என்னை மீட்டும் யாழ் இவளோ...?
யாழ் - 02
விரும்புகிறவளின் குரலோசையோடு நித்திரையானவன் காலை எழுந்தவுடன், இரவின் இருட்டில் கைநிதானத்தோடு வைத்த அதே இடத்தில் ஏக்கத்தோடு இருந்த அந்த தொலைபேசியையே முதலில் எடுத்து பார்த்தான். .
"குட் மகௌனிங்..."
சிற்பிகாவின் குறுந்தகவலை பார்த்துவிட்டு ஒன்றும் புரியாதவனாய் அவள் இலக்கத்தை டயல் செய்தான்.
"குட் மகௌனிங்"
" அதென்ன புதுசா"
"எது..?"
"அதான்,. இப்போ சொன்னிங்களே..."
" என்ன சொன்னேன்..?"
"அதாண்டியம்மா, குட் மகௌனிங் னு ஏதோ..." புது சொல்லை வற்புறுத்தலாக வரவழைத்துச் சொன்னான்.
"ஹா.... அதுவா...?"
"ஒவ்வொரு நாளும் உங்களின் நாளாக இருக்கணும். சோ.., குட் மோனிங்க்கு பதில்
'குட் மகௌனிங்' பிடிச்சிருக்கா ?
இயல்பாய் கேட்டாள் சிற்பிகா.
அவளது அறையின் ஜன்னல்களை திறந்து சூரிய ஒளியை கண்களை மூடி சுவாசித்து அவளுள் அனுமதித்துவிட்டு அறைக்குள்ளும் அனுமதித்தாள்.
அந்த ஒளி பச்சைப் பசேலென குட்டி தாவர பூங்கா போல் இயற்கை கொஞ்சியிருந்த அறை முழுதும் பரவியது.
அவள் அறையே சொல்லும் இவள் மகௌரனின் காதலி மட்டுமல்ல, இவளொரு இயற்கை காதலி என்றும்.
கட்டில் விரிப்பு, நுளம்பு வளை, ஜன்னல் மற்றும் கதவு திரை, பாத துடைப்பான் எல்லாமே இளம் பச்சை நிறத்தில் தெரிவுசெய்திருந்தாள்.
உலகிலேயே மிக பிடித்த பொருள் எது என கேட்டாள் "கண்ணாடி" என்றே சொல்வாள். அந்தக் கண்ணாடி மேசையிலும் சின்னச் சின்ன மிருக உருவ பொம்மைகளை அடுக்கியிருந்தாள். சிவப்பு நிற பொம்மை ஒன்று கண்ணாடி முன் நிற்பவர்களை பார்த்துக்கொண்டேயிருக்கும். இருபுறங்களிலும் மேலிருந்து கீழாக பச்சை கொடிகளை வளர விட்டிருந்தாள்.
பொருத்தமான இடங்களில் சின்னச் சின்ன செடிகளை பொருத்தமான சாடியில் வைத்திருந்தாள். கதவின் வலப்பக்கமாக நேர்த்தியாக புத்தகங்கள் அடுக்கப்பட்ட புத்தக இராக்கையொன்றும் இருந்தது. அதில் ஆங்காங்கே புத்தர் , விநாயகர் , கிருஷ்ணன் , யசோதையுடன் கண்ணன், கிருஷ்ணணும் இராதையும் இன்னும் சிலர்...சிலைகளாக இருந்தார்கள்.
இளம் பச்சை விரிப்புடன் இருந்த கட்டில் மேல் கடும் பச்சை உரையோடு இரு தலையணைகளும், மஞ்சள் நிற கரடி பொம்மையும், பச்சை சட்டை அணிந்த சிறுமி பொம்மையும் வைத்திருந்தாள். கடும்பச்சையும் இளம் மஞ்சள் நிறமும் கலந்தாற்போல் அவளது போர்வை கட்டிலின் முக்கால்வாசியோடு மடித்து விரித்திருந்தாள். தலைப்பகுதி சுவற்றின் மேல் பிளாஸ்டிக் பச்சைக்கொடிகளை மூன்றடி நீளத்தில் தரை வரை தொங்கவிட்டிருந்தாள்.
கட்டிலின் இடப்பக்கம் அலுமாரி இருந்தது. சாதாரண உயரத்திலிருந்த அந்த அலுமாரயின் மேல் அவளது பாட்டி உபயோகித்த பழைமையான வெங்கல பாத்திரங்கள் சிலவற்றை காட்சிப்பொருளாக அடுக்கிவைத்திருந்தாள்.
டவல் கொழுவுவதற்கு என்றே ஒரு நீள பட்டியொன்றை சுவரோடு பொருத்தி பச்சை நிற டவலொன்றும், மஞ்சள் நிற டவலொன்றும் மடித்து தொங்கவிட்டிருந்தாள்.
மிக நேர்த்தியான அந்த பசுமை அறையின் ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு திரைககளை விளக்கியவள் மகௌரனுடன் பேசிக்கொண்டே கட்டிலில் விழுந்தாள்.
"அப்படிங்களா மேடம்..?"
"ஆமாங்க சேர், அப்படியேதான்...."
"அப்போ நானும், குட் சிற்பிகானிங்"
"குட்....சோ.....கியூட்.... மகௌரன்மா..."
"மகௌரன், ........."
இழுத்தாள். ஏதை கேட்க அத்திவாரம் போடுகிறாள் என யூகித்துக்கொண்டான் அவன்.
" நா ஒன்னு கேட்கட்டுமா..?
"ம்....கேளுடி செல்லக்குட்டி"
"என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கும்?"
"நினைச்சன், இதுதான் கேட்பிங்கனு. எத்தின முற கேட்பிங்க, அதே பதிலதானே சொல்லுவன் , உனக்கு தெரியும்தானே, அளுத்துப்போகாதா ?"
"அப்படித்தான் கேட்பேன். எனக்கு அளுத்துப் போகவே போகாது. நீங்க சொல்லுங்க பிளீஸ்."
பிடிவாதமாய் பேசினாள்.
அவளது இந்த செல்ல பிடிவாதம் அவனுக்கும் பிடிக்கும் என்பதை அவள் அறிவாள். அவனுக்கு பிடிக்காது என்றால் அவள் முதல்நாளே இப்படி பிடிவாதம் பிடிப்பதை நிறுத்தியிருப்பாள்.
அவன் கட்டிலில் மறுபுறம் புரண்டு தொலைபேசியை காது மாற்றிவிட்டு உணர்வோடு பேச தயாரானான். அப்படி சொன்னாள்தானே அவளுக்குப் பிடிக்கும்.
"சிற்பி மா....ஏன் தெரியுமா உன்ன எனக்கு பிடிக்கும்......; என் மொத்த எண்ணங்களின் செயற்பாடா நீ இருக்க. அதுநாளதாண்டியம்மா உன்ன ரொம்ப பிடிக்கும்."
"ம்......" அப்படியே கரைந்து போனாள் சிற்பி கா.
அந்த கரைசலோடு தொலைவாளா? இல்லையே, அடுத்தக் கேள்வியையும் தொடுத்தாள்.
"என்னை எவ்ளோ பிடிக்கும்? "
"அதான் சொன்னேனே....ரொம்ப பிடிக்கும்."
"........"
அவள் திருப்தியாகவில்லை என்பதை புரிந்துக்கொண்டவன்,
"என்னடியம்மா பிள்ள சைலண்டா இருக்கிங்க,...?"
"......."
"என் உயிரளவு பிடிக்கும்.
"......."
"லவ் யூ சிற்பி மா"
"எவ்ளோ..."
சட்டென அடுத்த கேள்வி.
மறுபடியும் மாட்டிக்கொண்டான்.
"என் ஆத்மாவே நீதான். நீ ஏ சாமிடி....கடவுள்.....
அவ்ளோ.....பிடிக்கும்"
மறுபடியும் கரைந்தாள்.
"......"
"......"
நிலவிய அமைதியில் ஆத்மாக்களின் உரையாடலை அவன் வெளிப்படையாய் களைத்தான்.
"நாம வெளில போகலாமா?"
"சரி...."
"பட் எதுக்கு"
"நீ வா முதல். நா சொல்றன் எதுக்குன்னு"
"......."
"சரி எழும்பி ரெடியாகுங்க மேடம். பாய்"
தொலைபேசியை துண்டித்தான்.
அவள் அந்த பச்சை காட்டிலிருந்து வெளியேறினாள்.
யாழிசை தொடரும்.....