நிலவொளியில் அவளது முகம் பேரொளி வீசியது - பார்த்தான் இலங்கோ. நல்லவனாயிற்றே. கனத்த திரையிட்டு மறைத்தான்.
", எல்லாம் என்னாலத்தானில்ல...?" குற்றவுணர்வு மேலோங்க குறுகிநின்று கேட்டாள்.
",ஆமா, உன்னாலத்தா, விடியவர இப்படியே நின்னுகிட்டு இருக்கவேண்டியதுதா." அவன் மூளைச் சொன்னாலும் வெளிப்படையாய் வாய்திறந்து சொல்லிட முடியவில்லை.
" இல்ல, அப்படிலாம் ஒன்னுமில்ல, பார்ப்பம். ஏதாவது வண்டி வரும். "
எங்கேயோ பார்த்துக்கொண்டு வார்த்தைகள் மட்டும் வந்து விழுந்தன.
அவளின் தொலைபேசி அடித்தது. மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தை திருப்பி நேரத்தைப் பார்த்தாள்.
"ஐயோ மணி ஏழு. ஊருக்கே பஸ் போய்டுச்சி. அதுனாலதான் அம்மா கோல் போல.... இப்ப என்ன சொல்றதோ...."
பதற்றத்தோடு காற்சட்டையிலிருந்து போனை இழுத்தெடுத்து காதில் வைத்தாள்.
நடந்ததையெல்லாம் சொல்லிமுடித்தாள்.
அந்த பக்கிதிலிருந்து திட்டு விழுகிறது போல. மௌனமாய் செவிமடுத்துக்கொண்டிருந்தாள். இலங்கோ மட்டும் பக்கத்தில் இல்லையென்றால் இப்படி மௌனம் காத்திருப்பாளா இந்த வாயாடி ?
இறுதியாக, " தனியாவா நிக்கிற அந்த எடத்துல?" பதறியப்படியே கேட்டாள் தாய்.
"ஒரு ஆம்பளையோட நிக்கிறென்னு சொன்னால்.... இன்னும் பதறுவாங்களே... தனியா இருக்கென்னு சொன்னாலும் பதறுவாங்க. இன்னொரு பொண்ணுக் கூட இருக்கதாக சொல்லிடுவமா ? "
மூளை சிந்தித்து.
"ஆனால்...., பக்கத்திலேயே நிக்கிறானே. எப்படி பொய் சொல்வது? " என்பதால் ,
"அவங்களோடதான்மா." என்றாள்.
"அவங்கன்னா .... யாருடி?"
"அதான் பஸ்ல மிஸ் பண்ணின பேக்க எடுக்குறதுக்காக ஒதவி செஞ்சாங்களே... அவங்க தான்..."
" அவங்க யார்னு தெரியாதா? தெரியாதவங்க கூடவா நிக்கிற. ஐயோ ஐயோ.... உனக்கு கொஞ்சொ கூட பொறுப்பே இல்ல. " அது இதென புலம்ப தொடங்கிவிட்டாள் தாய்.
"இல்லம்மா தெரிஞ்சவங்கதா."
"தெரிஞ்சவங்கன்னா , யார்ன்னு சொல்லு."
"இல....இல....இலங்கோ கூடத்தா" இன்னும் பதறி புலம்புவாங்களே...." என தயங்கி தயங்கிச் சொல்ல,
"ஹா...இலங்கோவா. மொதல்லயே சொல்லித் தொலச்சியிருக்கவேண்டியதுதானே. நெஞ்சே ஆடி போய்டுச்சி. " என போனை வைத்துவிட்டாள்.
இனியாவிற்கு பேராச்சிரியம். அத்தனை நம்பிக்கைக்குரியவனா இவன். ஒரு நிமிடம் இலங்கோவையே வியந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
இராப்பூச்சிகளும் கத்ததொடங்கிவிட்டன.
மணி எட்டை தாண்டிவிட்டது.
மணி எட்டை தாண்டிவிட்டது.
சூழ்ந்திருந்த நிசப்தத்தில்
சற்றுத் தூரத்தில் கொத்தடிக்கும் நாதம் தெளிவாகக் கேட்டது. இனியாவிற்கு பசி நினைவிற்கு வந்துவிட, வயிற்றைப் பிடித்தாள்.
"பசிக்குது. பகல் பன்னிரண்டு மணிக்குச் சாப்பிட்டது. " முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டாள்.
"ஒபிஸ்ல வேல செய்றிங்களோ இல்லையோ, அதெல்லாம் கணக்கா டைமுக்கு செஞ்சியிருவிங்க. " இலங்கோ ஏளனமாக பாரத்தப் பார்வையில் அவனின் மனக்குரலலை கேட்டுவிட்டாள்.
" லஞ் டைமல சாப்புடுக்கலனால் திரும்ப சாப்டவே கெடக்காது. " பதில் சொன்னாள்.
இன்னமும் எந்த வண்டியும் வருவதாய் இல்லை. பொறுமையிழந்தவளாய்,
" நாம டக்குணு போய் சாப்புட்டு வந்துருவமா? இங்கன சும்மாதானே நிக்கிறம்?"
"வண்டி ஏதாவது வந்துட்டால், அதயும் மிஸ் பண்ணிட்டு இங்கயே கெடக்கனும். பரவாயில்லையா ? "
" இல்ல இல்ல, டக்குனு சாப்பிட்டு வந்துரலாம். இதோ பக்கத்துலதா ஒரு ஹோட்டல் இருக்கு. வண்டி ஏதும் வந்தா பாத்துக்கலாம்."
"ம் ...அங்கருந்து பாத்துகிட்டுருந்தால் அதுவும் போய்டும். நீங்க போய் சாப்புட்டு வாங்க. நா இங்கன நிக்கிறெ. "
" நா மட்டுமா....தனியா எப்புடி....., இந்த நேரத்துல..?"
" இதென்னடா, சனியன தூக்கி பனியன்ல போட்டுகிட்ட கதையா போச்சி. சரி வாங்க. " அவன் பேச்சில் கடுப்பு தெரிந்தது.
ஆனால் அவளுக்கு பசிக்கிறதே.
"நமக்கு சோறு தான் முக்கியம்"
அந்த ஹோட்டலை நோக்கி ஓடினாள். அவன் காவல்காரன் போல் பின்னாடியேச் சென்றான்.
"கொத்து ரொட்டி ஒரு பிலேட் " ஓடர் செய்தாள்.
இலங்கையில் அநேகமானோர் விரும்பி உண்ணும் உணவு. பிசைந்து எடுத்த மா உருண்டையைத் தட்டித் துண்டுத் துண்டாக வெட்டி நறுக்கி, நறுக்கிய மரக்கறி, இறைச்சித்துண்டுகளையும் சேர்த்து கொத்தி எடுத்து சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தான் ஒரு பையன். சொட்டு ஆணத்தை சுற்றி ஊற்றி பிசைந்து உண்ணத் தொடங்கினாள்.
இலங்கோ வெளியில் வாசலிலேயே நின்று வண்டி ஏதும் ஊர் திசையை நோக்கிச் செல்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இரண்டு பக்கமும் கண் வைத்தாக வேண்டும். அவன் ஊர் திசைக்கு ஒரு கண். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இனியாவின் பக்கம் ஒரு கண்.
பாவம் பசியோடு சாப்பிடும் பச்சைப் பிள்ளைப் போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். இலங்கோவால் கண் நகர்த்த முடியாது போனது. பெண்ணுக்குள் எத்தனை ஆவேசம் திமிர் இருந்தாலும் அவள் ஒரு குழந்தைதான். என்பதை முதல்முறையாய்ப் புரிந்துக்கொண்ட ஓர் ஆண்மகனாய் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனை எதேச்சையாக பார்த்தவளின் கண்களில் அவனின் கண்களே சிக்கியது.
"அடி யாத்தி.... சாப்பிட்றத இப்படி பாக்குறானே... ஒரு வேள அவனுக்கும் பசியோ... நா பாட்டுக்கு ஒரு பிளேட் ஓடர் பண்ணி சாப்பிட்றனே...அந்த கோபத்துல தான் பாத்துகிட்டுருக்கானா.... ஐயையோ...."
அவளுள் பேசிக்கொண்டவள்,
"வாங்களே சாப்பிடுவோம்." சைகையால் அழைத்தாள்.
தன்னிலை மாற்றி அவளின் சைகையைக் கண்டவன்...,
" அட... நாம்மலும் காலையில சாப்பிட்டதாச்சே... ஔவியன் வீட்ல இனிப்பும் கெடக்காம போச்சி. " என்றபடி வயிற்றை தடவிப்பார்த்தான்.
"ஆமா பசிதான். வீட்டுக்குப் போய்ச் சேரவேணும்ன்ற டென்சன்ல பசிய மறந்துட்டம் போலயே" சாப்பிடுவதற்காய் உள்ளே செல்ல முற்பட்டவன்,
" ஊர் பக்கம் வண்டியேதும் போனால்...? அதையும் மிஸ் பண்ணிட்டு இங்கயே தூங்கவேண்டியாகிடும்." யோசித்தவன், "வேண்டாம் " என கையசைவில் காட்டிவிட்டு நின்றுவிட்டான்.
சிறிது நேரம் ஆனது...
"வாகனமெதுவுமே கிடைக்காட்டி..? நாள் முழுக்க பட்ணிதான். இந்த கடையயும் சாத்திடுவான். அப்புறம் நெனச்சாலும் சாப்பாடு தர யாருமில்ல"
புத்திசாலித்தனமாக யோசித்துவிட்டு ,
கொத்து போட்டுக்கொண்டிருந்த பையனிடம்,
" தம்பி அந்த ஊர் பக்கம் வாகனமேதும் போனா கொஞ்சம் கூப்புடுப்பா." என்று சொல்லிவிட்டு ஒரு பிளேட் கொத்தையும் கேட்டு வாங்கிக்கொண்டு போய் மேசையில் அமர்ந்தான்.
சாப்பிட்டு முடியும் வரை எந்த வண்டியுமே வராமலிருந்தது என்னவோ நல்லதுதான். ஆனால்..... நேரம் ஒன்பதையும் தாண்டியிருந்தது.
பணத்தைக்கொடுத்துவிட்டு இருவரும் ஆள்ளரவமே அற்ற அந்த இரவில் 'மொத்த நகரத்திற்குமே நாங்களே இராஜா ராணி' என்பது போல் நடந்துச்சென்றார்கள்.
ஆரம்பத்திலிருந்த பதற்றமெல்லாம் நீங்கி அந்த இராப்பொழுதின் பொடிநடையை இரசனையோடு ஏற்றுக்கொள்ள பழகிவிட்டது இருவரது மனமும்.
" நடுக்கடலில் கப்பல் நின்றுவிட்டால் 'கடலில் ஒர் இரவு' கட்டுரைக்கு குறிப்பெடுக்கலாம்." வைரமுத்து ஐயா தண்ணீர் தேசத்தில் எழுதியிருப்பார்.
உண்மைதான். ஐயையோ என பதறி தவித்து புலம்புவதால் நடக்கப்போவது ஒன்றுமில்லையே. வருகின்ற இன்னல், நெருக்கடிகளிலிருந்தும் பயன் பெற தெரிந்துக்கொண்டால் வாழ்க்கையில் எதுவுமே அநாவசியமாக தோன்றாது.
இந்த நெருக்கடியான தருணத்தையும் இருவர் மூளையும் முழுதாய் இரசித்து ஏற்றுக்கொண்டுவிட்டது.
இயற்கை மனிதர்களின் இயல்பு இது. இயலாமையின் போது எத்தனை பெரிய இன்னலானாலும் அதனோடிணைந்த வாழ்வை சம்மதித்துவிடுகிறார்கள்.
துன்பம் , வேதனை என்றே வாழ்வை நகர்த்திக்கொண்டிராமல் அதையும் இரசிக்கப் பழகிவிட்டால், அதுவே இறுதி மூச்சாக இருந்தால் கூட மரணத்திற்கு முன் சில விநாடிகள் அழகாய் பூரணமாய் வாழ்ந்துவிட்ட இன்பமாவது கிடைக்கும்.
முதல்முறையாய் ஒரு பெண்ணோடு நடந்துக்கொண்டிருக்கிறான். அவளும்தான்.
வார்த்தைகளோ சிந்தனைகளோ கற்பனைகளோ எதுவும் இல்லாத இதயங்கள் அந்த இரவின் அமைதியில் மிதந்தன.
வெறுமையான புத்தகம் போல் .அவர்கள் மனங்கள். ஆனால் ஏடுகளெல்லாம் அழகொளி வீசியது.
ஊர் பாதையை வந்தடைந்ததே தெரியவில்லை.
காத்திருந்தே களைத்தாள் இனியா. எவ்வளவு நேரம்தான் நிற்பது. ஊர் பெயர்பலகையோடு ஒட்டிக்கொண்டு இருந்தது ஒரு கல். அது மிக நீண்ட நேரமாக அவளை அழைத்துக்கொண்டு தான் இருந்தது. ஆனால், 'ஒரு பெண்! அதுவும் அரசாங்க வேலைச் செய்யும் ஒரு பெண்! சாலையில் அதுவும் தரையில் அமர்வதா ? ' என்ற போலி தன்மான உணர்ச்சி அவளை தடுத்துக் கொண்டிருந்தது. ஓர் எல்லைக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை அந்த தன்மானம். இறுதியில் அந்தக் கல்லிடமே தஞ்சம் அடைந்தாள்.
" உண்மை பேசுவதற்கும் தரையில் அமர்வதற்கும் வெட்கப்படக்கூடாது " என்பார்கள்.
அந்த கல்லின் மேல் அமர்ந்து இந்த இரவு அனுபவத்திற்கு காரணமான அந்த தோட்பையை மடிமீது வைத்து அதன் மீது தலையை வைத்து கண் அயர்ந்தாள்.
இலங்கோ அதற்கு முன்பே அமர்ந்துவிட்டிருந்தான்.
ஓர் வாகனச்சத்தம். எழுந்தான் இலங்கோ. அவளோ இதுவே கட்டில் என தூங்கிவிட்டாள் போல. அந்த திசையை நோக்கித்தான் அந்த வண்டி வருகிறது. கடவுளை கண்டது போல் இருந்தது. வேன் ஒன்று . சுற்றுலா சென்று வீடு திரும்புகிறதுப் போல. இலங்கோ கை நீட்டினான். வண்டி நின்றது.
" தெற்கு பக்கம்னால் வண்டி போகாதுங்க. கோயிலடியோட திரும்பிருவம். ஆனால் வாங்க... அதுலருந்து கொஞ்ச தூரம் தானே. இறங்கி நடந்தால் கூட போய்டலாம். "
இதைவிட்டால் வேறு எதுவும் வரப்போவதில்லை. இனியாவை தட்டி உசுப்பினான். இருவரும் ஏறிக்கொண்டார்கள்.
வண்டிக்குள் எல்லா தலைகளும் நித்திரையில் சாய்ந்துக்கிடந்தன. இனியாவும் அவள் தூக்கத்தை தொடர்ந்தாள். சாரதி, அவன் தூங்கிட கூடாது என்பதற்காக ஹரிகரன் குரலில் பாடல்கள் ஒலிக்கவிட்டிருந்தான்.
நாற்பத்தைந்து நிமிடங்களில் கோயிலடியில் வந்து நின்றது. நேரம் மீதியிருந்தால் கூடுதலான இடங்களுக்கு செல்லவேண்டிவரும் என்பதற்காக , போகும் போது மெதுவாகச் செல்வதும் திரும்பும் போது வேகமாகச் வருவதும் சுற்றுலாச் செல்லும் சாரதிகளின் தந்திரம்.
"ரொம்ப நன்றிங்க."
"அதெல்லாம் பரவாயில்ல. ஓகே...அப்ப நாங்க வாறம். " வண்டி புறப்பட்டது.
மீண்டும் இருவரினதும் நடைப்பயணம் ஆரம்பமானது.
இன்னும் இரண்டு வளைவுகளைக் கடந்து பேருந்து தரிப்பிடத்தை தாண்டி கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும் இனியாவின் வீட்டிற்கு.
நாளைய பௌர்ணமி தினத்திற்கு தயாராகும் நிலவொளியே போதுமானதாக இருந்தது அந்த பாதைக்கு.
" இப்படியே அமைதியாவே வந்திங்கன்னா நடந்துகிட்டே தூங்கிடுவன் நா. ஏதாவது கதைக்கலாம்ல ."
"என்னதான் கதைக்கிறது...?"
"ம்.... அந்த நிலாவுக்கு எப்புடி போறதுன்னு சொல்லுங்க. "
"அந்த நெலாவுக்கெல்லாம் போக முடியாது. மொதல்ல வீட்டுக்குப் போய்ச்சேருவம்."
"நீங்க எப்பவுமே இப்படித்தானா ?"
"எப்புடி ? "
" உர்ரு உர்ருனு... முகத்த இறுக்கிகிட்டு?"
" வேற எப்படி இருக்கணும் ?"
" இந்த இருட்டை அழகாய் காட்டும் நிலா வெளிச்சம் , மரங்களை அலங்கரிக்கும் மின்மினிப்பூச்சிகள், நிசப்தத்தில் கேட்கும் சின்ன சின்ன சத்தங்கள், அந்த சத்துக்களையும் தாண்டி கேட்கும் நிசப்தம்... அப்றம் நான் , நீங்க , இந்த நீண்ட பாதை... இந்த பிரபஞ்சம் எவ்ளோ ஆழகானதில்ல ?"
" ம்..... அதெல்லாம் தெரியல. ஆனா நீங்க சொல்லும் போது அழகாதா இருக்க மாதிரிதா இருக்கு ."
"இப்ப இந்த காட்டுக்குள்ளருந்து சிங்கமோ புலியோ வந்து நம்மல ஜப்னாலகடிச்சி கொண்ட்டா என்ன பன்றது ?"
" ஹா....ஹா.... எண்ணமே வாழ்வு. பிரபஞ்சத்த ரசிச்சா மட்டும் போதாது. அதோட சக்திகளையும் புரிஞ்சிக்கணும். நாம நினைக்கிறததான் இந்த பிரபஞ்சம் செய்து கொடுக்கும். "
"இதெல்லாம் பேசுவிங்களா நீங்க? ம்.... பரவாயில்லயே.... " உதட்டை பெருமையின் பக்கத்தில் பிதுக்கினாள். ஆனால் அவனுக்குச் சரியாய்த் தெரியவில்லை.
ஒரு பக்கத்தில் இருள் அகன்று கொண்டுப் போக வெளிரொளி வானத்தை நிரப்பத்தொடங்கியது. இது அன்றாட நிகழ்வென்றாலும் மனிதன் இந்த மாறும் பொழுதின் மாறும் தருணத்தை காண்பது கிடையாது. கண்டாலும் நின்று பார்ப்பது கிடையாது.
இருள் குறைந்து வெளிச்சம் அதிகமானது. இனியாவின் வீடும் நெருங்கியது. ஆனால் மலர்வதற்குதான் இருவர் முகத்திற்கும் தெம்பு இருக்கவில்லை.
இனியாவின் அம்மா கதவை திறந்தாள். நன்றியுணர்வையும் விருந்தோம்பல் பண்பையும் அவளின் தூக்கம் ஆட்சிசெய்திருந்தது. வீடு நுழைந்ததுமே பெண் கட்டிலில் விழுந்தாள்.
"தம்பி வாங்களேன். தேதண்ணி குடிச்சிட்டுப் போகலாம். "
"இல்லம்மா. வேணாம். " அவன் முகத்திலும் அலுப்பு அப்பிக் கிடந்தது. தாய் வற்புறுத்தவில்லை. பௌர்ணமி தினம் முழுதாய் மலர்ந்த அலரானது.
விஞ்ஞானம் தீண்டாத கலைகள் தொடரும்....