பியதாசவின் அந்த பார்வையில் தீபாவைச் சுற்றியே அவனது எண்ணலைகள் வளம் வருகிறது என்பது புரிந்தது. திருமணமாகிச் சென்றதிலிருந்து ஒரு முறைகூட கண்ணில் படாதவளின் தரிசனம் இப்போது கிடைக்கிறதென்றால் "கடவுள் வேறு ஏதோ திட்டமிட்டிருக்கிறான் போல "என்று பியதாசவின் மனம் உலரிக்கொண்டே இருந்ததை யாத்ராவிடம் எப்படி சொல்லுவான்? அவன் மனம் சொல்வது உண்மையா என்பதை உறுதிப்படுத்த தீபா ஏன் இங்கு வந்திருக்கிறாள் என்பது தெரிய வேண்டுமே. அதற்காகத்தான் ஊருக்கே சண்டி வீரனானவன் யாத்ராவின் முறைப்புக்கும் அடங்கியிருக்கிறான்.
"தீபா அக்காவ எப்ப கண்டிங்க? பதில் சொல்லாமல் கேள்வி கேட்கிறாளே... என்னதான் செய்ய, காரியம் ஆக வேண்டுமே. சலிப்பின்றி பதில் சொன்னான் பியதாச.
"ரெண்டு கெழமிக்கு முன். ரோட்ல நின்னுகிட்டுருந்தாள். "
"ரோட்லயா? ஏன் ரோட்ல?"
" நான் ஸ்கூல் பிள்ளைகள டவுன் ஸ்கூலுக்கு த்ரிவீல்ல கூட்டிட்டுபோகும் போது டவுன் போறதுக்காக நின்னுட்டுருந்தாள். வாகனத்துக்காக வெய்ட் பண்ணிகிட்டு இருந்தாள் போல."
"அக்கா உங்களோட வந்தாளா?"
"ஆமா...டவுன் கூட்டிட்டுப்போய் கூட்டிட்டு வந்தென்."
"அக்கா உங்கள பார்த்தாளா? உங்களோட பேசினாளா?" கொஞ்சம் ஆர்வமாய் கேட்டாள். அந்த ஆர்வத்தை பியதாச கண்டுவிடகூடாது என்பதற்காக முகபாவத்தை இறுக்கமாக மாற்றிக்கொண்டு ,
"அப்போ நீங்க எல்லா கேள்வியையும் அக்காகிட்டயே கேட்டிருக்கலாமே?" என கேட்டாள்.
" இல்ல, அவள் என் முகத்த பார்க்கவே இல்ல. அவ என்ன அடையாளம் கண்டுக்க இல்ல, நானும் எதுவும் பேசல. முகம் பார்க்கவும் இல்ல."
" ஓஹோ.... அப்படியா? "
"அவள் என்ன விசயமா வந்துருக்கா? திரும்ப எப்ப போவா? ஏன் தனியா வந்துருக்கா? "
" அவ இந்த ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆகுது. எப்ப போவானு எனக்குத் தெரியாது. யாருக்குத் தெரியும்? அவ கடைசிக்காலம் இந்த ஊர்லயோ தெரியல. "
"என்ன சொல்றிங்க? ஏன் அப்படி சொல்றிங்க?"
"வாங்க வாங்க, என்ன விஷயமா வந்துருக்கிங்க? தேதண்ணி குடிச்சிங்களா? மலர் வந்தவர்களுக்கு தேதண்ணி கொடுத்தியா? "
என்று உள்ளே இருப்பவளுக்கு சத்தமாய் குரல் கொடுத்துக்கொண்டே சுண்ணாம்புக் கட்டு கையை செங்குத்தாக மடித்து கழுத்தோடு ஒரு பட்டித்துண்டினால் தொங்கவிட்டுக்கொண்டு வந்தான் டேனியல். முகத்திலும் நெற்றியோடு ஒரு வெள்ளை பிளாஸ்டர் அவனது வேதனையைச் சொல்லியது.
"அதெல்லாம் ஒன்னும் வேணாம் டேணியல் அண்ணா. நீங்க எப்படி இருக்கிங்க? உங்கள பார்க்கதான் வந்தொம். "
"என்ன பார்க்கவா? என்ன பார்த்துட்டு போய் ஊருக்குள்ள சொல்லி சிரிக்கிறதுக்கா? டேனியலின் உதாசீன பேச்சில் ஔவியனின் முகம் ஒரு மாதிரியாய் மாறியது.
