• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -25

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் -25

காவேரியின் வீட்டு வாசலில் கார் நின்றது. அங்கிருந்த போலீஸ்காரர் மணிகண்டனுக்கு சல்யூட் அடித்தார்.

இன்னும் எத்தனை நாளுக்கு இந்த டியூட்டி போட்டிருக்காங்க சார்.... என்றான் மணிகண்டன் அந்த போலீஸ் கான்ஸ்டபிளிடம்.

தெரியல சார்.... அதெல்லாம் சொல்லல..... இந்த வாரம் பூராவும் இந்த இடம் தான் ன்னு எனக்கு ஆர்டர் வந்திருக்கு.....

ஓ..... ஓகே சார்..... நைட்ல யாராவது மாறுவாங்களா?

ஆமாம் சார்..... நைட்டு டியூட்டிக்கு ஒருத்தர் வரார்...... 9 டூ 9..... நாங்க ரெண்டு பேரும் தான் மாறி மாறி பார்க்கிறோம்.....

அவர் நம்பர் கிடைக்குமா?

சாரி சார்..... நான் வாங்கல.....

என்ன சார்..... ஒருநாள் லேட்டாச்சுன்னா கால் பண்ணி கேட்குறதுக்கு கூட வாங்கலையா?

இல்ல சார்..... போலீஸ் பூத்துக்கு கால் பண்ணி சொன்னா அவங்க கால் பண்ணுவாங்க அவருக்கு.....

சரி..... பகல்ல நீங்க டியூட்டில இருக்கும் போது உங்களுக்கு வீட்டுக்கு உள்ள இருந்து சத்தம் எதாவது கேட்டுச்சா?..... இல்ல யாராவது நோட்டம் விடறது போல தெரிஞ்சதா?

இல்ல சார்..... அப்படி எதுவும் இல்லை......

ஃபோன்ல கேம் விளையாடிக்கிட்டு இருந்தா எப்படி தெரியும்..... என்றான் ராஜேஷ்.

ராஜேஷ்..... என்றான் மணிகண்டன்.

இல்ல சார்.... நம்ம வண்டி வருவதைப் பார்த்ததும் ஃபோனை பாக்கெட்ல இவர் போட்டதை பார்த்தேன்..... என்றான் ராஜேஷ்.

ராஜேஷ்..... பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாம..... பூட்டின வீட்டுக்கு உங்களை கார்டிங் டியூட்டி போட்டா.... நீங்களும் இதையே தான் பண்ணுவீங்க..... என்றான் மணிகண்டன்.

அமைதியாக இருந்தான் ராஜேஷ்.

சாரி சார்..... என்றார் அந்த போலீஸ் கான்ஸ்டபிள்.

சார்..... உட்கார்ந்து கொண்டே இருக்காம.... வீட்டை அடிக்கடி சுத்தி விட்டு எதாவது லீடு கிடைக்குமா ன்னு பார்க்க தான் சார் இந்த டியூட்டி.... அதை விட்டுட்டு கடமைக்கு ன்னு உட்காருவதற்கு இல்ல..... கொலைக்காரன் எதாவது தடையம் விட்டிருப்போமோ ன்னு பயந்து வருவதற்கு கண்டிப்பா வாய்ப்பு இருக்கு.... என்றான் மணிகண்டன்.

ஓகே சார்..... இனிமேல் கேர்ஃபுல்லா இருப்பேன்.....

நாங்க பக்கத்து வீட்டில் விசாரிச்சிட்டு வரோம்.... அதுக்குள்ள.....

டீ காஃபி எதாவது ஆர்டர் போடவா சார்....

உங்களுக்கு வேணும்னா போட்டுக்கோங்க.... எங்களுக்கு வேண்டாம்..... நைட்டு டியூட்டிக்கு ஒருத்தர் வரார் ன்னு சொன்னீங்களே.... அவரோட ஃபோன் நம்பர் , பேரு.... ரெண்டையும் போலீஸ் ஸ்டேஷனில் கேட்டு வாங்கி வையுங்க.... என்று சொன்னான் மணிகண்டன்.

ஓகே சார்.... என்று சொல்லி சல்யூட் அடித்தான் அந்த கான்ஸ்டபிள்.

பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்தனர் ராஜேஷ் மற்றும் மணிகண்டன்.

தூக்க கலக்கத்தில் கதவை திறந்தார் ஒருவர்......

யூனிஃபார்மில் மணிகண்டன் மற்றும் ராஜேஷை பார்த்த அவர்.

கண்களை துடைத்துக் கொண்டு..... வாங்க சார்.... உள்ளே வாங்க.... என்ன விஷயம்..... என்றார்.

இல்ல சார்..... பரவாயில்லை...... ஒரு தகவல் மட்டும் தெரியனும்...... கேட்கவா?

கேளுங்க சார்......

உங்க பேரு?

ராஜா.....

யாரெல்லாம் இருக்கீங்க?

நானும் என் ஒயிஃப், அப்புறம் என்னோட அப்பா அம்மா.....

ஓ.... ஓகே..... உங்க வீட்டில் இருக்கிறவங்க யாராவது இறந்த மிஸஸ் காவேரி கூட பேசுவாங்களா?

ஹாங்..... எங்க அம்மா நல்லா பேசுவாங்க..... என் ஒயிஃபும் வேலைக்கு போறாங்க.... அதனால தெரியும் ஆனா ரொம்ப பேசிக்க மாட்டாங்க.....

ஓ..... ஓகே...... உங்கள் வீட்டில இருக்கிறவங்களை கூப்பிடறீங்களா?

இஃப் யூ டோண்ட் மைண்டு உள்ளே வாங்க சார்..... எல்லார் கிட்டேயும் பேசலாம்..... என்றான் ராஜா.

ஓகே..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்தனர் ராஜேஷ் மற்றும் மணிகண்டன்.

அப்போது ராஜாவின் மனைவி ரஞ்சிதா மற்றும் ராஜாவின் அம்மா மற்றும் அப்பா வந்தனர்.

வணக்கம் சார்..... வணக்கம் அம்மா என்றான் மணிகண்டன் ராஜாவின் அப்பா அம்மாவை பார்த்து.

வணக்கம் சார்........ என்றனர் இருவரும்.

காவேரி பத்தி சொல்ல முடியுமா அம்மா?

நல்ல பொண்ணு சார் அவ..... ரொம்ப மரியாதை தெரிஞ்சவ...... எப்போ அவ வீட்டுக்கு போனாலும் சாப்பிட எதாவது கொடுத்து தான் அனுப்புவா......

யாரெல்லாம் அவங்க வீட்டுக்கு வருவாங்க?

அவ அக்காவும்.... அவ பசங்களும்..... அப்புறம் அவ ஃபிரெண்டு ஒரு முஸ்லிம் பொண்ணு..... பேரு கூட..... என்னவோ சொன்னாளே..... என்றபோது ரஞ்சிதா வந்து

ரஸியா அத்தை.... என்றாள்.

ஹாங்... ரஸியா ரஸியா...... என்றார்.

உங்களுக்கு காவேரியோட பழக்கம் இல்லையா?..... என்று ரஞ்சிதாவை பார்த்து கேட்டான் மணிகண்டன்.

அவ்வளவா இல்ல சார்..... பார்க்கும் போது ஹாய் சொல்லிக்குவோம்..... அவ்வளவுதான்.....

அவங்க ஃபிரெண்டு பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க?..... என்றான் ராஜேஷ்.

அவங்கள போன வாரம் பார்த்தேன்..... அப் னபோது ரஸியா கூட ஆட்டோவில் இருந்து இறங்கினாங்க...... என் கிட்ட இன்டிரொடியூஸ் பண்ணாங்க.... ரொம்ப ரீசென்டா பார்த்து பேசவே எனக்கு அவங்க பேரு ஞாபகம் இருக்கு.....

என்னைக்கு பார்த்தீங்க..... என்றான் மணிகண்டன்.

போன வாரத்தில ஒரு நாள்..... கிழமை ஞாபகம் இல்ல.....

வியாழக்கிழமையா?

இல்ல இல்ல..... கன்ஃபார்மா அன்னைக்கு இல்ல.....

எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க?

ஏன்னா நானும் என் கலீக் பிரியாவும் அன்னைக்கு ஃபுல் டே கம்பனி ஈவஎன்ட்ஸ் விஷயமா வெளியே போனோம்..... மார்னிங் போனேன் நைட்டு வர ரொம்ப ரொம்ப லேட்டா ஆயிடிச்சு.....

எத்தனை மணிக்கு வந்தீங்க.....

நைட்டு பதினோரு மணிக்கு மேல் இருக்கும்.....

வியாழக்கிழமை தான சொல்றீங்க?

ஆமாம் சார்.....

அன்னைக்கு ராத்திரி பக்கத்து வீட்டுக்கு யாராவது வந்ததையோ இல்ல யாராவது அங்கிருந்ததை பார்த்தீங்களா?

இல்லையே சார்..... நான் யாரையும் பார்க்கலையே.....

கொஞ்சம் நல்லா யோசிச்சு பார்த்து சொல்லுங்க.....

இல்ல சார்.... நான் ரொம்ப டயர்டா இருந்தேன்.... அதனால கவனிக்கல..... அன்னைக்கு லேட்டா ஆயிடவே ராஜாவும் நைட்டு ஷிஃப்ட் போயிட்டாரு..... ரொம்ப நேரமா கேப் கிடைக்காம அப்புறம் ஆட்டோவில் வந்தேன்.....

அம்மா..... நீங்க எப்போ காவேரியை லாஸ்டா பார்த்தீங்க?

புதன்கிழமை பார்த்தேன் சார்..... காலைல குப்பை வண்டி வந்துச்சு.... அப்போ குப்பை கொட்டும் போது அவளும் வந்தா.....

அப்போ எப்படி இருந்தாங்க.....

நல்லா தான் இருந்தா.....

இல்லம்மா..... எப்படி பேசினாங்க..... டல்லா இருந்தாங்களா?..... எதாவது மூடு அவுட்ல இருக்குற மாதிரி இருந்தாங்களா?......

இல்லையே சார்..... நார்மலா தான் பேசினா.....
என்னம்மா டிபன் சாப்பிட்டீங்களா?..... ரஞ்சிதா ஆஃபீஸ் கிளம்பிட்டாளா ன்னு கேட்டா.....

ஓ.... ஓகே..... வியாழக்கிழமை நீங்க காவேரியை பார்க்கலையா?.....

இல்ல சார்..... அன்னைக்கு நானும் என் வீட்டுக்காரரும் ஷூகர் டாக்டர் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கி இருந்தோம்..... அதனால காலைல ராஜா எங்களை ஏழு மணிக்கே கூட்டிட்டு போய் விட்டுட்டு வீட்டுக்கு வந்து தூங்கிட்டான்..... ரஞ்சிதாவும் சீக்கிரமா கிளம்பி போயிட்டா..... நாங்க எல்லா டெஸ்ட்டும் முடிச்சிட்டு வீட்டுக்கு வர சாயங்காலம் ஆயிடிச்சா..... ஃபுல் டே உட்கார்ந்து இருந்தது ரொம்ப டயர்டா ஆயிடிச்சு..... ராஜா வேலைக்கு கிளம்பி போனது கூட தெரியாது.... ஏழு மணிக்கே மாத்திரை போட்டுகொண்டு சாப்பிட்டு படுத்திட்டோம்..... என்று சொல்லி முடித்தார் ராஜாவின் அம்மா.

ஓ.... ஓகே.....

அந்த பொண்ணு இப்போ உயிரோட இல்லைன்னே தோணல சார்..... வேலைக்கு போயிருக்குற மாதிரி தான் தோணுது..... மலர் வந்து சொன்னபோது என்னால ஜீரணிக்கவே முடியல..... ஏன்னா அவளுக்கு எதிரிங்க இருப்பாங்க ன்னு நினைச்சு கூட பார்க்க முடியல...... சீக்கிரமா அந்த பொண்ணை கொன்னவங்களை கண்டுப்பிடிச்சு தண்டனை வாங்கி கொடுங்க சார்...... என்றார் ராஜாவின் அம்மா சற்றே எமோஷனலாக.

சரிங்க அம்மா..... கிளம்பறோம்.....என்று சொல்லி விட்டு எழுந்தனர் மணிகண்டன் மற்றும் ராஜேஷ்.

அப்போது ரஞ்சிதா.

ஒரு நிமிஷம் சார்...... என்றாள்.

###########

தொடரும் ......

அ. வைஷ்ணவி விஜயராகவன் .
 
Last edited: