ரயில் இன்ஜின் போல் ஓடியது. கட்டிலின் ஒரு மூலையில் தலை குனிந்து அமர்ந்து இருந்தவள் தன் சேலை முந்தானையை எடுத்து தன் உள்ளங்கை வியர்வையை துடைத்துக் கொண்டாள்.
யோசித்து யோசித்து ரசித்து ரசித்து தன் மாமனுக்காக, அவனுடன் வாழ போகும் வாழ்க்கைகாக ஆசையாக தயாரானவளுக்கு தனிமையில் இருக்கும் போது இருந்த தைரியம் தன் மாமனை கண்டதும் குறைய துவங்கியது. அதிலும் ஈஸ்வரன் நெருங்கி வர வர முல்லைக்கு வியர்க்க துவங்கியது.
அவளின் பயம், பதட்டம், நடுக்கம் அனைத்தையும் ரசித்துக் கொண்டே நெருங்கியவனுக்கு உள்ளுக்குள் உணர்ச்சிகள் அலைபோல் மோதியது. அறைக்குள் வரும் வரை தாம்பத்தியம் பற்றிய சிந்தனை அவன் சிந்தையில் இல்லை. தன்னவளை சமாதானம் செய்யவே ஓடோடி வந்தான்.
ஆனால் தன் கொடியே தங்களின் வாழ்க்கைக்கு பச்சை கொடி காட்டிய பிறகு இந்த நிமிடத்தில் இதை இழக்க தயாராக இல்லை ஆணவன். தான் கூறியதுக்காக மட்டுமே தயாராகி விட்டாளோ என அவன் மனம் ஒரு நொடி சுணங்கியது. அதையும் அப்படி இல்லை என அவளின் வெட்கமும், நடுக்கமும் விரட்டி விட்டு விட்டது.
மனதுக்குள் ஆசைகள் போராட்டம் நடத்த கட்டில் அருகில் வந்தவன், “கொடி!” என உருக்கமாக அழைத்தான்.
முல்லைக்கு மூச்சு கூட சத்தமாக வரவில்லை. அமைதியாக கட்டிலில் இருந்து இறங்கியவள் ஈஸ்வரன் எதிரே நின்றாள். ஆனால் ஈஸ்வரனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
வெக்கத்தில் பூத்த அவளின் முகத்தை ரசித்து பார்த்தவன் அவளை தொட கையை தூக்கிய நேரத்தில், "மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க." என்றவள் சட்டென்று ஈஸ்வரன் காலில் விழுந்து விட்டாள்.
“கொடி இது என்ன கெட்ட பழக்கம்?” என மனைவியை தூக்கி விட்டவன், "என்ன கொடி இது?”
“மாமா! நம்ப கலாச்சாரம் இப்படி தான்.” என்றாள் உதடு அசையாமல்.
“எனக்கு இந்த மாதிரி விஷயம் பிடிக்கல கொடி. அப்போ நானும் உன் கால்ல விழாவா?”
“அச்சோ மாமா!” என பதறியவளை இழுத்து நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
முதல் அணைப்பு, முதல் இறுக்கம், முதல் நெருக்கம். இருவருக்குள்ளும் சொல்ல முடியாத தவிப்பு. தன் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நினைத்த தாம்பத்தியம் இன்று நடக்க போகும் தவிப்பில் கொடியும்.
தான் முதல் முதலில் விரும்பியவளுடன் தன் மொத்த ஆசை, ஏக்கம் அனைத்தையும் கொட்டி அவளுடன் வாழ போகும் தவிப்பில் ஈஸ்வரன்.
இருவரின் தவிப்பும் ஈடேறும் நேரம் இது. ஈஸ்வரன் அணைத்துக் கொண்டதும் மெலிதாக அதிர்ந்தவள் ஈஸ்வரனின் முதுகில் தன் கைகளை மெதுவாக படரவிட்டாள். தன் மாமனின் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் அவனின் இதய துடிப்பு சத்தத்தை அமைதியாக கேட்டாள்.
தன் கொடி செயலில் மயங்கியவன் தன் நெஞ்சில் இருந்த அவளின் உச்சந்தலையில் குனிந்து அழுத்தமாக முத்தமிட்டு பெண்ணவளை இன்னும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். ஆணவன் கொடுத்த முத்தத்தில் பெண்ணவள் உடல் சிலிர்த்து அடங்கியது.
எப்போதும் போல் இன்றும் கொண்டை தான் போட்டு இருந்தாள் கொடி, அதில் சங்கிலி கோர்த்த கொண்டை ஊசி சொருகி இருக்க அதை எடுத்து விட்டதும்
மாலை போல் கொடி கால் முட்டியை தொட்டு நின்றது அவளின் நீண்ட கூந்தல்.
அவளின் நீண்ட கூந்தலை கண்டு அதிர்ந்தவன் அவள் முடியை தொட்டு பார்த்தான்.
கொடி இதுவரை முடியை விரித்து விட்டது இல்லை என்பதால் யாருக்கும் அவளின் முடி அளவு தெரியாது. இன்று ஈஸ்வரன் அவிழ்த்து விட்டு அதிசயத்து போனான்.
அவளின் காதோரம் இருந்த முடிகளை விலக்கி விட்டவன், "இன்னும் என்னென்ன ரகசியம்டி எனக்கு தெரியாமல் உன் கிட்ட இருக்கு." ரகசியமாக கேட்டான்.
கொடி இன்னும் அவனுடன் ஒட்டிக் கொண்டவள் வாயை திறக்கவே இல்ல. வெட்கம் அவளை பேச விடவில்லை.
"நீ சொல்லலனா என்ன! உன் ரகசியம் எல்லாத்தையும் நானே தெரிஞ்சுக்கிறேன், நீ என்னை தடுக்க கூடாது." என்றான் ரகசியமாக.
அவனின் வார்த்தைகளை கேட்டு கொடிக்கு உடல் கூசியது வெக்கத்தில்.
"மாமா!" என ஏக்கமாக சிணுங்கினாள்.
அவளின் சிணுங்கல் மொழியில் ஆணவன் உடலில் உணர்ச்சிகள் அலைமோத அவளை அணைத்தபடி கட்டிலில் அமர்ந்தான். பெண்ணவள் நிமிர்ந்து பார்க்காமல் வெட்கத்தில் தலை குனிந்து இருக்க தன் ஆள்காட்டி விரலை அவள் தாடையில் வைத்து நிமிர்த்தி தன் முகம் பார்க்க செய்தவன், "அழகி டி நீ!" என அவளின் குங்குமம் இட்ட நெற்றியில் முத்தமிட்டான். கண் மூடி லயித்து போனாள் முல்லை.
ஈஸ்வரன் தன் சட்டை பட்டங்களை ஒவ்வொன்றாக கழட்டியவன் மொத்தமாக சட்டையை அவிழ்த்து கீழே போட்டான். ஈஸ்வரனின் திண்ணிய மார்பகங்களை கண்டு மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள் கொடி. உள்ளே வெள்ளை நிற பனியன் போட்டு இருந்தான். அதையும் மீறி திமிரிக் கொண்டு நின்றது அவனின் கட்டுடல். கொடி இடுப்பில் சொருகி இருந்த அவளின் முந்தானையை அவள் இடையை கிள்ளியபடி இழுத்தவன் அவளின் மாராப்பை விலக்கி முந்தானையை தன் தோளில் போட்டுக் கொண்டான்.
அவளை இழுத்து அணைத்தபடி கட்டிலில் சரிந்தவன் அவளின் இதழில் தன் இதழை முரட்டு தனமாக பொருத்தினான் உணர்ச்சி வேகத்தில். இருவரும் இன்ப நேரத்தில் இருக்க, "ஈஸ்வரா!!!" என்ற அலறல் சத்தம் இருவரையும் திடுக்கிட வைத்தது.
விலகி எழுந்தனர் இருவரும்.
ஈஸ்வரன் வேகமாக வெளியே வந்தவன் ஹாலில் கண்ட காட்சியில் கலங்கி போனான். சட்டை கூட போடாமல் தன்னையும் சரி செய்யாமல் வெளியே வந்தவன் நடு கூடத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நனியை கண்டு துடித்து போனான்.
அவனை மீறி, "அம்மா!" என கத்தியபடி ஓடி வந்தவன், குப்புற கிடந்த நனியை நிமிர்த்தினான். அரை கண்களை திறந்த படி கிடந்தவர், "இப்போ என்ன சொன்ன ஈஸ்வர்?" என்றார் சின்ன சிரிப்போடு.
சித்தப்பு அருகில் நின்று இருந்தவர் பார்வை முழுவதும் ஈஸ்வரன் சட்டை இல்லாத உடல் மீதும் அவன் பனியனில் ஒட்டி இருந்த குங்குமத்தின் மீதும் இருந்தது. முல்லை அவசரம் அவசரமாக தன்னை சரி செய்து கொண்டவள், புடவையை அள்ளி தன்னை மறைத்துக் கொண்டு வெளியே ஓடிவந்தாள். நனி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு, "அத்தை!" என கத்தினாள்.
ஈஸ்வரன் திரும்பி தன் சித்தப்பனை பார்க்க அவரோ கொடியை கொலை வெறியோடு பார்த்துக் கொண்டு இருந்தார். நனி கழுத்தில் கத்தியால் அறுத்து மேலிருந்து படியில் உருட்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறான் கணவன். இதற்கு தான் அண்ணன் ஆசைப்பட்ட பெண்ணை நயவஞ்சகமாக திருமணம் செய்தான் போல.
நனியை கையில் ஏந்திக் கொண்டு வாசலை நோக்கி ஓடியவன் பனியனை பிடித்து இழுத்தார் நனி.
“ஈஸ்வர் நான் பிழைக்க மாட்டேன். அதை விடு நீ திரும்பவும் என்னை இப்ப கூப்பிட்ட மாதிரி கூப்பிடு ஈஸ்வர்.”
போராடி வார்த்தைகளை பேசி முடித்தவர் உயிரை அவனின் வார்த்தையை கேட்க இழுத்து பிடித்துக் கொண்டு காத்திருந்தார்.
“மாமா வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்.” கண்ணீரோடு நின்று இருந்தாள் கொடி.
எச்சிலை கூட்டி விழுங்கியவன், "அம்மா!" என மென்மையாக அழைத்தான்.
உண்மையான சந்தோஷத்தை தொலைத்து கடமைக்கு உயிர் இல்லா ஜடம் போல் வாழ்ந்த நனி முகத்தில் சொல்ல முடியா சந்தோஷம். அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் ஈஸ்வரன் நெஞ்சில் சுருக்கென வலித்தது. அவரின் சிரிப்பே கூறியது அவரின் ஏக்கத்தை.
“சாக போற எனக்கு சாகுற நேரத்துல இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும்னு நினைக்கவே இல்ல ஈஸ்வர். உன் சித்தப்பன் சாகுறதை பாக்காமல் சாகுறது தான் எனக்கு வேதனையாக இருக்கு. அவனை விட்டுடாத ஈஸ்வர் அவன் சீக்கிரம் சாக கூடாது. எல்லார் முன்னாடியும் அவமான பட்டு குறுகி போய் துடிக்க துடிக்க சாகனும்.
அப்போ தான் என் ஆத்மா சாந்தி அடையும் ஈஸ்வர். உன்னையும், முல்லையையும் பிரிக்க நினைக்கிறான். நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் தாண்டி வாழனும்.” என்றவர் உயிர் மகனை பார்த்தபடி அவன் கைகளிலேயே அவன் நெஞ்சில் சாய்ந்து போனது.
நனி பேச்சு நின்று போனதும், "அத்தை, அத்தை!" என கதறிக் கொண்டிருந்தாள் முல்லை.
சிறு வயதில் இருந்து அனைவரும் ஒதுக்கிய போது கம்பனும், நனியும் தான் அரவணைத்து அன்னமிட்டனர். நனியும் இல்லை என்றால் கிடைக்கும் ஒரு வேலை சாப்பாடும் இல்லாமல் போய் இருக்கும். எதற்கும் அழாதவள் இன்று கதறி அழுதாள் நன்றி கடனால் உருவாகிய பாசத்தால்.
இருவரும் வாழ்க்கையை துவங்க போகும் சந்தோஷம் இப்போது காணாமல் போய் இருந்தது. நனி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கீழே அமர்ந்து அவரின் உடலை தன் மடியில் கிடத்தியவன் தன் கரங்களால் அவரின் திறந்து இருந்த விழிகளை மூடினான்.
இருள் நிறைந்த நேரத்தில் வானில் தெரிந்த நிலா வெளிச்சத்தை அண்ணார்ந்து பார்த்தவன் விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர் நனி முகத்தில் விழுந்தது. அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மனைவியை ஒரு கையால் அணைத்துக் கொண்டவன் மனம் எரிமலையாக கொதித்தது.
“ஈஸ்வர்!” என கம்பனின் குரல் கேட்டு நிமிர்ந்தவன் உணர்ச்சியற்ற முகத்துடன் கம்பனை பார்த்தான்.
“விதியை மாத்த முடியாது ஈஸ்வர், அவுங்க விதி முடிஞ்சு போச்சு. உன்னுடைய வலி புரியுது அடுத்தடுத்து நடக்க வேண்டியத பாரு.”
நனியை கொடி மடியில் படுக்க வைத்தவன், "எது விதி கம்பா, எது விதி? விதின்னா வேற இது கொலை முழுக்க முழுக்க கொலை. அங்க பாரு.” என வீட்டுக்குள் கை நீட்டி காட்டினான் ஈஸ்வர்.
உள்ளே சித்தப்பு ஈஸ்வரனின் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார் ஈஸ்வரனின் முதல் இரவை கெடுத்த சந்தோஷத்தில்.
“கட்டுன பொண்டாட்டியை கொன்னுட்டு எப்படி உக்காந்து இருக்கான் பாரு. தப்பு பண்ணிட்டேன் கம்பா, என் அப்பனை பத்தி தெரிஞ்சதும் இவன் தோலை உரிச்சி இருக்கணும், தப்பு பண்ணிட்டேன்.” என பாயும் புலியாக வீட்டிற்குள் பாய்ந்து ஓடினான் ஈஸ்வர்.
கம்பன் வேகமாக ஓடி ஈஸ்வரனை தடுத்து பிடித்தவன், "ஈஸ்வர் அவருடைய பாவ கணக்கு எண்ணிக்கையை தாண்டி போய்டுச்சு, அவருக்கான தண்டனையை கடவுள் பார்த்துப்பாரு, நீ விடு. இத்தனை நாள் அமைதியா இருந்தா மாதிரி இன்னைக்கும் இரு ஈஸ்வர். அம்மா இறுதி சடங்கை முடி. நான் சொல்லுறது கேளு ஈஸ்வர்.”
கம்பனை மண்ணில் தள்ளி விட்டவன் சித்தப்பன் நெஞ்சில் எட்டி மிதித்தான். நாற்காலியுடன் சேர்ந்து உருண்டு ஓடினான் சித்தப்பு.
எழுந்து நின்று ஆங்காரமாக சிரித்த சித்தப்பு “என்ன டா எதோ உன்னை பெத்தவள் செத்தா மாதிரி ஓவரா கோவபடுற. செத்தது என் பொண்டாட்டி நானே கவலை படல, உனக்கு எதுக்கு கவலை?” என நக்கலாக புருவம் உயர்த்தி கேட்டார்.
பேசிய வாயில் குத்தியவன், “உன்னை விட்டு வச்சதே மிக பெரிய தப்பு டா... இனி.”
“இனி என்ன பண்ணுவ? உன்னால எதுவும் பண்ண முடியாது. நீ என்னை கொன்னாலும் என்னை பத்தி எவனுக்கும் தெரியாது டா. உனக்கும், எனக்கும், என் பொண்டாட்டிக்கு தான் உண்மை தெரியும். வேற யாருக்கும் தெரியாது.
நீ என்னை பத்தி எல்லாருக்கும் தெரிய படுத்தனும்னு தான் இத்தனை நாள் அமைதியா இருக்கன்னு எனக்கு தெரியும் டா நான் என்ன அவ்வளவு முட்டாளா என்ன? உன்னால எதுவும் பண்ண முடியாது ஈஸ்வர்.
இன்னைக்கு என் பொண்டாட்டி செத்தா, இதே மாதிரி லிங்கத்தை எடுக்குற அன்னைக்கு உன் பொண்டாட்டி சாவா டா அதை யாராலும் தடுக்க முடியாது
இப்போ நீ கையை எடுக்கல லிங்கத்தை பத்தின ரகசியத்தை உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிடுவேன், கூடவே அவள் சாக போறதையும்.” என்றான் எள்ளலாக.
ஈஸ்வரன் இரத்தம் கொதித்தது. திரும்பி தன் மனைவியை பார்த்தான். அவளோ இதை எதையும் கண்டு கொள்ளாமல் நனியை கட்டி பிடித்து அழுது கொண்டு இருந்தாள்.
ஈஸ்வரன் விழிகள் சிவக்க கம்பனை பார்த்தான்.
"வேண்டாம்." என விழிகளால் கூறினான் கம்பன்.
“போ கம்பா.” என்ற ஈஸ்வரன் கர்ஜனையை மீற முடியவில்லை.
நிலைமை எல்லை மீறி போன பிறகு இனி ஈஸ்வரனை தடுப்பது நடக்காது என்பது கம்பனுக்கு நன்றாக தெரியும்.
வேகமாக அங்கிருந்து கிளம்பியவன் திரும்பி அழும் முல்லையை ஒரு முறை அழுத்தமாக பார்த்து விட்டு சென்றான்.
ஈஸ்வரன் விழி மொழியில் உணர்த்தியதை செய்ய கம்பன் கிளம்பி விட, ஈஸ்வரன் வேகமாக வெளியே வந்தவன் முல்லை மடியில் கிடந்த நனியை தூக்கி சென்று நடு கூடத்தில் போட்டான்.
“நீங்க ஆசைப்பட்டது நடக்காமல் உங்க உடம்பை எரிக்க மாட்டேன் ம்மா. உங்க இறுதி ஆசை நிறைவேறும்.” என்று அவரோடு மனதுக்குள் உரையாடினான்.
தொடரும்...