"என்ன அண்ணே பேசுறிங்க? உங்கள இப்படி பார்குறது கஷ்டமா இருக்கு. நாங்க யே சிரிக்கணும். ?"
"டேய்... டேய் தெரியும்டா உங்க புத்தி. என் கால் கை உடைஞ்சாலும் உங்ககிட்டலாம் உதவினு வந்து நிற்கமாட்டென். " என மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் ,
" ஹா ஹா .... ச்செ ஔவியன் நான் சும்மா வெளயாட்டா சொன்னெ. இதோ நா நல்லாதான் இருக்கென். பொய்க்கி இவ்வளோ பெரிய கட்ட போட்டுவிட்டுருக்காண்க. நா நாளைக்கே கழற்றி வீசிருவென். " சிரித்துக்கொண்டே பேசினான். "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை " என்பது போல் இருந்தது அவனது பேச்சு.
மலர் தேனீரோடு வந்தாள். தேனீர் கோப்பையில் கை வைத்தான் ஔவியன்.
" சிலர், ஒருத்தன் எப்படா விழுவான். போய் அக்கறைன்ற பேர்ல அனுதாபம் காட்டி தான்தான் ஊர்லயே நல்ல மனுஷன்னு படம் காட்டிக்கலாம்னு இருக்காங்க. அவன்க அவன்க முதுக பார்க்க முடியாதவங்க அடுத்தவங்க முதுக பாத்துகிட்டுருக்க வேண்டியதுதான்..." சினுங்காத தொலைபேசியை காதில் வைத்து யாருடனோ பேசினான் டேனியல். ஔயின் தேனீர் கோப்பையை மரியாதைக்காக தொட்டுவிட்டு " " இப்பதான்கா குடிச்சிட்டு வந்தம்" என்றான். "மலரக்கா அப்ப நாங்க போய்ட்டுவாரம். மழ வார மாதிரி இருக்கு. உடுப்பெல்லாம் வெளில போட்டுட்டு வந்தேன். நனைஞ்சிடப்போகுது. " என்று சொல்லி இருக்கையிலிருந்து யாத்ரா எழும்ப ஔவியனும் எழும்பினான்.
"டேனியல்..... நீ செய்றது ரொம்ப பிழ. நல்ல மனுஷன் யாரு? கெட்ட மனுஷன் யாருன்னு தெரியாமல் வாழ்ந்துட்டுருக்க. இது நல்லதுக்கில்ல. கவனமா இருந்துக்க சொல்லிட்டேன். இன்னொரு முற இப்படி நடந்தால் வாகனத்துல தூக்கிப் போடக்கூட ஒருத்தன் வரமாட்டான். கவனமா இருந்துக்க சொல்லிட்டேன்." என முகத்துக்கு முன் வந்து சொல்லிவிட்டு முறைத்தப்படி நின்றான் பியதாச.
"சரி சரி... பிரச்சின வேணாம் அண்ணே. வாங்க நாம போவோம்" பியதாசவை வற்புறுத்தி இழுத்துக்கொண்டு வெளியேறினான் ஔவியன். கதவோரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரினோவின் முகத்தை பார்த்துவிட்டு அமைதியாய் பின்தொடர்ந்தாள் யாத்ரா.
"சுந்தரமாஸ்டர் சொன்னது சரிதான்... " என்றான் ஔவியன்.
"இப்படிபட்டவர்னு தெரிஞ்சிதான் அம்மாயி போகவேணாம்னு சொன்னிச்சி. பெரிய தத்துவம் பேசிட்டு போனோம்ல. நமக்கு இந்த அவமானம் தேவதான்."
"வீட்டுக்குப் போய் அவமானபட்டுட்டு வாரமே. ஏன்தான் போனம்? " என்ற யோசனையில் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான் ஔவியன்.
அவனது வலது கரத்தில் தொங்கிக்கொண்டு "டேய்... ஔவியா...." என்றாள்.
"ஏண்டி"
"ஏண்டா உம்முனு வார?"
"ஒன்னுமில்ல..."
"அங்க நடந்தத நெனச்சா?"
"ஆமா. சில மனுசன்களுக்கு நல்லதே நினைக்க கூடாது என்ன? "
"அத விடு ஔவியா. அவன்களே நம்மல தேடி வார காலம் வரும். செய்த நல்லத புரிஞ்சிக்காமல் நடந்துக்குறாங்க. என்னைக்காவது உண்ம புரியும். அப்ப அவங்க நம்ம வீட்டுக்கே நம்மள தேடி வருவாங்க. நீ வேணும்னா பாரு கட்டாயம் நடக்கும்." மிக உண்ர்வாய் அவள் பேச,
"ஹேய்.... நா இப்போ ஒரு பிள்ளைக்கு அப்பா. என்னப்போய் நீ வா போன்னு மரியாதை இல்லாமல் பேசிட்டுருக்க? இரு இரு என் பையன் வரட்டும். எனக்கு நடக்குற அநியாயம் எல்லாம் அவன்ட சொல்லுறன் " என தலையை ஆட்டி ஆட்டி நாடகம் செய்தான்.
பிடித்து தொங்கிக்கொண்டிருந்த கையை விட்டுவிட்டு, சற்று தூரம் வந்து நின்று இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ,
"ஆஹ ஆஹா ஹா... உன் பையன நான்தான் சுமக்குறன். அவன் எனக்கு சப்போட் பண்ணுவானா? இல்ல கை வீசிகிட்டு ஜொலியா நடந்துபோறவங்களுக்கு சப்போட் பண்ணுவானா? என்றாள்.
" நா என்ன பண்ண? கடவுள் உயிர சுமக்குற பாக்கியத்த பெண்களுக்குத்தானே கொடுத்துருக்கான். எனக்கும் ஆசத்தான். என் வாரிச சுமக்கணும்னு. அவன் வெளில வரட்டும்.... அப்ப பாரு யென் நெஞ்சுலயும் தோள்ளயும் தூக்கிட்டு அழையிறத"
" அவன் வந்தபிறகு தூக்கி சுமக்குறது இருக்கட்டும்.... இப்பவும் சுமக்காலாமே.... "
"இப்பவா...இப்ப எப்படி அவன நா சுமக்குறதாம்...?"
" யே.... ? சுமந்தா உங்க பிள்ளைய மட்டும்தான் சுமப்பிங்களாக்கும்? அவன் அம்மாவோட சேர்த்து சுமக்கமாட்டிங்களோ...? "
"ஓஹோ...யே பொண்டாட்டியோட ஆசை இதுதானா..? "
சுற்றியும் பார்த்துவிட்டு ஆள் அரவமே இல்லாத அந்த இறப்பர் காட்டுப் பாதையில் சிசுதாயை அள்ளி எடுத்தான். நீண்ட பாதையில் இறப்பர் மரங்கள் இரு மருங்கிலும் பச்சை தேவதைகளாக சாமரம் வீச , அவள் கண்களை மூடி சிறிது தூரத்தையும் ஔவியனின் முகத்தைக் கண்களால் அணைத்தப்படி மீதி தூரத்தையும் அனுபவித்தாள்.
"மின்மினிப் பூச்சிகளின்
கோடை கால ராத்திரி காடு போல்
என் மனம் முழுதும் ஒளிரும்
பச்சை மஞ்சள் ஒளியில்
கருவறை இருட்டில்
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்
உன் நகல்.....,
தந்தையாய் சுமக்கிறாயா?
கணவனாய் தாங்குகிறாயா?
காதலனாய் ஏந்துகிறாயா?
எதுவாயினும்..
உன்னுடல் சுமக்கும் உயிராக
உன்னுயிர் சுமக்கும் உடலாக
இருக்கும் காலமெல்லாம் உன்னுடனேயே
ஒட்டிக்கொண்டிருப்பேன்
இறைவன் உறையும் கருவறையாக.... !
யாத்ரா அவளது மலரிதழ்களை விரித்து கவி வரிகளைச் சொல்ல, ஔவியன் இறப்பர் மரங்கள் அசைத்து எழுப்பும் தென்றல் காற்றோடு சண்டை செய்கிறான். எனக்கான அவளது வரிகளை காற்றலைகளே திருடிக்கொள்ளாதீர்கள் என்று.
