• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி, பாகம் -11

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி

பாகம் -11


தன் ஃபோனை எடுத்து டாக்டர் மதனகோபாலுக்கு கால் செய்தார் சிவகாமி.

சார்..... இத்தனை மணிக்கு உங்களுக்கு கால் பண்றதுக்கு மன்னிச்சிடுங்க.....

பரவாயில்லை மா.... சொல்லுங்க..... எமர்ஜென்சி ன்னு தான பேசறீங்க.....

என் பையன் இன்னைக்கு மூணு தடவை அந்த பொண்ணு கிட்ட பேசினதா சொல்றான்.

வாட்? மூணு முறையா?

ஆமாம் சார்.....

நீங்க மாத்திரை எல்லாம் ஒழுங்கா கொடுக்கறீங்களா இல்லையா?

கொடுக்கிறேன் டாக்டர்.... நீங்க சொன்னது போலவே எந்த நேரமா இருந்தாலும் வீட்டுக்கு வந்து தான் டின்னர் சாப்பிடனும் ன்னு சொல்லிருக்கேன்.... அந்த மாத்திரையை இரவு உணவுல கலந்து தான் கொடுக்கிறேன்.

சரிம்மா..... நாளைக்கு நேரா வாங்க டேஸ்ட் பண்ணிடலாம்.

ஓகே சார்..... தேங்க்ஸ்..... நாளைக்கு என் பையன் என் பெயர் சொல்லி அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணுவான்..... என்றார் சிவகாமி.

அது பரவாயில்லை மா.... நான் பார்த்துக்கறேன்..... நீங்க வாங்க..... என்றார் டாக்டர் மதனகோபால்.

நன்றி டாக்டர்..... என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தார் சிவகாமி.

தனது வேலையில் திறமையாகவும் புத்திக் கூர்மையுடனும் செயல்படக்கூடிய தன் மகன் ஏன் அவனுடைய சொந்த வாழ்க்கையில் அப்படி இல்லை..... இல்லாத ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதனோடு வாழ்கிறானே..... என்று நினைத்து கொண்டார்.

மாயாவிற்கு குடிசைக் கட்டி சிவகாமியின் அண்ணி மணிகண்டனை அடித்தது அவன் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டது, மறுநாள் காலை அவர்களுடைய பேகை செக் செய்து அவமானப்படுத்தியதும் சிவகாமி மணிகண்டனிடம் அங்கு நடந்ததை அவனுடைய அப்பாவிடம் சொல்லி வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது வரை அனைத்தும் உண்மையில் நடந்தவை.

பிறகு சென்னைக்கு வந்தப் பின் அடிக்கடி தலைவலி தலைவலி என்று மணிகண்டன் சொல்லிக் கொண்டே இருந்தான். பல டாக்டர்களிடம் காண்பித்தும் எல்லா டெஸ்ட்கள் எடுத்தும் சரி ஆகவில்லை..... படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் மணிகண்டன். எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்குவான். காலேஜ்ஜில் கோல்டு மெடல் வாங்கினான். காலேஜில் அவனிடம் சில பெண்கள் பிரபோஸ் செய்ய வந்த போது..... அவன் ஏற்கனவே தன் மாமா மகளை காதலிப்பதாக கூறி அனைவரையும் நிராகரித்ததாக தன் அம்மாவிடமே கூறினான்.

டாக்டர் மதனகோபால் கொடுத்த டிரீட்மெண்ட்டில் தான் அவனுடைய தலைவலி கொஞ்சம் குறைந்தது. மாயா +2 படிக்கும் போது சிவகாமியின் அண்ணன் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. சிவகாமி மட்டும் அங்கு சென்றார். அப்போது எல்லாம் சடங்கும் முடிந்திருந்தது. யாரை கடைசியாக பார்க்கலாம் என்று நினைத்து வந்தாரோ அவரே இல்லை என்பதால் திரும்பி ஊருக்கு வந்துவிட்டார் சிவகாமி. மாயா‌ +2 முடித்ததும்..... டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான காலேஜில் சேர்த்துவிட்டு மாயாவின் தாய் மாமா வீடு அங்கிருந்ததால் மாயாவும் அவளுடைய அம்மாவும் அங்கேயே தங்கி விட்டனர்.

காலேஜ் ஃபைனல் இயர் செமஸ்டர் விடுமுறையில் தான் திருவிழா வந்தது. ஊருக்கு போக வேண்டும் போல இருந்தது சிவகாமிக்கு. தன் கணவரிடம் கேட்பதற்கு முன்னர் தன் மகனிடம் கேட்டார்.

கண்ணா..... லீவுக்கு நம்ம ஊர் திருவிழாவுக்கு போகலாமா டா?

உடனே.... சரிம்மா.... எனக்கும் மாயாவை பார்க்கனும் போல இருக்கு.... என்றான் மணிகண்டன்.

அவ ஊர்ல இல்லடா.... டெல்லில இருக்கா.....

தெரியும் மா..... நான் நேத்து ஃபோன்ல பேசினேன்..... அவளும் ஊருக்கு வருவாளாம்.

ஓ..... அப்போ உண்மையிலேயே தான் நீயும் அவளும் காதலிக்கறீங்களா?

ஆமாம் மா.... ஏன்..... இப்படி கேட்கறீங்க.....

இல்ல.... நீ உன்னை லவ் பண்றேன் ன்னு சொல்லிக்கிட்டு வந்த பொண்ணுங்களை மறுப்பதற்காக சும்மா சொன்னீயோ ன்னு நினைச்சேன்......

இல்லம்மா..... அன்னைக்கு நாம மாமா வீட்டை விட்டு கிளம்பி வரும்போது அவ ஜன்னல் வழியாக பார்த்து அழுதா மா.... நம்ம மேல அவளுக்கு பாசம் இருக்கு மா.... அதான் அவ மேல எனக்கு காதல் வந்துச்சு.....

ஓ..... என் அண்ணன் பொண்ணு உன்னை கட்டிக்கிட்டு எனக்கு சந்தோஷம் தான் பா....உங்க அப்பா தான் என்ன சொல்லுவாரோ தெரியல..... உங்க மாமியும் ஒத்துக்க மாட்டாங்க.....மறுபடியும் மாயா கால் பண்ணினா ன்னா என் கிட்ட கொடு.... நானும் பேசறேன்.

சரிம்மா..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

தன் கணவரிடம் ஊருக்கு போக பர்மிஷன் கேட்டு ஊருக்கு சென்றனர்.

ஊரில் அவளுடைய அண்ணன் வீடு பூட்டி இருந்தது.
பக்கத்து வீட்டில் கேட்டார் சிவகாமி.

அக்கா.... அக்கா.....

வா சிவகாமி எப்போ வந்த?

நாலு நாள் ஆகுது அக்கா.....

ஏன் இத்தனை நாளா வரல....

இல்ல அண்ணி இருப்பாங்க.... எதாவது பிரச்சனை வரப்போகுது ன்னு......

உங்க அண்ணன் இறந்த பிறகு கொஞ்ச நாள்லேயே அவங்க ரெண்டு பேரும் டெல்லிக்கு போயிட்டாங்க..... அந்த பொண்ணு மாயாவுக்கு அங்கே காலேஜ்ல சீட் கிடைச்சுதாமே.....

திருவிழாவுக்கு வரலையா?

ஹாங் வந்தாங்க..... போன வருஷம் உங்க அண்ணனுக்கு சாமி கும்பிட வந்தாங்க..... வந்திட்டு இரண்டு நாள் திருவிழா முடிஞ்சதும் போயிட்டாங்க.....

இந்த வருஷம் வரர்தா சொன்னாங்களா?

இல்லையே..... அப்படி எதுவும் சொல்லலையே.... அப்படி இருந்தா எனக்கு தான ஃபோன் போட்டு சொல்லுவா உங்க அண்ணி..... வீட்டை சுத்தம் செஞ்சு வைக்க சொல்லி.....

ஓ..... சரி சரி..... நான் கிளம்பறேன்.....

இருடி சிவகாமி காபி தண்ணி குடிச்சிட்டு போ.....

இல்ல வேண்டாம் அக்கா.....

ஏய் சிவகாமி..... சாவி என் கிட்ட தான் கிடக்கு..... துறந்து விடவா.... இங்கேயே தங்கிக்கிறீயா?

என் அண்ணன் இருக்கும் போதே என்னால உரிமையோட இந்த வீட்ல தங்க முடியல..... இப்பவா தங்கப் போறேன்.... எங்க அப்பா அம்மா வீடு இருக்கு இல்ல.... அங்கேயே தங்கிக்கிறேன்....

உன் பையனும் வந்திருக்கானா.....

ஆமாம் அக்கா.... நாளைக்கு கடைசி நாள் திருவிழா.... அதான் ஒருவேளை நாளைக்காவது வருவாங்களோ.... என் அண்ணன் பொண்ணு மாயாவை பார்க்கலாம் ன்னு நினைச்சேன்.

ஏய்..... அவ முன்ன மாதிரி இல்ல டி.....

என்ன அக்கா சொல்றீங்க.....

ஆமாம் சிவகாமி..... அந்த பொண்ணு என் கிட்ட எப்படி பேசி பழகும்..... அத்தை அத்தை ன்னு..... போன தடவை வந்த போது.... சாவி வாங்கும் போது நல்லா இருக்கீங்களா ஆன்டி ன்னு சொல்லுச்சு.... அதோட சாவி கொடுத்துட்டு போயிட்டு வரேன் ன்னு சொல்லுச்சு......

குழந்தையை பார்க்கலாம் ன்னு நினைச்சேன்.....

போன வருஷம் திருவிழால பாவாடை தாவணி கட்டிக் கொண்டு ஃபோட்டோ புடிச்சுக்கிச்சு..... அதை பெரிசு பண்ணி செவுத்துல மாட்டி இருக்கு பாரு..... இரு சாவி கொண்டார்ரேன்.....

அய்யோ வேண்டாம் அக்கா.... ஜன்னல் வழியா பார்த்துக்கிறேன்.....

போன வாரம் விநாயகர் சதுர்த்தி வந்துச்சு இல்ல.... அப்போ தான் வீட்டை சுத்தம் செய்ய சொல்லி ஃபோன் பண்ணுச்சு..... அப்போ தான் நானே அந்த ஃபோட்டோவை பார்த்தேன்.....

ஜன்னலை திறந்து பார்த்தாள்..... சுவற்றில் படம் இருந்தது. அழகாக இருந்தாள் மாயா.....

ஏன் அக்கா அது என்னது.... என்றார் சிவகாமி.

அது என்னவோ சூரிய விளக்காமே...அது மினிக்கிக்கினே தான் இருக்கும் பகல்ல..... ராத்திரில தானா எரியும்.... பகல்ல நின்னிடும்..... நமக்கு என்ன தெரியும் அதைப் பத்தி.....

ஓ.... சரி சரி.....

உங்க அண்ணி தான் புலம்பிக்கிட்டு கிடந்தா.....

என்னவாம்?

மொழி தெரியாம அங்கே போய் மாட்டிக்கிட்டேன்..... வீட்டை விட்டு வெளியே போக முடியல..... ன்னு சொன்னா....

ஓ..... அப்படியா.....

இன்னொன்னு தெரியுமா..... உன்னை கஷ்டப் படுத்தினா இல்ல?..... இப்போ அவ கஷ்டப் படறலாம்.....

என்னாச்சு?

இல்ல அவ தம்பி வீட்ல தான இருக்கா..... அவன் பொண்டாட்டி..... இவளை ஹிந்தியில திட்டுதாம்.....

அச்சச்சோ.....

என்ன அச்சச்சோ..... உன்னை திட்டினா இல்ல..... நல்லா வேணும் அவளுக்கு....

இதை உங்க கிட்ட சொன்னாங்களா.....

இல்ல இல்ல.... அவளா சொல்லுவா..... பின்னாடி வாசல்ல நான் துணி காயப்போட்டுக்கிட்டு இருக்கும் போது யார் கிட்டேயோ ஃபோன்ல சொல்லி புலம்பினா.....

என்ன புலம்பினாங்க?

அவ திட்டுறா என்னை.... மொழி தெரியாததால கண்டுக்காம இருக்கிறேன்.... எனக்கும் என் தம்பியை விட்டா யாரு இருக்கா.... அதான் கண்டும் காணாமல் இருக்கேன்.... என் பொண்ணு மாயாவுக்கு வேலை கிடைச்சதும் நாங்க சென்னைக்கு போய்விடுவோம்.... ன்னு சொன்னா.

ஓ..... சரி அக்கா.... நான் கிளம்பறேன்.... பையன் பசியோட இருப்பான்.....

சரி சிவகாமி.... நாளைக்கு ஊருக்கு போறதுக்கு முன்னாடி வந்திட்டு போ.... வேர்க்கடலை பயிர் வச்சேன் இல்ல..... அறுவடை பண்ணியாச்சு..... நாளைக்கு தரேன் எடுத்துக் கொண்டு போ .....

சரிங்க அக்கா வரேன் .... என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார் சிவகாமி .

#############

தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .