• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி, பாகம் 10

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ரகசிய கொலையாளி

பாகம் -10


என்னங்க..... என்னங்க..... வேண்டாமுங்க..... என்று கெஞ்சினார் என் அம்மா.

ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் என் அப்பா கம்ப்ளெயின்ட் கொடுக்க..... மாமாவை அரெஸ்ட் செய்தனர். மாமிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று மாமா சொன்னதால் மாமியை விட்டுட்டாங்க.

ஒரு மாதம் ஜெயில்ல இருந்தார் மாமா. அதனால என்னோட மாமா குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் சுத்தமா பேச்சு வார்த்தை இல்லாம போயிடிச்சு..... மாயா கூட என் கிட்ட ஒரு வருஷம் பேசல..... நான் ரொம்ப நொடிஞ்சு போயிட்டேன்..... அப்புறமா ஒரு நாள் அவளே கால் பண்ணி பேச ஆரம்பிச்சா..... வாரா வாரம் ஃபோன் பண்ணுவா..... ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசுவோம்..... நான் வேலையில் இருந்தா வச்சிட்டு அப்புறம் நான் ஃபிரீயா இருக்கும் போது கால் பண்ணுவேன்.....

இப்போ அவங்க எங்க இருக்காங்க சார்.....

டெல்லியில் தான்.....

படிச்சு முடிச்சிட்டாங்க இல்ல?

படிப்பை முடிஞ்ச்சிட்டு ஒரு கம்பனியில வேலை செய்யறா...... என்னை அடிச்சதால அவ அம்மா மேல அவளுக்கு கோபம்..... அவ அப்பாவும் அதை தட்டி கேட்கல ன்னு அவளுக்கு வருத்தம்..... அதனால் அவளோட அப்பா அம்மா கூட இருக்க பிடிக்கலையாம்..... ஸோ டெல்லிலேயே வேலை பார்க்கிறாளாம்.

அவங்க ரீசென்டா எடுத்த ஃபோட்டோவை அனுப்ப சொல்லுங்க அண்ணா.....

இல்லம்மா..... அவ பட்டன் ஃபோன்ல தான் என் கிட்ட பேசுவா..... அது தனி நம்பர்..... எந்த விதத்திலும் எங்க காதல் அவங்க அப்பா அம்மாவுக்கு தெரியக் கூடாது ன்னு முடிவா இருக்கா. அதேபோல் எங்க அப்பாவுக்கும் தெரிய கூடாதுன்னு சொன்னா..... அதனால அவர் கிட்ட நான் மாயா பத்தி சொன்னது இல்ல..... என்னோட அப்பா இறந்த பிறகு தான் நான் என் அம்மா கிட்டேயே மாயாவும் நானும் காதலிக்கிறதை பற்றி சொன்னேன்.

ஓ...... ஓகே ஓகே சார்.....

அப்போது கேக் எடுத்து வந்தனர்.

அனைவரும் பர்த் டே விஷ் செய்ய மணிகண்டன் கேக்கை கட் செய்தான். அனைவருக்கும் ஊட்டினான்.
ஃபோட்டோக்கள் எடுத்தனர் ராஜேஷ் மற்றும் இளங்கோ.

அனைவரும் கேக்கை பகிர்ந்து சாப்பிட்டனர்.

தேங்க்ஸ்..... இந்த மாதிரியான ஒரு பர்த் டேவை நான் இதுவரைக்கும் கொண்டாடியது இல்லை..... தேங்க்ஸ் டூ ஆல் ஆஃப் யூ...... என்றான் மணிகண்டன்.

குமார் ( மீனாவின் கணவர்) வந்தான்.

ஹேப்பி பர்த்டே சார்..... என்றான்.

தேங்க் யூ ஸோ மச் குமார். கேக் எடுத்துக்கோங்க என்றான் மணிகண்டன்.

தேங்க்ஸ் சார் என்று சொல்லி ஒரு சிறிய துண்டை எடுத்து கொண்டு......

கிளம்பலாமா..... என்றான் தன் மனைவி மீனாவை பார்த்து.

ஓகே ஓகே..... என்றாள்.

சார்..... நாங்க கிளம்பறோம்..... அப்பா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்..... நாங்க போய் தான் அவருக்கு டிபன் கொடுக்கனும்..... என்றான் குமார்.

