• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 13

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
"ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழுல இந்தியிவுலருந்து வந்தவங்கள போகச் சொல்லி சிங்களவன் அடிச்சான். அது ஒரு பெரிய கலவரம். ரோட்ல தமிழன்கள நடமாடவிடல. டயர் எரிச்சி போட்டாங்க. வீட்டுக்குள்ள பூந்து தேடி தேடி அடிச்சாங்க. மக்கள் பயந்து ஓடி காட்டுலயும் அங்கயும் இங்
கயும் ஒளிஞ்சி இருந்தாங்க. இரக்கமுள்ள சில சிங்கள ஆக்கள் அவங்க வீட்டுக்குள்ள ஒளிச்சிவச்சி சில தமிழன்கள காப்பாத்தியுமிருக்காங்க. எங்க அம்மா அப்பாலாம் சிங்கள ஆக்கள் வீட்ல ஒளிஞ்சியிருந்து தப்பிச்சவங்கத்தான். "


"ம்...... பயணத்துல கொஞ்சம், மலை காட்டுல கொஞ்சம், வன்செயல்ல கொஞ்சம்னு செத்து செத்து மிஞ்சியிருக்க சனம் தான் இப்ப வாழ்ந்துகிட்டுருக்கு இல்லையா இலங்கோ அண்ணா?" ச்சாரு கேட்க,

"ம்..... ஆமா ஆமா...... யார் புண்ணியத்துலயோ தப்பி பொழச்சவங்கத்தான் இப்ப வாழ்ந்துகிட்டுருக்கோ. "

"க்கும்.... எங்கருக்கு இங்க புண்ணியம்! ஒரு எடத்துல கூட எதிர்த்து நிக்காமல் கொடுத்த அடியெல்லாம் வாங்கிகிட்டு புண்ணியமாம் புண்ணியம் ..... ஒரு மரம் நாட்டகூட எடமில்ல...." கிருபாவின் கோவம் தீர்ந்ததாய் இல்லை.



"இனி வரும் காலத்துலயாவது வெறுமனே தேர்தல் வாக்குகளுக்கு மட்டும் நம்மள தேடி வராமல் , இலங்கைட பொளுதாரத்துட முதுகெழும்பே நாங்கதான் என்றத இங்க எல்லாரும் ஏத்துகிட்டு நம்மள தேடிவரும்படியாக சிறப்பா ஏதாவது செய்யணும்...." எனச் சொன்ன இலங்கோ கடைசியில் தன்னை காமெடியனாக ஆக்கிடுவிடுவார்கள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


" அதுக்கென்ன சிறப்...பா செஞ்சிடுவோ... இலங்கோ அண்ணா...." மிகத் தீவிரமாக போய்க்கொண்டிருந்த வட்ட மாநாட்டை களைத்தான் வினோத். எல்லோரும் சிரிக்க,


"ஆழ் மனசுலருந்து சீரியஸா பேசுனா...இந்த பசங்க இப்படி கலாய்கிறான்களே... இதுக்குத்தான் சின்ன பசங்களோட சவகாசம் வச்சிகிறதுல்ல. "என மனதுக்குள் நினைத்தப்படி முறைத்தான் இலங்கோ.


" ச்சாரு , அந்த டப்பாவ இங்க போடு. "

"இந்தா.... நீ மட்டும் கொறிச்சிக்காம எல்லாருக்கும் கொடு. "

கையில் அள்ளிக்கொண்டு அடுத்தடுத்து கைமாற்றிக்கொண்டார்கள். டப்பா வெறுமையானது. இறுதி நபராய் இலங்கோ கைவிட டப்பாவில் எதுவும் இருக்கவில்லை. பிள்ளைகள் மீண்டும் சிரித்துவிட்டார்கள். இலங்கோவிற்கு கோவம் வர, எழுந்து போகலானான்.


"மச்சா எங்க போறிங்க? "

" ம்.... சின்ன வேல இருக்கு. நா போறெ. "

"ஹா....ஹா.... தெரியும் தெரியும் அது என்ன வேலனு...."


