• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாழிசை 2

மதுரீகா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 16, 2023
18
15
3
Coimbatore
அத்தியாயம் 2.,

"சீக்கிரம் வா மதி.. முதல் நாளே லேட்டா போனா எப்படி, அங்க வேலை கிடைச்சதே பெரிய விஷயம்", என தீபா பரபரப்பாக சொல்ல.

"வரேன் டி. கொஞ்ச வெயிட் பண்ணு. பத்து மணிக்கு தான் ஆஃபீஸ் மணி ஒன்பது தான் ஆச்சு", என அவள் சாவகாசமாக சொன்னாள்.

"சரிதான். இங்க இருந்து ஆபீஸ் போறதுக்கு முக்கால் மணி நேர ஆகும், ட்ராஃபிக் இருந்தா பன்னிரண்டு மணிக்கு தான் போக முடியும்", என கிண்டலாக சொன்னவள், அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்து கதவை பூட்டி விட்டு இழுவையாகவே அழைத்துச் சென்றாள் தீபா.


"ஸ்கூல் போக அழுற குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்க டி நீ", தீபா.. மதியின் குழந்தை தனமான செயலில் கடுப்பாகி விட்டாள்.

"சரி கோவப்படாத போகலாம்", என மனதே இல்லாமல் ஆசைப் பட்ட அலுவலகத்திற்கு ஆசையே இல்லாமல் புறப்பட்டாள் இசைமதி.


இருவரும் சொன்னது போல பத்து மணிக்கு பத்து நிமிடம் இருக்க அலுவலகத்தில் நுழைந்தனர்.

ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்க, அனைவருக்கும் முன்னேயே வந்து இருந்தான் யாழ்.

"மேடம் சார் உங்களை வர சொன்னார்", என இசையிடமும், " உங்களுக்கு வேலை மேல லெஃப்ட் சைட் கேபின் மேம்", என சொல்லி விட்டு சென்றான் அசிஸ்டன்ட் மேனேஜர் அருண்.

தீபா சென்று விட, ஒரு வித படபடப்புடன் அவனின் அறைக்குள் நுழைந்தாள் இசை.

"சார்",
"எஸ். உள்ள வாங்க இசைமதி", என்றவன் அவளைப் பார்க்க. அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து காலை வணக்கம் சொல்ல முயல, வார்த்தைகள் வர வில்லை அவளுக்கு. அவனின் பார்வையில் என்னவோ அவளை பீதி ஆக்கியது.

அவன் முகம் கனிவாக இருந்தாலும், கண்களில் கருடன் குடி இருந்தான். அப்படி ஒரு கழுகு பார்வை. அவளுக்கு நெஞ்சே நின்றுவிடும் என்றே தோன்றும் அளவிற்கான பார்வை வீச்சு.

மேலும் அவளை கலவரப் படுத்தாமல், "ரைட் சைட் உங்க டேபிள், எனக்கு நீங்க பெர்சனல் அசிஸ்டன்ட். சோ எப்பவும் என் கூட இருக்கிற போல தான் இருக்கும்", என்றான் இருக்க வேண்டும் என்ற கட்டாயத் தோணியில்.

"எஸ் சார்", வேறென்ன சொல்ல முடியும். ஜாயினிங் லெட்டர் வாங்கும் போதே, ஐந்து வருட ஒப்புதல் பத்திரம் கையெழுத்து இட்டு தான் வேலையில் சேர்ந்தாள் இசை.

அவளுக்கு மட்டும் தான் இந்த அக்ரீமெண்ட் எல்லாம். ஆனால் அவளுக்கு இது அலுவலகத்தின் விதிமுறை என எண்ணி, ஒப்புதல் பத்திரம் என்ற தலைப்பை மட்டும் பார்த்து விட்டு உள்ளே இருக்கும் விவகாரம் தெரியாமல் கையெழுத்து போட்டு அவனிடம் நீட்டி இருந்தாள்.

ஐந்து வருட அக்ரிமெண்ட். எங்கும் செல்ல முடியாது என்ற கட்டளையின் பேரில் தன் வேலையில் கவனம் பதிக்க எண்ணம் கொண்டாள்.

"இசை", என்றான் மெல்லியதாக.

"ஹான்", பட்டென் அவனைப் பார்க்க.

"சாரி, இசைமதி இசை மதின்னு சொல்ல லேட் ஆகுது, நான் இசைனு மட்டும் மைண்ட் ல வச்சுக்கிறேன்", என்றான் இயல்பாக.

அவளின் தலை நாலா புறமும் ஆடியது. அவன் உள்ளுக்குள் கொடூரமாக அவளைப் பார்த்து சிரித்தான். வெளியிலோ மெல்லிய புன்னகை.

"இன்னைக்கு வீனஸ் ஹோட்டல் ல ஒரு மீட்டிங் இருக்கு, ரெண்டு மூணு பேரு ஃபண்ட் கொடுக்க இன்வைட் பண்ணிருக்காங்க.. நீங்களும் கூட வரணும் இசை. சோ டிரெஸ்ஸிங் ல கொஞ்சம் கான்சென்ரேட் பண்ணுங்க. அப்புறம் அவங்களை பத்தின டிடைல்ஸ் எல்லாம் நோட் பண்ணிக்கோங்க", என்றவன்

"ஃபைவ் ஒ கிளாக் மீட்டிங்", என வெளியில் செல்ல போனவன்.

"இனிமேல்இந்த டிடைல்ஸ் எல்லாம் நீங்க தான் நோட் பண்ணி வைக்கணும். லைக் என்னோட ரெஸ்ட் டைம் என்னனு கூட", என்றவன் கிளம்பி விட,

அவனின் பேச்சில் இயல்பு இருந்தும் எதோ ஒன்று அவளை உறுத்தியது.


"ரெஸ்ட் டைம் கூடவா. விட்டா ரெஸ்ட் ரூம் போறதுக்கு கூட என்னை டைம் நோட் பண்ண சொல்வாரு போல", என அதிர்ந்து பெரு மூச்சு விட்டாள் இசை.


அவன் சென்று தன் மற்ற கம்பெனிகளை பார்த்து விட்டு மீண்டும் அறைக்குள் வர, இசை மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டு இருந்தாள்.

"இசை.. இன்னும் ஒன் ஹவர் ல நம்ம ஹோட்டல் வீனஸ் ல இருக்கணும். கோ டூ சேஞ்ச் யுவர் டிரஸ்" என்றவன் கணினியில் மூழ்கி விட..
முக்கால் மணி நேர பயணத்தை நினைத்தே கடுப்பாக இருந்தது.

"சார். என் வீடு போறதுக்கு முக்கால் மணி நேரம் ஆகும். சோ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இந்த டிரஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்களாமே", என்றாள் தாழ்வான குரலில்.


அவளின் பதிலில் யோசனை வயப் பட்ட யாழ், " ஓகே", என மீண்டும் கணினியில் மூழ்கி விட சரியாக ஐந்து மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கும் நேரத்தில் எழுந்தவன் "போலாம்", என்க பின்னேயே இசையும் சென்றாள்.

காரில் ஏறியவன் தயங்கி நிற்பவளை பாத்து, " இந்த மாதிரி மீட்டிங் வாரத்தில் நாலு இருக்கும். சோ ஒவ்வொரு டைமும் உங்களை ஒவ்வொண்ணா சொல்லிட்டு இருக்க முடியாது.

நல்லா டிரஸ் பண்ணனும். நான் கார்ல ஏறினா நீங்க ஏறி இருக்கணும். டைம் வேஸ்ட் பண்ணாம காரியத்தில் கண் இருக்கணும்", என்றவனை அமைதியாக பார்த்து இருந்தாள் இசை.


இருவரையும் ஏற்றிக் கொண்டு அந்த கார் ஹோட்டல் வீனஸ்ஸை நோக்கிச் சென்றது. பத்து நிமிடத்தில் ஹோட்டல் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இசையுடன் உள்ளே நுழைந்தான். இசை அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடினாள்.

அவர்கள் இருவரும் உள்ளே நுழைய, கோட் சூட் அணிந்த மத்திம வயது ஆண்கள் இருவரும் தாம் இருக்கும் இடத்தை அவனுக்கு கையசைத்து உணர்த்திட, அவர்களை நோக்கிச் சென்றான் யாழ், அவனுடன் சென்றாள் இசை.

"வெல்கம் மிஸ்டர். யாழின்பன்", என அவர் கை குலுக்க,

"சார்", என மென்மையாக அவர்களைப் பார்த்து சிரித்தான் யாழ்.

"எங்களோட டுவென்டி பர்சென்ட் ஷேர், உங்களோட யாழ் பவுண்டேஷன்க்கு குடுக்கலாம்னு முடிவு பன்னிருக்கோம், அது பத்தின உங்க முடிவு", என யாழிடம் ஒருவர் கேட்க..

"தேங்க் யூ சோ மச் சார், உங்களோட டையப் பத்தி நிறைய கேள்வி பட்ருக்கேன், பெஸ்ட் சோஷியல் சர்வீஸ் ஃபவுண்டர் நீங்க", என அவர்களை அவன் புகழ.

"யங் மேன், நல்லா பேச கத்திருக்கீங்க",என்றார் அவனின் புகழ் மாலையை புரிந்து கொண்டவர்.


அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு, பேசி முடித்து ஃபண்ட் பத்தின டாக்குமெண்ட் களில் கையெழுத்து போட்டு, அவர்களிடம் கையெழுத்து வாங்கி என இரவு எட்டை தொட்டது மணி, அனைத்திலும் உடன் இருந்தாள் இசை.

அவனும் எதற்கு எடுத்தாலும், "இசை அந்த ஃபைல் குடுங்க, இசை புட் ஆர்டர் பண்ணுங்க, இசை.. இசை... இசை.....", அவளின் பேரை கூவித் தள்ளிவிட்டான். அவளுக்கு இசையே வெறுத்து போகும் அளவிற்கு அவன் படுத்தி விட்டான்.

"ஓகே யாழ், நாங்க கிளம்பறோம்", என அவர்கள் எழ..
"நைஸ் மீட்டிங் யூ சார்", என இருவருக்கும் முடிவுரை வணக்கத்தை சொல்லி விட்டு அவர்களை வழியனுப்பி வைத்தான் யாழ்.

திரும்பி வர இசை தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள்.

"இசை... வாட் ஹேப்பன் டூ யூ", என அவள் முகத்தைப் பார்க்க.

"நத்திங் சார், ஐயம் ஆல்ரைட்", என்றவள் எழுந்து நிற்க,

"ஓகே போகலாம்", என அவளை அழைத்துக் கொண்டு பார்க்கிங் வந்தான்.

காரை கிளப்பிக் கொண்டு இருவரும் புறப்பட, " வீடு எங்கனு சொல்லுங்க ட்ராப் பண்ணிடுறேன். ஆபீஸ் க்ளோஸ் ஆகிருக்கும்", என்றான் தான் மணிக்கட்டில் கட்டி இருந்த கடிகாரத்தை பார்த்துக் கொண்டு..

"ரொம்ப தூரம் சார், போகவே ஒன் ஹவர் ஆகும்", என்றாள் சோர்வாக. அவளை அழைத்து அழைத்தே சோர்வாக்கி விட்டான்.

"ஒரு நாளுக்கு இப்படி டயர்ட் ஆனா எப்படி இசை.. இது தானே ஆரம்பம்", என்றான் முகத்தில் மறைத்துக் கொண்ட குரூர புன்னகையுடன்.

அதை கவனிக்காத இசை," அப்படி எல்லாம் இல்ல சார். ஏ சி சேரல.. அதன் லைட் ஆ தலை வலிக்குது", என்றாள். நிஜமும் அது தான். ஏசிக்கு பழகிறாதவள் இசை, இன்று அதிக நேரம் ஏசியின் கீழேயே இருக்க தலை வலிக்க ஆரம்பித்தது விட்டது.

"ஹோ.. ஏசில இருந்தா தலை வலி வருமா", என மெதுவாக தனக்குள் கேட்டுக் கொண்டான்.

"ஓகே நான் உங்களை வீட்ல ட்ராப் பண்ணிடுறேன் அட்ரஸ் சொல்லுங்க", என கேட்க.
அவளும் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து விட்டாள், இருக்க இருக்க தலை வலி அதிகம் தான் ஆனதும் காரிலும் ஏசி. அவள் சொல்லியும் அவன் அதை அணைக்கவில்லை.

அவளால் சொல்லவும் முடியவில்லை. முதலாளியிடம் ஆர்டர் போட முடியுமா, எனக்கு ஏசி வேண்டும் என்று அவன் சொல்லி விட்டாள் அவமானம் தான். வாயை மூடிக் கொண்டு இருப்பது சிறப்பு என கண்களை மூடி சாய்ந்து விட்டாள்.


சிறிது நேரம் ஏசியை அணைக்காமல் வைத்தான். என்ன தோன்றியதோ பட்டென அதை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களை திறந்து விட்டான். சிலுசிலுவென்ற காற்றில் மூச்சை இழுத்து விட்டு கண்களை திறந்தாள் இசை.


அவன் அழகிய புன்னகையுடன் அவளை பார்க்க, அவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி எஃபெக்ட் ஆரம்பித்தது.
 
Last edited:
  • Like
Reactions: Anandi