• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 9

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu
ஈஸ்வர் குளித்து முடித்த பிறகே தேடினான் துண்டு கொண்டு வராததை, “மாமா!” என்று முல்லை குரல் கேட்க கதவை லேசாக திறந்தான், திறந்த கதவுக்குள் முல்லை கை துண்டுடன் சென்றது.

சாதாரணமாக வாங்கியவன் அந்த கை வெளியே செல்லும் போது தான் கண்டான் அதில் இருந்த கண்ணாடி வளையல்களை அழகாக இருந்தது. அவசரம் அவசரமாக துவட்டிக் கொண்டு வெளியே வந்தவன் மனைவி பின் பக்கத்தை கண்டு இன்பமாக அதிர்ந்தான்.


பெரிய மாற்றம் செய்ய வில்லை சிறிய மாற்றம் தான் ஆனால் அதுவே பெரிதாக தோன்றியது. அதிலும் அவள் கட்டியிருக்கும் கண்டாங்கி தான் அவளின் அடையாளமாக, அழகாக தோன்றியது ஈஸ்வரனுக்கு.

வேக எட்டில் வீட்டிற்குள் நுழைந்தவன் கண்கள் மனைவியை தேடியது விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள் பூஜை அறையில்.

விளக்கு ஒளி முல்லை முகத்தில் பட்டு புது தேஜசை கொடுத்தது அவளுக்கு மனைவி அழகை தன்னை மீறி ரசித்தான். இந்த வீட்டின் வெளிச்சம், உயிர்ப்பு அனைத்துமாக கொடி தான் தோன்றினாள் அவனுக்கு.

அழகி, பேரழகி, உலக அழகி என பலரை கடந்த வந்த போது யாரிடமும் ஒரு நொடி கூட நிலைக்காத பார்வை முல்லை மீது நீண்டு கொண்டே சென்றது. “மாமா ஆரத்தி எடுத்துக்கோங்க.” என்று தட்டுடன் நின்றவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் கூறியது காதில் ஏறவில்லை.

உறைந்து இருந்தான் தானே அவனுக்கு பொட்டு வைத்து விட்டவள் கழுத்தில் தங்க நகை இல்லாததை மிகப் பெரிய குறையாக உணர்ந்தான். பெண்களுக்கு எப்போதும் தங்க நகை தனி அழகை கொடுக்கும் முல்லை கழுத்தில் இல்லாததை நினைத்தவன் தன் மீதே கோவம் கொண்டான். சீக்கிரம் முல்லைக்கு நகை வாங்க வேண்டும் இனி வரும் பணங்களில் முதலில் மனைவி தேவைகளை சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

அவள் சலங்கை சத்தம் இனிய சங்கீதமாக கேட்டது.

“ஈஸ்வரன் பணத்துக்காக யோசிக்கிற நிலைமை வரும்னு நான் நினைத்து கூட பார்க்கல.”


“இவன் ஒருத்தன்!” உள்ளே நுழைந்த கம்பனை முறைத்து பார்த்தான் ஈஸ்வர். கம்பன் ஈஸ்வரனை கண்டு கொள்ளாமல் முல்லை என்று குரல் கொடுக்க கையில் சொம்புடன் வந்தவள் அதை கம்பன் முன்பு நீட்டினாள்.

சொம்பில் வாய் படாமல் குடித்தவனை வித்தியாசமாக பார்க்க, “கம்பா நீ என்ன குடிக்கிற?”

“ஈஸ்வர் இது மோர் இதை பத்தி உனக்கு தெரியாது.” என்றான்.


மோர் முதல் முறை கேள்வி படுகிறான். “கொடி எனக்கும் எடுத்துட்டு வா.” கணவன் வார்த்தையை தட்டாமல் அவனுக்கும் ஒரு சொம்பில் கொண்டு வந்து நீட்ட அதை வாங்கி ஒரு வாய் குடித்தவன் விழிகளை உருட்டினான்.

முல்லை கணவன் செயல்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தாள்.

முழுவதையும் குடித்து முடித்தவன், “இதையே தினமும் எனக்கும் கொடு கொடி.”


“சரி மாமா இன்னைக்கும் தோட்டத்துக்கு சாப்பாடு கொடுத்து விடவா?”


“சொல்லுறேன் நீ போ.” என்றான் மனைவியை பார்த்தபடி.


“ஈஸ்வர் உனக்கு முன்னாடியே ஒரு காதலி இருக்கா தேவையில்லாத ஆசையை வளர்த்துக்காத முல்லை மேல.” ஈஸ்வர் காதருகே குனிந்து கூறினான். ஈஸ்வர் கம்பனை முறைத்து பார்க்க, “நான் சொல்ல நீ உன் வாயால சொன்னது என்ன பண்ண!” என்றவன், “எல்லாம் சிவமயம்!” என்றபடி வெளியே சென்றான்.


இவர்கள் தோட்டத்துக்கு செல்ல அங்கு வழக்கம் போல் காலை வியாபாரிகள் இளநீர், தேங்காய் வாங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஈஸ்வரனை கண்டதும் ஒருவன் பவ்வியமாக வந்தவன், “வணக்கம் ஐயா

இன்னைக்கு வருமானம்.” என்று மஞ்ச பையை நீட்டினான்.

மஞ்ச பையை புருவம் உயர்த்தி என்னவென்று பார்த்தான் ஈஸ்வரன்.

“ஈஸ்வர் கிராமத்தில் பணத்தை மஞ்சப்பைல வச்சி தான் கொடுப்பாங்க. இங்க இது தான் வழக்கம்.”


கம்பனின் விளக்கத்தை காதில் வாங்கிக் கொண்டு பணத்தை எண்ணி பார்த்தான் இன்றைய வருமானம் அதிகமாக இருந்தது. மொத்தமாக இரண்டு லட்சம் மீண்டும் எதிரில் நின்று இருந்தவன் கையில் கொடுத்தவன், “வீட்டுல கொடுத்துடுங்க.”
என்றான்.

“சரிங்கையா!” என்று பணத்தை கையில் வாங்கியவன் சைக்கிள் எடுக்க, “வீட்டுல யார் கிட்ட குடுப்பீங்க?”

“கார்த்திகா பாப்பா கிட்ட தான் ஐயா.”

“கார்த்திகா எஜமானியா? என் பொண்டாட்டி கொடி எஜமானியா?” ஈஸ்வரின் குரலில் நடுங்கியவன், “உங்க பொண்டாட்டி முல்லை தான் எஜமானி ஐயா.”

“அப்போ பணத்தை யார் கிட்ட கொடுக்கணும்.”

“முல்லை கிட்ட தான்.”

“போங்க…” அவனோ விட்டால் போதும் என்று அங்கிருந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வேக வேகமாக சென்று விட்டான்.


கம்பன் மனதுக்குள் சிரித்துக் கொண்டவன், “என்ன இருந்தாலும் அதிகாரம் இருக்குறவங்க சொல்லுறதை கேப்பாங்களா, வேலைக்காரன் சொல்லுறதை கேப்பாங்களா!” என்று கல்லில் ஏறி அமர்ந்து கொண்டு கூறியவன் திரும்பி பார்க்க ஈஸ்வரன் இல்லை கம்பன் கண்களை சுழல விட குறுக்கு பாதையில் ஈஸ்வர் நடந்து சென்று கொண்டிருந்தான்.


குட்டி பையன் முன்னேறிட்டான். “அண்ணா ஒரு இளநீர் வெட்டி குடுங்க.” என்றான் சம்மணம் இட்டு அமர்ந்த படி. “முல்லை!” என்று வாசலில் குரல் கேட்க, கார்த்திகா தான் வேகமாக ஓடி வந்தாள் இந்த நேரத்துக்கு பணம் வரும் என்பதை அறிந்து. “குடுத்துட்டு போ.” என்று அதிகாரம் பண்ணியவளிடம் பணத்தை குடுக்க மறுத்தவன், “எஜமானி அம்மா கைல தான் குடுக்க சொல்லி இருக்காங்க

ஐயா.”

கார்த்திகா முகம் சிவந்து போனாள் அதே நேரம் முல்லையை அழைக்க உலகரசி வந்தாள். திடீரென்று வீட்டிற்குள் சலங்கை சத்தம்

சத்தம் கேட்கவும் கார்த்திகா உள்ளே பார்த்தவள் முட்டை முழி தெறித்து வெளியே விழுந்து விடும் அளவுக்கு முழித்தாள். குடல் மட்டுமா எரிந்தது மண்டைக்குள் இருந்த மூளை கூட எரிந்தது முல்லை மாற்றத்தை கண்டு.

உலகு தன் கண்களையே நம்ப முடியாமல்

மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். மகள் என்றும் பார்க்காமல் பொறாமையில் கருகி கொண்டிருந்தது.

முல்லை அலுங்காமல், குலுங்காமல் நடந்து வந்தவள் சமையல் அறைக்குள் நுழைந்து மோர் எடுத்து வந்து நீட்டினாள், “அண்ணா குடிங்க.” என்று.

“இந்தா தாயி ஐயா உங்க கிட்ட இந்த பணத்தை குடுத்துட்டு வர சொன்னாங்க.” என்று பவ்வியமாக நீட்டியவன் கையில் இருந்த பணத்தை கண்ணாடி வளையல் குலுங்கும் சத்தத்துடன் வாங்கிக் கொண்டாள். கண்களில் ஒற்றிக் கொண்டவளை கண்களில் குரோதத்துடன் பார்த்தனர் கார்த்திகா, உலகு.


“என்ன தான் வித விதமா துணி போட்டாலும் உன் நிறத்துக்கு கேவலமா தான் இருக்கும். வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டுன கதை தான் டி உன் கதை. இதுல வளையல், கொலுசு, நகை அது ஒன்னு தான் உனக்கு கேடு. எவளோ சொன்னாலும் திருந்த மாட்டியா நீ ஒழுங்கா பணத்தை கார்த்திகா கைல குடுத்துட்டு வா வயலுக்கு தண்ணீர் பாய்ச்சனும்.” என்றவரை வெற்று பார்வை பார்த்தாள் முல்லை.

நனி பார்வையோ அங்கு மூன்றாம் கண்களை திறக்க தயாராக நின்று இருந்த ஈஸ்வரனை கண்டது.

ஈஸ்வரன் கை முட்டியை இறுக்கி மடித்து நின்று அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவன் வேட்டியை தூக்கி பிடித்த படி, யார் யார் வீட்டு தோட்டத்துல தண்ணீர் பாய்ச்சுறது?” என்று ரௌத்திரமாக கேட்டவன் சாந்தமான முகத்துடன் உள்ளே நுழைந்தான்.


அவன் தண்டையை உயர உயர்த்திய படி உள்ளே நுழைய உலகரசி எச்சில் விழுங்கினாள். கார்த்திகா கைகள் வெட வெடுக்க நின்று இருந்தாள் முல்லை வைத்திருந்த மஞ்ச பையை இழுத்துக் கொண்டிருந்தவள் கைகள் அப்படியே நின்றது.

ஈஸ்வர் மஞ்சபையை வாங்கி, “கொடி இதை எடுத்துட்டு போய் லாக்கர்ல வச்சுட்டு வா.” என்று மனைவியை அனுப்பி வைத்தவன் தன்னுடைய நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் சிவந்த விழிகளை நிமிர்த்தி உலகரசியை பார்த்தான் அவருக்கு நெஞ்சம் படபடத்தது.

“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே?” ஈஸ்வரனின் மூன்றாவது கண் திறந்து விட்டது இனி சுவாரசியம் தான் என்று நினைத்துக் கொண்ட நனி மற்றொரு சோஃபாவில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டார்.


“மாப்பிள்ளை நான் ஒன்னும் தப்பா கேட்கலை இத்தனை வருஷம் முல்லை தான் நம்ப வீட்டு தோட்டம் முழுக்க பார்த்துகிட்டா இப்பவும் அவள் தானே பார்த்துக்கணும் நம்ப தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சனும் அதான் அழைச்சிட்டு போலாம்னு வந்தேன் கொஞ்ச நேரம் தான் மாப்பிள்ளை மதியானம் இரண்டு மணி போல அனுப்பி விட்டுடுறேன்.


நம்ப வீட்டு வேலையை யார் செய்றது. சொல்லுங்க!” சிரித்துக் கொண்டே கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் வளைந்து நெளிந்து கொண்டே கூறியவர் முல்லை வருவதை கண்டதும், “முல்லை போ இந்த புடவை எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு எப்பவும் கட்டுற புடவை கட்டிட்டி சீக்கிரம் வா உன் தம்பி வந்து கத்துவான்.” என்று ஈஸ்வரன் முன்பே அதிகாரம் செய்தாள்.

“அதுக்கு எதுக்கு முல்லையை கூப்பிடுற நீ?” மரியாதை பறந்து போனது.

“என்ன ஈஸ்வர் அவ என் பொண்ணு நான் கூப்பிடாமல் வேற யார் கூப்பிடுவா?”

“உன் பக்கத்துல நிக்கறவ யாரு.”

“அவளும் என் பொண்ணு தான் ஈஸ்வர் ஆனா அவள் இந்த மாதிரி வேலை எதுவும் செய்ய மாட்டாள். அவள் படிச்சவ, நாகரீகமானவ அவளுக்கு இது எல்லாம் செஞ்சு பழக்கம் இல்ல ஈஸ்வர்.”

“உலகரசி சத்தமாக அழைத்தான். “இன்னைக்கு உன் வீட்டுல கார்த்திகா தான் தண்ணீர் பாய்ச்சனும்.” கட்டளையாக கூறினான்.

“ஈஸ்வர் மரியாதையா பேசு நான் தான் சொல்லுறல்ல கார்த்திகா பண்ண மாட்டாள் முல்லையை அனுப்பி விடு.” என்று உலகு அவள் பங்குக்கு சத்தம் கொடுத்தாள் ஈஸ்வரனை பற்றி அறியாமல்.

“உன் வீட்டுல ஆம்பள இல்லையா உலகரசி?” சுருக்கென்று இருந்தது உலகுக்கு அதிலும் வயதில் மூத்த என்னை பெயர் சொல்லி அழைத்தது அவமானமாக உணர்ந்தார்.

“ஈஸ்வர்!” என்று உலகு உச்சகட்ட கோவத்தில் கத்த.

எங்கிருந்து வந்ததோ ஈஸ்வர் கைகளுக்கு கூறிய வாள் உலகு கழுத்தில் பதிந்து நின்றது.

“என்ன உனக்கு மரியாதை. இந்த ஈஸ்வரன் கிட்ட மரியாதை எதிர்பார்க்கணும்னா அதுக்கு நீ தகுதியானவளா இருக்கணும். என் பொண்டாட்டியை ஊர் எஜமானியை உன் தோட்டத்துல வேலைக்கு அழைச்சிட்டு போறேன்னு என் முன்னாடியே தெனாவட்டா சொல்லுற.

ஊர் கட்டுப்பாடு என்ன எங்க குடும்பத்துக்கு தான் மத்தவங்க வேலை செய்யணும் நாங்க இல்ல. இன்னொரு முறை என் பொண்டாட்டியை அதிகாரம் பண்ணுன குரவளையை அறுத்துடுவேன்.


இனி கொடியை எஜமானின்னு தான் நீ கூப்பிடனும். இன்னைக்கு உன் தோட்டத்துக்கு உன் பொண்ணு படிச்ச, நாகரீகமான பொண்ணு வருவா, நாள் முழுக்க வேலை செய்ய.

நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நீயும் உன் குடும்பமும் ஒருத்தர் விடாமல்

என் தோட்டத்துக்கு வேலைக்கு வரணும்.

காலை எட்டு மணிக்கு வேலை துவங்கும்

பொழுது இருட்டுற வரைக்கும் அங்க தான் வேலை ஒருத்தர் விடாமல் வேலைக்கு வரணும் இரண்டு வாரத்துக்கு வேலை. என் வீட்டு எஜமானியை உன் தோட்டத்துல வேலை செய்ய வச்சதுக்கு

தண்டனை உலகரசி.


அதே மாதிரி காலைல மூணு மணிக்கு எல்லாம் என் வீட்டுக்கு நீ வந்துடனும்

என் பொண்டாட்டி எழுந்து கீழ வரதுக்கு முன்னாடி நீ சாணி தெளித்து தோட்டத்தை சுத்தம் பண்ணி அவள் குளிச்சி முடிச்சிட்டு வரதுகுள்ள எல்லா வேலையும் முடிச்சிடனும் ஐந்து மணிக்கு என் பொண்டாட்டி சிவனுக்கு விளக்கு ஏத்துவா அந்த நேரத்துக்கு நீ இங்க இருக்க கூடாது. ஐந்து மணிக்கு கோவிலுக்கு போகனும் கோவில் முழுவதையும் சுத்தம் பண்ணி பூ பறிச்சு வச்சிட்டு எட்டு மணிக்கு என் வீட்டு தோட்டத்துக்கு வரணும்.” என்று கூறி முடித்தவனை இருவரும் கண்கள் கலங்க பார்த்தனர்.

இவ்வளவு வேலையா? மறுத்தால் இந்த ஊரில் வாழ முடியாதே இதுவரை வேலை செய்யாத உடம்பு அதுவும் முல்லைக்கு செய்ய வேண்டுமா உலகரசி அதிர்ச்சியில் சுவற்றுடன் சாய்ந்தார்.

“கொடி!” என்று ஈஸ்வர் சாந்தமாக அழைத்தான்.

“சொல்லுங்க மாமா…”

நீ வெறும் முல்லை கிடையாது, இந்த ஈஸ்வரனின் கொடி என்னுடைய மரியாதை உன்னுடைய செயல்ல அடங்கி இருக்கு நீ இந்த வீட்டு எஜமானியா நடந்துகிட்டா தான் நான் தலை நிமிர்ந்து நடக்க முடியும். அதுக்கு நீ தலை நிமிர்ந்து நிக்கனும்.” என்றவன், “வெளிய போங்க.” என்று உலகரசியை பார்த்து சொல்ல அடித்து பிடித்து வெளியே ஓடினர் இருவரும்.

ராஜேந்திரன் தலையில் அடித்துக் கொண்டான் இருவரையும் பார்த்து.

“போ போய் வேலை செய் நான் தான் அமைதியா இருன்னு சொல்லுற கேட்காமல் பண்ணுணல.”


“ராஜ் என்னால வேலை செய்ய முடியாது அடிக்கிற வெயிலை பார்த்தா பயமா இருக்கு.” கார்த்திகா அழுது கொண்டே கூறினாள்.


“அதுக்கு நான் வந்து தண்ணி கட்டனுமா ஏற்கனவே சாணி அல்லுற கடுப்புல இருக்கேன் ஓடி போய்டுங்க ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாடியே நிக்காதிங்க.” என்று காட்டு கத்தல் கத்தினான்.


கார்த்திகா அழுது கொண்டே ஓடினாள் ஈஸ்வரன் கூறிய தண்டனையை வீட்டில் கூறினால் மகன் ஆடும் ஆட்டத்தை கண்டு உலகுக்கு நெஞ்சு வலியே வந்ததது.

யாரையும் அடிக்காமல், உதைக்காமல் தண்டனை என்ற பெயரில் ஈஸ்வரன் வித்தியாசமாக நடந்து கொள்வது சுவாரசியமாக இருந்தது. அதிலும் அவன் கோவமாக இருக்கிறானா என்று அவன் முகத்தில் கண்டு பிடிக்கவே முடியவில்லை அவன் பேச ஆரம்பித்தால் மட்டுமே தெரிகிறது. என் மாமனாரையே மிஞ்சி விட்டான் என்று நனி நினைத்துக் கொண்டவர் அமைதியாக வெளியே சென்றார்.

நாளை உலகு படும் பாடுகளை நினைத்து கம்பன் அட்டகாசமாக சிரித்தான்.