• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி - பாகம் 1

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ரகசிய கொலையாளி
பாகம் -1
வடபழனி முருகன் கோவிலில் தன் மகனுக்காக அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார் சிவகாமி.
குளித்து விட்டு தன் போலீஸ் யூனிஃபார்மை போட்டுக் கொண்டு இருந்தான் மணிகண்டன்.
ஹேப்பி பர்த்டே டா கண்ணா..... இந்தா பா என்று சொல்லி அவன் நெற்றியில் விபூதியை பூசி விட்டார் சிவகாமி.
தேங்க்ஸ் அம்மா......
நீயும் என் கூட கோவிலுக்கு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்......
அம்மா.......
சரி சரி..... ஒண்ணும் சொல்லல.....
இந்தாப்பா பிரசாதம்..... சர்க்கரை பொங்கல் ..... என்று சொல்லி ஊட்டி விட்டார் சிவகாமி.
கோவில்ல கொடுத்தாங்களா?
ஆமாம்......
ஃபிரீயா வா?
இல்லப்பா 20 ரூபாய்....
அப்படீன்னா அது பிரசாதம் இல்ல..... என்றான் மணிகண்டன்.
சரி சரி உன் கிட்ட பேச முடியாது...... சாப்பிடு..... என்றார் சிவகாமி.
சரிம்மா நான் கிளம்பறேன்...
இருப்பா ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிட்டு விட்டு போகலாம்.......
இல்லம்மா பசிக்கல.....
உனக்காக தான் சட்னி சாம்பார் எல்லாம் செஞ்சேன்......
சரி..... கொடுங்க..... என்றான் மணிகண்டன்.
ஒரு தட்டில் நான்கு இட்லி மற்றும் சட்னி சாம்பாரை தனித்தனி கிண்ணத்தில் வைத்து எடுத்து வந்தார்.
அம்மா..... என்னம்மா நீங்க ரெண்டு இட்லி ன்னு சொல்லி விட்டு இப்போ நாலு இட்லி எடுத்து வந்திருக்கீங்க..... என்றான் மணிகண்டன்.
கண்ணா..... ரெண்டே ரெண்டு ன்னு சொன்னேன் இல்ல..... ரெண்டு + ரெண்டு= நாலு தான?..... ரெண்டு சாம்பார் தொட்டு தரேன்..... ரெண்டு சட்னி தொட்டு தரேன்..... என்றார் சிவகாமி.
அம்மா..... என்றான் மணிகண்டன்.
கண்ணா..... நீ ஷூ போட்டுக் கொண்டே இரு..... நான் அப்படியே ஊட்டி விட்டிடறேன்.... என்று கெஞ்சினார்.
சரி.... பிறந்தநாள் அதுவுமா அவரை டென்ஷன் ஆக்க வேண்டாம் என்று நினைத்து அமைதியாக அவர் ஊட்டிவிட்ட இட்லியை சாப்பிட்டான் மணிகண்டன்.
ஷூ போட்டு விட்டு..... பிறந்தநாள் என்பதால் அவனுடைய அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டான்.
நல்லா இருடா கண்ணா....... இன்றைய நாள் உனக்கு நல்ல நாளா இருக்கனும்..... நல்லதே நடக்கனும்ன்னு கடவுளை வேண்டிக்கிறேன்...... பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொல்லி அவன் தலையில் தன் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.....ஜாக்கிரதையா போயிட்டு வாப்பா..... என்றார் சிவகாமி.
தேங்க்ஸ் அம்மா.... என்று சொல்லி அவரை கட்டி பிடித்து
பை அம்மா.... என்றான் மணிகண்டன்.
பை டா கண்ணா.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று தன் கணவனின் படத்திற்கு பூவை வைத்தார் சிவகாமி.
புல்லட் பைக்கை ஸ்டார்ட் செய்து தன் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றான் மணிகண்டன்.
ரைட்டர்( ரவி), போலீஸ் கான்ஸ்டபிள்(நவீன்), போலீஸ் கான்ஸ்டபிள் (இளங்கோ), போலீஸ் கான்ஸ்டபிள் ( மீனா குமார்), போலீஸ் கான்ஸ்டபிள் (ராஜேஷ்) மற்றும் ஹெட் கான்ஸ்டபிள்(பன்னீர் செல்வம்) அனைவரும் மணிகண்டனிடம் வந்து கைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
தேங்க்ஸ் அண்ணா.... தேங்க்ஸ் டா..... தேங்க்ஸ் இளங்கோ.... தேங்க்ஸ் மா.... தேங்க்ஸ் ராஜேஷ்.....தேங்க்ஸ் சார்.... என்று சொன்னான் மணிகண்டன்.
சார்..... டிரீட் கொடுக்கனும்.... என்றான் புதிதாக சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் நவீன்.
நவீன்..... டிரீட் தானே கொடுத்திட்டா போச்சு.... ஆனா அதுக்கு முன்னாடி நீ வேலைக்கு சேர்ந்ததுக்கு டிரீட் கொடு.
யாரு கிட்ட டா டிரீட் கேக்குற.... என்றான் ரவி நவீனை பார்த்து.
அண்ணே.... நான் என்னவோ டிரீட் கொடுத்தது இல்லாத மாதிரி பேசறீங்க.... என்றான் மணிகண்டன்.
நீ வேலைக்கு சேர்ந்து 2 வருஷம் ஆகுது.... வேலைக்கு சேர்ந்த போது உங்க அப்பா இறந்த கஷ்டத்தில இருந்த ன்னு கொடுக்கல..... அதுக்கு அப்புறம் இரண்டு முறை பிரமோஷன் கிடைச்சது..... ஒண்ணுக்கு மட்டும் தான் கொடுத்த.... என்றார் பன்னீர் செல்வம்.
சார்..... நீங்களுமா?..... என்றான் மணிகண்டன்.
உண்மையை தானப்பா சொல்றேன்..... என்றார் பன்னீர் செல்வம்.
சரி சரி..... நெக்ஸ்ட் வீக் என்ட் டிரீட் தரேன்.....
அது என்ன நெக்ஸ்ட் வீக் என்ட்.....
சொல்றேன்.... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மணிகண்டனின் ஃபோன் அடித்தது.
ஹலோ.....
.......
ஓகே.... ஓகே.....
லொகேஷன்.....
.......
ஃபோனை ஒரு நிமிஷம் மியூட்டில் போட்டு விட்டு பன்னீர் செல்வம் அவரிடம்....
சார்.... கிரைம் சீன்.... போயிட்டு வரேன்.... பார்த்துக்கோங்க.... என்று சொல்லி விட்டு அவனுடன் ராஜேஷ் மற்றும் நவீனை வரச் சொல்லி கை அசைத்தான் மணிகண்டன்.
மீனா மற்றும் இளங்கோவை அங்கேயே இருக்கும் படி கை அசைத்தான்.
பின்னர் ராஜேஷ் இன்னோவாவை ஓட்ட அவன் பக்கத்தில் மணிகண்டன் அமர்ந்து கொண்டான் நவீன் பின் சீட்டில் அமர்ந்து கொண்டான்.
என்ன கிரைம் சீன் சார்..... என்றான் நவீன்.
மர்டர்..... என்றான் மணிகண்டன்.
கொலையா?..... என்றான் நவீன்
ஏன்டா இவ்வளவு ஷாக் ஆகுற?.... என்றான் ராஜேஷ்.
இது தான் ஃபர்ஸ்ட் டைம் மர்டர் சீனை பார்க்க போறேன்..... அதான் கொஞ்சம் டென்ஷன் அன்ட் எக்சைட்மெண்ட்ல கத்திட்டேன்..... என்றான் நவீன்.
விக்டிம் ஆணா பொண்ணா?
போனா தான் தெரியும்..... கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் வந்தது..... லொகேஷன் எங்கே வரும் ன்னு விசாரிச்சிட்டு...... அந்த பவுண்டரிக்கு உள்ள எந்த போலீஸ் ஸ்டேஷன் வரும் ன்னு பார்த்திட்டு அவங்க கிட்ட சொல்லுவாங்க..... என்றான் மணிகண்டன்.
ஓ.... ஓகே ஓகே சார்.... என்றான் நவீன்.
அடுத்த இருபது நிமிடங்களில் அந்த ஸ்பாட்டை அடைந்தனர்.
ஒரு பெண் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருப்பது வாசலில் இருந்து உள்ளே நுழையும் போது தெரிந்தது.
உள்ளே சென்று பார்த்த போது அந்த பெண்ணின் தலையை வெட்டி அவள் மடியிலேயே வைக்கப் பட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் நவீனுக்கு தலை சுற்றியது..... பக்கத்தில் இருந்த சுவற்றை பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
உடனே ராஜேஷ் நவீனிடம்.....
ஏய் கிரைம் சீன் டா..... கையை எடு..... என்று சொன்னான்.
ஓ..... சாரி சாரி..... என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வெளியே வந்து விட்டான்.
அங்கே ஃபாரன்ஸிக் ஆட்கள் கை ரேகைகளையும் பிளட் ஸ்டெயின்ஸையும் சேகரித்து கொண்டு இருந்தனர்.
மணிகண்டன் வாசலில் வந்து நின்று.....
யாரு முதலில் பார்த்தது.... என்றான்.
சார்..... என்று ஒரு பெண்மணி வந்தாள்.
யாரும்மா நீங்க?
சார்..... என் பேரு மலர்..... இந்த வீட்ல தான் வேலை பார்க்கிறேன்......
சரி...முதல்ல நீங்க யாரு.... என்ன பண்றீங்க..... எத்தனை மணிக்கு பார்த்தீங்க.... என்ன பார்த்தீங்க ன்னு ஒண்ணு விடாம எல்லாத்தையும் சொல்லுங்க.....
சார்..... நான் காலைல ஆறு மணிக்கு வந்து தெருவுக்கு தண்ணீர் தெளித்து கோலம் போடுவேன்..... காவேரி அக்கா துடைப்பம் கோலமாவு அப்புறம் பக்கெட் எல்லாம் இந்த படிக்கட்டு கீழே வச்சிருப்பாங்க..... காலைல வந்து வேலையை முடிச்சிட்டு போயிடுவேன்..... அப்புறம் பதினோரு மணிக்கு வந்து பாத்திரம் தேச்சிட்டு வீடு பெருக்கி துடைச்சிட்டு போயிடுவேன்..... சாயந்திரம் பாத்திரம் நிறைய இருந்தா காவேரி அக்கா ஃபோன் பண்ணுவாங்க..... அப்போ மட்டும் வந்து பாத்திரம் தேச்சி கொடுத்திட்டு போவேன்....‌ என்றாள் மலர்.
சரி..... இன்னைக்கு நடந்ததை முதல்ல சொல்லுங்க.....
என்றான் மணிகண்டன்.
காலைல பார்க்கும் போது கோலமாவு இல்ல..... நேத்தே கோலமாவு இல்ல அக்கா ன்னு சொன்னேன்..... வாங்கிட்டேன் மலர்..... சாயங்காலம் படிக்கட்டு கீழ வச்சிடறேன்..... நான் மறந்திட்டா கூட நீ என் கிட்ட கேளு..... வெள்ளிக்கிழமை அதுவுமா கோலம் போடாம போயிடாத..... அப்படீன்னு சொன்னாங்க..... அதனால தான் காலைல ரொம்ப நேரமா கதவை தட்டினேன்..... அக்கா திறக்கல..... சரி ஏசி ரூமில் படுத்திருந்தா காலிங் பெல் அடிச்சாலும் கதவை தட்டினாலும் கேட்காது ன்னு பெட் ரூம் ஜன்னலை தட்டினேன்..... அப்பவும் திறக்கல.... அப்போ தான் கிட்சன் ஜன்னல் வழியாக கூப்பிடலாம் ன்னு ஜன்னலை திறந்தேன்....ஹால் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து இருக்கிறது தெரிஞ்சது..... அப்பவும் அக்கா.... அக்கா ன்னு கூப்பிட்டேன்.... அசையவே இல்ல..... தரையில் எப்பவுமே உட்கார மாட்டாங்களே ன்னு நினைச்சேன்..... அப்புறம் தான் இந்த டைனிங் ரூம் ஜன்னல் வழியே பார்த்தேன்..... ஒரே ரத்தம்..... அக்காவோட தலை..... என்று சொல்லி அழுதாள் மலர்.
அமைதியாக இருந்தான் மணிகண்டன்.
பிறகு மலரே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு.....
அப்புறம் என் வீட்டுக்காருக்கு ஃபோன் பண்ணேன்.... அவர் வந்து தான் பார்த்திட்டு போலீஸூக்கு கால் பண்ணாரு.
############
தொடரும் .....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .
 
  • Love
Reactions: Meenakshi