"என்னங்க...என்னங்க...."
"ம்..."
"எனங்களே ..."
"என்னடி சொல்லு... என்னங்க என்னங்கன்ற... சொல்ல வாரத சொல்லமாட்டேன்றியே"
"அதுவந்து.... சொல்லவா?"
"ம்...சொல்லுடி பட்டு குட்டி"
அவள் மடியிலிருந்த தலையை உயர்த்தி, அவள் முகம் பார்த்து தாடையை பிடித்து கொஞ்சினான்.
" அ"ம்...நா...?"
"இல்ல இல்ல நீங்க..."
"நீங்க...? மேல சொல்லுமா.... "
"நாம..."
"நாம...? "
"நாம..... அப்பாஅம்மாவா ஆகப்போறோம். "
"ஹேய்....உண்மையாவா சொல்ற?" மடியிலிருந்து எழுந்து அவளை நெருக்கி அமர்ந்துக் கொண்டான்.
"ம்... நம்ம பாரதிபிரியன் " எனச்சொல்லி ஔவியனின் கையை பிடித்து அவள் வயிற்றில் வைத்துக்கொண்டாள். இருவரும் காதல் செய்த காலத்தில் அவர்களின் குழந்தைக்கு வைத்த பெயர்தான் பாரதி பிரியன்.
ஔவியன் குணிந்து வயிற்றோடு ஒரு முத்தம் வைத்துவிட்டு "டேய்....பாரதிபிரியன்.... எப்படா வெளியில வரப்போற? அம்மா கூடவே இருக்கியே....சீக்கிரமா வந்து இந்த அப்பா கூடவே இருப்பியாம். சரியா? " என ச்செல்லமாய் பேசினான்.
அவள் முகம் வெட்கத்திலும் பாசத்திலும் சிவப்பு ரோஜா இதழ்களை கசக்கி பூசியது போல் சிவந்திருந்தது. இரு கைகளாலும் முகத்தை பொத்தி எடுத்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.
" என்னோட இராஜ புருசனே ..... கொஞ்சினதெல்லாம் போதும். நம்ம பாரதி பிரியனும் வரப்போறான். அவன் இந்த மண்ண தொட்டு இந்த பூமி காத்த சுவாசிக்கும் போது நாம ஒரு தோட்டத்துக்கு சொந்தகாரங்களா இருக்கணும். நாம கல்யாணம் ஆகி வந்த அந்த நாட்கள நா இன்னும் மறக்கல ஔவியன். நீங்களும் மறந்திருக்கமாட்டிங்க.
"கட்டாயம் யாத்ரா. அந்த நாள நா மறக்கல. அன்னைக்கு நா எடுத்த முடிவ நிறைவேற்றியே தீருவேன்."
அந்த நாள் அப்படியென்னதான் நடந்தது?
அப்படி என்ன முடிவு எடுத்தார்கள்?
ஔவியனுக்கு இரண்டு அண்ணன்மாரும் ஒரு தம்பியும் இருக்கிறான். மலரின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் அவர்களது வீடு இருந்தது. ஒரு அண்ணன் திருமணம் செய்து கொழுபில் கூலிக்கு வீடு எடுத்து அங்கு வாழ்கிறான். இரண்டாவது அண்ணா திருமணம் செய்து அந்த வீட்டில்தான் வாழ்கிறான். தம்பி பள்ளி படிப்பை தொடர்ந்துக்கொண்டிருந்தான். ஔவியனும் யாத்ராவும் காதலித்துக்கொண்டிருந்தார்கள். யாத்ராவை விட ஔவியன் ஜாதியில் குறைந்தவன் என்பதால் அவளின் வீட்டில் ஔவியனை மனமுடிக்க சம்மதிக்கவில்லை. அவள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்காக தெரிவு செய்யப்பட்டாள். ஔவியன் அப்போதுதான் நான்காண்டு கால பட்டப்படிப்பை பேராதெனிய பல்கலைகழகத்தில் நிறைவுசெய்துவிட்டு பட்டதாரியாக வந்திருந்தான். பட்டதாரியானாலும் "..........ன் .......தானே " என்று ஜாதி பெயர்ச் சொல்லி ஔவியனை மட்டம்தட்டி பேச ஆரம்பித்துவிட்டார்கள். தான் உயிராக நேசிப்பவனை இழிவாகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவள் பிறந்தவீட்டை விட்டு ஔவியனோடு வந்துவிட்டாள்.
ஔவியனின் வீட்டிலிருந்தபடியே பல்கலைக்கழக படிப்பைத் தொடர்ந்தாள். ஓராண்டு நிறைவின் பின் ஔவியனின் தாய், தந்தை பதிவு திருமணம் செய்துவைத்தார்கள். இறுதியாண்டு....படிப்பை முடித்துவிட்டே இருவரும் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் நான்காவது ஆண்டின் இறுதிகட்டத்தில் யாத்ரா கருத்தரித்தாள். இறுதி பரீட்சைக்கு மூன்று மாதங்களே இருந்தன. " எலி வளையானாலும் தனி வலை வேண்டும் " என்பார்கள். இரண்டு அறைகளே இருக்கும் அந்த வீட்டில் யாத்ராவோடு ஔவியன் வாழ்க்கை நடத்த சங்கடப்பட்டான். அதனால்.... அந்த லயத்திருந்து சற்று தூரத்தில் நீண்ட நாட்களாக கவனியார் இன்றி இருந்த சிறு நிலத்தில் ஒரு குடிசை வீட்டைக் கட்டினான். சமைக்கலாம், மழைக்கு நனையாமலும் வெயிலில் காயாமலும் இருக்கலாம், உறங்கலாம். இருவருக்கு தாராளமாகவே இருந்தது ஔவியன் தன் இணைக்காக கட்டிய அந்த காதல்மாளிகை.
இறுதி பரீட்சை முடிந்து வீடு வந்துச்சேர்ந்தாள் யாத்ரா. அந்த காதல் மாளிகையில் இருவரும் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். குட்டி ஔவியனும் யாத்ராவின் வயிற்றிலிருந்து தாய் தந்தையின் காதலில் மகிழ்ச்சியோடு வளர்ந்தான். ஆண் குழந்தை என்றுதான் அவர்கள் உறுதியாய் நம்பினார்கள். பாரதி பிரியன் என்று பெயர்ச் சொல்லி அழைத்தால் வயிற்றிலிருந்து உதைப்பதாகச் சொல்லி இரசித்தாள் யாத்ரா.
இப்படியே நாட்கள் சில கடந்தது. ஒரு நாள்......
" டேய்.....ஔவியன் இந்தா, இந்தா உதைக்கிறான். " என வயிற்றை தூக்கிக்கொண்டு அவன் முன் வந்து நிற்க, அவன் அவள் வயிற்றில் காதை வைத்து உண்ணிப்பாக கேட்கிறான்.
"பாரதி பிரியன்னு கூப்பிடுங்களேன். "
"பாரதி.....பாரதி பிரியன்...." குரல் கூட பிள்ளைக்கு வலித்து விடக்கூடாது என்றெண்ணி மென்மையாய் அழைத்தான்.
"அட கொஞ்சம் சத்தமாதான் கூப்பிடுங்களேன்." அதட்டினாள் யாத்ரா.
"பாரதீ..... பாரதீ பிரியன் " சத்தமாக அழைத்தான்.
குழந்தை உண்மையில் உதைத்தான்.
"யாத்ரா....உதைக்கிறான்டி.... என் பட்டு குட்டி உம்மா.... " என வயிற்றை இரு கைகளாலும் வாரி எடுத்து தன் நெற்றியில் திஷ்டி உடைத்தான்.
"பாரதீக்கு மட்டும்தானா...? பாரதியோட அம்மாவுக்கு இல்லையா?"
"என் பட்டுகுட்டியோட பட்டுகுட்டிக்கும் உண்டு" என்றுச் சொல்லிக்கொண்டே எழுந்தவன் ஏதோ சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தான்.
யாத்ராவும் பின் ஓடினாள்.
கூரையிலிருந்த தகரம் "சடமட சடமட" என தரையில் விழுந்துக்கொண்டிருந்தது. என்ன சத்தம். வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைத்தே ஔவியன் வருந்தினான்.
வீட்டைச் சுற்றியும் ஆண்கள். தடிகளால் அந்த குடிசையை நொறுக்கிக்கொண்டிருந்தார்கள்.
" டேய்...யார்டா நீங்களாம்? ஏன்கடா வீட்ட உடைக்கிறிங்க? " கீழே கிடந்த தடியோடு முன்னேறினான் ஔவியன்.
வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் தூக்கியெறிந்தான் ஒருவன். கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர். ஔவியன் ஒருத்தனால் என்ன செய்திட முடியும்? வீட்டைக் காப்பதை விட யாத்ராவையும் குழந்தையையும் காப்பதில் தான் கவனம் செலுத்தினான்.
அரைமணி நேரத்தில் மொத்த வீட்டையும் தடைமட்டமாக்கிவிட்டார்கள்.
"யார்டா நீங்களாம்? ஏன்டா வாழ்ற வீட்டு தரைமட்டமா ஆக்கினிங்க? " சீறினான் ஔவியன்.
" யார்கிட்ட கேட்டு இங்க வீடு கட்டினிங்க? "
"நா எத்தனையோ முற அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தன். எந்த பதிலும் சொல்லல. "
"அனுமதி கிடைக்கலனால் உங்க இஷ்டத்துக்கு வீடு கட்டிருவிங்களோ? இதென்ன உங்க அப்பவுட்டு சொத்தா? இல்ல உங்க தாத்தா ,பாட்டி ,பூட்டன் ,பூட்டிவுட்டு சொத்தா? "
" ஆமா.... எங்க அம்மா அப்பா, அதுக்கு முன் எங்க தாத்தா பாட்டி,அதுக்கும் முன் எங்க பூட்டன் பூட்டி எல்லாரும் இந்த தோட்டத்துக்காகத்தான் உழைச்சியிருக்காங்க. அவங்கள்ளாம் உழைச்சதாலத்தான் இன்னைக்கும் இந்த தோட்டம் இந்த நிலைல இருக்கு. எங்களுக்கு இங்க உரிமை இல்லையா? நா என்ன இறப்பர் மரத்தையோ தேயிலையையோ புடுங்கி வீசிட்டு அந்த எடத்துல வீடு கட்டினன். சும்மா கெடந்த எடத்துல தானே கட்டினன். மாடிவுடா கட்டினன். இப்போதைக்கு வாழ ஒரு குடிசையதானே கட்டினன். இப்படி ஒடச்சிபோட்டுடிங்களேடா. "
" இப்படி சும்மா கெடக்குதேனு ஆளாளுக்கு வீடு கட்டத்தொடங்கினா

Last edited: