அத்தியாயம் – 52
“என்ன டா பிணத்தை உள்ள கொண்டு வந்து போட்டு வேடிக்கை பார்த்துதுட்டு இருக்க, நார போகுது.” என்ற சித்தப்பனை கேவலமாக பார்த்தான் ஈஸ்வரன்.
விடியும் தருவாயில் வீட்டிற்கு வந்த கம்பன் ஈஸ்வரனை பார்த்து கண் அசைக்க. அதன் பிறகே நனி இறந்த செய்தியை ஊருக்குள் தெரிய படுத்தினான்.
ஈஸ்வரனின் தோரணை மாறியதை கண்டு சித்தப்புக்கு படபடப்பாக இருந்தது.
அவரின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை கண்டவன், “என்ன என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்ன, இப்போ எதுக்கு டா பயம். என்னையே மிரட்டி பாக்குற, என்னை பத்தி முழுசா தெரிஞ்சும் நீ என் கிட்ட மோதி இருக்க கூடாது.
நான் பண்ணுன மிகப் பெரிய தப்பு உன்னை உயிரோடு விட்டது தான். இனி அந்த தப்பை பண்ண மாட்டேன் டா. உன்னுடைய வீக்ன்ஸ் என்னன்னு எனக்கு தெரியும். என் அம்மாவுடைய கடைசி ஆசையை நிறைவேத்தலனா நான் நல்ல புள்ளையே இல்ல டா.’ என்றவன் கம்பன் போனை வாங்கி சித்தப்பு முகத்துக்கு நேராக காட்டினான்.
சித்தப்பு பேய் அடித்தார் போல் துடித்து போய் நின்று இருந்தார். ஈஸ்வரன் காட்டிய போனில் ராஜேந்திரன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.
அவனின் நிலை கண்டு துடித்த சித்தப்பு டேய் என ஈஸ்வரனை நெருங்க
அவர் நெஞ்சில் எட்டி உதைத்தவன், "நீ வீணாக்குற ஒவ்வொரு நொடியும் உன் மகன் உயிருக்கு தான் டா ஆபத்து, இந்த ஊரை பொறுத்த வரை நீ நல்லவன், நான் உன்ன என் கையால கொன்னாலும் நீ நல்லவன்னு பட்டத்தோடு செத்துடுவ. அப்படி நடக்க கூடாதுன்னு தான் இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். இன்னைக்கு நீயே எல்லார் முன்னாடியும் உன்னை பத்தின உண்மையை சொல்லுற, இல்ல உன்னுடைய உயிருக்கு உயிரான மகன் இறந்துடுவான். உனக்கு நேரமும் அதிகம் கிடையாது. ரொம்ப ரொம்ப குறைவு. யார் மேலேயும் பாசம் இல்லாத உனக்கு உன் மகன் தான் உயிருன்னு நான் தெரிஞ்சுகிட்டேன் டா.”
கண்ணாடி பெட்டிக்குள் வைத்து மண்ணில் புதைக்க பட்டிருந்தான் ராஜேந்திரன்.
“ஈஸ்வர் என் மகனை விட்டுடு, இதுக்கு நிறைய அனுபவிப்ப.”
கண்கள் சிவக்க கத்தியவர் வாய் மேலேயே அடித்தான் ஈஸ்வரன்.
“நான் மட்டும் ஆஸ்திரேலியா போகாமல் இருந்து இருந்தா இந்நேரம் உன் கதையை முடிச்சு இருப்பேன் மிஸ் ஆகிட்ட டா. என் அம்மா ஆசை நிறைவேறும்.”
கேட்டில் ஆட்கள் வருவதை கண்ட ஈஸ்வரன், "நீயே உன் வாயால எல்லார் கிட்டேயும் உண்மையை சொன்னா உன் மகன் உயிர் பிழைப்பான், அப்படி இல்லைன்னா அந்த கண்ணாடி பெட்டிகுள்ளேயே அவன் சாகனும். அப்பறம் நீ உருவாக்குற சாம்ராஜ்யத்தில் ஆளுறதுக்கு வாரிசு இல்லாமல் போய்டும். என்னுடைய ஸ்டைல்ல நான் உன்னை கொன்னுடுவேன் ஆனா நீ தியாகி பட்டத்தோடு சாக கூடாது அதுக்காக தான் டா...
“ஐயா நனிம்மா நேத்து நல்லா தானே இருந்தாங்க.” என பெண்கள் அழுதபடி அவர் தலைமாட்டில் அமர்ந்தனர்.
அவர் கழுத்தில் யாரோ கத்தியால் அறுத்து இருப்பதை கண்டவர்கள் அதிர்ச்சியாக
கத்தினர், "ஐயா நானிம்மாவை யாரோ கழுத்தை அறுத்து கொன்னு இருக்காங்க." என பெண்கள் கூச்சல் இட்டனர்.
“ஏய் எல்லாரும் அமைதியா இருங்க.” என ஒருவர் குரல் கொடுக்க பெண்கள் அனைவரும் கப்ஜிப் என வாயை மூடிக் கொண்டு அழுதனர்.
“ஐயா வீட்டுல கொலை நடந்து இருக்கு, அவுங்களே என்னனு சொல்லுவாங்க அமைதியா இருங்க, ஐயாக்கு தெரியும்.” என்றார்.
அனைவரின் பார்வைக்கும் ஈஸ்வரன் மீது இருக்க, ஈஸ்வரன் முகமோ கோவத்தில் செந்தனலாக இருந்தது ஆனால் அவனின் பார்வை மட்டும் சித்தப்பு மீது கொலை வெறியோடு படிந்து இருந்தது. ஈஸ்வரன் பார்வையை கண்டவர்கள் அனைவரின் பார்வையும் இப்போது சித்தப்பு பக்கம் பார்வையை திருப்பினர்.
உறவுகாரர் ஒருவர் சித்தப்பு அருகில் வந்தவர், “நீ எதுவும் பண்ணுல தானே டா.” எதுவும் பண்ணி இருக்க கூடாது என்ற ஆசையோடு கேட்டார்.
"என் பொண்டாட்டி கழுத்தை அறுத்து நான் தான் கொன்னேன்."
பொண்டாட்டிக்கு பூ வாங்கி கொடுத்தேன் என்பது போல் சாதாரணமாக கூறியவனை கண்டு ஈஸ்வரனுக்கு இரத்தம் கொதித்தது.
சித்தப்பு சொன்னதை கேட்டு ஊர் மக்கள், உறவுகள் அனைவரும் அதிர்ந்து நின்று இருந்தனர். ஆனால் தவறு செய்தவனோ நான் என்ன செய்தேன் என்பது போல் சாதாரணமாக பின்னால் கை கட்டிக் கொண்டு நின்று இருந்தான்.
உறவில் ஒரு பெண் சித்தப்பு அருகில் வந்தவர் சட்டென்று "பளார் " என அறைந்தார் இரு கன்னத்திலும். அனைவரும் வேடிக்கை பார்க்க சித்தப்பு அவமானத்தில் அந்த பெண்ணை அடிக்க கை ஓங்கினார்.
சித்தப்பு கையை தடுத்து பிடித்த ஈஸ்வரன், "உனக்கு கோவம் வர கூடாது மொத்தமா சொல்லு." என்றான்.
“ஐயா என்னவா இருந்தாலும் நீங்களே சொல்லுங்க, அந்த படுபாவி என்ன என்ன பண்ணி வச்சான்?” என ஒருவர் கேட்டார்.
“எல்லாரும் அமைதியா இருங்க, அவனே அவன் வாயால சொல்லுவான். அது தான் என் அப்பா, அம்மா ஆசை.” என்றவனை முறைத்துக் கொண்டு நின்று இருந்தான் சித்தப்பு.
தன் மகன் உயிர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, “நனியை நான் தான் கொன்னேன். அதுமட்டும் இல்லாமல் என் அண்ணண், ஈஸ்வரனுடைய அப்பாவை நான் தான் இந்த வீட்டை விட்டு ஊரை விட்டு அனுப்பி விட்டேன்.” ஈஸ்வரன் அப்பாவை எப்படி நயவஞ்சகமாக துரத்தி விட்டான் என்பதை கூறியவன்.
“எனக்கு தண்டை வேணும்னு மட்டும் செய்யல. என்றவர் உயிர் இல்லாமல் கிடந்த நனியைப் ஒரு பார்வை பார்த்தவர், நனி என் அண்ணன் விரும்புன பொண்ணு, அவுங்க ரெண்டு பேரும் காதலிச்சாங்க. இந்த சுத்துபட்டுலேயே நனி மட்டும் தான் அழகி. எனக்கு ஒரு அழகி தான் பொண்டாட்டியா வரணும்னு ஆசை. என்னை விட என் அண்ணன் எந்த விதத்திலும் உயர்ந்து இருக்க கூடாதுன்னு யோசிப்பேன்
ஒரு நாள் நம்ப ஊர் கோவில்ல அண்ணன் நனி நெத்தில குங்குமம் வச்சி விட்டு நீ தான் டி என் பொண்டாட்டினு சொல்லுறது என் கண்ணுல பட்டுச்சு. நனி அழகி அப்படி பட்டவ எனக்கு வேணும்னு தான் அண்ணனை துரத்தி விட்டு அவசரம் அவசரமா என் அப்பாவை வச்சி இந்த கல்யாணத்தை முடிவு பண்ணிட்டேன்.
நனி அப்பா என் அப்பா கேட்டதும் உடனே ஒத்துகிட்டாரு. என் அம்மா என்னை பத்தின உண்மை தெரிஞ்சு தான் கடைசி வரை என் கூட பேசாமலே செத்துட்டாங்க. என் அப்பாவும் என்னை பத்தி தெரிஞ்சு கிட்டு தான் அந்த தண்டை என் கைக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டு செத்தாரு.” என அவசரம் அவசரமாக சொல்லி முடித்தார்.
சித்தப்பு முகத்தில் குற்ற உணர்ச்சி என்பதோ, அவன் வார்த்தைகளில் வருத்தம் என்பதோ கொஞ்சமும் கிடையாது. தான் செய்ததை நினைத்து சித்தப்பு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நிற்பதை கண்டு அனைவரும் கொந்தளித்தனர். சித்தப்பு முகத்திலேயே பெண் ஒருவள் எச்சில் துப்பினாள்,
"எச்ச நாயே அண்ணியா பார்க்க வேண்டியவளை கல்யாணம் பண்ணி இருக்க அசிங்கம் பிடிச்ச நாயே."
“ச்ச்சி கருமம் கருமம் உன்னை மாதிரி ஒரு கேடு கேட்ட ஜென்மம் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாங்க டா உன்னை போய் நல்லவன், நேர்மையானவன், உயர்வானவன்னு இந்த ஊரே நம்பினோம் நினைச்சு பார்க்கவே அசிங்கமா இருக்கு.”
“இத்தனை வருஷம் இந்த ஊரும், ஊர் மக்களும் பட்ட கஷ்டத்துக்கு முழுக்க நீ தான் காரணமா இது தெரியாம நாங்க எல்லோரும் உன் அண்ணனை சபிச்சோமே.. அந்த பாவம் தாண்டா நாங்க எல்லாரும் இவளோ நாளா கஷ்ட பட்டத்துக்கு காரணம்.”
“எல்லாத்தையும் விட ஒரு பெண் பாவம் எவ்வளவு பொல்லாதது தெரியுமா? இத்தனை வருஷம் நனி உள்ளுகுள்ள புழுங்கி புழுங்கி செத்துகிட்டு இருந்து இருக்கா.”
அனைவரின் பார்வையும் தன் மேல் கேவலமாக படிவதை கண்டு குறுகி போனதோடு இல்லாமால் தன் முகத்தில் விழுந்த எச்சிலில் அறுவருத்து போனார். இவ்வளவு நேரம் இறுமாப்பாக நின்றவன் முகம் இப்போது அவமானத்தில் கறுகி போனது.
“அதான் அந்த தண்டை என் கைக்கு வரலையே, என் அண்ணன் மகன் தானே போட்டு இருக்கான், அப்புறம் எதுக்கு கத்துறீங்க, போய் பிணத்தை எரிச்சிட்டு வேலையை பாருங்க.” என்றவர் நெஞ்சிலேயே மிதித்தாள் அந்த பெண்.
“உன்னை மாதிரி ஒரு எச்சை கூட எங்க நனி வாழ்ந்ததுக்கு உன்னை கழுத்தை அறுத்து கொன்னு இருக்கலாம் டா.” என்றவர் சித்தப்பு கழுத்தில் கால் வைத்து மிதித்தார்.
யாரும் தடுக்கவில்லை. அனைவரும் வேடிக்கை பார்த்தனர். நனி ஆசைப்பட்டது போலவே ஊர் மக்கள் முன்னிலையில் சித்தப்பு அசிங்கத்தில், அவமானத்தில் சுருண்டு கிடந்ததார் ஆனால் பார்க்க தான் அவர் உயிரோடு இல்லை.
தன் காதலன் இந்த ஊரை விட்டு சென்றதும் அனைவரும் அவனை எவ்வளவு கேவலமாக பேசினார்களோ அதை விட அதிகமாக சித்தப்பு இதே ஊரில் இதே மண்ணில் இந்த மக்களின் முன்பு கூனி குறுகி நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் ஆசை இன்று ஈஸ்வரனால் நிறைவேறியது.
“ஏய் புள்ள அந்த நாதாரி பயலை விடு அவனுக்கு தண்டனை நிச்சயமா கிடைக்கும். ஐயா அவனுக்கு தண்டனை தரட்டும்.” என்றார் முக்கியஸ்தர்.
“ஐயா அவனுக்கு தர தண்டனையை யாருமே மறக்க கூடாது. இனி எவனும் அடுத்தவன் குடும்பத்தை கெடுக்க கூடாது, எந்த ஒரு பொண்ணு வாழ்க்கையும் நாசம் ஆக கூடாது அப்படி ஒரு தண்டனை இவனுக்கு தாங்க.” என அனைவரும் ஒன்றாக கூறினர்.
“அவனுக்கு நான் தண்டனை தர போறது இல்லை நீங்க தான் தர போறீங்க. முக்கியமா இந்த ஊர் பெண்கள் தான். இவனுக்கு பொண்ணுங்க எல்லாரும் பொம்மைனு நினைப்பு.
பழைய முறை தான் ஆனா மறந்து போன தண்டனை.
இவரை நம்ப ஊர் அரச மரத்துல கட்டுங்க. இந்த ஊர் பெண்கள் கைள சாட்டையை குடுத்து மாத்தி மாத்தி அடிக்க சொல்லுங்க. இன்னைக்கு என் அம்மா உடம்பு எரிந்து முடியுறதுக்குள்ள இவன் அடி வாங்கியே சாகனும்.” என்றான்.
தண்டனையை கேட்டதும் சித்தப்பு பார்வை அங்கு அழுது கொண்டிருக்கும் முல்லை மீது படிந்தது. ரகசியத்தை பற்றி சொல்ல வாய் திறந்தவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவரும் எவ்வளவோ போராடி பார்த்தார். லிங்கத்தை பற்றியும் எதுவும் சொல்ல முடியவில்லை.
“இவனை தூக்கிட்டு போய் கட்டுங்க.” என ஈஸ்வரன் கர்ஜிக்க சித்தப்புவை தூக்கி சென்றனர்.
அவமானம் பிடுங்கி தின்றது பெண்கள் சாட்டையால் அடிக்கும் போது. அனைவரின் அவமானத்தை கண்டு மறைமுகமாக ரசித்தவன் இன்று தன் அவமானத்தை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டான். அடி வாங்கி அடி வாங்கி உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டிருந்தது. பெண்கள் அடித்து அடித்து சோர்ந்து போனார்கள்.
நனி உடலை எரிக்க அனைவரும் சென்று விட வாய் திறக்க முடியாமல் முக்கால் வாசி உயிர் போக கிடந்தவரை ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் கம்பன்
“நீ செய்த பாவங்களுக்கு உனக்கு ஈஸ்வரன் கையால் தான் மரணம்.” என்றவன் நனி உடலுடன் சென்றான்.
தொடரும்...