ரகசிய கொலையாளி....
பாகம் -12
தன் அம்மா சிவகாமி அந்த பக்கத்து வீட்டு பெண்மணியிடம் பேசி கொண்டு இருந்ததை மரத்தின் பின்னால் இருந்து கேட்டான் மணிகண்டன்.
அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்று யாருமில்லாத இன்னொரு மரத்தடியில் நின்று தன் ஃபோனை எடுத்து பேசினான்.
ஹலோ மாயா..... நீ எங்கே இருக்க.....
நான் வீட்ல தான் மாமா இருக்கேன்..... நீங்க வந்திருக்கீங்க ன்னு தெரிஞ்சு என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்றாங்க என்னோட அம்மா அப்பா.
உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்றாங்களா அத்தையும் மாமாவும்?
ஆமாம் மாமா.
ஆனா அந்த பக்கத்து வீட்டு அத்தை நீங்க யாரும் வரல ன்னு சொல்றாங்க.....
அதெல்லாம் சும்மா மாமா..... அவங்களுக்கு என்னை பிடிக்காது..... நான் அவங்க கிட்ட சரியா பேசல ன்னு அப்படி சொல்றாங்க.....
நான் அப்பவே நினைச்சேன் மாயா..... அவங்க உன்னை போய் குறை சொல்றாங்களே ன்னு......
மாமா.....
சொல்லு மாயா.....
நீ என்னை பார்க்க வரீயா?
கண்டிப்பா டி......
எப்போ வரணும் ன்னு சொல்லு.....
நாளைக்கு சாயங்காலம் 6.45 க்கு மேல வா..... என் ரூம் ஜன்னல் திறந்து வைக்கிறேன்.....
சரி மாயா..... கண்டிப்பா வரேன்..... என்று சொல்லி ஃபோனை வைத்தான்.
அந்த ஃபோனில் யாருக்குமே கால் செய்யவில்லை..... மாயாவுக்கு கால் செய்வதாக எண்ணிக் கொண்டு தனக்குத் தானே கேள்வியும் பதிலும் சொல்லிக் கொண்டான் மணிகண்டன்.
ஏதேச்சையாக இதைப் பார்த்த சிவகாமி மனம் கலங்கினார். அவன் மாயாவிடம் பேசியது உண்மை என்று நம்பி இருந்தார். வீட்டில் யாரும் இல்லை என்று நன்றாகவே தெரியும் சிவகாமிக்கு அப்படி இருக்க அந்த வீட்டில் தான் இருக்கிறேன் என்று அவள் பதில் சொல்வது போல பேசினான் மணிகண்டன். மேலும் இறந்து போன தன் அண்ணனும் அவளை வெளியே போக விடாமல் தடுக்கிறார் என்று இவன் பேசியதில் இருந்தே ஏதோ மன அழுத்தத்தில் புத்தி பிசங்கி பேசுகிறான் என்று புரிந்து கொண்டார் சிவகாமி.
மணிகண்டன் வேகமாக நடந்து வீட்டிற்கு சென்றான்.
பத்து நிமிடத்திற்கு பிறகு சிவகாமி வீட்டுக்கு வந்தார்.
அம்மா..... எங்க போயிருந்தீங்க.....
மாமா வீட்டுக்கு பக்கத்து வீட்டு கண்ணகி அத்தை வீட்டுக்கு.....
மாமா அத்தையை பார்த்து பேசனீங்களா?
மணி..... என்னடா கண்ணா சொல்ற?
மாமா தான் இறந்திட்டாரே.....
அம்மா..... ஏன் நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க..... இரண்டு நாளைக்கு முன்னாடி மாயா பேசும் போது மாமாவும் பேசினார். உங்களை கூட விசாரிச்சார்.....
மணி..... என்னடா ஆச்சு உனக்கு.....
அம்மா..... நான் நல்லா தான் இருக்கேன்.... மாயாவை வீட்டில பூட்டி வச்சிருக்காங்க..... அவளை நாளைக்கு சாயங்காலம் போய் பார்த்து விட்டு வரேன்..... அப்புறமா நாம ஊருக்கு போகலாம்.
இதற்கு மேல் என்ன சொன்னாலும் அவன் மண்டையில் ஏறாது என்று புரிந்து கொண்ட சிவகாமி..... நாளைக்கு நானும் உன் கூட வரேன் ப்பா..... எனக்கும் மாயாவை பார்க்கனும்..... என்றார்.