கிளம்பு மா மீனா..... பாவம் வயசானவர் சாப்பிடாம வெயிட் பண்றாரேமே..... என்றான் மணிகண்டன்.

ஏய்..... இதுவே உன் அப்பாவா இருந்தா இந்த மாதிரி லேட்டா போவீயா மீனா..... என்றான் இளங்கோ.

ஏய்..... ரொம்ப பேசாத..... வீட்ல இருக்கிறது என்னோட அப்பா தான். குமாருக்கு அப்பா அம்மா கிடையாது..... என்னோட அப்பா அம்மாவை எங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்திட்டான்..... அம்மா போன வருஷம் இறந்திட்டாங்க..... அப்பா மட்டும் தான் இருக்காரு..... என்றாள் மீனா.

ஏய்..... நான் இவ்வளவு நாளா குமார் அம்மா அப்பா ன்னு சொல்லும் போது அவரோட அப்பா அம்மா ன்னு தான் நினைச்சேன்..... நீயும் சொல்லவே இல்ல.... என்றான் ராஜேஷ்.

தட்ஸ் குட் குமார்..... என்றான் மணிகண்டன்.

இதுல என்ன சார் இருக்கு..... அப்பா அம்மா கூட எனக்கு ரொம்ப நாள் வாழ கொடுத்து வைக்கல..... நான் சின்ன வயசுல இருக்கும் போதே இறந்திட்டாங்க..... ஆர்ஃபனேஜ் ஹோம்ல தான் வளர்ந்தேன்...... மீனா என் கிட்ட எங்க கல்யாணதுக்கு அப்புறம் கேட்டா. நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு..... என் சம்பளத்தில் பாதி கொடுக்கட்டுமா?..... வாரா வாரம் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா ன்னு......

அவங்க எனக்கும் அப்பா அம்மா தான் அதனால அவங்க எப்போதும் நம்ம கூடவே இருக்கட்டும் ன்னு சொன்னாரு..... என்றாள் மீனா கண்கள் கலங்க.

பெஸ்ட் கப்பில்ஸ் போல..... என்றான் இளங்கோ.

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க பெஸ்ட் கப்பில்ஸ் தான் டா..... என்றாள் மீனா.

குமார்..... நீங்க ஜாக்கிரதையா இருங்க..... என்றான் ராஜேஷ்.

டேய் போடா.....சரி சரி நாங்க கிளம்பறோம்.....
பை பை.... பை அண்ணா.... என்றாள் மீனா.

பை.... பை.... என்று சொல்லி விட்டு அவர்கள் செல்லும் போது ஒரு பேப்பர் தட்டில் ஒரு பீஸ் கேக்கை வைத்து....

இந்தா உங்க அப்பாவுக்கு..... என்றான் இளங்கோ.

தேங்க்ஸ்..... என்று சொல்லி வாங்கி கொண்டு குமாருடன் பைக்கில் ஏறி வீட்டிற்கு சென்றாள் மீனா.

சரி..... எங்க அம்மா வெயிட் பண்ணுவாங்க..... நான் கிளம்பறேன்..... என்றான் மணிகண்டன்.

அம்மாவுக்கு கேக் சார்.....

இல்ல இல்ல வேண்டாம்..... அவங்க ஷூகர் பேஷண்ட்.....

ஓ ..... ஓகே ஓகே சார்..... பை சார்......

நைட் ஷிஃப்ட் இன்சார்ஜ் வந்த பிறகு நீங்க போங்க..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்.....

இன்னைக்கு யாரு நைட் டியூட்டி?

ரவி சார், வினோத் சார் அப்புறம் புருஷோத்தமன் சார்..... அப்புறம் வெளியே சென்டரிங் டியூட்டிக்கு எக்ஸ்சேஞ்ச் வருவாங்க சார்.

ஓகே ஓகே..... பை..... நாளைக்கு காலைல நான் வந்த பிறகு என் கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு போகச் சொல்லுங்க எல்லாரையும்..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... என்று சொல்லி சல்யூட் அடித்தார்கள்.

மணிகண்டன் வீட்டிற்கு சென்றான்.

அம்மா..... என்றான்.

கதவை திறந்தார் சிவகாமி.

வாப்பா..... இன்னைக்கு நாள் எப்படி இருந்துச்சு.....

நீங்க வேற மா..... இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும் ன்னு சொன்னீங்களே..... பயங்கரமா இருந்துச்சு...

என்னப்பா சொல்ற?

ஆமாம் மா..... என்று அன்றையதினம் தினம் நடந்த அனைத்தையும் சொன்னான் மணிகண்டன்.

அச்சச்சோ..... யாருப்பா அந்த பொண்ணை கொன்னிருப்பாங்க?

அம்மா..... இன்னும் நாங்க இன்வஸ்டிகேஷன் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள நீங்க குற்றவாளி யாரு ன்னு கேட்கறீங்க..... என்றான் மணிகண்டன்.

சிவகாமி சாப்பாடு போட.... அதை சாப்பிட்டு கொண்டே பேசிக் கொண்டு இருந்தான் மணிகண்டன்.

நீங்க சாப்பிட்டீங்களா மா.....

நான் சாப்பிட்டுட்டேன் பா..... நீ தான் மாத்திரையை போட்டுக்கொண்டு சாப்பிட சொன்னீயே.....

சாப்பிட்டு முடித்ததும்..... கையை கழுவி விட்டு டிவி ஆன் செய்தான்.

லேட் ஆச்சே டா கண்ணா தூங்கலீயா.....

இல்லம்மா மாயாவோட காலுக்காக வெயிட் பண்றேன்.... அவ பேசறேன் ன்னு சொன்னா.....

இன்னொரு முறை ஃபோன் பண்றேன் ன்னு சொன்னாளா?

ஆமாம் மா......

வாரத்துக்கு ஒரு முறை தான கால் பண்ணுவா ன்னு சொல்லுவ.....

ஆமாம்..... இன்னைக்கு என் பர்த் டே என்பதால மூணு முறை கால் பண்றேன் ன்னு சொன்னா.....

இரண்டு முறை பேசிட்டியா.....

பேசிட்டேன் மா..... ஃபர்ஸ்ட் டைம் கிரைம் சீன்ல இருக்கும் போது கால் பண்ணினா..... நான் சீக்கிரமா பேசி வச்சிட்டேன்..... அப்புறம் உங்க கிட்ட பேசறதுக்கு முன்னாடி கால் பண்ணா.... அப்போது தான் சொன்னா வீட்டுக்கு போயிட்டு ஒரு மிஸ்டு கால் கொடு மாமா.... நான் கால் பண்றேன் ன்னு.....

ஓ...... சரிப்பா..... என்று சொல்லி கண்கள் கலங்கினார்.

ஏன்மா..... எப்பவும் நீங்க கண்கள் கலங்கறீங்க..... நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லை..... சீக்கிரமா மாமா மாமி எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லப் போறாங்க பாருங்க.....

சந்தோஷம் பா.....

சரிம்மா நீங்க போய் தூங்குங்க......

கண்ணா....

சொல்லுங்க அம்மா......

நாளைக்கு மதியமா என்னை டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போறீயா?

ஷூகர் டாக்டர் கிட்டேயா?

இல்லப்பா டாக்டர் மதனகோபால் கிட்ட.....

மறுபடியும் உங்களுக்கு தலைவலி அதிகமா இருக்கா?

ஆமாம் பா.....

சரிம்மா..... நாளைக்கு மதியம் அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு கூட்டிக்கிட்டு போறேன்..... என்றான் மணிகண்டன்.

சரிப்பா..... என்று சொல்லி விட்டு தன் ரூமிற்கு சென்று படுத்தார் சிவகாமி.

அப்போது தன் ஃபோனை காதில் வைத்து....

ஹலோ மாயா..... உன் ஃபோனுக்காக தான் டி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்......

மாமா..... சாப்பிட்டியா?

சாப்பிட்டேன்.... இப்போ கொடு உன் பர்த் டே கிஃப்ட்டை .....

இச் இச் இச் ..... என்று மாயா முத்தம் கொடுத்தாள் .

சிரித்தான் மணிகண்டன் .


############

தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 
  • Love
Reactions: Vimala