வழமை போல் தனது முச்சக்கர வண்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றி நகர பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்தான் பியதாச.
என்றும் இல்லாத அதிசயமாய் ஒருத்தி வண்டியை மறைத்தாள். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் ஒரு மலர் மலர்ந்தது. பியதாசயின் உள்ளம் முழுதும் மணம் பரவியது. வண்டியை நிறுத்தினான். மாணவர்கள் ஒதுங்கி இடம்கொடுக்க அவள் ஏறி அமர்ந்துக் கொண்டாள். அன்று பார்த்த அதே முகம். உடல் மட்டும் சற்றும் கொழுத்திருந்தாள்.
பாடசாலையில் மாணவர்களை இறக்கிவிட்டப்பின் அவளுடன் அவன் பயணம் தொடர்ந்தது. அதுவே அவனது வாழ்நாள் பயணமாக இருந்திருக்கக் கூடாதா....? என அவனின் மனம் கடந்தகாலத்தின் சாபம் நினைத்து ஏங்கியது.
" இங்கன நிறுத்துங்க பிளீஸ்...." என்றாள். அவன் உலகம் வேறாக இருக்க அவள் குரல் அவன் செவியில் விழவில்லை. "ஓ....சிங்களமா...? " என மனதுள் கேட்டுக்கொண்டவள் " மெதன நவதன்ட" என சொன்னாள். அதுவும் அவன் காதில் விழாதிருக்க சத்தமாக மீண்டும் தன் சொன்னாள். திடுக்கிட்டு திரும்பியவன் அவள் முகத்தை பார்த்துவிடக் கூடாது என நினைத்து மின்னல் வேகத்தில் திரும்பிக்கொண்டான். "( மெதன பஹிண்ட ஓனே) இங்கன எறங்கணும்" என மீண்டும் அவள் சொல்ல வண்டியை நிறுத்தினான். அவள் இறங்கினாள்.
" திரும்பவும் வீட்டுக்கு போகணும். சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வாறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுவிங்களா...." என தயவான குரலில் பின்னின்றே கேட்க, ஆயுள் முழுவதும் காத்திருக்க சபதம் எடுத்தவன் இந்த சில மணித்தியாலங்கள் காத்திருக்கவா மறுக்கப்போறான். முன் பார்த்தவாறே " சரி.." என தலையாட்டினான். அவள் வேகமாக நடையைக்கட்டினாள்.
**** ***** **** ****
சதாசிவத்தின் புதிய பாதையில் வண்டியை ஏற்றி அவன் வீட்டு முற்றத்தில் நிறுத்தினான் ஔவியன்.
முற்றத்தில் பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் சதாசிவம்.
" அண்ணே.... ரோட் செம்ம... " ஆள்காட்டி விரலை மடித்து பெருவிரலோடு இணைத்து புருவங்களை உயர்த்தி ஔவியன் சொன்ன தினுசில் சாதாசிவம் சிரித்தேவிட்டான்.
"இதோ நர்மதா வீட்டுக்கு கொஞ்சம் போய்ட்டு வாறே. நர்மதாவுட்டு அம்மா வீட்டலதானே? " பேசிக்கொண்டே லயத்தினுள் நுழைந்தான்.
வழமை போல எண்பது வயது பாட்டி அந்த பழைய மரக்கதிரையில் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன சுந்தர மாஸ்டர்.... உ புருசனதானே நினைச்சிகிட்டு இருக்க. இரவு கனவுலலாம் வருவாரா இருக்குமே " என விளையாட்டாய்ச் சொல்லிவிட்டு அருகில் சென்றான்.
ஔவியன் கிழவியை "சுந்தர மாஸ்டர்" என்றுதான் அழைப்பான். கிழவி தடியுடன் நடமாடிக் கொண்டிருந்த காலம் வரை ,
"எங்க அப்பா யார் தெரியுமா? மாஸ்டர். அந்த கலத்துலயே வெள்ளகாரன்களோட இங்கிலீஸ்ல பேசுவாரு. சுந்தர மாஸ்டர்னால் எல்லாரும் கை கட்டிதான் நிப்பாங்க. வெள்ளகாரன் இருக்கப்பயே தனியா ஒரு பள்ளிக்கூடத்த ஆரம்பிச்சி நடத்துனார். இந்தா.... இப்ப இங்க இருக்கே, அந்த பள்ளிக்கூடம்... எங்க அப்பா ஆரம்பிச்சி நடத்துன பள்ளிக்கூடம் தான். "
என அப்பா பெருமைச் சொல்லி பிதற்றிக்கொண்டு சுந்தர மாஸ்டர் புராணம் பாடுவாள் . அதை கிண்டல் செய்யுமுகமாகத்தான் எப்போதும் " சுந்தர மாஸ்டர் மகள்..." என்று அழைப்பான். அது மருவி இப்போது சுந்தர மாஸ்டரில் வந்து நிற்கிறது.
" யென்னோட சுந்தர மாஸ்டருக்கு எதுவுமே வாங்கிட்டு வரலயே.... அவசர வேலயா வந்தேன்னா ....அதான்.... அடுத்தமுற கண்டிப்பா வாங்கிட்டு வாரே." என கொஞ்சலாய் செல்லமாய் பேசி கிழவியின் கன்னத்தை கிள்ள,
",நீ....அடுத்தமுற வாரப்ப இந்த ஒடம்புல உசுர் இருக்குமோ இல்லையோ..."
எப்போதும் வராத வார்த்தை கிழவியின் வாயிலிருந்து வர ஔவியனின் கண்கலங்கிவிட்டது.
" யே..... ? யே...... சுந்தர மாஸ்டர் அப்படி சொல்ற ? அப்படிலாம் ஒன்னும் ஆகாது. சரியா " என குரல் தளர்ந்து பேசியவன்,
"ஹே...ஹே... இந்த ஒடம்பு இன்னும் ஐம்பது வருசத்துக்கு மேல தாங்கும். பெரிய சீன் போடாத கெழவி " என கவலையை மறைத்து தைரியத்தோடு வீரமாய் சிரித்துக்கொண்டே கூற,
"ஹா ஹா ஹா..." பொக்கை வாயில் சத்துமாய் சிரித்தாள் கிழவி. அப்படியே கொஞ்சி தலையோடு தலை வைத்து மெல்லியதாய் முட்டிவிட்டு "தெட்ஸ் மை சுந்தர மாஸ்டர்" என்று கூறிவிட்டு இரண்டு வீடு தள்ளியிருக்கும் நர்மதாவின் வீட்டின் முன் கால் பதித்தான்.
" நர்மதா.... நர்மதா...."
"வாங்க ஔவியன் தம்பி. " வரவேற்றாள் நர்மதாவின் தாய் மலர்.
" மலரக்கா... நர்மதா எங்க? யே ட்ராமா ப்ரெக்டிஸ்க்கு வரல? "
"அதுவா... அது வந்து தம்பி.... " பேச்சை விழுங்கி இழுத்தவள், " வாங்களேன் உள்ளுக்கு போய் உட்காந்து பேசுவம்.
உள்நுழைந்தான். கதவில்லாத ஓர் அறையின் நுழைவாயிலின் வழியாக தெரிந்த இரு தொங்கல்களை இணைத்துக் கட்டிய ஒரு கொடியில் தொங்கிக்கொண்டிருந்த கொஞ்ச ஆடைகள் அந்த வீட்டிற்கென இருந்த அந்த ஓர் அறையில் ஓர் அலுமாரி இல்லை என்பதைச் சொல்லியது . அந்த அறையைத் தாண்டி,
ஆறில் உயிர் பிழைத்திருந்த மூன்றும் ஔவியனை பார்த்துச் சிரித்தன. அந்த மூன்றில் ஒன்றில் அமர்ந்தான். நர்மதாவின் தந்தையின் வீரச் செயல்களில் பழியாகிப்போய்விட்டிருந்தன மற்ற மூன்றும். மலர் சீட்டு போட்டு வாங்கியச் சொத்து. நிறம் பார்த்து, டிசைன் பார்த்து ஆசையாசையாய் வாங்கி வந்திருந்தாள். கடைசியாய் மிஞ்சிருந்த இரும்பு நாற்காலியும் இரும்பு கடைக்கு போய் சேர்ந்தப்பின் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தரையே தெய்வமென பழகிவிட்டப்பின்னும், வீட்டிற்கு வரும் பிள்ளைகளின் நண்பர்களுக்காக வேண்டியே கடைசியாய் ஒரு முடிவிற்கு வந்து அடகு வைத்த நகைகளில் ஒன்றைக்கூட திருப்பாது சேர்த்த சீட்டு காசில் பிளாஸ்டிக் நாற்காலி செட் ஒன்றை வாங்கி வந்திருந்தாள். "ஆண்டுகள் பல பயன்படுத்த முடியுமா?" என ஆயிரம் முறை விசாரித்தே வாங்கி வந்திருந்தாள். அவளுக்கெப்படித் தெரியும்?
இரும்பும் நகையும் விலைக்குப் போகும். மரமும் பிளாஸ்டிக்கும் தீக்கு போகும் என்று. அடுப்பெரிப்பதற்கே கடையில் பயன்பட்டன அந்த பிளாஸ்டிக் கதிரைகள்.
" தம்பி நர்மதா இப்ப ஸ்கூலுக்கு கூட போறது இல்ல. அவ அப்பா அவளுக்குனு அஞ்சி சதம் சேத்து வைக்காம குடிச்சி குடிச்சே எல்லாத்தையும் அழிச்சிட்டு... கடைசியா போயும் சேந்துட்டது. இப்ப நா தனியா ஒத்த ஆளா என்னத்த பண்ணுவெ. மூனு புள்ளங்கள வச்சிகிட்டு" கண்ணீர் விட்டாள்.
"அதுக்கு என்னதான் மலரக்கா பண்றது? கொஞ்சம் பொறுங்க. நானும் சில என்ஜிஓக்கள்ல பேசியிருக்கெ. புள்ளங்க படிப்பு செலவுக்கு சரி எதும் உதவி கிடைக்கும். கொஞ்சம் பொறுங்க."
" இல்ல தம்பி, இவ்ளோ நாள் எப்படியோ சமாளிச்சிட்டெ. ஒரு புள்ளையயாவது படிக்க வக்கணுமே. அதுக்கு .... மூத்தவள வேலைக்கி சேத்துவிட்டுருக்கெ தம்பி"
"வேலைக்கா? இந்த சின்ன வயசுல என்ன வேல செய்வா அவ?"
"வீட்டு வேலக்கிதா தம்பி."
சூட்டோடு கதிரையிலிருந்து எழுந்தவன் ,
"உங்களுக்கென்ன பைத்தியமாக்கா? சின்ன புள்ளய அதுவும் பொம்பளபுள்ளய போய் வீட்டு வேலக்கி.....ச்சே.....அறிவிருக்கா" என்று திட்டிவிட்டு வெளியே வந்து நின்றான்.
"நானு விரும்பியா அனுப்புரெ. நானும் வேறென்னதா தம்பி செய்வெ?" கண்ணீரோடு நிலப்படியில் சாய்ந்து நின்றாள்.
"சரி, எவ்ளோ நாளா போறா? அங்கேயே தங்கிருவாளா ? இல்ல....வீட்டுக்கு வந்துருவாளா? "
"இப்ப ரெண்டு வாரமா போறா. இல்ல தம்பி அங்க தங்கிருவா. வீட்டுக்கு வந்து வந்து போனா.... சின்னவ அம்மா செல்லத்துல வேலைல கவனம் இருக்காதுனு சொல்லி அங்கயே தங்கிர சொல்லிட்டாங்க அந்த வீட்டம்மா. "
"பொம்பல புள்ளைய போய் இன்னொரு எடத்துல தங்க வச்சிருக்கிங்களே மலரக்கா நீங்க இப்படி செய்விங்கனு கொஞ்சமும் எதிர்பார்க்கல நா. கஷ்டம். யாருக்குதான் கஷ்டம் இல்ல? அதுக்காக இப்படியா செய்வாங்க? சொல்லி வேலயில்ல. நல்லா படிக்குற பிள்ள வேற. அவ எவ்ளோ கெட்டிக்காரி னு உங்களுக்கு தெரியுமா? ச்செ.... எப்படி மலரக்கா கொஞ்சம் கூட யோசிக்காம...? வேலக்கி சேத்த அவன்களுக்கு அறிவு எங்க போச்சி? ச்செ.... மனுஷன்ட வறுமையில குளிர் காயுர எச்ச நாய்கள். "
"தப்புதான் ஔவியன். என்னோட நிலம அப்படி? " கண்ணீரா தார தாரையாக கொட்டிக்கொண்டேயிருந்தது.
"சரி, மூத்வள வீட்டு வேலக்கி அனுப்பிடிங்க. பையன என்ன செய்ய போறிங்க?"
"அவனுக்கும் கொழும்புல கட ஒன்ல வேல இருக்கதா சொன்னாங்க. அங்கத்தான் அனுப்பனும்? "
" ஓ.... சூப்பர்.... என்னமாவது பண்ணுங்க மலரக்கா." என்று அதற்கு மேல் அங்கிருந்தால் கோபத்தில் ஏதும் தவறாக பேசிவிட கூடும் என தன்னை அறிந்து... அத்தோடு வெளியே வந்துவிட்டான்.
தன்னுள் எழுந்த ஆத்திரத்தை தணியவிட்டு , பின் ஏதோ சிந்தித்தவனாய்... "நாளை போயா நாள் தானே? (பௌர்ணமி தினம்) போயநாள் லீவ் கொடுப்பாங்கல்ல. வீட்டுக்கு வருவாதானே. நாளைக்கு கட்டாயம் அவள அனுப்பிவிடுங்க. " என்றான்.
"சரி தம்பி... இன்னைக்கு ஆறு... ஆறரைக்கு வந்துருவா. நா நாளை அனுப்பிவிட்றன் தம்பி"
"சுந்தரம் மாஸ்டர்.... போய்ட்டு வாரே...... " மீதியிருந்த கோவத்தையும் கிழவியின் பொக்கைவாய்ச் சிரிப்பிற்காக இறக்கி வைத்து விட்டு கிழவியின் அருகிற்குச் செல்ல, தலையோடு தடவி உச்சி மோர்ந்து " போய்ட்டு வா சாமி" என்றாள்.
முற்றத்தில் சதாசிவத்தை காணவில்லை.
" வா தம்பி நாம போகலாம் " என பைக்கை திருப்பி எடுத்தான்.
**** ***** ***** *****
"இப்ப நாங்களும் எத்தன நாளா அலையிறம். ஒழுங்கா.. தீர்மானமா ஒரு வார்த்த சொல்லி அனுப்பமாட்டிங்களா? எங்க அம்மாவும் பாவமில்லையா? தமிழ் பிள்ளையா இருக்கிங்களே, கொஞ்சம் பாத்து செய்துகொடுப்பிங்கணு பாத்தா... சிங்களவங்கல விட அலட்சியமா இருக்கிங்களே. "
"என்ன பேசுறிங்க நீங்க? சொன்னதெல்லாம் சரியா கொண்டுவந்து தந்தாதானே செய்து குடுக்கலாம்."
" தேவையான எல்லாத்தையும் ஒரே முறையில சொல்லலாம்தானே? ஒன்னு ஒன்னா கேட்டுகிட்டுருக்கிங்க ?"
"இங்க பாருங்க இலங்கோ... தேவையில்லாம பேசாதிங்க. இப்படி சிங்களாக்கல்கிட்ட பேசுவிங்களா நீங்க? நா தமிழ்ன்றதாலதானே இவ்வளோ பேசுறிங்க. உங்களுக்கெல்லாம் நா கொடுத்த இடம் அதிகம். சும்மா இங்கனருந்து கத்தாமல் போங்க. உங்க அம்மாவுட்டு பேர்... பேர்த் செடிபிகட்ல ஒரு மாதிரியும் ஐடி காட்ல ஒரு மாதிரியும் இருக்கு. ஒரு எழுத்து மாறி இருக்கு. அந்த ரெண்டு பேரும் ஒருத்தர்தான்னு சொல்லி உறுதிபடுத்தி ஒரு கடிதம் கொண்டு வாங்க. உங்களுக்கு விளப்பம் இல்லனா விவரமான ஒருத்தரோட வாங்க. தயவு செய்து இப்ப போங்க" என படபட என பொறிந்து தள்ளியவள் , "இந்த தமிழன்களே இப்படித்தான்... ச்சே " என வாயுக்குள்ளும் முணுமுணுத்தாள்.
" படிச்ச திமிர்ல பேசாதிங்க சரியா, இந்த வேல கிடச்ச ஒரே தமிழ் பொண்ணுன்ற மெதப்புல இருக்கிங்க...."
என பேசியவன் அம்மாவை அழைத்துக்கொண்டு அந்த காரியாலயத்தை விட்டு வெளியேறினான்.
....விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்....