இரவு மலர்ந்தது. காதலர்களுக்கு இரவும் ஒரு மலர்வுதானே?
இரவு நேர உணவை இருவருமாய் தயார் செய்துகொண்டிருந்தார்கள்.
"யாத்ரா... டேனியல் வீட்ல வச்சி அந்த பியதாச உன்கிட்ட ஏதோ கேட்டுகிட்டுருந்தானே...என்னன்னு நீ சொல்லவே இல்லையே. நீயாக சொல்வன்னு நினைச்சேன். பட் நீ எங்க...நானே கேட்டால்தான் சொல்வன்னு இருக்க போல..."
" ஆம்மா, நீங்களா கேட்பிங்கன்னு நினைச்சேன்.பட் கேட்க இல்ல. ஆனா எப்படியும் கேட்பிங்கன்னு தெரியும். கேட்கும் வரதான் வெய்ட் பண்ணிகிட்டுருந்தென். "
"சரி சொல்லு. இப்பதான் கேட்டுட்டேனே."
" அதுவா...அது வந்து..." என்று இராகம் இழுத்துக்கொண்டு ரவா மாவை சலித்து முடித்த கையோடு அதை ஒரு பாத்திரத்தில் கொட்டிவிட்டு, கரட் சீவிக்கொண்டிருந்தவனின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
கதையை ஆரம்பிக்க வந்தவளிடம், " இந்த கிழங்க சீவிக்கிட்டே பேசு " என்று சொல்லும் விதமாக அவள் கையில் ஓர் உருளைக்கிழங்கை எடுத்து கொடுத்தான். அவளும் அதன் தோல் சீவிக்கொண்டே கதையைத் தொடங்கினாள்.
" நம்ம தீபா அக்காவத்தான் விசாரித்தார்"
"தீபா அக்காவயா? தீபா அக்காவ ஏன் அவன் விசாரிக்கிறான்?"
" உங்களுக்கு தெரியாதா?"
"என்னா தெரியாதா? சொன்னால் தானேடி தெரியும்."
" கிட்டத்தட்ட ஆறேழு வருசம் தீபாக்கா பின்னாடி அலஞ்சிகிட்டுருந்தாரு. அக்காதான் கண்டுக்கவே இல்ல. ஒரு முற "பின்னாடி வராதடான்னு" செருப்பால கூட அடிச்சிட்டா. அப்பவும் விடாமல் கல்யாணம் பண்ண கேட்டுகிட்டே இருந்தாரு."
" அவ்ளோ லவ் பண்ணினவன் மேல ஒரு இரக்கம் கூட வரலயா ஓ அக்காவுக்கு?"
" 'அவங்க சிங்களாக்கள் அங்க கல்யாணம் பண்ணி போனால் நம்ம அம்மா அப்பாக்கு மரியாத கொடுக்கமாட்டாங்கன்னு' சொல்லி கடைசிவர சம்மதிக்கவே இல்ல. "
" ம்...இப்ப பாத்தியா தமிழன கட்டி உங்க அம்மா அப்பாவுக்கு கெடச்ச மரியாதைய? மரியாத போய் வாழ்க்கையும் தொலஞ்சதுதான் மிச்சம்."
"ஆனால்... ரெண்டு மூனு தடவ பியதாச கூட அக்கா பேசுறத கண்டுருக்கென். அப்றம் எப்படி மாமா மகன கட்டிக்க சம்மதிச்சான்னு எனக்கும் தெரியல. என்ன நடந்துச்சோ யாருக்குத் தெரியும்? "
"தீபா அக்காவுக்கு விருப்பம் இருந்துருக்கும். சிங்களவன்றதால பயந்துருப்பாங்க. ஆனா அவன் எவ்ளோ நல்ல மனுசன் தெரியுமா? சண்டித்தனம் செய்தாலும் மனுசத்தன்ம உள்ளவன். கெட்டவன்களுக்குதான் அவன் சண்டி. "
"உண்மதான் ஔவியா. தமிழ், சிங்களம் என்ற பாஷ வேறுபாட்டுல ஒன்னுமில்ல. நல்ல மனசும் நல்ல குணமும்தான் முக்கியம். சிங்களவன்னாலே நல்ல குணம் இருக்காதுன்னு நாம நம்பிகிட்டுருக்கோம். ஆனா... நல்ல குணம் அப்படின்றது சிங்களவன் தமிழன்ற வேறுபாட்டுல இல்ல . அது பொதுவாகவே மனுசன்களுக்கிடையிலான வேறுபாடு. சிங்களவன்லயும் நல்லவன் கெட்டவன் இருக்கான். தமிழன்லயும் நல்லவன் கெட்டவன் இருக்கான். என்ன ஔவியா? " தன் அக்காவின் வாழ்க்கை வீணான ஏக்கத்தில் அப்பாவியாய் கேட்டாள் யாத்ரா.
"இதையெல்லாம் நீ அப்பவே உங்க அக்காவுக்கு எடுத்துச்சொல்லிருக்கணும். காலம் கடந்தாச்சி. இப்ப என்னதான் பண்ண? உங்க அக்கா பியதாசவுட்டு பாசத்த பாத்துருக்கணும். அவன் சிங்களவனா தமிழனான்றத இல்ல. "
" மாமா மகன், அக்காவ கட்டி வைக்காட்டி செத்துருவென்னு சொன்னதாலத்தான் எங்க அம்மா அப்பா அவனுக்கே கட்டி வைச்சாங்க."
" ம்..... இப்ப ஓடியே போய்டான்ல?"
" ஆனால்...ஔவியா... கடவுள் கணக்கு எதுன்னு யாராலும் யூகிக்க முடியாதில்லையா? அவன் என்ன நினைச்சியிருக்கானோ தெரியலையே?"
"நீ என்ன சொல்ல வாற? "
"இல்ல..., பியதாச அண்ணனும் இன்ன வர கல்யாணம் கட்டாமலேதானே இருக்காரு. ஏன் இவ்வளவு காலம் முடிக்காமல் இருக்கணும் சொல்லு?"
" அதுக்காக...உன் அக்காவ இன்னும் நெனச்சி கிட்டு இருக்கான்னு நெனக்கிறியா? இன்னொருத்தன கட்டுனவள நெனச்சிக்கிட்டு இருக்கமாட்டான் ஒரு ஆம்பள."
" டேனியல் வீட்ல வச்சி எதுக்காக அக்காவ பத்தி விசாரிக்கணும்? "
"ரொம்ப நாளைக்குப் பிறகு கண்டதால விசாரிச்சிருப்பான். அத வச்சி நீ வேற மாதிரி கற்பன பண்ண வேணாம் சரியா? இப்பவும் பியதாச மனசுல என்ன இருந்தாலும், உங்க அக்கா மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியாது. அதோட பியதாச வீட்ல இந்த நிலைல சம்மதிப்பாங்களா... இதெல்லாம் நடக்குற ஒன்னா? வீணா யோசிக்காத யாத்ரா."
"சரிதான் ஔவியா. பார்ப்பம் என்னதான் நடக்குதுன்னு. "
அடுப்பில் நன்ஸ்டிக்கை வைத்து எண்ணெயை ஊற்றினான் ஔவியன்.
யாத்ரா சிறிது கடுகை எண்ணெய்யில் போட்டாள். கடுகு வெடித்த பின், வெட்டி வைத்த வெங்காயம், உருளைக்கிழங்கு , கரட் ஒவ்வொன்றாக போட்டு வதக்கினான் ஔவியன். திருகிய தேங்காயையு சேர்த்தான். பின் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் தக்காளித் துண்டுகளையும் சேர்த்தாள் யாத்ரா. பின் ரவா மாவை கொட்டி கிளறினாள்.
"கொண்டு வா கொண்டு வா...பசிக்குதுடி..." என்றபடி ஓடோடி தட்டை எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தான் ஔவியன். யாத்ரா சுடச்சுட பரிமாறினாள். அவன் சுவைத்து "சூப்பர் " என்றபடி அவள் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கி அவளது தட்டிலும் பரிமாறினான். அவள் சாப்பிடுவதற்கு தயாராகி அமர்வதற்குள் " ஒரு வாய்" என்று ஊட்டியும் விட்டான். அவள் சாப்பிட்டுக்கொண்டே அவளது தட்டில் கைவைத்தாள்.
விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்....