• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் -24

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி......

பாகம் -24


மாயா வெளியே நின்று கொண்டு ஜீப்பின் கதவை தட்ட.... ஜீப்பை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றனர் உள்ளே இருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள்.

பை திதி.... தேங்க்ஸ்.... என்றாள் சோனியா.

அவள் தலையை கோதி விட்டு....
ஜாவ்.... என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு மரத்தின் பின்னால் இருந்து தன் புல்லட் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது சோனியாவின் அம்மா கால் செய்தார்.

ஹாங் ஆன்டி... டோண்ட் ஒரி.... பிராப்ளம் சால்வுடு.....( ஆன்டி.... கவலை வேண்டாம்.... பிரச்சனை முடிஞ்சிடிச்சு....).... என்று சொல்லி விட்டு தன் பைக்கை ஸ்டார்ட் செய்து சென்றாள்.

டெல்லி கிரைம் பிராஞ்ச் ஆஃபீஸில் தன் வண்டியை நிறுத்தினாள். அங்கிருந்த அனைவரும் மாயாவிற்கு சல்யூட் அடித்தார்கள்.

நம்ம ஹீரோயின் மாயா டெல்லியில் சிபிஐ யில் எஸ்.ஐ ஆக இருக்கிறாள்.

அப்போது மாயாவின் அம்மா கால் செய்தார்.

அம்மா..... சொல்லுங்க அம்மா.....

உண்மையிலேயே உனக்கு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடிச்சா?.... என்றார் பூர்ணிமா ( மாயாவின் அம்மா).

ஆமாம் மா.... டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வாங்க தான் போயிக்கிட்டு இருக்கேன்.....

கண்டிப்பா போய் தான் ஆகனுமா மாயா?....

ஏன் மா இதே கேள்வியை நேரத்திலிருந்து கேட்டுக்கிட்டே இருக்கீங்க..... உங்களுக்கு சென்னை பிடிக்காது ன்னு எனக்கு தெரியும்..... ஆனா வேற வழி இல்ல.... நீங்க வேணும்னா மாமா கூட இங்கேயே இருங்க...... நான் மட்டும் போறேன்.....

இல்ல இல்ல.... நானும் வரேன்.....

அம்மா..... கவலைப்படாதீங்க..... பிரமோஷனோட முதல் போஸ்டிங் சென்னை..... அதனால நான் அதை ரிஜெக்ட் பண்ணக் கூடாது..... இரண்டு வருஷம்..... அதுக்கு அப்புறம் நான் வேற பிலேஸூக்கு ரெக்குவஸ்ட் பண்ணலாம்..... என்றாள் மாயா.

சரிம்மா..... நான் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வைக்கிறேன்.

சரிங்க அம்மா.... பை.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று தன் சுப்பீரியர் ஆஃபீஸர் சீனியர் சூப்பரின்டென்டெடை பார்த்து சல்யூட் செய்து ஜெய் ஹிந்த் சார்...... என்றாள் மாயா.

ஜெய் ஹிந்த் மாயா.... என்றவர் அவளிடம் பிரமோஷன் மற்றும் டிரான்ஸ்ஃபர் ஆர்டரை கொடுத்து கைக் குளிக்கினார்.

தேங்க்ஸ் சார்.... என்று சொல்லி அதை ஓப்பன் செய்து பார்த்தாள். எஸ்.ஐ யில் இருந்து இன்ஸ்பெக்டர் போஸ்ட் கொடுத்திருந்தார்கள்.

ஆல் தி பெஸ்ட் மாயா..... கோயிங் டூ யுவர் ஹோம் டவுன்.... ஹேப்பி?.....

நாட் எக்ஸாக்ட்லி சார்.... எனிவேஸ் தேங்க்ஸ்.... என்று சொல்லி சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்த தனது சப்-ஆர்டினேட்களுக்கு பை சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

##########

லஞ்ச் பிரேக்கில் மீனா மாயாவின் அம்மா பூர்ணிமாவிற்கு கால் செய்தாள்.

ஹலோ கோன்..... என்றார் பூர்ணிமா.

ஹலோ..... மாயா மேடம் இருக்காங்களா?.... என்றாள் மீனா.

தமிழா..... யாரும்மா நீ..... என்று சந்தோஷம் கலந்தவாறு பேசினார்.

மாயா மேடத்தோட அம்மாவா நீங்க?

ஆமாம்.... நீ யாரும்மா?

என் பேரு மீனா..... நான் சென்னைல இருந்து பேசறேன் .....

உங்களை ஆன்டி ன்னு கூப்பிடவா?

உன் வயசு என்ன?

23.....

23 தானா.... அப்போ சரி.... கூப்பிடு..... பரவாயில்லை.... என் பொண்ணு வயசு தான்.....

ஓ..... நீ என்னவா இருக்க?

என்ன ஆன்டி?

வேலைல மா..... நீ என்னவா இருக்க?

போலீஸ் கான்ஸ்டபிள்.....

ஓ..... அவ டிரான்ஸ்ஃபர் ஆகி வருவதற்கு அரேஞ்ச் பண்ண உன் கிட்ட தான் சொல்லி இருக்காங்களா?

மாயா மேடம் டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னைக்கு வராங்களா?

அது தெரியாமலேயே நீ என் கிட்ட பேசறீயா?

இல்ல இல்ல..... மேடம் இன்னும் ஆர்டர் வாங்கல ன்னு சொன்னாங்க ..... அதான் கிடைச்சிடிச்சா ன்னு..... என்று சொல்லி சமாளித்தாள் மீனா.

ஓ..... சரி சரி..... எனக்கு எதுக்கு கால் பண்ற?

இல்ல ஆன்டி.....மாயா மேடம் நம்பர் மிஸ் பண்ணிட்டேன்..... மறுபடியும் என் சுப்பீரியர் ஆஃபீஸர் கிட்ட கேட்டா திட்டுவார்..... அதான் உங்க நம்பர் மேடமோட டீடெயில்ஸ்ல இருந்துச்சு..... அதான்.....

சரி சரி.... சொல்றேன்.... நோட் பண்ணிக்கோ.....

9840...... என்று மாயாவின் நம்பரை சொன்னார் பூர்ணிமா.

தேங்க்ஸ் ஆன்டி.... சீக்கிரமா சென்னைல மீட் பண்ணலாம்..... பை.....

ஹாங்.... பை பை.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் பூர்ணிமா.

மீனாவிற்கு ஒரே சந்தோஷமாக இருந்தது..... சீக்கிரமா மாயா மேடமும் மணி அண்ணாவும் ஒண்ணா சேர்ந்திடுவாங்க.... என்று நினைத்து கொண்டாள்.

அப்போது உள்ளே நுழைந்தான் மணிகண்டன்.

அண்ணா..... என்று சொல்லி ஸ்வீட் பாக்ஸை ஓப்பன் செய்து மணிகண்டன் மற்றும் ராஜேஷிடம் நீட்டினாள்.

வாழ்த்துக்கள் மா.... வீட்டுக்கு வந்த ன்னு அம்மா சொன்னாங்க....

ஆமாம் அண்ணா.... ஹாஸ்பிட்டல்ல இருந்து வரும்போது உங்க வீட்டு பக்கமா போனேன்.... அதான் அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கி கொண்டு ஸ்வீட் கொடுத்திட்டு வந்தேன்.....

சாரோட அம்மாவுக்கு தான் ஷூகர் ஆச்சே.... அவங்க கிட்ட போய் ஸ்வீட் பாக்ஸை கொடுத்திருக்க லூசு..... என்றான் ராஜேஷ்.

சாரி சார்..... மறந்திட்டேன்.....

பரவாயில்லை மா..... அம்மா ஸ்வீட்டை சாப்பிடல ன்னு சொன்னாங்க.....

ஓ.... ஓகே சார்.....

ராஜேஷ்..... என்னதான் ஃபிரெண்டா இருந்தாலும் மீனா கிட்ட இப்படி பேசாத..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... என்றான் ராஜேஷ்.

ஸ்வீட் பாக்ஸை டேபிள் மேலே வைத்தாள் மீனா.

எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்திட்டியா?.... என்றான் ராஜேஷ் மீனாவிடம்.

இளங்கோ, நவீன் இன்னும் வரல..... அவங்களை தவிர பன்னீர் செல்வம் சாருக்கு, ரவி சாருக்கு, வெளியே இருக்கும் டியூட்டி கான்ஸ்டபிள்ஸ் எல்லாருக்கும் கொடுத்திட்டேன்.....

எங்கம்மா போயிருக்காங்க நவீனும் இளங்கோவும்?.....

செயின் ஸ்நாட்சிங் கேஸ் இன்னைக்கு ஹியரிங் சார்.... அந்த அக்கியூஸ்டை கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.....

ஓ.... ஓகே ஓகே.....

விக்டிம்?

இல்ல சார்.... அவங்க இன்னும் கம்ப்ளீட்டா ரெக்கவர் ஆகலைன்னு வீடியோ ரெக்கார்டு பண்ணி எடுத்துக் கொண்டு போயகட்டாராம் அவங்க அட்வகேட்.....
என்றார் ரவி.

ஓ..... சரி சார்.....

நீங்க போன கேஸ் என்னாச்சு சார்.... என்றார் ரவி மணிகண்டனிடம்.

இல்ல ரவி சார்.... எந்த லீடும் கிடைக்கல......
ரஸியா தான் ஐ-விட்னஸ்.... ஆனா சாட்சி சொல்ற அளவில் அவங்க மனநிலை இல்ல.....

ஓ..... என்ன சார் இது..... ஸ்டார்ட் பண்ற இடத்திலேயே இருக்குற மாதிரி இருக்கு......

இளங்கோவும் நவீனும் வந்த பிறகு என் கிட்ட வந்து பேச சொல்லுங்க சார்..... என்று சொல்லிவிட்டு தன் கேபினுக்கு சென்று ஒயிட் போர்டில் மார்க்கரை எடுத்து காவேரி கொலை வழக்கில் இருக்கும் அனைவரது பெயரையும் எழுதினான். ஏதோ யோசனை வந்தவனாய்......

ராஜேஷ்..... வாங்க..... என்று சொல்லி முன்னே நடந்தான் மணிகண்டன்.

ராஜேஷ் தலையில் கேப்பை மாட்டிக் கொண்டு இன்னோவா கார் சாவியை எடுத்து கொண்டு போகும் போது டேபிளின் மேல் மீனா வைத்த ஸ்வீட் பாக்ஸில் இருந்து நான்கு லட்டுக்களை பக்கத்தில் இருந்த ஒரு கவரில் போட்டுக் கொண்டான்.

ஏய்..... என்னடா பண்ற.... என்றாள் மீனா.

சார்..... இந்த டைம்ல கூட்டிக்கிட்டு போறாரு.... கண்டிப்பா லேட் ஆகும்..... எனக்கு இப்பவே பசிக்குது.... அதான்.... ஒரு அவசரத்திற்கு..... என்றான் ராஜேஷ்.

அனைவரும் சிரித்தனர்.....

சிரிக்கறீங்களா?..... இருங்க இருங்க.... உங்களுக்கும் ஒரு நாள் என் நிலைமை வரும்..... அப்போ தெரியும்..... என்று சொல்லி விட்டு வேகமாக அவன் போவதற்குள் இரண்டு முறை ஹார்ன் அடித்தான் மணிகண்டன்.

இதோ வந்திட்டேன் சார்.....

எவ்வளவு நேரம் ராஜேஷ்.....

சாரி சார்.....
எங்க சார் போகனும்?

மர்டர் கேஸ் விக்டிம் வீட்டுக்கு..... என்றான் மணிகண்டன்.

மறுபடியுமா ..... என்று நினைத்து கொண்டான் ராஜேஷ் .

############

தொடரும் ......

அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 
Last edited: