ரகசிய கொலையாளி......
பாகம் -26
ஒரு நிமிஷம் சார்..... என்றாள் ரஞ்சிதா.
என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாக பார்த்தனர் அனைவரும்.
அன்னைக்கு நான் ஆட்டோவில் வரும்போது அந்த ஆட்டோ டிரைவர் பேசிக் கொண்டே வந்தான். எனக்கு ஏற்கனவே தலைவலி இருந்ததால நான் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக வந்து கொண்டு இருந்தேன்..... அப்போது என்னை இறக்கி விடும் போது ஒரு புளூ கார் காவேரி அக்கா வீட்டு சைடுல இருந்து போச்சு.....
புளூ காரா?
ஆமாம் சார்.....
நம்பர் எதாவது பார்த்த ஞாபகம் இருக்கா?
இல்ல சார்..... ஆனா இந்த ஆட்டோ டிரைவர் அந்த வண்டியை பார்த்துவிட்டு.....
இவனுங்க எல்லாம் வீடு இங்கேயே இருந்தாலும் ரெஜிஸ்டிரேஷன் காசை கம்மி பண்ண பாண்டிச்சேரில வீடு இருக்குற மாதிரி ஃபேக் அட்ரஸ் கொடுத்து வாங்குவானுங்க.... என்றான்.
அப்படின்னா அந்த கார் பாண்டிச்சேரி ரெஜிஸ்டிரேஷன்ல இருந்துச்சா.....
இருக்கலாம் சார்.... நான் தலைவலியால சரியா கவனிக்கல.....
ஓகே மிஸஸ் ரஞ்சிதா.... தேங்க்ஸ்.... என்று சொல்லிவிட்டு ராஜாவிடமும் அவனுடைய பெற்றோர்களிடமும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
ராஜாவிடம் அந்த வீட்டில் யாரு இருக்காங்க?....
என்று காவேரி வீட்டின் அந்த பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி கேட்டான் மணிகண்டன்.
அந்த வீட்டில் இருந்தவங்க ஆறு மாசம் முன்னாடி காலி பண்ணிட்டாங்க சார்..... இப்போ வரைக்கும் வேற யாரும் வரல..... வீடு காலியாக தான் இருக்கு..... அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் வெளிநாட்டில இருக்காரு..... அந்த வீட்டு சாவி ஒண்ணு கூட காவேரி அக்கா வீட்ல தான் இருக்கு.... என்றான் ராஜா.
ஓ..... ஓகே..... அந்த வீட்ல முன்னாடி யாரு இருந்தாங்க.....
ஒரு ஃபேமிலி தான்......
ஏன் காலி பண்ணாங்க ன்னு தெரியுமா?
அந்த வீட்டில இருந்த பையனுக்கு இஞ்சினியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சது..... இங்கிருந்து தூரமா இருக்குன்னு காலி பண்ணிட்டாங்க.....
யாரு எல்லாம் இருந்தாங்க?
அந்த சார்.... அவர் ஒயிஃப்.... ஒரே பையன்.... அந்த சாரோட அம்மா..... அந்த அம்மா இந்த வீட்ல இருக்கும் போது இறந்திட்டாங்க..... அப்புறம் அவங்க மூணு பேரு மட்டும் தான் இருந்தாங்க..... அந்த பையன் +2 எக்ஸாம் முடிஞ்சதும் கிளம்பிட்டாங்க.....
அவங்க இப்போ எங்க இருக்காங்க?
தெரியல சார்.....
அம்மா.... உங்களுக்கு தெரியுமா?..... என்றான் ராஜா தன் அம்மாவிடம்.
யாரு பத்தி சொல்ற டா...... புருஷோத்தமனா?.....
இல்லம்மா..... கோபிகிருஷ்ணன் சார்.....
ஓ........ கோபிகிருஷ்ணன் - மஞ்சுளா தான?
ஆமாம் மா.....
வில்லிவாக்கமோ எங்கையோ போயிட்டதா சொன்னா மஞ்சுளா..... மஞ்சுளா நம்பர் இருக்கும் ன்னு நினைக்கிறேன்.... என் ஃபோன்ல பாரு..... என்றார் ராஜாவிடம்.
அவங்க ஃபேமிலிக்கும் காவேரிக்கும் எதாவது பிரச்சனை இருந்துச்சா?
இல்ல சார் அப்படி எதுவும் இல்லை..... அவங்க குடும்பத்துக்கும் காவேரிக்கும் எதுவும் இல்லை.... ஆனா.....
ஆனா என்னம்மா?
புருஷோத்தமன்னு ஒருத்தன் கோபிகிருஷ்ணன் வீட்டுக்கு பக்கத்தில இருந்தான்..... அவன் தான் காவேரி கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணான்.....
அப்புறம்.....
போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டா காவேரி.....
அப்புறம் அவனுக்கு ஒரு மாசம் தண்டனையும் ஒரு லட்சம் அபராதம் அனாதை ஆசிரமத்துக்கு கொடுக்கனும் ன்னு கோர்ட் ஆர்டர்..... அப்புறம் போலீஸ்காரர்கள் ஸ்டிரிக்டா வார்னிங்கும் கொடுத்ததா சொன்னா காவேரி..... அப்புறமா வீட்டை காலி பண்ணிட்டான் அந்த புருஷோத்தமன்...
எங்கே போனான் ன்னு தெரியுமா?...... என்றான் ராஜேஷ்.
தெரியலையே பா.... என்றார் ராஜாவின் அம்மா.
ஓகே அம்மா..... தேங்க்ஸ்..... என்றான் மணிகண்டன்.
வெளியே வந்ததும் காவேரி வீட்டில் கார்டிங் டியூட்டியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மணிகண்டன் அருகில் வந்து சார்..... என்று சொல்லி நைட்டு டியூட்டிக்கு வருபவரின் ஃபோன் நம்பர் மற்றும் பெயரையும் கொடுத்தார்.
தேங்க்ஸ் சார்..... என்றான் மணிகண்டன்.
சாரி சார்..... என்றார் அவர்.
இல்ல சார்..... உங்களோட நல்லதுக்கு தான் டியூட்டி மாறுபவரோட ஃபோன் நம்பர் வாங்கி வச்சிக்க சொன்னேன்..... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்..... இதை நைட்டு டியூட்டிக்கு வருபவரிடமும் சொல்லுங்க சார்..... என்று சொல்லி விட்டு மிக மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான் மணிகண்டன். பக்கத்திலேயே நின்று கொண்டு இருந்த ராஜேஷூக்கு கூட கேட்கவில்லை. அப்படியும் ஒரு அடி அவர்கள் அருகில் சென்றான் அப்போதும் கேட்கவில்லை.....
ஓகே சார்..... கண்டிப்பா சார்..... என்று சொல்லி விட்டு சல்யூட் அடித்தார் அவர்.
மணிகண்டனும் சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். இன்னோவா காரில் செல்லும் போது ராஜேஷ் மணிகண்டனிடம்......
சார்......
சொல்லுங்க ராஜேஷ்.....
அந்த போலீஸ்காரர் கிட்ட என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
சொல்றேன் ராஜேஷ்..... அதுக்கு முன்னாடி சாக்ஷிக்கு கால் பண்ணுங்க.....
சாக்ஷின்னா டிவி சேனல்ல வேலை பண்றாங்களே..... ரஸியா வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கிறாங்களே. அவங்க தான சார்?
ஆமாம் ராஜேஷ்..... வேற எந்த சாக்ஷி உங்களுக்கு தெரியும்?
இல்ல..... திடீரென சாக்ஷி ன்னு சொன்னதால அவங்க தானா ன்னு கன்ஃபார்ம் பண்ணிக்க நினைச்சேன்.....
ஓகே கால் போட்டு ஸ்பீக்கரில் போடுங்க..... என்றான் மணிகண்டன்.
ஃபுல் ரிங் போய் கட் ஆகி விட்டது.
சரி ஸ்டேஷனிற்கு போங்க..... அங்கே போய் பேசிக்கலாம்..... என்றான் மணிகண்டன்.
#############
வீட்டிற்கு மாயா வந்ததும் அவளுடைய அம்மா பூர்ணிமா பேசினார்.
மாயா.....
சொல்லுங்க அம்மா.....
சென்னையில் இருந்து லேடி போலீஸ் கான்ஸ்டபிள் பேசினாங்க....
உங்க கிட்டேயா?
ஆமாம் மா......
உங்க நம்பர் எப்படி தெரியும்.....
ஆஃபீஸ் ஃபைல்ல இருந்துச்சாம்...... உன்னோட நம்பர் மிஸ் பண்ணகட்டாங்க ன்னு என் கிட்ட உன் நம்பர் கேட்டாங்க......
அம்மா...... என்னம்மா நீங்க..... யாரு யவருன்னே தெரியாம எதுக்கு என் நம்பரை கொடுத்தீங்க..... எனக்கு ஆல்ரெடி பேசிட்டாங்க மா.... அவங்க லேடி இல்ல..... ஒரு ஆம்பளை போலீஸ்..... எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கிறதா சொன்னாரு...... இது தெரியாம நீங்க யார் கிட்ட பேசனீங்க...... என்றாள் மாயா.
இல்ல அந்த பொண்ணு பேசியதை பார்த்த உண்மையிலேயே தான் உன் ஃபோன் நம்பரை மிஸ் பண்ணிட்டா ன்னு தோணுச்சு..... என்றார் பூர்ணிமா.
எங்கே உங்க ஃபோனை கொடுங்க..... என்று சொல்லிவிட்டு அதில் வந்த இன்கம்மிங் நம்பரை பார்த்து தன் ஃபோனில் இருந்து கால் செய்தாள் மாயா.
ஃபுல் ரிங் போய் கட் ஆனது.....
பாருங்க காலை எடுக்கல..... என்ன ஏது...... யாருன்னே தெரியாம நம்பர் எல்லாம் கொடுக்காதீங்க அம்மா..... என்றாள் மாயா.
இல்ல மாயா..... நீ வேணும்னா பாரு.... அந்த பொண்ணு மிஸ்டு கால் பார்த்துவிட்டு அவளே பண்ணுவா......
நீங்க வேற மா..... அதெல்லாம்..... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மீனாவிடம் இருந்து கால் வந்தது.....
எடுத்து ஹலோ.... என்றாள் மாயா.
குட் ஈவினிங் மேடம்..... என் பேரு மீனா..... நான் ஈ1 போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளா இருக்கேன்.....
ஓகே..... எதுக்கு எங்க அம்மா கிட்ட பொய் சொன்னீங்க.
பொய் எல்லாம் சொல்ல மேடம்......
நீங்க தான் எனக்கு அலாட் பண்ணின போலீஸ் கான்ஸ்டபிளா?
இல்ல மேடம் அவங்க தான் அந்த கேள்வியை கேட்டாங்க...... நான் ஆமாம்ன்னு மட்டும் தான் சொன்னேன்......
அது பொய் இல்லையா?.... என்றாள் மாயா.
இல்ல மேடம்...... எனக்கு உங்க ஃபோன் நம்பர் வேணும்ன்னு தான் அப்படி சொன்னேன் ..... சாரி மேடம் .... என்றாள் மீனா .
##########
தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .

Last edited: