• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -22

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் -22


வேறு யார் மேலேயாவது டவுட் இருந்தா அவங்க ஸாம்பில்ஸ் கொண்டு வந்து தரேன் டெஸ்ட் பண்ணி சொல்ல முடியுமா டாக்டர்...... என்றான் மணிகண்டன்.

கண்டிப்பா..... என்றார் டாக்டர் குணசேகரன்.

ஓகே சார்..... தேங்க்ஸ்.....

தலைல அடிப்பட்டு தான் உயிர் போச்சு ன்னு சொன்னீங்க இல்ல?

ஆமாம்.....

அது ஷார்ப் ஆப்ஜெக்ட்டா இல்ல வேறு என்ன ஆயுதமா இருக்கலாம் ன்னு சொல்லமுடியுமா?

தலைல ஏதோ ஒரு ஸ்ட்ராங் ஆப்ஜெக்ட் இரும்பு சுத்தி இல்ல அது போல ஏதோ ஒண்ணு வச்சு தான் அடிச்சிருக்காங்க..... ஷார்ப் ஆப்ஜெக்ட் இல்ல.....

ஓ.... ஓகே டாக்டர்...... தேங்க்ஸ்..... என்று சொல்லி விட்டு கைக் குளிக்கினான் மணிகண்டன்.

வெளியே வந்தனர் ராஜேஷ் மற்றும் மணிகண்டன்.

என்ன சார் இது.....

யாராக இருக்கும்?.....

தெரியல.... வாங்க ராஜேஷ் நம்ம விக்டிம் வீட்டுக்கு போய் வேற எதாவது தடயம் கிடைக்குதா ன்னு பார்க்கலாம்..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார் என்று சொல்லி வண்டியை எடுத்தான் ராஜேஷ்.

காவேரியின் வீட்டிற்கு சென்றனர். ஒரு கான்ஸ்டபிள் டியூட்டியில் இருந்தார். மணிகண்டனை பார்த்து சல்யூட் அடித்தார்.

உள்ளே சென்று காவேரியின் ரூமில் எதாவது மெடிக்கல் ஃபைல்ஸ் இருக்கிறதா..... என்று பார்த்தனர் ராஜேஷ் மற்றும் மணிகண்டன். ஒருமணி நேர தேடலுக்கு பிறகு.....

இல்ல சார்..... எந்த தடையமும் கிடைக்கவில்லை..... மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் எதுவும் இல்லை......என்றான் ராஜேஷ்.

கிட்சன் மற்றும் ஹாலில்... தாக்கப்பட்ட ஆயுதத்தை தேடிக் கொண்டு இருந்தான் மணிகண்டன். அதுவும் கிடைக்கவில்லை.

சரி வாங்க..... என்று சொல்லி அவனும் கிளம்பினான்.

அப்போது சாக்ஷியிடமிருந்து ஃபோன் வந்தது.

ஹலோ..... சார் நான் சாக்ஷி.

சொல்லுங்க சாக்ஷி.....

ரஸியா அப்புறம் அவங்க அம்மா அப்பா மூணு பேரும் நேத்து ராத்திரி வந்திருக்காங்க. இப்போ வரைக்கும் எங்கேயும் போகல..... என்றாள்.

ஓகே சாக்ஷி.... நீங்க பார்த்துக்கோங்க..... நான் அங்கே வரேன்.... என்று சொல்லி ராஜேஷிடம் ரஸியா வீட்டிற்கு போகச் சொன்னான் மணிகண்டன்.

அடுத்த அரைமணி நேரத்தில் ரஸியாவின் வீட்டு வாசலில் இன்னோவா நின்றது.

போலீஸ் ஜீப் வந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாக ரஸியா வீட்டை பார்த்துக கொண்டு இருந்தனர். சாக்ஷியும் எதுவும் தெரியாதது போல வெளியே வந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

சாக்ஷியின் கணவன் அருண்குமார் வெளியே வந்தான்.

என்னடி..... என்னாச்சு ரஸியா வீட்ல....

தெரியல அருண்..... போலீஸ் வந்திருக்கு..... அதான் எல்லாம் ஆர்வமா பாக்குறாங்க....

நீ எப்படி இங்க இருக்க..... இந்நேரம் அங்கு போய் நியூஸ் கலெக்ட் பண்ணி இருப்பீயே உன் சேனலுக்கு..... என்று கிண்டல் செய்தான் அருண்குமார்.

டேய்..... போடா.... என்று சிரித்துக் கொண்டே அவனை உள்ளே தள்ளி....

போ போ.... போய் கிளம்பு உனக்கு ஆஃபீஸூக்கு டைம் ஆகுது.... என் வேலையை நான் முடிச்சிட்டேன்... டிபன் லஞ்ச் ரெடி பண்ணிட்டேன்.... பேக் கூட பண்ணிட்டேன்..... நீ உன் பையனை எழுப்பி குளிப்பாட்டி ரெடியாக்கு..... உன் வேலை தான் பெண்டிங்.....

என் செல்லம் இல்ல..... நீயே அவனை எழுப்பி கொடு..... நான் அவனை குளிப்பாட்டி ரெடி பண்ணி விடறேன்..... அவனை எழுப்பறது தான் ரொம்ப சேலஞ்சிங் டாஸ்கா இருக்கு.....

நோ நோ....

நாளைக்கு பிரேக்ஃபாஸ்ட் கூட நான் பண்றேன்..... பிளீஸ்.....

நோ.....

அப்பாடி..

நோ தான் சொன்னேன்.... எஸ் சொல்லல....

அதுக்கு இல்ல..... ரெண்டு நோ வில் இருந்து ஒரு நோ ஆயிடிச்சு இல்ல..... அதுக்கு.....

ஏய்.... போடா.... என்னை வெறுப்பேத்தாத..... டைம் ஆகுது பாரு..... என்று சொல்லி அவனை உள்ளே தள்ளிவிட்டு விட்டு மெதுவாக ரஸியா வீட்டு அருகே இருந்த கூட்டத்துடன் சேர்ந்து நின்று கொண்டாள்.

மணிகண்டன் மற்றும் ராஜேஷ் இருவரும் பெல் அடிக்க ரஸியாவின் அப்பா அவர்களை வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்றார். வாசற்கதவை மூடி விட்டார்.

ஹால் சோஃபாவில் அமர்ந்து இருந்தனர் மணிகண்டன் மற்றும் ராஜேஷ்.

எதிரே இருந்த சோஃபாவில் ரஸியாவின் அம்மாவும் அப்பாவும் அமர்ந்து இருந்தனர்.

ரஸியா இருக்காங்களா?..... என்றான் மணிகண்டன்.

இருக்கா.....

கொஞ்சம் அவங்களை கூப்பிடுங்க அவங்க கிட்ட காவேரி மர்டர் விஷயமா பேசனும்.....

அவளுக்கு உடம்பு சரியில்லை சார்.....

இதோ பாருங்க..... அவங்க காவேரியோட கிளோஸ் ஃபிரெண்டு..... விசாரிச்சு தான் ஆகனும்..... தயவு செஞ்சு அவங்களை கூப்பிடுங்க..... இல்ல என்கொயரி பர்மிஷன் லெட்டர் வாங்கி வந்தா ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க வேண்டி வரும்..... என்றான் ராஜேஷ்.

சொன்னா புரிஞ்சிக்கோங்க சார்..... நீங்க கேட்குற கேள்விக்கு அவள் பதில் சொல்ற நிலைமைல இல்ல.....

அதை நாங்க கேட்டு தெரிஞ்சிக்கிறோம்....

இவங்க நம்ப மாட்டாங்க..... நீ போய் ரஸியாவை கூட்டிக்கிட்டு வா..... என்றார் ரஸியாவின் அப்பா தன் மனைவியை பார்த்து.

சரிங்க..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார் ரஸியாவின் அம்மா.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு.....

ரஸியாவை கைத்தாங்களா பிடித்து அழைத்து வந்தார்.

ரஸியா அமைதியாக அமர்ந்தாள்.

ரஸியா..... என்று கூப்பிட்டான் மணிகண்டன்.

பதில் இல்லை அமைதியாக வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தாள் ரஸியா.

மிஸ் ரஸியா..... என்றான் மணிகண்டன் மறுபடியும்.

பதில் இல்லை.

ரஸியா..... இப்போ சார் கேட்குறதுக்கு பதில் சொல்லலைன்னா ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போய் விசாரிப்போம்.... பரவாயில்லையா..... என்றான் ராஜேஷ்.

நீங்க சொல்றது.... கேட்கிறது எதுவுமே அவளுக்கு தெரியல..... அவ மூளைக்கு எட்டல..... என்றார் ரஸியாவின் அம்மா அழுதுகொண்டே.

என்னாச்சு..... என்றான் மணிகண்டன்.

தெரியல வியாழக்கிழமை ராத்திரி ஃபோன் பண்ணினா.

மணிகண்டன் ராஜேஷை பார்க்க அவன் தன்னிடம் ரெக்கார்டரில் ரெக்கார்டு செய்தான்.

அம்மா..... காவேரி அக்காவுக்கு உடம்பு சரியில்லை..... நான் அவங்களை டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போறேன்..... அப்புறம் அவங்களை வீட்டுல விட்டுட்டு ஆட்டோவில வந்திடறேன்..... என்றாள் ரஸியா.

இப்பவே லேட் ஆயிடிச்சே..... இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.... அதைவிட அவங்க வீட்டிலேயே தங்கிட்டு காலைல வா ன்னு சொன்னேன்.

தேங்க்ஸ் ஆன்டி.... நானே உங்க கிட்ட கேட்கலாம் ன்னு நினைச்சேன்.... மனசே சரியில்லை..... ரஸியாவை என் கூட இன்னைக்கு தங்க வச்சிக்கவா ன்னு கேட்கலாம் ன்னு நினைச்சேன்..... நீங்களே சொல்லிட்டீங்க.....

சரிம்மா.... என்னம்மா உடம்புக்கு?

ஒண்ணும் இல்லை ஆன்டி கோல்டு, ஃபீவர் தான்.....

சரிம்மா..... உடம்பை பார்த்துக்கோ..... காலைல அவ உங்க வீட்ல இருந்து கிளம்பும் போது ஃபோன் பண்ண சொல்லு.

சரிங்க ஆன்டி..... பை.....

பை மா.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.

அப்புறம் என்ன நடந்துச்சு..... ஏது நடந்துச்சு ன்னு தெரியல..... வெள்ளிக்கிழமை காலைல 5.45 இருக்கும் கதவு தட்டும் சப்தம் கேட்டு போய் திறந்தா ரஸியா நின்னுக்கிட்டு இருந்தா.

என்னடி.... இவ்வளவு சீக்கிரமா வந்திட்ட..... பொழுது விடிந்ததும் வந்திருக்கலாம் இல்ல....

பதில் பேசாமல் உள்ளே சென்றாள் ரஸியா.

ஒரு புளூ கலர் கார் எங்க வீட்டு வாசலில் இருந்து போச்சு..... நான் கேப் புக் பண்ணி வந்திருக்காளோ ன்னு நினைச்சேன்..... ஆனா கார் திரும்ப போகும் போது தான் பார்த்தேன் அந்த நம்பர் பிளேட் வெள்ளைக் கலர்ல இருந்துச்சு.....

கோபமாக கதவை சாத்தி விட்டு உள்ளே வந்து ரஸியா பக்கத்தில் அமர்ந்து.....

யாருடி அவன்..... அவன் வீட்டில தான் நேத்து தங்கினியா..... இதுக்கு அந்த காவேரியும் உடந்தையா.... என்று கத்தினேன்.

பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள் எங்க ரஸியா.

############

தொடரும்.....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
Last edited: