• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியபாரதீ

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 28, 2022
Messages
23
என்னை மீட்டும் யாழ் இவளோ....?

யாழ் - 03

" இந்த ஓசி (b)பைக்லயும் எவ்ளோ கெத்தா போறிங்க ..... யூ சூப்பர் ....."

நீண்ட தூர அமைதியை கெடுப்பதற்காக வம்பிழுத்தாள்.

மகௌரன் பேச்சு கொடுப்பான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

பேசாமல் என்றாலும் ஏதோ இயல்பாய் சென்றுக்கொண்டிருந்தான். இவளது இத்தகையக் கிண்டலால் அவன் அவனது முகத்தை மேலும் இறுக்கிக் கொண்டதுதான் மிச்சம்.

"அய்யோ..... சோரி மகௌரன்.... விளையாட்டுக்குதானே சொன்னன்?" ச்செல்லம் கொஞ்சினாள்.

பைக் பிடிகளை பிடித்துக் கொண்டிருந்ததவனின் கைகளோடு தரைக்குச் சாமாந்தரமாய் உயர்ந்திருந்த இடப்பக்க தோள்பட்டையில் அவள் நாடியை வைத்து கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தாள்
.
" உர்ரென " இருந்தது அவன் முகம்.

இடுப்போடு கரங்களைக் போட்டு அவன் வைற்றோடு இறுக்கிகொண்டு,

"உம்மு மூஞ்சி....." மேலும் சீண்டினாள்.

அவள் முகத்தை கண்ணாடியில் சாடையாக பார்த்துவிட்ட அவனால் கோபத்தை தொடரமுடியாது போக, சாடையாக சிரித்துவிட்டான்.

" என்னை யாரும் கிண்டல் பண்ண தேவையில்ல, சீக்கிரம் நானும் ஒரு பைக் வாங்குவெ..." சிறுபிள்ளை போல் சொன்னான்.

"அதுல நாம ரெண்டு பேரும் லோங் ட்ரவல் செய்வோம்... " "அணைப்பை இறுக்கப்படுத்தினாள்.

அவன் பைக் பிடியிலிருந்து இடக்கரத்தை எடுத்து அவள் அணைத்திருந்த அவளது உள்ளங்கையை உதட்டில் வைத்து....,

"என் ச்செல்லம்டி நீ...." முத்தம் செய்தான்.

எத்தனை ச்செல்லமாய் கொஞ்சுகிறான். அவனது முதல் குழந்தையை போல.

அவன் முதுகின் மேல் அவள் கன்னத்தைப் புதைத்து கண்களை மூடியே சிறிது தூரம் பயணித்தாள்.

"புது (B)பைக் வாங்கினதும் யார (F)பெஸ்ட் கூட்டிட்டுப்போவிங்க....?" மெதுவாய் இழுத்தாள்.

"வேற யார.... என் செல்ல சிற்பத்ததான்..."

"டேய்....பொய்தானே...."

"இதுல என்ன பொய்?"

"பொய் இல்லதான்...... ஆனால் என்னைய இரண்டாவதா கூட்டிட்டு போங்க"

"இவள் என்ன சொல்ல வாறாள்...?" மனதுக்குள் சிந்தித்தான்.

"பெஸ்ட் சரோ அம்மாவ....அதான்...உங்கட அம்மாவ கூட்டிட்டு போங்க? அடுத்து என்னைய கூட்டிட்டு போங்க..., "

"ஏன்....? எனக்கு அம்மாவை பிடிக்கும் என்றதனாலயா? "

"ம்.... அதுநாலயும்தான், அதோட இன்னொரு காரணமும் இருக்கு"

"......"

" எனக்காக இப்படியொரு தங்கத்த பெத்து இவ்வளோ நாள் வளர்த்திருக்காங்களே....அவங்கள நா தினம்தினம் கும்பிடனுமில்லையா? அதுனால எதுவாக இருந்தாலும் நீங்க அவங்களுக்குத் தான் முதல் இடம் கொடுக்கணும்.... இரண்டாம் இடம் எனக்கு...."

மறுபடியும் உள்ளங்ககையை எடுத்து உதட்டோடு வைத்து ஒத்தியெடுத்து ,
"என் செல்லம்டி நீ...." என உள்ளங்கையை அவன் கன்னத்தில் வைத்து இறுக்கிக்கொண்டான்."

சிற்பிகா கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே வர, பாதையையும் கண்ணாடியில் அவளது முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே வண்டியைச் செலுத்தியவன் நீண்ட தூரத்தின் பின்
ஓரிடத்தில் நிறுத்தினான்.

அது ஒரு செருப்புக் கடை.

சிற்பிகாவின் செருப்பில் ஒரு பட்டி கழன்றிருந்த போதே அவளுடைய செருப்பை மாற்ற வேண்டும் என நினைத்திருந்தான். ஆனால் பொருளாதார சிக்கலோடும் நேர சிக்கலும் இருந்ததால் அந்த எண்ணத்தை நிறைவேற்ற முடியாமலேயேபோனது.

நாளை நாளை என்று இருக்க அந்த செருப்பு ஒவ்வொரு பட்டியாக கழன்று
தேய்ந்து பரிதாபமாய் கிடப்பதை கடைசி சந்திப்பின்போது கண்ட மகௌரன் , அன்றே இன்றைய நாளை திட்டமிட்டிருந்தான்.

காட்சிபடுத்தப்பட்டிருந்த செருப்பு ஜோடிகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வர சட்டென ஒரு ஜோடி அவன் கரம் தாவியது.

"இத ட்ரை பண்ணி பாருங்க சிற்பிகா"

தொழு நோயாளி போல் இருந்த அந்த செருப்பை அந்த கடையில் கழற்றிவைக்கவும் அவளுக்கு சங்கடமாகவே இருந்தது. ஆனாலும் கழற்றியாகவேண்டுமே. அதை கழற்றிவிட்டு அவன் கொடுத்த ஜோடியில் ஒன்றினுள் அவள் பாதத்தை திணிக்க முற்பட்டாள்.

ஒற்றைக்காலால் தடுமாறிக் கொண்டிருக்க,

"என்னடியம்ம் டான்ஸ் ஆடிட்டுருக்க" நக்கலாய் சிரிக்க,

"ஹேய்.... மகௌரன் ....சிரிக்காதிங்களேன்...." வலிந்து நெளிந்தாள் சிற்பிகா.

"ம்...சரி சரி சிரிக்கலடியம்மா"

அவளது தோட்பட்களை பிடித்து அங்கிருந்த சிவப்புநிற சோபாவில் அமர்த்தினான்.

அரை மண்டியில் இருந்து ஒரு காலை சற்று உயர்த்தி அவளது பாதத்தை தன் கரத்தால் ஏந்தி அந்த புதிய செருப்பினை மாட்டிவிட்டான். அந்த சின்ன பாதம் கச்சிதமாய் அந்த செருப்புக்குள் சென்று பொருந்திக் கொண்டது.

'சூப்பரா இருக்குடி..." என்பது போல் அவளது முகம் பார்க்க அவன் தலை உயர்த்தினான். அதே சமயம்,

"எப்படி இப்படி (F)பேர்பக்ட்டா செலக்ட் பண்றிங்க மகௌரன்...நீங்க செம்ம...." என்பதுபோல் சிற்பிகாவும் அவனை பார்த்தாள்.

இரு கண்களும் ஒரே சிந்தனையில் கொழுவிக்கொண்டன. அவன் கரத்தில் அவள் பாதம். அவன் கண்களில் அவள் கண்கள்...

ஏதோ தாக்கம் நடப்பதை உணர்ந்தவள் சட்டென பாதத்தை அவன் கைகளிலிருந்து எடுத்தாள். கண்களும் திசைமாறின.

மகௌரன் எப்போதுமே இப்படித்தான். சிற்பிக்காவிற்கு பொருத்தமானதை ஒரு சில நிமிடங்களிலேயே தெரிவுசெய்து விடுவான். அவளுக்கென வாங்கும் சாரி, உடை எல்லாமே அத்தனை அழகாய் கச்சிதமாய் இருக்கும். சிற்பிகாவை நெஞ்சில் சுமந்துக்கொண்டே அவனது தேடல் இருப்பதாலோ என்னவோ அவளுக்கு பொருத்தமானது அவன் கண்களில் வந்து ஒட்டிக்கொள்ளும்.

கணக்காளரிடம் மகௌரன் பணத்தைக் கொடுக்க பணப்பையை எடுத்தான். அந்த பேர்ஸை சிற்பிகாவே மகௌரனுக்கு பரிசளித்திருந்தாள்.

ஒரு முறை பஸ்ஸில் இருந்து எழும்பும் போது அந்த பேர்ஸ் அவன் அமர்ந்திருந்த இருக்கையிலேயே விழுந்துவிட்டது போல. அதை கவனிக்காது பஸ்ஸிலிருந்து இறங்கியவன் சில மணி நேரம் கழித்தே அவன் சட்டைப்பையில் பேர்ஸ் இல்லை என்பதை அறிந்தான்.

புதிய பேர்ஸ் என்பதால் அதில் அத்தியாவசிய பொருள் எதையுமே அவன் பழையதிலிருந்து மாற்றியிருக்கவில்லை. நூறு ரூபா தாளொன்றும் சிற்பிகா வைத்து கொடுத்த ஆயிரம் ரூபா தாளும்தான் இருந்தது. அந்த பேர்சின் பெறுமதியோடு இரண்டாயிரத்து நூறு ரூபாவிற்காக முச்சக்கர வண்டியொன்றில் அந்த பேருந்தை பின்தொடர்ந்தான்.

இடையில் எங்குமே அகப்படாத அந்தப் பேருந்து கிட்டத்தட்ட இருபது கிலோமீற்றர் தூரம் கடந்து பஸ் செல்லவேண்டிய இறுதி ஊரின் பஸ் தரிப்பிடத்தில்தான். தென்பட்டது.

அந்த பேருந்தும் அங்கு அப்போதுதான் ஓய்வுநிலையை அடைந்திருந்தது. பஸ் நடத்துனரிடம் விசயத்தைச் சொல்லி பேர்சை தேடினான்.

மகௌரன் அமர்ந்திருந்த அதே இருக்கையின் ஓரத்தில் இறுகி "என்னைக் காப்பாற்று மகௌரன்" என்பது போல வெளியில் வரமுடியாது திணறிக்கொண்டிருந்தது.

மகௌரன் போன உயிர் திரும்பிவந்தது போல் அந்த பேர்சை எடுத்து அவன் நெஞ்சோடு பொத்திக்கொண்டான். அன்று அவன் முச்சக்கர வண்டிக்காச் செய்த செலவோ ஆறாயிரம் ரூபாய்.

அன்று நடந்த இந்த சம்மவம் சிற்பிகாவின் நினைவில் வந்து மறைந்தது.

" நீ கொடுந்த பேர்ஸ் மிஸ்சாகிடுச்சி சிற்பி மா" என மகௌரன் தொலைபேசியில் சொன்ன போது,

"அதவிடுங்க, இன்னொன்னு வாங்கிக்கொள்ளலாம் என சிற்பிகா சொல்லியும்,

"இல்லமா நீ முதல் முதல் கொடுத்தது. அது எனக்கு வேணும்." என பிடிவாதமாய்... எப்படியோ அந்த பேர்சோடுதான் வீடு வந்து சேர்ந்தான்.

அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியமானவளாக இருக்கிறாள் என்பதை அன்றுதான் சிற்பிகா உணர்ந்தாள்.

கணக்காளரிடம் மகௌரன் பணத்தைக் கொடுக்க சிற்பிகா பொதியைபெற்றுக்கொண்டு
"அடுத்து என்ன? " என்பதை மகௌரனிடம் பார்வையால் வினவினாள்.

"இந்த குட்டி பொண்ணுக்கு ஒரு (H)ஹேன் (B)பேக் வாங்குவம்"

அடுத்த கடைக்குள் நுழைந்தார்கள். மகௌரன் வாயிலில் நின்றுக்கொண்டு யாருடனோ தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த சிற்பிகா அவன் வரும் வரை தோட்பைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

சட்டென அவளை ஒரு தோட்பை ஈர்க்க அதைக் அவள் கையில் எடுக்க, அதே பையை இன்னொரு கையும் பிடித்தது. அதே நேரம் அவ்விடம் வந்து சேர்ந்தான் மகௌரனும்.

"யாருடா நான் எடுத்த இந்த (B)பேக்கையே பிடிச்சி இழுக்குறது?" என திரும்பியவள் முன்னாடி நின்றதோ அவள் தோழி பிரியங்கா தான்.

"ஹேய்.... நீ எங்க இந்த பக்கம்"

"லீவ்ல வந்துருக்கன்... ஆமா நீ எப்படியிருக்க?"

"நல்லாருக்கண்டி"

"பேக் வாங்க வந்தியா? தனியாவா?"

"இல்லை, என மகௌரன் பக்கம் திரும்பினாள்"

சிற்பிகாவிற்கு மகௌரன் யாரென்பதை புரிந்துக்கொண்டாள் பிரியங்கா.

"இது போல இன்னொரு பேக் இருக்கா"
வியாபார பெண்ணிடம் வினவினாள் பிரியங்கா.

"இல்லங்க மெடம். அந்த டிசைன்ல அதொன்னுதான் இருக்கு. "

"சிட்...., இந்த பேக்தான் எனக்கு பேர்பெக்டா இருக்கும்... ஒன்னுதான் இருக்குனு சொல்றாங்களே.... " சிற்பிவிடம்தான் சொன்னாள். ஆனால் அவளுக்கு சொல்லாதது போல் , தானே முணங்குவது போல் சொன்னாள் பிரியங்கா.

"பிரியங்கா....நீயே இத வாங்கிக்கோ. நா வேறொன்னு செலக்ட்பண்ணிக்கிறென்"

"பரவாயில்லையாடி...." வறுத்தம் காட்டுவது போல் பாவனை செய்தாள்.

" ச்சி....அது பரவாயில்ல... நீ எடுத்துக்கோ"

பிரியங்கா அந்த பையை வாங்கிச் சென்றவுடன் சிற்பிகா வேறொன்றை வாங்கிகொண்டாள்.

கடையை விட்டு வெளியே வந்தவள்....

" அந்த பேக்தான் நல்லா இருந்துச்சி இல்ல"

விட்டுகொடுத்தாலும் ஒரு கவலை அவளுள் இருக்கத்தான் செய்தது என்பதை மகொரன் புரிந்துக்கொண்டான்.

"உனக்கு பிடிச்சிருந்துச்சின்னா நீ எடுக்கவேண்டியதுதானே....! நீ ஏ இப்படி இருக்க..."
ஒரு விதமான கோவத்தை வெளிப்படுத்தினான்.

"........"

மணி ஒன்று முப்பதை கடந்திருந்தது. பசி மூலையிடம் செய்தி அனுப்ப,

"சாப்பிடலாமா?" என்றான். "

"சரி," என்பது போல தலையசைத்தாள்.

அடுத்ததாக ஒரு உணவகத்தில் கால் பதித்தார்கள்.

"ஒரு பிளேட் பிரியாணி தாங்க , அப்றம் இரண்டு பிளேட் தாங்க" மகௌரனுக்கு பிடித்த உணவு என்பதால் அதையே ஓடர் செய்தான்.

கை கழுவுவதற்காகச் சென்றார்கள்.

தனது கையை கழுவி முடித்துவிட்டு, சுற்றியும் பார்த்துவிட்டு யாரின் கவனமும் அவர்களைச் சுற்றியில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு , அடுத்ததாக இருந்த குழாயை திறந்துகொண்டிருந்த சிற்பிகாவின் கையையும் கழுவி விட்டான் மகௌரன். சின்ன பிள்ளைகளின் கைகளை கழுவிவிடுவது போல்.

இது அவர்களுக்கிடையிலான வழமையான பழக்கமாக மாறிப்போனதொன்றுதான்.

கதையும் சாப்பாடுமாக நேரம் இனியதாக நகர்ந்தது.

பைக்கை பார்க்கிங்கிலிருந்து எடுப்பதற்காக சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது.

"சிற்பிகா......"

"......"

"உன் ப்ரண்ட்டுக்கு பிடிச்சதனால உனக்கு பிடிச்ச அந்த பேக்க கொடுத்துட்டிஙங்க

"......ம்.....ஆமா "

"அதுபோல...... என்னையும் இன்னொருத்திக்கு பிடிச்சிருந்தால் கொடுத்துருவிங்களா? "

"......."

இரண்டு கைகளிலும் பைகளை சுமந்துக்கொண்டு வந்தவனின் வலக்கையை அரைவாசிக்கு மேல் பிடித்து நெருக்கத்தை அதிகரித்து கைகளை இறுக்கினாள்.

"நீ எனது. நீ எனது மட்டும்தான். உனக்காக எதையும் இழப்பன். ஆனா எதுக்காகவும் உன்ன விட்டுக்கொடுக்கமாட்டென்...." என்று சொல்வது போல் இருந்தது சிற்பிகாவின் பிடி.

அவள் அதைதான் சொல்கிறாள் என்பதை மகௌரன் வெகு சுலபமாகவே உறுதியாகவே புரிந்துக்கொண்டான்.

வந்த பாதையில் திரும்பவும் பயணம் தொடர்ந்தது. ஆனால் வரும்போது இருந்த மகிழ்ச்சி திரும்பிச்செல்லும்போது இருவருக்குள்ளும் இருக்கவில்லை.

வீடு நெருங்க நெருங்க துயர் கூடிக்கொண்டே போனது.

வீடு நெருங்கியதும் சிற்பிகாவை இறக்கிவிட்டு மகௌரன் வெறும் உடலாகச் சென்றான்.

யாழ் இசை தொடரும்.....
 
Last edited:
Top