• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -18.

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் -18.

ரஸியா வீட்டிற்கு சென்றனர் மணிகண்டன் மற்றும் ராஜேஷ் இருவரும்.

வீடு பூட்டி இருந்தது.....
பக்கத்து வீட்டில் கேட்டதற்கு வெள்ளிக்கிழமை மதியமா கிளம்பி போனாங்க..... என்றனர்.

எங்க போறேன்னு எதாவது சொன்னாங்களா?..... என்றான் மணிகண்டன்.

இல்ல சார்...... என்றார் அந்த பெண்மணி.

பதட்டமாக இருந்தாங்களா?

இல்ல ரஸியா அம்மா நார்மலா தான் இருந்தாங்க..... ஆனா ரஸியா தான் ஒரு மாதிரியா இருந்தா..... வேலைக்கு போனவ மதியமே வந்திட்டா...... என்ன பிரச்சனை ன்னு தெரியல.....

எப்போ வரோம் ன்னு எதாவது சொன்னாங்களா?

இல்ல சார்..... என்றார் அந்த பெண்மணி.

அம்மா..... என்றான் அந்த பெண்மணியின் பையன்.

இருடா வரேன்..... தோசைக் கேட்டான்..... நான் போய் வார்த்து தரனும்..... உங்களுக்கு வேற எதாவது தகவல் வேணுமா.....

எப்படி இவ்வளவு போல்டா இருக்கீங்க மேடம்..... என்றான் ராஜேஷ்.

போல்டா ன்னா? என்ன மீன் பண்றீங்க சார்?

இல்ல போலீஸ் இன்வஸ்டிகேஷன்னாலே எல்லாம் கொஞ்சம் பயப்படுவாங்க இல்ல பதட்டப்படுவாங்க.... அதான் கேட்டேன்.

தப்பு செய்யறவங்க தான சார் பயப்படனும்.....

அது என்னவோ சரி தான்......

உங்க பேர்...... அப்புறம் என்ன பண்றீங்க ன்னு சொல்லிட்டு போயிடுங்க...... என்றான் மணிகண்டன்.

என் பெயர் சாக்ஷி..... நான் ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர்.....

அப்படி சொல்லுங்க..... என்னடா ன்னு யோசிச்சேன்..... என்றான் ராஜேஷ்.

சார்..... நான் டிவி சேனல்ல சினிமா விமர்சனம் செய்யும் ரிப்போர்ட்டர் தான்.....

இருந்தாலும் உங்களுக்கு மீடியா ன்னாலே அந்த தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திடுது..... என்றான் ராஜேஷ்.

ஓகே சார்...‌.. நான் ஒத்துக்கிறேன்..... நான் உள்ளே போகலாமா?

மிஸஸ் சாக்ஷி..... ஒரு மர்டர் கேஸ் விஷயமா ரஸியாவை விசாரிக்க வேண்டி இருக்கு...... அவங்களை பற்றி தெரிஞ்சா சொல்ல முடியுமா?

சரிங்க சார்...... என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல சென்ற சாக்ஷி..... திரும்பி நடந்து வந்து....

சார்...... ஒரு நிமிஷம்..... என்று கூப்பிட்டாள்.

அவங்களும் திரும்பி நடந்து வந்தனர்.

நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்..... ஆனா நீங்க பதிலுக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?

ஹெல்பா..... நாங்க என்ன ஹெல்ப் பண்ணனும்?..... அதெல்லாம் முடியாது...... என்றான் ராஜேஷ்.

ராஜேஷ் வெயிட்.... என்றான் மணிகண்டன்.

என்ன ஹெல்ப் எதிர்பார்க்கறீங்க......

அம்மா..... என்றான் சாக்ஷியின் மகன்.

வரேன் டா..... இவன் வேற ஒருத்தன்..... எப்போ பார்த்தாலும் அவனோட அப்பனை மாதிரி நொய் நொய்யுனுகிட்டு...... என்று புலம்பிக் கொண்டே

சார்..... எனக்கு அந்த மர்டர் கேஸ் டீடெயில்ஸ் ஷேர் பண்ணீங்கன்னா...... அதை நான் என்னோட சேனலுக்கு ஒரு கவர் ஸ்டோரியா கொடுத்து சம்பாதிப்பேன்.....

நீங்க சம்பாதிக்கிறதுனால எங்களுக்கு என்ன லாபம்..... என்றான் ராஜேஷ்.

இல்ல சார் அந்த ரஸியாவோட டீடெயில்ஸ் எல்லாம் நான் உங்களுக்கு தருவேன்......

அதான் ஒண்ணும் தெரியல ன்னு சொல்லிட்டீங்களே.....

கண்டுப்பிடிச்சு சொல்லுவேன்.....

அதுக்கு தான் நாங்க இருக்கோமே...... நீங்க வேற எதுக்கு...... உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை மட்டும் சொல்லுங்க...... நாங்க பார்த்துக்கிறோம்..... என்றான் ராஜேஷ்.

ஓகே சார்...... அப்படீன்னா நீங்களே பார்த்துக்கோங்க...
தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன் சார்...... என்றாள் சாக்ஷி உள்ளே செல்ல காலடி எடுத்து வைத்துக் கொண்டே.....

ஒரு நிமிஷம்..... என்றான் மணிகண்டன்.

சொல்லுங்க சார்......

நீங்க சொன்னதுக்கு ஓகே..... ஆனா ஒரு கண்டிஷன்..... என்றான் மணிகண்டன்.

என்ன என்பது போல பார்த்தாள் சாக்ஷி.

###########

மீனாவை வீட்டில் விட்டுவிட்டு நைட் ஷிஃப்ட்டுக்கு கிளம்பினான் குமார்.

குமார்.....

சொல்லு மீனா.....

நான் போய் என்னோட என் ஃபிரெண்ட்ஸூக்கும் விஷயத்தை சொல்லி விட்டு ஸ்வீட்ஸ் கொடுத்துவிட்டு வரேன்....

எதுக்கு டி இப்போ அலையப்போற?..... ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல.....

நான் பைக்ல எல்லாம் போகல..... கேப் புக் பண்ணி போறேனே..... பிளீஸ்.....

சரிடி..... ஜாக்கிரதையா போயிட்டு வா.....

ஒரு நிமிஷம்...

என்ன?

நீயே அப்பா கிட்ட சொல்லிடு.....

இப்போ தான விஷயத்தை சொல்லிட்டு கால்ல விழுந்தோம்.....

அட அந்த விஷயத்தை இல்ல....

வேறு எதை?

நான் இப்போ என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு போறதை.....

ஒத்துக்க மாட்டார் டி..... உங்க அப்பா பத்தி உனக்கு தெரியாதா?

ஏய்.... பிச்சிப்புடவேன் பிச்சி..... நீ பேசு.... அப்போ தான் ஓகே சொல்லுவார்.....

சரி ஒண்ணு பண்ணலாமா?

என்ன?

நானே உன்னை உங்க ஃபிரெண்டுவீட்ல டிராப் பண்ணிட்டு போறேன்..... நானே வரும் போது உன்னை கூட்டிக்கிட்டு வந்திடறேன்னு அப்பா கிட்ட சொல்லவா?.....

ஓகே..... இது நல்ல ஐடியா..... என்று சொல்லி விட்டு அவளுடைய அப்பாவிடம் விஷயத்தை சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

சரிம்மா.... ஜாக்கிரதையா போயிட்டு வாங்க..... என்றார்.

ஓகே பா..... பை..... என்று சொல்லி அவரை ஹக் செய்து விட்டு கிளம்பினாள் மீனா.

இம்முறை மிக மெதுவாக பள்ளம் மேடு பார்த்து ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றான் குமார்.

பார்ரா..... உன் புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு சைக்கிளை விட மெதுவா போறீயா?

இல்லடி..... என் பொண்டாட்டிக்கு கஷ்டம் இருக்கக்கூடாதுன்னு..... என்றான் குமார்.

நம்பிட்டோம்..... தயவு செஞ்சு கொஞ்சம் வேகமா போ..... எனக்கு இடுப்பு வலிக்குது இவ்வளவு மெதுவா போனா...... என்றாள் மீனா.

போகும் வழியில் நான்கு பேக்கெட் ஸ்வீட் வாங்கிக் கொண்டாள் மீனா.

எதுக்கு நாலு.......
உன் ஃபிரெண்ட்ஸ் -2 பேர்..... இன்னும் ரெண்டு யாருக்கு?

அது வந்து..... அது.... எங்க அம்மா வீட்டுக்கு போய்.... அவங்க ஃபோட்டோ முன்னாடி வச்சு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு எடுத்துக் கொண்டு வந்திடறேன்..... இன்னொன்று சித்ரா வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்குற ஆன்டிக்கு......

ஓ..... சரி சரி..... என்று சொல்லி விட்டு அவளுடைய அம்மா வீட்டில் மீனாவை இறக்கிவிட்டு விட்டு அவர் ஃபோட்டோவின் முன் இருவரும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

சரி வா உன்னை உன் ஃபிரெண்டு வீட்ல விட்டுட்டு..... காலைல வந்து பிக்கப் பண்ணிக்கவா?

இல்ல குமார்..... என்று சொல்ல வந்தவள்.....

மீனா.... என்று தன் அம்மா திட்டுவது போல தோன்றியதால்.
சரிம்மா..... என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு.

ஏங்க.... நானே வீட்டுக்கு போயிடறேன்..... நீங்க வந்து கூட்டிக்கிட்டு போன அப்புறம் நான் கிளம்பி ஸ்டேஷனுக்கு போக கஷ்டம்..... அதுவும் இல்லாம கல்யாணத்துக்கு முன்னாடி கவி வீட்ல தங்கி இருக்கேன்.... இப்போ தங்குறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு.....

ஓ..... ஓகே....... என்று சொல்லி விட்டு மீனாவை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு அடுத்த தெருவில் இருக்கு அவள் ஃபிரெண்டு வீட்டு வாசலில் இறக்கி விட்டுவிட்டு கிளம்பினான் குமார்.

பை மீனா....

ஓகேங்க.....

என்னாச்சு டி.... வாங்க போங்க ன்னு சொல்ற....

அதுவா..... எங்க அம்மா ஞாபகம் வந்துச்சு.... எப்பவுமே உன்னை அப்படி கூப்பிட்டா அம்மா திட்டுவாங்க இல்ல.... அதான் எங்க அம்மா வீட்ல நிக்கும் போது அப்படி தோணுச்சு.....

அம்மா தெய்வம் ஆனாலும் எனக்கு தான் சப்போர்ட் பண்றாங்க..... ஹாஹாஹா.... என்று சொல்லி சிரித்தான் குமார்.

அவங்க என்னோட அம்மா.....

எனக்கும் தான்..... சரி மீனா.... டைம் ஆகுது.... பை.... என்றான்.

ஏங்க நாளைக்கு ஸ்டேஷனுக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்க மறந்திட்டேன்..... நீங்க இப்போ உங்க ஆஃபீஸூக்கு வாங்குவீங்க இல்ல..... அப்படியே எனக்கும் வாங்கிடுங்க.....

சரிம்மா பை.....

பை.... என்று சொல்லி விட்டு தன் ஃபிரெண்டு சித்ரா வீட்டுக்குள்ளே வந்தாள் மீனா.

###########

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.