• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 54

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
67
28
18
Tamilnadu

அத்தியாயம் – 54





ஒரு வாரம் கடந்து செல்ல சித்தப்பனையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்களாக வரட்டும் என முடிவு செய்தவன் தன் வாழ்வில் அடி எடுத்து வைக்க நினைத்தான். இரவு வீட்டை உள் பக்கமாக பூட்டினான். வீட்டில் யாரும் இல்லை என்பது மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தது ஈஸ்வரனுக்கு.



கொடி அறையில் இருக்க. வீட்டில் உள்ள ஜன்னல்கள் வரை மூடினான். யாருடைய தொந்தரவும் இருக்க கூடாது இன்று என்ன நடந்தாலும் அதை பற்றி கவலை பட கூடாது என முடிவோடு இருந்தான்.



மெதுவாக மாடி ஏறியவன் தன் கொடியை தேடினான். அவளோ கூந்தலை வாரி கொண்டை போட்டுக் கொண்டு இருந்தாள். அவள் பின்னால் சென்று நெருங்கி நின்றவன் அவள் போட்ட கொண்டையை அவிழ்த்து விட்டான்.



கணவனின் பார்வை மாற்றத்தை கண்ணாடி வழியாக பார்த்து உணர்ந்து கொண்டவள் பார்வையை தாழ்த்தி புடவையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அவளின் நீண்ட கூந்தலை விரித்து விட்டவன் தன் சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்த முல்லை பூவை வெளியே எடுத்தான்.



அவளுக்கு அவன் முகம் மட்டும் தான் கண்ணாடியில் தெரிந்தது அவன் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. விரித்து விட்ட கூந்தலில் முல்லை பூவை வைத்து விட்டதும் முல்லை விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாக இறங்கியது.



சட்டென்று தலையில் கை வைத்து பூவை உணர்ந்தவள் உதடுகள் துடிக்க திரும்பி ஈஸ்வரன் முகம் பார்த்து, “மாமா!” என கலங்கி அழைத்தாள்.



அவள் உதட்டில் கை வைத்து வாயை மூடியவன் குங்கும சிமிழை எடுத்து திறந்தான். அதில் இருந்த குங்குமத்தை எடுத்து முல்லை உச்சி வகுட்டில் வைத்து விட்டவன், “நமக்கு கல்யாணம் ஆனதில் இருந்தே பாத்து இருக்கேனே நீ பூ வச்சதும் இல்ல வகிட்டில் குங்குமம் வச்சதும் இல்ல. இனி தினமும் இது இரண்டும் இருக்கணும். உன்ன உங்க வீட்டுல பூ வைக்க விடல அதனால இத்தனை வருஷமும் நீ பூ வச்சாதும் இல்ல. நம்ப பிரிந்து விடுவோம்னு குங்குமம் வைக்காமல் இருந்த நான் சொன்னது சரி தானே?” அவள் கண்களை பார்த்தபடி கேட்டான்.



முல்லைக்கு வார்த்தைகள் வரவில்லை. தலை அசைத்து ஆமாம் என்றவள் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை. அழுதாலும் அவள் முகத்தில் சந்தோஷம் ஜொலித்தது. சந்தோஷ கண்ணீரும், கூடவே கொஞ்ச வலியும் கடந்த காலத்தை நினைத்து.



“உன் வாயால கேட்டா எனக்கு ரொம்ப வலிக்கும் டி. போதும் நீ அனுபவித்த வலிகளை கேட்டு கேட்டு என்னால தாங்க முடியல. இனி உன் முகத்துலயும், வாழ்க்கைலயும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும். நான் சொன்னது புரிஞ்சுதா?”



கண்களாலேயே புரிந்தது என்று கூறியவள் கண்ணீரை துடைக்க கைகளை உயர்த்தியவன் அவள் இடுப்பை வளைத்து தன் அருகில் இழுத்து தன் உதட்டால் அவளின் கண்ணீரை துடைத்தான். அவனின் செயலில் மெலிதாக அதிர்ந்தவள் அவன் முதுகுக்கு பின்னால் கை கொடுத்து கணவனின் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.



கண்ணீரை துடைத்தவன் அவள் இதழில் அழுத்தமாக முத்தமி்ட சுகமாக இமைகளை மூடிக் கொண்டாள். கண்ணீர் தடம் மாறி முகம் எச்சில் தடமானது. கண்ணீரின் ஈரம் காய்ந்து முகம் முழுவதும் எச்சில் ஈரமானது.



அவளின் உதட்டை பற்களால் கடித்து இழுத்தவன் கொடி அணிந்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்ட துவங்கினான். வெட்கத்தில் மாமனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடி நின்று இருந்தவள் காலடியில் விழுந்தது அவன் அவிழ்த்து போட்ட நகைகள்.



அவளின் குனிந்து இருந்த முகத்தை நிமிர்த்தியவன், “கீழே இல்ல டி என் முகம் இங்க இருக்கேன் ஒரு முத்தம் கொடு.” என்றான். அவன் கேட்ட உடன் முல்லை கண்கள் கூட வெக்கபட்டன.



“நீயா குடுத்தா நல்லது நானா எடுத்து கிட்டா திரும்பவும் உதடு காயம் ஆகிடும்.” என்றான் முகம் கொள்ளா சந்தோஷத்துடன் புருவம் உயர்த்தி. அவளோ



முத்தம் கொடுக்காமல், “வலியை நான் தாங்கிக்கிறேன் மாமா.” என வலிமையாக கூடலுக்கு அழைத்தாள் தன் மாமனை.



“அப்படியா தாங்குவியா?” என மீண்டும் கேட்டான்.



கண் சிமிட்டி ஆமாம் என்றவள் சேலையை அவிழ்த்து கட்டிலில் வீசியவன் கூறியது போலவே அவள் இதழை கவ்வி சுவைத்து காயமாக்கினான். இரத்தம் வரும் அளவுக்கு கடித்து வைத்தவன் தன் சட்டை பட்டங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து, “கொடி சட்டையை விடு.” என்றான்.



இறுக்கமாக பிடித்து இருந்த சட்டையை வெக்கத்தோடு விட்டவள் தன் இதழை நாவால் வருடினாள். இதழில் லேசான ரத்த கசிவு இருந்தது.



அவளின் நீட்டிய நாக்கை இரு விரல்களால் இழுத்தவன், “நான் சொன்னதை செய்வேன் டி. உன் கிட்ட பொய் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன்.” என்றவன் அவளின் நாவையும் ருசி பார்த்தபடி தன் பனியனை அவிழ்த்து வீசினான்.



கொடியை தூக்கியபடி கட்டில் அருகில் சென்றவன் அவளின் சேலை மீதே படுக்க வைத்து அவள் மீது படர்ந்தான். முல்லை கழுத்தை சுற்றி முடியோடு கிடந்த முல்லை பூவை வாசம் பிடித்து இழுத்தவன் அவள் நெஞ்சில் அழுத்தமாக முத்தமிட மீசை கொடுத்த கூச்சத்தில், “மாமா!” என மெலிதாக முணகினாள். அவளின் முனகலகளான அழைப்பு அவனின் உணர்ச்சியை அதிகமாக தூண்டி விட, தன்னை அழைத்த வாயை மீண்டும் சுவைத்து கடித்து வைத்தான். அதற்கு மேல் அந்த அறைக்குள் இருவரின் மூச்சு காற்றும், கொலுசு சத்தமும் தான் அதிகமாக கேட்டது.



அவள் கையில் கிடந்த கண்ணாடி வளையல்களை கூட கழட்டி எறிந்து இருந்தான். அது உடைந்து கூட தங்களின் கூடலை தொந்தரவு செய்து விட கூடாது என்று. இருவரும் ஒன்றுடன் ஒன்றாக ஒரே உயிராக கலந்தனர். பின்னி பிணைந்து தங்களின் ஏக்கங்களை, ஆசைகளை கொட்டி தீர்த்துக் கொண்டனர். முத்த சத்தம் தான் அறைக்குள் சத்தமாக கேட்டது.



இரவு முழுவதும் நடந்த கூடலில் தன் ஆசையை அவளிடம் எடுத்துக் கொண்டதோடு மட்டும் இல்லாமல் அவளின் ஆசையை அறிந்து கொண்டு அதையும் அழகாக நிறைவேற்றி இருவருக்கும் அதி சந்தோஷமான கூடலாக முடிந்தது. அவள் எழும் நேரத்துக்கு தான் கொடியை தூங்கவே விட்டான் ஈஸ்வரன்.



காலை ஐந்து மணிக்கு எல்லாம் கண்களை திறந்தவள் எழுந்து அமரும் போது அவள் உடலில் இருந்த வலியை வைத்து இரவு நடந்ததை நினைவு கூர்ந்தாள். வெக்கத்தில் முகம் அந்தி வானமாக சிவந்து போனது. உடைகள் அற்ற மேனியை கண்டு பல் தெரிய சிரித்தவள் தன் உடைகளை தேடி எடுத்து போட்டாள். கடைசியாக புடவையை தேடியவள் புடவை கிடைக்காததால் லைட் போட்டு பார்க்க அவளின் மாமன் புடவையை உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு முந்தானையால் முகத்தை மறைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தான். அவனின் நிலை கண்டு கொடி கண்களும் வெக்கத்தை சிந்தியது.



அமைதியாக தன் மாமனிடம் இருந்து தன் புடவையை இழுக்க முயற்சி செய்தவளை ஒரே இழுவையில் கீழே தள்ளி அவள் மீது கிடந்தான் ஈஸ்வரன். கண் இமைக்கும் நேரத்திற்குள் அவளை தன் அடியில் கொண்டு வந்து இருந்தான். அவளின் கழுத்தில் மீசையால் உரசி அவளை உசுப்பேத்தி கொண்டு இருந்தவன் கைகளால் அவள் மேனியில் ஊர்வலம் நடத்தினான்.



“யாரை கேட்டு டி துணி போட்ட, உன்னை யாரு எழுந்திருக்க சொன்னது?” என ரகசியமாக அவள் காதை நாவால் வருடி கொண்டே கேட்டான்.



அவனிடம் மயங்கியபடி மாமா விடிஞ்சுடுச்சு. என்னை விடுங்க குளிச்சிட்டு சாமி கும்பிடனும்.” என்றாள் திக்கி திணறி.



“தினமும் தான் சாமிக்கு பூஜை பண்ணுற இனி சீக்கிரம் பண்ண முடியாது. நேரத்தை மாத்தி வச்சுக்கோ. இனி தினமும் என்னை கவனி டி.” என்றவன் அவளின் காயமான உதட்டை வருடினான்.



அவளின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன், “ராத்திரி மனப்பூர்வமாக சந்தோஷமா இருந்தியா டி நீ?”



அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள் தன்னுடைய இடது கையால் தன் மாமனின் கன்னத்தை வருடியபடி, "என் வாழ்க்கையோடு இழந்த மொத்த சந்தோஷத்தையும் நீங்க குடுத்துட்டீங்க மாமா. இந்த உலகத்திலேயே என்னை விட சந்தோஷமான ஆள் இருக்க முடியாது.”



"பொய் டி!" பட்டென்று கூறினான் அவளின் இதழை இழுத்தபடி. கொடி கேள்வியாக தன் மாமனை பார்த்தாள்.



"உன்னை விட சந்தோஷமா நான் இருக்கேனே டி, அப்போ நீ பொய் தானே சொல்லுற. பொய் சொன்ன உதட்டுக்கு தண்டனை தர வேண்டாமா!” என்றவன் உதட்டை கடிக்காமல் அவளின் நெஞ்சுக்கு மேல் கடித்துக் வைத்தான்.



அவன் கொடுக்கும் வலி கூட சுகமாக தோன்றியது கொடிக்கு. "என்னுடைய மொத்த ஆண்மையும் சுருட்டி எடுத்துகிட்ட டி என் அழகி. இன்னமும் தினம் தினம் எடுக்க போற. என்னுடைய சந்தோஷத்தை திரும்பவும் கொண்டாட வேண்டாமா!” என்றவன் அவள் அணிந்து இருந்த ஆடைகளை மீண்டும் அவிழ்த்தான்.



காலை வேளையில் மீண்டும் ஒரு இறுக்கமான நீண்ட கூடலை நிகழ்த்தி தான் நினைத்ததை சாதித்த பிறகே தன்னவளை விடுவித்தான்.



“மாமா இப்போ நான் போய் குளிக்கவா வெளிச்சம் வந்துடும் அப்பறம்.” தன் கழுத்தில் முகம் புதைத்துக் கிடந்தவன் காதருகில் கேட்டாள்.



மனமே இல்லாமல் அவள் மேலிருந்து இறங்கி படுத்தவன், "வேற வழி இல்லையே என் அழகி பூஜை பண்ணனுமே.”



அழகாக சிரித்தவள் மெதுவாக எழுந்து அமர அவளின் அழகை கண்களால் முழுதாக பருகியபடி அவள் தேடும் ஜாக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். அவன் முன்பே போட்டுக் கொண்டவள் கை நீட்ட அவளின் பாவாடையை எடுத்துக் கொடுத்தான். மீண்டும் கை நீட்டியவள் கைகளில் அவளின் புடவையை சுருட்டி கொடுத்தான். இப்பொழுது தன் மாமனை ரசித்து பார்த்தவள் கீழே கிடந்த அவனின் உடைகளை எடுத்து கொடுக்க அவனும் ஒவ்வொன்றாக போட்டுக் கொண்டான்.



அவனை பார்த்தபடி தன் கூந்தலை அள்ளி முடிந்தவள் கதவை திறக்க. அவனும் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்க அவனை பார்த்தபடியே அறையை விட்டு வெளியேறினாள்.



ஈஸ்வரனும் எழுந்து அவள் பின்னாடியே சென்றான் அவளின் பின்னழகை ரசித்த படி. தன் உடலில் நீர் பட்ட இடங்களில் இன்னமும் தன் மாமனின் உதடுகள் கோலம் போடுவது போல் இருந்தது கொடிக்கு.



மனம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதோ அதை விட அதிகமாக அவளின் உடலும் சந்தோஷமாக இருந்தது. குளித்து முடித்து வெளியே வர பல் விலக்கியபடி ஈஸ்வரன் வெளியே நின்றுக் கொண்டு இருந்தான்.



அவளை தொடாமல் அவளை பார்த்து கண்ணடித்தவன் தோளில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தான். வீட்டை சுத்தம் செய்து அறைக்குள் கிடந்த நகைகளை எடுத்து அணிந்து கொண்டவள் நேற்று இரவு வைத்து விட்டது போக மீதம் கொஞ்சம் பூ மேசையில் வாடி போய் இருந்ததை கண்டாள்.



வாடி இருந்தாலும் அது தன் மாமன் தனக்காக வாங்கி வந்த பூ அல்லவா. ஆசையாக கூந்தலில் சூடிக் கொண்டவள் இன்று கொண்டை போட வில்லை. பின்னலிட்டு தொங்க விட்டு இருந்தாள் தன் நீண்ட கூந்தலை. அள்ளி முடிந்து மறைத்து வைத்திருந்த கூந்தல் அழகுக்கு ஈஸ்வரனால் இன்றோடு விடிவு காலம் பிறந்து அவளின் நடைக்கு ஏற்ப அழகாக அசைந்தாடியது. அக்கூந்தலும் சந்தோஷ பட்டுக் கொண்டது. தன் கூந்தலில் ஏறிய முல்லை பூவை கண்டு.



வீட்டை துடைத்து வெளியே தயாராக இருந்த பாலை எடுத்து வந்து வைத்தவள் பூஜைக்கு பூ பறித்து வந்தாள் ஈஸ்வரனும் தயாராகி தன் தண்டையை முறுக்கியபடி இதழ் முன்பு வந்து நின்றவன் அவள் தலையில் ஏறி இருந்த பூவையும் நீண்ட பின்னடிட்ட கூந்தலையும் கண்டு கைகளால், “சூப்பர்” என காட்டினான்.



மாமனின் கம்பீரத்தை கண்டவள் தன் கைகளால் அவன் முகத்தை சுற்றி நெற்றியில் முட்டி திருஷ்டி கழிக்க ஈஸ்வரன் தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான். இந்த நிமிடத்துக்கு, தன் வாழ்வில் நடந்த நிகழ்வுக்கு, தனக்கு தன் மாமன் கிடைத்ததுக்கு மனப்பூர்வமாக கடவுளுக்கு நன்றி கூறி அன்றய பூஜையை முடித்தவள் மாமனுக்கு ஆரத்தி காட்டி பொட்டு வைத்து விட்டாள். ஈஸ்வரனோ தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து கொடி நெற்றியில் வைத்து விட்டான்.



ஆரத்தி தட்டை வைத்து விட்டு வெளியே வந்தவள், கொஞ்ச நேரம் இருங்க மாமா. டீ எடுத்துட்டு வரேன்.” என அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்து அடுப்பை பற்ற வைக்க அவளுக்கு பின்னால் வந்து நின்றான் ஈஸ்வரன். கொடியின் கண்கள் மாமனை கண்டு கொண்டதும் உடனே வாசலை நோக்கியது.



கதவு மூடி இருப்பதை கண்டவள் வெக்கத்தோடு தன் மாமன் புறம் திரும்பி, "மாமா கோவிலுக்கு போகனும்." என்றாள்.



அதன் பிறகு அவளை நெருங்காதவன் அவளின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு, “உன்னுடைய வெட்கம் ரொம்ப அழகா இருக்கு அழகி. என் அழகிக்கு அழகு சேர்க்குது.” என்று மீண்டும் மீண்டும் அவளை வெட்கத்தில் குளிக்க வைத்தான். அவளோ பேசா மடந்தையாக திரும்பி நின்று கொண்டாள்.



இருவரும் டீ மட்டும் குடித்து விட்டு கோவிலுக்கு கிளம்பினர். கொடி செருப்பு போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈஸ்வரன் புல்லட்டை முறுக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தான் தன் கொடியை எதிர்பார்த்து. வேகமாக வந்தவள் தன் மாமனின் தோளில் அழுத்தமாக கை பதித்து ஏறி புல்லட்டில் அமர்ந்ததும் அவன் வண்டியை எடுக்காமல் ஓர பார்வையால் மனைவியை பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.



கண்ணாடியில் மாமனின் முகத்தை கண்டவள் அவன் ஆசையை அறிந்து கொண்டாள். தோளில் இருந்த கையை மெதுவாக அவனை தடவியபடி இறக்கியவள் தன் மாமனின் இடுப்பை சுற்றி கை போட்டதும் ஈஸ்வரன் முகத்தில் முகம் கொள்ளா பூரிப்பு தோன்றியது. அவள் வாங்கிக் கொடுத்த கண்ணாடியை எடுத்து மாட்டியவன் உதட்டை வளைத்து சிரித்தபடி வண்டியை முறுக்க சீறி பாய்ந்தது சாலையில்.



எப்போதும் இடம் விட்டு அமரகூடியவள் இன்று மாமனை அணைத்தபடி நெருக்கமாக அமர்ந்து இருந்தாள். அவனின் ஏக்கங்களில் இந்த நெருக்கம் முக்கியமான ஒன்று என இன்று தான் உணர்ந்தாள் போல. ஊரே இருவரையும் மகிழ்வாக பார்த்தது. அதிலும் கொடியின் மாற்றத்தை கண்டு வாய்மேல் விரல் வைத்துக் கொண்டது.



தொடரும்...