"சித்தூ.."
என்று கத்திக் கொண்டே, ஒரு பக்கமாக சரிந்த தோள்பையை இழுத்து விட்டபடி, வேகமாக ஓடி வந்த தன் தோழி அம்பிகாவைப் பார்த்தபடி நின்றிருந்தாள் சித்திரகலா.
மூச்சிரைக்க ஓடி வந்த அம்பிகாவோ, சித்திராவை முறைத்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
"உன்னைப் பிடிக்குறதுக்குள்ள நம்மடை நாட்டு ஜனாதிபதியைப் பாத்திட்டு வந்திடலாம் போலயேடி.. இன்னும் சொல்லோணும் எண்டால் ஜனாதிபதி கூட இவ்வளவு பிஸியா இருக்கமாட்டாரடியப்பா.."
"என்ன அம்பி நீ கூட கலாய்க்கிறாய் என்ன.."
"நான் கலாய்க்கேலை மகளே.. என்ரை ஆதங்கத்தைச் சொன்னேனாக்கும்.."
"சரி தான் கொஞ்சம் லேட்டாயிட்டுது வர.."
"என்னது கொஞ்சம் லேட்டாயிட்டுதா.. மணி என்ன எண்டு ஒருக்காச் சொல்லுங்கோ மிஸ் சித்திரகலா.."
"ஏன் மணிக்கு என்ன.."
என்பது போல கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்த சித்திரா, நாக்கைக் கடித்தபடி தலையில் கைவைத்துக் கொண்டாள்.
"இப்புடி நாக்கை கடிச்சு கடிச்சே தான் ஊமையாகிட்டாய் நீ.."
"அச்சோ சாரி அம்பி.. நான் வேணும் எண்டே செய்யேல்லை.. உண்மையாவே வேலையள் எல்லாத்தையும் முடிச்சுப் போட்டு அரக்க பரக்க ஓடிவாறன்.. நடுவுல நேரமே பாக்கேல்லை.. நேரம் பத்தரை ஆயிட்டுது என்ன.."
"சரி சரி.. பிழைச்சுப் போ உன்னைய ஏசி ஏசி எனக்குமே அலுத்துப் போச்சுது போ.."
"சரி பிளான் என்ன எண்டு நீ இன்னும் சொல்லவே இல்லையே.."
"அது ரகசியம் பாருங்கோ.. அதைப் பத்திச் சொல்ல மாட்டேன்.. கூட்டீட்டு போகும் போது நீயே பாரு.."
"சரி தான்.."
என்று கொண்டே தோழியைப் பின் தொடர்ந்தாள் சித்திரா.
ரெஸ்டாரன்ட் ஒன்றினுள் நுழைந்த அம்பிகாவைத் தொடர்ந்து தானும் உள்ளே நுழைந்த சித்திரா, அம்பிகாவுக்கு மட்டும் கேட்கும் குரலில்
"அம்பி இப்போ இங்க என்னத்துக்கு கூட்டி வந்தனீ.."
எனக் கேட்க,
"ஆ.. ஒளிச்சுத் தொட்டு விளையாடுவம் எண்டு தான்.. வந்ததே லேட்டு பிறகு அவாடை கேள்வியைப் பாருங்கோ.."
என்று பதில் சொல்லிக் கொண்டே சுற்று முற்றும் உள்ளே யாரையோ தேடினாள் அம்பிகா.
சற்றே தள்ளி கடைசி வரிசை மேசையில் இருந்த இரண்டு ஆண்களில், ஒருவன் அம்பிகாவைப் பார்த்துக் கையசைக்கவும்
"அம்பி.. யாரோ ஒரு பையன் உன்னைப் பாத்து கையசைக்கிறான் பாரு.."
என சித்திரா மீண்டும் அம்பிகாவின் காதுக்குள் கிசுகிசுக்க,
"அந்தாளைப் பாக்க பையன் மாதிரியா இருக்கு.. இது மட்டும் ஆளோட காதில விழுந்திச்சுனா அவ்வளவு தான்.. ஆளுக்கு ஒரே புளுகாப் போயிடும்.."
என்று கொண்டே சித்திராவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த மேசை நோக்கி விரைந்தாள் அம்பிகா.
"சாரி வாசு.. சாரி சிவாண்ணா கொஞ்சம் லேட் ஆயிட்டுது.. என்ரை பிரெண்டை கூட்டிக் கொண்டு வெளி வேலையளை முடிச்சிட்டு வரச் சுணங்கீட்டுது.. வந்து கன நேரமோ.."
என அந்த மேசையில் இருந்த இரண்டு ஆண்களிடமும் வினவிய அம்பிகா, தன் தோழி இருப்பதற்காக கதிரை ஒன்றை இழுத்தபடி அவளைப் பார்த்தாள்.
சித்திராவோ இப்போது இங்கே இருக்கவோ அல்லாது போனால், வெளியே ஏதாவது வேலை இருக்கிறது என பொய் சொல்லி விட்டு போய் விடலாமோ என்பது போல யோசனை செய்து கொண்டு நின்றிருந்தாள்.
"இல்லை அம்பி.. அவ்வளவு நேரம் ஆகேல்லை.. என்ன உன்ரை பிரெண்டு நிண்ட ஊருல இருந்து வந்தவாவோ இருக்க மாட்டாவோ.."
எனக் கேட்டான், அம்பிகாவால் வாசு என அழைக்கப் பட்டவன்.
சித்திராவுக்குத் தான் சரியான சங்கடமாகப் போய் விட்டது, இதற்கு மேலும் யோசித்துக் கொண்டு இருக்க முடியாது என நினைத்தவளோ மெல்லிய புன்னகையோடு சட்டென்று இருந்து விட்டாள்.
மூவருக்கும் இடையிலான அறிமுகத்தை அம்பிகாவே தொடக்கி வைத்தாள்.
"வாசு.. இது தான் என்ரை ஒண்டே ஒண்டு கண்ணே கண்ணான பிரெண்டு சித்து.. அப்புறம் சித்து இது தான் என்ரை ஆளு வாசுதேவன்.. அது சிவாண்ணா அதாவது நம்மளை மாதிரியே இவங்களும் பிரெண்ட்ஸ்.."
என அம்பிகா அறிமுகப் படலத்தை முடித்து வைக்க, அப்போது தான் வாசுதேவனுக்கு பக்கத்தில் இருந்தவனை சித்திரா நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் அப்போது அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரது பார்வையும் நேர்கோட்டில் சந்தித்த வேளை, மெல்லப் புன்னகை செய்தான் அம்பிகாவால் சிவாண்ணா என அழைக்கப் பட்டவன்.
அவனது புன்னகைக்கு பதிலாக புன்னகை செய்யக் கூட மறந்து போய் அப்படியே அமர்ந்திருந்தாள் சித்திரா.
சித்திராவிடம் இருந்து பதில் புன்னகை வராததை உணர்ந்தவனோ தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு, தன் முன்னால் வைக்கப் பட்டிருந்த தேநீர்கோப்பை மீது பார்வையை பதித்தான்.
அதற்குள் அம்பிகா மடை திறந்த வெள்ளம் போல பேசித் தள்ள, சுற்றுபுறம் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் வாசுதேவன்.
இடையிலே இருந்த இருவரதும் பார்வை பரிமாற்றத்தையோ, சித்திராவின் புன்னகையற்ற முகத்தையோ அவர்கள் இருவரும் பார்க்கவேயில்லை.
அதற்குள் அந்த இடத்தில் இருந்து தான் செல்வதே சரி என்பது போல, வாசுதேவனின் நண்பன் மெல்ல எழ முயற்சி செய்ய, சட்டென்று அவனது கையைப் பிடித்து இழுத்து அமர்த்திய வாசு,
"இரு சிவா.. என்ன அவசரம் இப்போ தானே வந்தனீ.. அம்பி நீ கொஞ்ச நேரம் அவனையும் கதைக்க விடன்.. நீ மட்டுமே கதைச்சுக் கொண்டு இருந்தால் அவன் எழும்பிப் போகத் தானே செய்வான்.."
என்று கொண்டு அம்பிகாவைப் பார்த்தான்.
அப்போது தான் அம்பிகா
"ஐயோ சாரி சிவாண்ணா.."
என்று கொண்டே தோழியைத் திரும்பிப் பார்த்து,
"சிவாண்ணா.. உங்களுக்கு சித்துவைத் தெரியுமா.."
என்றொரு கேள்வியைக் கேட்க, சிவாண்ணா என்று அழைக்கப்பட்ட சிவசுதனோ பதிலைச் சொல்லாமல் சித்திராவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது,
"ஏன்டி சித்தூ.. உனக்கு சிவாண்ணாவைத் தெரியுமா.."
என அம்பிகா கேள்வியை மாற்றிக் கேட்க, சித்திரா இப்போது மெல்ல நிமிர்ந்து முன்னால் இருந்தவனைத் தான் பார்த்தாள், பார்த்து விட்டு
"தெரியும்.."
என அவள் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.
"தெரியுமா.. சொல்லவே இல்லையே.."
என அம்பிகா அடுத்த கேள்வி கேட்பதற்குள்,
"எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்குது.. நான் வெளுக்கிடுறன்.. பிறகு ஒரு நாள் சந்திப்பம்"
என்று கொண்டு சிவசுதன் எழுந்து விட்டிருந்தான்.
அதோடு அம்பிகா கேட்க வந்த கேள்வி பாதியில் நின்று விட,
"ஏனண்ணா அதுக்குள்ள போறீங்கள்.. நான் ஏதும் கதைச்சு போரடிச்சிட்டனோ.."
என அடுத்த கேள்விக்கு தாவியிருந்தாள் அம்பிகா.
"இல்லை தங்கச்சீ.. எனக்கு நிஜமாவே வெளி வேலையள் நிறைய இருக்குது.. நீங்கள் என்ஜோய் பண்ணுங்கோ.. நாங்கள் பிறகு கதைப்போம்.."
என்று கொண்டு சிவசுதன் போயே விட்டான்.
அவன் சென்ற பின்னர்
"அப்போ நீங்கள் மட்டும் ஏன் கடனே எண்டு இருக்கிறீங்கள்.. நீங்களும் உங்கடை பிரெண்டுக்கு பின்னால போக வேண்டியது தானே.."
என அம்பிகா வாசுதேவனை முறைக்க
"அவன் போனதுக்கு என்னை ஏனடியம்மா முறைக்கிறாய்.."
என அவன் விழித்தான்.
அந்த நேரத்தில் சித்திராவும் தன் இருக்கையை விட்டு எழுந்து விட்டிருந்தாள்.
"ஏய் நீ இப்போ என்னத்துக்கு சித்து எழும்புறாய்.."
என்று கொண்டு சித்திராவின் கையைப் பிடித்துக் கொண்ட அம்பிகா, சட்டென்று வாசுதேவனை திரும்பி பார்த்து விட்டு,
"சாரி வாசு.. நாங்கள் பிறகு சந்திப்பம்.."
என்று விட்டு சித்திராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாள்.
வெளியே வந்து சிறிது தூரம் செல்லும் வரையில் கூட இரண்டு தோழிகளுமே வாயைத் திறந்து எதையுமே பேசிக் கொள்ளவில்லை.
அந்த ரெஸ்டாரன்டை அடுத்து, சற்று தள்ளி இருந்த பெருமாள் கேவிலினுள் நுழைந்த சித்திராவைத் தொடர்ந்து தானும் கேவிலினுள் நுழைந்த அம்பிகா, அவளை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த மரத்தின் கீழ் அமர, தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் சித்திரா.
"சித்து என்னடி ஆச்சுது.. நான் அவையளை அறிமுகம் செஞ்சு வைச்சது உனக்கு பிடிக்கேலையோ.. என்னிலயும் தப்பு இருக்குது.. எங்க கூட்டிக் கொண்டு போறன்.. யாரைப் பாக்கக் கூட்டிக் கொண்டு போறன் எண்டு.. சொல்லாமல் கொள்ளாமல் கூட்டிக் கொண்டு போயிட்டன் சாரி.."
"அச்சோ நீ ஏன் அம்பி சாரி கேக்கிறாய்.. நான் தான் சாரி கேக்கோணும் உன்னட்டை.. ஒழுங்கா இருக்காமல் இடையில எழும்பி வாற மாதிரி வைச்சிட்டன் என்ன.. உன்ரை அவர் என்ன நினைச்சு இருப்பார்.. ஒரு இங்கிதம் கெட்ட பிள்ளை எண்டு நினைச்சிருப்பார் என்ன.."
"சேச்சே அப்புடி எல்லாம் அந்தாள் யோசிக்காது நீ அதை விடு.."
என்ற அம்பிகா சிறிது நேரம் மௌனம் காத்தாள்.
அவளது விழிகள் சித்திராவைத் தான் ஆராய்ச்சி பார்வை பார்த்தன, அவளது பார்வையை சித்திரா உணராமல், பெருமாள் கோவிலின் கோபுரத்தையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அப்படியே சில நிமிடங்கள் ஒரு கனத்த அமைதி படர, அந்த அமைதியை உடைத்தாள் அம்பிகா.
"ஏன் சித்து.."
"ம்ம்.."
"என்னட்டை எதையாவது மறைக்கிறியோ.."
"என்ன அம்பி விளங்கேல்லை.."
"இல்லை.. சிவாண்ணாவை உனக்கு எப்புடி தெரியும்.. அவரிந்தை முகத்தை நிமிர்ந்து பாக்கும் வரை நீ நல்லாத் தானே இருந்தனீ.. பாத்த பிறகு தான் உன்ரை முகம் ஒரு மாதிரிப் போனது.. அது தான் கேக்கிறன் என்னட்டை ஏதும் மறைக்கிறியோ எண்டு.."
"மறைக்க எல்லாம் இல்லை அம்பி.. உன்னட்டை மறைச்சு என்னட்டை எந்த ரகசியமும் இல்லை.. ஆனா.."
"ஆனா என்னடி.."
"எனக்கு ஒருத்தர் புரபோஸ் பண்ணி இருந்தார் எண்டு சொன்னனே.. உனக்கு நினைவு இருக்குதோ.."
"ஓம் ஓம்.. சொன்னனீ.. உன்ரை வீட்டுல கூட உதெல்லாம் வேண்டாம் எண்டு உன்ரை பெரியக்கா உப்புசப்பில்லாத காரணம் எல்லாம் சொன்னா எண்டு சொன்னியே.."
"ம்ம்.. அதே தான்.. அந்த அவர் உவர் தான்.."
"உவர் எண்டால்.. சிவாண்ணாவோ.."
"ம்ம்.."
"என்ன சித்து சொல்லுறாய்.. நல்ல அண்ணாடி அந்த அண்ணா.. அவரைக் கட்டினால் நீ எவ்வளவு நிம்மதியா இருப்பாய் தெரியுமோ.."
"இருக்கலாம்.."
"இருக்கலாமோ என்னடி இப்புடி சொல்லுறாய்.."
"வேறை எப்புடி சொல்ல அம்பி.. அவர் எப்புடியா இருந்தாலும் எனக்கெண்டு ஒரு கொடுப்பினை வேணும் இல்லையோ.. அதோட.."
"அதோட என்னடி.."
"ஏன் அம்பி அவரைக் கட்டாமல் என்ரை வீட்டுல எனக்கு நிம்மதி எண்டுறதே இந்த ஜென்மத்தில கிடைக்காதோ.."
என ஏக்கமாகக் கேட்ட தோழியையே பார்த்திருந்த அம்பிகாவுக்கு சில நொடிகள் வார்த்தைகளே வரவில்லை.
சட்டென்று சித்திராவின் வலது கரத்தை எடுத்து தன் கைகளுக்கு இடையில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு
"ஏன் வராது.. உன்ரை மனசுக்கு கண்டிப்பா நீ நிம்மதியா இருப்பாய் சித்து.. மனசை எப்பவுமே தளர விடாத.. அதோட எதுவா இருந்தாலும் மனசு விட்டுக் கதை.."
என்று சொன்ன அம்பிகா, தன் தோழியின் விழிகளையே பார்த்தபடி
"ஏன் சித்து.. உனக்கும் சிவாண்ணாவை பிடிக்கேலையோ.."
என்று கேட்க, சித்திராவின் முகம் விரக்தி புன்னகை ஒன்றைத் தத்தெடுத்துக் கொண்டது.