" இனிப்பு கெடக்கலனு இனியாவ தேடி போறிங்களோ....?"


"அது யாரு இனியா?"

"அதான்.... ஈ.பீ.எப்...."

"ஓஹோ.....அவ பேர் இனியாவா? "


" ஓஹோ...பெயர் கூட தெரியாதோ....நம்பிட்டம்....நம்பிட்டம்... " ஔவியன் இப்படி சிரித்துக்கொண்டே கிண்டல் செய்யும் போது அழகாகக் இருப்பான். யாத்ரா அவளவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.


"அட ஔவியன்.... போயும் போயும் அந்த திமிர்பிடிச்சவள சேத்து வச்சி கிண்டல் பண்றியேடா... இவ்வளோ காலம் தனியா இருந்து திமிர் பிடிச்ச ஒருத்தியோட கோர்த்து விட பாக்குறியே.... பேசாம இரு ஔவியன். " என்று சொல்லிவிட்டு நிக்காமல் வெளியேற முற்பட,

"மோதல்ல ஆரம்பிக்கிறதுதான் அண்ணே காதல்ல முடியும்...." ஔவியன் கத்திச் சொல்ல இலங்கோ காதுகளை மூடிக்கொண்டு ஓடியே வந்துவிட்டான்.


நகரத்துக்கும் அந்த ஊருக்கும் ஒரே ஒரு பேருந்துச் சேவை இருந்தது. காலையில் ஒரு முறை ஊரிலிருந்து புறப்பட்டு மீண்டும் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஊரை வந்தடையும் . மீண்டும் மூன்று முப்பது மணியளவில் ஊரிலிருந்து புறப்பட்டு மீண்டும் இரவு ஏழு மணிக்கு ஊரை வந்தடையும். இலங்கோ அந்த மூன்று முப்பது மணி பேருந்தை பிடிப்பதற்காகத்தான் வேகமாக ஓடினான்.

எப்படியோ பேருந்து தயார் நிலையிலிருந்து செல்ல முற்படுகையில் மிதிப்பலகையில் கால்வைத்து விட்டான். "அப்பாடா..." என அவனுக்காகவே காத்திருந்த சாரதியின் பின் இருந்த முதல் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. அத்தனை வேகமாய் ஓடி வந்திருக்கிறான். சிறிது தூரம் சென்று களைப்பாறும் வரை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவது நிற்கப் போவதில்லை.

பேருந்தும் புறப்பட்டது. இறுதி ஹோர்ண் சத்தத்தோடு அந்த வளைவில் வளைந்து பின் பேருந்தை நீட்டி எடுக்கும் காட்சியே ஒரு தனி அழகுதான்.

மிக நேரத்தோடு வந்து இடம்பிடித்து மிக நீண்ட நேரமாக காத்திருந்தவர்களுக்கெல்லாம் பேருந்து புறப்படும் போது வரும் காற்று பேரின்பமாக இருந்தது. இலங்கோவிற்கும்தான்.


மொத்தமாக எட்டு வளைவுகள். எட்டும் எமன் தான். வாகனங்கள் இரண்டாக மடிந்தேச் செல்லும். மேலிருந்து பார்த்தால் படிப்படியாக அடுத்தடுத்த பாதைகள் மிக அழகாக காட்சித் தரும். வழமையாக பயணிப்பவர்களுக்கு அந்த வளைவுகளை எடுப்பதோர் கலை. ஆனால் புதிய சாரதிகளுக்கோ திண்டாட்டம்தான் தான். எட்டு வளைவுகளையும் வெற்றிகரமாக கடந்துவிட்டால் அடுத்து ஓர் மூன்று கிலோ மீற்றர் நேர் வழி. நகரத்தை அடைந்துவிடலாம்.


பேருந்து நரகத்தை அடைந்தது. அல்ல அல்ல நகரத்தை அடைந்தது. மீண்டும் ஐந்து முப்பது மணிக்கு இங்கிருந்து புறப்படும். அதற்குள் அனைவரும் வந்துசேர்ந்திட வேண்டும். வந்த வேலையை முப்பது நிமிடங்களில் முடித்தாக வேண்டும். ஒவ்வொருத்தராய் இறங்கி வேகமாக நடக்கலானார்கள். மலையேறி பழகியவர்களின் நடை வேகத்திற்கு ஈடு ஏது?


விறுவிறுவென நடந்தேச் சென்று நகரத்தின் தொங்கலை அடைந்தான்.

"என்னப்பா இலங்கோ.... நேத்தே வரச் சொல்லிவிட்டேனே...."

"ஆமா மொதலாளி. தகவல் கெடச்சிச்சி. ஆனா வந்துக்க கெடக்கல. "

" சரி சரி அதுவும் நல்லதுக்குதான். நேத்த விட இன்னைக்கு மூன்றுவா வெல ஏறியிருக்கு. "


" அப்ப இன்னும் வெல ஏறும் போலயே.... கொஞ்சம் பொறுத்து வந்துருக்கலாமோ...?"

"அதுச் சொல்லமுடியாது இலங்கோ. சில வேல இன்னைய விட கொறயிறதுக்கும் வாய்ப்பு இருக்கு. "


" என்ன மொதலாளி....இப்புடி சொல்றிங்க?"

"அப்புறம் ஓ விருப்பம்பா. அப்புறம் வெல கொறஞ்சிடுச்சினு யோசிக்கூடாதில்ல. அதுக்குத்தான் சொன்னே. "


" இன்னும் நல்ல வெல வந்ததும் விக்கலாமேண்ணு...."

இலங்கோ இரண்டு மனதாக தடுமாறினான்.
குழம்பிய குட்டையில் தூண்டில் போட்டார் முதலாளி.


" பெரிய லாபத்துக்கு ஆசப்பட்டு உள்ளதும் போச்சினா என்ன பண்ணுவ? ஹா....? இதுவே நல்ல வெலதான். இதுக்கு மேல கூடுனாலும் சதகணக்குத்தான் கூடும். "


"சரி சரி நெறுவக்கி போடுங்க."


" இல்ல இல்ல எதுவா இருந்தாலும் ஓ முடிவாக இருக்கட்டும். நல்லா யோசிச்சி முடிவெடு. பாக்கோட வெலயும் தங்கத்தோட வெலயும் சரியா சொல்ல முடியாது. எதுவேணா நடக்கும். அப்புறம் இந்த மொதலாளி மேல பழி போட்ற கூடாது பாரு...." சொல்லிவிட்டு வாயில் வெற்றிலையை மென்று அடைத்து வைத்திருப்பது போல் சிரித்தார். அது சிரிப்பென்றும் சொல்ல முடியாது. ஒரு விதமான.... இருமல் போன்ற ஒரு சத்தம். அதுதான் அந்த முதலாளியின் தனி அடையாளம். அது வேறு யார் வாயிலும் வராத ஓசை.



" சரி சரி பரவாயில்ல, இவ்வளோ தூரம் தூக்கிட்டு வந்துட்டெ. இதுக்காக இன்னொரு நாளக்கி அழைய ஏலுமா. நெறுவைக்கு போடுங்க போடுங்க...." மூட்டையைத் தூக்கிக் கொடுத்தான்.


ஒருவன் வந்து அதை வாங்கி தராசில் வைத்து
"பதினொரு கிலோவுக்கு கொஞ்சம் கொறவா இருக்கு. " என்றான்.


"அப்ப பத்தர கிலோவுக்கு கணக்கு பாரு."


"மொதலாளி.... பதினொன்னுக்கு கொஞ்சந்தா கொறவு. "


"என்ன இலங்கோ.... ! சரி அப்ப சரியா பத்து கிலோவ எடுத்துகிட்டு மீதிய எடுத்து கொடு தம்பி. " என்றார் முதலாளி.


" அந்த கொஞ்சத்த கொண்டுபோய் நா என்ன செய்ய? "

"புரியுதில்ல. அப்ப நாங்க மட்டும்? . "

வாய் மூடி நின்றான் இலங்கோ. முதலாளி கல்லாவிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுக்க அதை எட்டிப்பார்த்தான் இலங்கோ.

"இந்த கந்தவேல் மொதலாளி கொடுத்தா சரியாத்தான் இருக்கும். "


"சரிங்க மொதலாளி. அப்ப நா வாறே."

பேருந்தை பிடிக்க மறுபடியும் வேகம் எடுத்தான் .


போகிற வேகத்தில் ஒரு பெண் முகம். நின்று பார்க்கவெல்லாம் அவகாசம் இல்லாதவனாய் ஓடிகொண்டே.....

"எங்கேயோ பார்த்த முகமா இருக்கே... அட , அது இனியாவா? ச்ச... இருக்காது. மனசுக்குள்ள ஒருத்தி வந்துட்டா... பாக்குற எல்லா பொண்ணுமே அவ முகமாத்தா தெரியும்னு சொல்லுவாங்கல்ல... ஐயோ!இலங்கோ அது மனசுல ஒருத்தி இருந்தாதானேடா...? என்ன இது மனசு கண்ட மாதிரி பேசுதே... இந்த ஔவியன் வரும்போதே குழப்பிவிட்டுட்டா... ச்ச இனியா முனியானுகிட்டு... " மனம் மனதுள் பேசிக்கொள்ள இவன் ,
"பேசாம போய் பஸ்ஸ புடிக்கிற வழிய பாரு. " என்று தன் மனதுக்கு ஆணையிட்டான்.



சிறிது தூரம் செல்ல... " அது.... அந்த பொண்ணுதான். ஆமா ஆமா அதே பொண்ணுதான்." மனம் சொல்லியது.

" அப்படினா... பஸ்ஸுக்கு போகாம அங்கன என்ன பண்றா? ஏதும் பிரச்சனையோ...?"
என ஒரு மனம் யோசிக்க,

" அவளே ஒரு திமிர்பிடிச்சவ..... அவளுக்கெல்லாம் பிரச்சன வராது. அவளாலத்தா மத்தவங்களுக்கு பிரச்சினை. அவ எக்கேடு கெட்டா என்ன...அவள பத்திலாம் யோசி வெனய தேடிக்க வேணாம்." என மறு மனம் சொல்லியது.

" ச்ச ச்ச ... இந்த பஸ்ஸ விட்டுட்டால்... பாவம் பொம்பளபுள்ள . தனியா என்ன பண்ணும்."
மறு மனம் பேசுவதற்குள் திரும்பி பாதி தூரம் சென்றுவிட்டான். அதோ இனியா தான். இனியாவேதான்.

அருகிற்கே சென்றான்.


",என்ன , இங்கன ? பஸ்ஸ எடுத்துருவாங்க இப்ப..."

" ஆமா தெரியும். "
திமிரான பதில். தேவையா இலங்கோ உனக்கு இது?

"சரிதா போடின்னு" விட்டுவிட்டு சென்றான் இலங்கோ.

இனியாவையே மிக நீண்ட நேரமாக வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்த ஒருத்தன் அவனது தொழிலை தீவிரமாக தொடர்ந்துக்கொண்டே இருந்தான்.

சட்டென அவன் இனியாவை நோக்கி வர அவளுள்ளும் பயம் தொற்றிக்கொண்டது. "அம்மாடியோ...." என இலங்கோவின் பின் சென்று பேசினாள்.

அவன் மறைந்துவிட்டான்.

" கொஞ்ச நேரம் இங்கன நிப்பிங்களா?"

"யே! எதுக்கு? அஞ்சி மணிக்கு பஸ் எடுத்துருவான். அதவிட்டா ஊர்போய் சேர வேற வாகனம் கெடக்காது."

" இல்ல....."

"என்ன இல்ல...."

படுபாவி.... நேரம் பாத்து பலி வாங்குறானே.

" டவுனுக்கு வந்த பஸ்ல என்னோட பேக்க மிஸ் பண்ணிட்டெ "

" பஸ் இந்த ஸ்டேன்லதானே அடிப்பாங்க. போய் எடுக்க வேண்டியதுதானே."

"இல்ல ....அது ...அது வந்து....அது தூர போற பஸ். "

" சுத்தம்...... வாயிருக்களவுக்கு ...." உதட்டை ஏளனமாய் கோணலாய் திருப்பிக்கொண்டான்.


"சரி இப்போ இங்கன நின்னு என்ன செய்யபோறிங்க?"


" அதா தெரியல... "

"பேக்ல காசு இருந்துச்சா? முக்கியமானதெதுவும் இருக்கா? இல்லனா விட்டுரலாம்."


"காசு இருக்கு. ஐடி காட், எ.டி.எம் காட் ....முக்கியமா சம்பள ச்செக்..."

"அப்ப...இங்கன நின்னுகிட்டாருந்தா பேக் கெடச்சிருமா...? சொல்லி வேல இல்ல."

"திட்டு சாமி திட்டு. இது உன்னோட நேரம். " என உம்மென நின்றாள் திமிறுபிடித்தவள்.

"பஸ் போய் எவ்ளோ நேரம்?"

"இப்ப கொஞ்ச மொதல்லதான்"


" பஸ் பக்கத்து டவுன்ல கொஞ்ச நேரம் நிப்பாட்டுவாங்க. " என்றபடியே போய்க்கொண்டிருந்த முச்சக்கர வண்டியை நிப்பாட்டினான்.

"ஏறுங்க. " அவள் நுழைந்தாள்.
அவனும் ஏறிக் கொண்டான்.
வண்டி வேகமாக பறந்தது. அவள் ஒரு பேருந்தைக் காட்டி " இது இதுதான் பஸ்" என்றாள்.


சாரதி பேருந்தை மறித்து நிறுத்தினான். அவள் தடபுடலாய் முச்சக்கவண்டியிலிருந்து இறங்கி பேருந்தில் ஏறி தேடினாள். நடத்துனரிடம் விடயத்தை இலங்கோ சொல்ல, பேருந்து சற்று நேரம் அவ்விடத்திலேயே நின்றது.


அவளின் நல்ல நேரம். பையை கண்டெடுத்தாள். அப்போதுதான் அவள் முகம் மலர்ந்தது. மனதுள் " நன்றி இலங்கோ" என்று சொல்லிக்கொண்டாள்.


இலங்கோ நடத்துனரிடம் " தேங்யூ... " என்க பஸ் புறப்பட்டது. ஊர் பேருந்தை பிடிக்க முயற்சிக்கும்படிச் சொல்லிவிட்டு அதே முச்சக்கர வண்டியில் அமர்ந்தார்கள்.


ஊர் பேருந்து நின்ற இடம் மயான அமைதியாய் இருந்தது. இருள் வேறு மெது மெதுவாய் சூழத்தொடங்கியது.


அந்த முச்சக்கர சாரதியிடமே ஊர் பெயரைச் சொல்லி, கொண்டுபோய் விட சொன்னான் இலங்கோ. அவனோ... அவசர வேலை இருப்பதாகச் சொல்லி மறுத்துவிட்டான்.

இனியா சாரதியிடம் பணத்தை கொடுத்துவிட்டு இறங்கினாள். வண்டி சென்றது.


அந்த ஊர் பெயரைக் கேட்டாலே வர தயங்குவார்கள். ஒன்று கரடு முரடான பாதை. மற்றொன்று காடுகள் நிறைந்த பாதை. வரும்போது அவன் தனியாக அல்லவா வர வேண்டும்.


"இப்ப எப்படி வீட்டுக்கு போறது...?" அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

இலங்கோ ஓரபார்வையால் பார்த்து விட்டு சற்று தள்ளி நின்றான். ஹயருக்கு எடுத்து செல்வதற்கும் ஒரு முச்சக்கர வண்டிகூட கண்ணில் படவில்லை.


"ஊருக்கு போகும் வழியில் போய் நிக்கலாம். ஏதும் வாகனம் போனால் அதை நிறுத்தி போகலாம். " என நினைத்தவன் எதுவும் பேசாமல் நடந்தான்.

என்ன ஏது என்றே புரியாமல் இனியா பின்தொடர்ந்தாள். வேறு வழி?


....விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்....