சரிம்மா..... நான் எதுக்கும் மாயா கிட்ட கேட்டு சொல்றேன்..... என்றான் மணிகண்டன்.
சரிப்பா.... என்றார் சிவகாமி.
இதையெல்லாம் யோசித்து பார்த்துக் கொண்டே தூங்கிவிட்டார் சிவகாமி.
############
காலையிலேயே ஸ்டேஷனுக்கு கிளம்பி சென்றுவிட்டிருந்தான் மணிகண்டன்.
அப்போது அங்கே காத்துக் கொண்டு இருந்தான் செல்வம் ( இறந்துபோன காவேரியோட முன்னாள் கணவன்).
குட் மார்னிங் சார்..... என்று அனைவரும் சல்யூட் அடித்தார்கள்.
சார்..... இவர் தான் செல்வம் விக்டிமோட எக்ஸ் ஹஸ்பண்ட்..... என்றான் ரவி.
வாங்க...... என்று சொல்லி தன் கேபினுக்கு அழைத்து சென்றான் மணிகண்டன்.
தன் சேரில் அமர்ந்து கொண்டு..
உட்காருங்க மிஸ்டர் செல்வம்..... என்றான்.
அமர்ந்தான் செல்வம்.
ராஜேஷ் ஊக்கு பெல் அடித்தான் மணிகண்டன்.
அவன் ரெக்கார்டர் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
மணிகண்டன் தலை அசைக்க செல்வம் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டு ரெக்கார்டு பட்டனை அழுத்தினான் ராஜேஷ்.
சொல்லுங்க மிஸ்டர் செல்வம்......
சார்..... என்னோட காவேரி...... என்று அழுதான்.
சிறிதுநேரம் அமைதியாக இருந்தான் மணிகண்டன். ராஜேஷ் ரெக்கார்டரை பாஸ் செய்தான். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு.....
தன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினான் மணிகண்டன்.
கண்களைத் துடைத்துக் கொண்டு தண்ணீர் குடித்தான் செல்வம்.
சார்..... என் காவேரி ரொம்ப ரொம்ப நல்லவ சார்..... என்று ஆரம்பித்தான் செல்வம். ராஜேஷ் ரெக்கார்டரை மறுபடியும் ஆன் செய்தான்.
அவளுக்கு குழந்தைங்க ன்னா ரொம்ப பிடிக்கும்..... எனக்கு அதுல பிரச்சனை.... டிரீட்மெண்ட் எல்லாம் எடுத்தும் சரி ஆகல..... சின்ன சின்ன வாக்குவாதங்களா ஆகி ஒரு நாள் பெரிசா ஆயிடிச்சு..... அவ என்னை ஆம்பளையே இல்ல ன்னு திட்டினா..... அதனால கோபத்தில் அவளை அடிச்சேன்..... இரண்டு மூன்று முறை கன்னத்தில் அடிச்சிட்டேன்..... அவளுக்கு தன்மானம் ரொம்ப ரொம்ப அதிகம்..... அதனால என்னை டைவர்ஸ் பண்ணிட்டா..... நானும் மியூட்சுவலா ஸைன் பண்ணிடவே உடனே விவாகரத்து கிடைச்சிடிச்சு.....
அப்படியும் அவ கிட்ட மன்னிப்பு கேட்டேன்...... அதுக்கு அவ பிடிவாதமா மறுத்திட்டா.... சரி அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் ன்னு விட்டுட்டேன்..... என்றான் செல்வம்.
நீங்க அவங்களை எப்போ கடைசியா பார்த்தீங்க?
போன மாசம்......
டேட் ஞாபகம் இருக்கா?
ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு தன் ஃபோனை எடுத்து எதையோ பார்த்துவிட்டு.....
செப்டம்பர் 19... என்றான் செல்வம்.
ஃபோன்ல என்ன பார்த்தீங்க?
என் ஃபிரெண்டோட குழந்தைக்கு ஃபர்ஸ்ட் பர்த் டே..... அதுக்காக போனேன்..... அப்போ தான் அவ டிரெயின்ல வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தா.....
பேசனீங்களா?
இல்ல சார்..... அவ என்னை பார்த்ததும் முகத்தை திருப்பி கிட்டா..... பக்கத்தில யார் கிட்டேயோ பேசுற மாதிரி திரும்பிக்கிட்டா..... அதான் அவளுக்கு விருப்பம் இல்லை ன்னு தெரிஞ்சிக்கிட்டு நானும் அமைதியா போயிட்டேன்.
