ரகசிய கொலையாளி......
பாகம் -20
ஆமாம் டி.... நானே கேட்கனும் ன்னு நினைச்சேன் ஆன்டி இறந்த பிறகு அங்கிள் எப்படி சமாளிச்சிட்டாரா?
முதல் மூணு மாசம் ரொம்ப கஷ்டப் பட்டாரு..... அப்புறம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அந்த துக்கத்தில் இருந்து வெளிவந்து புக்ஸ் படிக்க ஆரம்பிச்சிட்டாரு.....
ஓ..... ஓகே ஓகே......
சரி இப்பவே வீட்டுக்கு போகப் போறீயா?
இல்ல இல்ல..... வேற ஒரு இடத்துக்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போவேன்.....
ஓ.... சரி சரி....
ஏய் பாயாசத்தை எடுத்து கொண்டு வா..... என்றாள் மீனா.
இரு இரு மறந்திட்டேன் எடுத்து வரேன் என்று தாங்கி தாங்கி நடந்து சென்று எடுத்து வரச் சென்றாள் சித்ரா.
நான் வரவா டி..... என்றாள் கவிதா.
வேண்டாம் கவி.... என்று சொல்லி விட்டு அவளே சென்றாள்.
இருடி..... அவளே எடுத்து வருவா.... நம்ம சாதாரணமா கேட்டா கூட அவளுக்கு ஹர்ட் ஆகும்....
ஐயோ நான் அந்த அர்த்தத்தில் சொல்லல டி.
எனக்கு தெரியும்..... அவளுக்கும் தெரியும்..... ஆனா இப்போ அவ இருக்குற மனநிலைக்கு யாராவது சாதரணமா எதாவது சொன்னா அது கூட அவளுக்கு கஷ்டமா தான் இருக்கும்.
என்னடி போலீஸ் வேலை தான செய்யுற..... சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி பேசுற.....
சைக்கியாட்ரிஸ்ட் இல்லடி சைக்காலஜிஸ்ட்.....
ரெண்டுமே வேற வேற..... என்று சொல்லி சிரித்தாள் மீனா.
அம்மாடி.... எனக்கு விளக்கம் தேவையில்லை ஆளை விடு.... என்றாள் கவிதா.
அதற்குள் சித்ரா மூவருக்கும் பாயாசம் ஒவ்வொரு சிறிய கண்ணாடி பௌளில் கொண்டு வந்து கொடுத்தாள்.
மூவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டனர். சிறிது நேரம் கழித்து மீனா தன் தோழிகளுடன் சில செஃபிக்களை எடுத்துக் கொண்டாள்.
ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷமா இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது டி.... என்றனர் கவிதா மற்றும் சித்ரா.
ஆமாம் டி..... என்று சொல்லி இருவரையும் ஹக் செய்தாள் மீனா. பின் கேப் புக் செய்தாள்.
கார் வந்தது. இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி மணிகண்டன் வீட்டிற்கு சென்றாள் மீனா.
காலிங் பெல் சப்தம் கேட்டது. ஜன்னல் வழியாக யாரென்று பார்த்தார் சிவகாமி.
மீனாவை பார்த்ததும்..... என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக நின்று கொண்டு இருந்தார். மீனா மறுபடியும் பெல்லை அடித்தாள்.... சிவகாமி கதவை திறந்து....
வாம்மா..... என்றார்.
மணி அண்ணா வீட்ல இருக்காரா?
இல்லம்மா அங்கிருந்து அப்படியே ஸ்டேஷனிற்கு போயிட்டான்.....
உள்ள வரலாமா அம்மா?
ஓ..... மன்னிச்சிடு மா..... ஏதோ ஒரு யோசனைல...
உன்னை உள்ள வா ன்னு கூட கூப்பிடல....
இல்லம்மா அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை......
வாம்மா..... என்று சொல்லி உள்ளே அழைத்து சென்று கதவை தாழ்ப்பாள் போட்டார் சிவகாமி.
சொல்லுமா.....
இந்தாங்கம்மா ஸ்வீட்டு.....
எதுக்கு மா..... ஓ.... சாரி சாரி..... மறந்திட்டேன்...... என்றார் சிவகாமி.
அம்மா..... இப்படி உட்காருங்க..... தயவு செஞ்சு பதட்டப்படாதீங்க..... நான் சும்மா வாய் வார்த்தைக்கு மணி சாரை அண்ணானானும் உங்களை அம்மா என்றும் கூப்பிடல..... மனசார அப்படி தான் நினைக்கிறேன்....
நீங்களும் அப்படி தான் என்னை நினைச்சீங்கன்னா என் கிட்ட சொல்லுங்க..... மணி அண்ணாவுக்கு என்ன பிராப்ளம்...... என்றாள் மீனா.
அது வந்து..... அது...... என்று இழுத்தார் சிவகாமி.
சொல்ல விருப்பம் இல்லை ன்னா விட்டிடுங்க மா..... என்று சொல்லி எழுந்த மீனாவை கையை பிடித்து அமர வைத்தார் சிவகாமி.
என் பையன் வேலையில ரொம்ப ரொம்ப திறமைசாலி..... ஆனா ..... என்று சொல்லும் போதே கண்கள் கலங்கி வார்த்தை திக்கியது.
உனக்கு தெரியுமா ன்னு எனக்கு தெரியல....
என் அண்ணன் பொண்ணு பேரு மாயா..... என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார் சிவகாமி.
என்ன அம்மா சொல்றீங்க..... என்னால நம்பவே முடியலையே.....
ஆமாம் மா..... இப்போ டாக்டர் வேற இப்படி சொல்றாரு.....
என்ன சொன்னாரு.....
அதான் மாயாவை நேரா பார்த்து அவளுக்கு உண்மையை புரிய வச்சு மணி கிட்ட பேச வைக்கனும்.... இல்லன்னா அவன் உருவத்தை கற்பனை பண்ணிக்கொள்ள ஆரம்பிச்சிட்டான்னா குணப் படுத்துவது ரொம்ப ரொம்ப கஷ்டம் ன்னு சொன்னாரு.....
ஆனா அண்ணா தான் ஊர் திருவிழா போது ஜன்னல் கிட்ட அவங்க இருக்கிற மாதிரி கற்பனை செய்துகொண்டு பேசினாரே.....
ஆமாம் மீனா.... அப்போதிலிருந்து தான் அவனுக்கு டிரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பிச்சோம்..... ஒரு வருஷம் எந்த விதமான பிரச்சனையும் இல்லை..... அப்புறமா தான் மறுபடியும் ஃபோன் பேச ஆரம்பிச்சிட்டான்.
ஓ..... ஓகே ஓகே..... புரியுது மா..... இப்போ என்னம்மா பண்றது?
அதான் எனக்கும் ஒண்ணும் புரியல..... என்றார் சிவகாமி.
அம்மா.... எனக்கு ஒரு ஐடியா....
சொல்லுமா...
ஊர்ல பக்கத்து வீட்டில் இருக்கும் ஆன்டிக்கு உங்க அண்ணியோட நம்பர் தெரியும் ன்னு சொன்னீங்க இல்ல?
ஆமாம்.....
எப்படியாவது அந்த நம்பரை வாங்கிக் கொடுங்க அம்மா.... நான் மாயா அண்ணி கிட்ட பேசறேன்.....
என்னம்மா நீயும் அண்ணி ன்னு சொல்ற....
இல்ல மணி அண்ணா ன்னு சொல்லவே அப்படியே ஃப்லோல வந்திடிச்சு.....
சரிம்மா.... நான் அந்த அக்கா கிட்ட கேட்டு நம்பர் வாங்கிட்டு உனக்கு ஃபோன் பண்றேன்.....
சரிம்மா.... நான் கிளம்பவா....
இரும்மா காஃபி டீ எதாவது குடிச்சிட்டு போ....
இல்லம்மா வேண்டாம்..... காஃபி டீ அவாய்டு பண்ண சொன்னாங்க டாக்டர்.... அதுவும் இல்லாம இப்போ தான் என் ஃபிரெண்டு வீட்ல பாயாசம் குடிச்சிட்டு வந்தேன்...... இன்னொரு நாள் வந்து டிபனே சாப்பிடறேன்.....
இல்லம்மா வேண்டாம்..... என்றார் சிவகாமி.
என்ன இப்படி சொல்றாங்க ன்னு ஒரு நிமிடம் விழித்தாள் மீனா.
நான் உனக்கு 5 வகை சாப்பாடு செஞ்சு கொண்டு வரேன் உங்க வீட்டுக்கே.... அஞ்சாம் மாசம் அம்மா வீட்ல இருந்து சாப்பாடு செஞ்சி கொண்டு வந்து பொண்ணுங்களுக்கு போடுவாங்க..... என்றார் சிவகாமி.
அவர் சொன்னதைக் கேட்டு கண்கள் கலங்க அவரை கட்டிப் பிடித்து கொண்டாள் மீனா.
அம்மா..... சொன்னா நம்ப மாட்டீங்க..... இப்போ தான் எங்க அம்மா வீட்டுக்கு போய் அவங்க ஃபோட்டோ முன்னாடி ஸ்வீட் பாக்ஸை வச்சிட்டு வேண்டிக்கிட்டேன்....
அம்மா.... நீங்க மட்டும் இப்போ இருந்திருந்தீங்கன்னா எப்படி எல்லாம் சந்தோஷப் பட்டிருப்பீங்க.... எனக்கு பார்த்து பார்த்து சமைத்து தருவீங்க..... அப்படீன்னு..... எங்க அம்மாவை உங்க மூலமா எனக்கு பதில் சொன்னது போல இருக்கு..... என்று கண்கள் கலங்க சொன்னாள்.
அவள் கண்களை துடைத்து விட்டு..... நீ கவலைப்படாதே மா..... உன் பிரசவத்திற்கு நான் கூட
இருந்து பார்த்துக் கொள்கிறேன்.
ஸ்மைல் செய்து கொண்டே....
தேங்க்ஸ் அம்மா.... என்றாள் மீனா.
முதல் முறையாக நல்ல செய்தியுடன் வந்திருக்கிறாளே என்று வீட்டில் இருந்த பிளௌஸ் பிட், பூ பழம், வெற்றிலை பாக்கு எல்லாம் ஒரு தட்டில் வைத்து சாமி முன் வைத்தார் சிவகாமி.
எடுத்துக்கோ மா.... என்றார்.
ஏன்மா.... உங்க கையாலேயே கொடுங்க.....
இல்லம்மா..... அதெல்லாம் தப்பு.... அப்படி செய்யக்கூடாது..... பெரியவங்க ஏதோ காரணங்களுக்காக தான் அப்படி சொல்லி இருக்காங்க..... என்றார் சிவகாமி.
அப்பா உங்க கூடவே தான் அம்மா இருக்கிறார்.... அதனால நீங்க எதுவும் சங்கட படாம..... நீங்களே தாம்பூலம் கொடுங்க.... நான் ஆசிர்வாதம் வாங்கிக்கிறேன்..... என்றாள் மீனா.
பிளீஸ் மீனா.....என்று கெஞ்சலாக கேட்டார் சிவகாமி.
###########
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.