அவங்க கண்டிப்பா உங்களை பார்த்தாங்களா?
ஆமாம் சார்..... ஏதேச்சையாக பார்த்த அவ.... மறுபடியும் திரும்பி ஒரு நிமிஷம் பார்த்தா..... அதனால அவ என்னைத் தான் பார்த்தா ன்னு எனக்கு கண்டிப்பா தெரியும்.
டைவர்ஸ் ஆன பிறகு அவங்களை நீங்க பார்க்கவே இல்லையா?
பார்த்திருக்கிறேன் சார்..... மாசா மாசம் ஜீவனாம்சம் கொடுக்க நேரா தான் போவேன்.... அப்போது பார்ப்பேன்.....
நேரா போய் தான் கொடுப்பீங்களா?
ஆமாம் சார்..... எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் சார்.... அந்த சாக்குல அவளை பார்க்கலாம் ன்னு..... அதுவும் இல்லாம அவ மனசு மாறி என்னை ஏத்துக்குவாளோ ன்னு ஒரு நப்பாசை தான் சார். மாசா மாசம் ஜீவனாம்சம் கேஷா கொடுத்திடுவேன் சார்......
அவங்களுக்கு யார் கூடேயாவது பிரச்சனை இருந்ததா? ஆஃபீஸ்ல.... வீட்ல.... வெளியே.... யார் கிட்டேயாவது ரொம்ப கோபமா பேசி பார்த்திருக்கீங்களா?
அப்படி எதுவும் இல்லை சார்..... கோபப் படுவா அப்புறம் அவளே போய் அவங்க கிட்ட பேசிடுவா..... என் விஷயத்தில தான் அவ ரொம்ப பிடிவாதமா இருந்திட்டா..... என்றான் செல்வம்.
ஓகே.... மிஸ்டர் செல்வம்.... வேற எதாவது தகவல் வேணும்னா கால் பண்றோம் வாங்க.....
சரிங்க சார்.....
சார்..... என் ஒயிஃபை கடைசியாக பார்க்கனும்.... எங்க?
லீகல் ஃபார்மாலிட்டீஸ் முடிஞ்சதும் அவங்க சிஸ்டர் வீட்டுக்கு பாடியை அனுப்பிடுவோம்..... நீங்க அங்க போய் பார்த்துக்கோங்க.....
அங்கேயா?...... நான் அங்கு போக மாட்டேன் சார்....... நான் ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்து விட்டு வந்திடறேன்..... பிளீஸ் எந்த ஹாஸ்பிட்டல் ன்னு சொல்லுங்க சார்......
ஏன்.... என்னாச்சு..... அவங்க வீட்டுக்கு ஏன் போக மாட்டீங்க.... என்றான் ராஜேஷ்.
அவ தான் சார் என்னையும் என் காவேரியையும் பிரிச்சது..... அவன் உனக்கு செட் ஆனவன் இல்ல..... நீ அவனை விட்டிடு.... என் பொண்டாட்டியை ஏத்தி விட்டது அவ தான்..... அந்த யமுனாவால தான் நான் இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கேன்.....
உங்க பர்சனல் ரீசனுக்காக எல்லாம் நாங்க எங்க ரூல்ஸ் மாத்திக்க முடியாது..... நீங்க பார்க்க விருப்பப் பட்டீங்கன்னா போங்க.... என்று சொல்லி ராஜேஷை பார்த்தான் மணிகண்டன்.
எஸ் ஸார்..... என்று சொல்லி விட்டு வாங்க சார் என்று சொல்லி செல்வத்தை அழைத்து கொண்டு வெளியே வந்தான் ராஜேஷ்.
சார் சார்.... என்று சொல்லி கொண்டே இருந்தான் செல்வம்.
வெளியே வந்த பிறகு....
இதோ பாருங்க சார்..... என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு..... என்றான் ராஜேஷ்.
செல்வம் புரியாமல் ராஜேஷை பார்த்தான்.
அவங்களை எங்க கொண்டு போய் ஃபைனல் ரிட்சுவல்ஸ் பண்ணுவாங்களோ அங்கே போய் பார்த்துக்கோங்க( சுடுகாடு/ எலக்ட்ரிக் சுடுகாடு)..... என்றான்.
கரெக்ட் சார் .... ஐடியா கொடுத்ததுக்கு தேங்க்ஸ் ..... என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் செல்வம் .
############
தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .