• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -28

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
220
93
28
Maduravoyal

ரகசிய கொலையாளி.....

பாகம் -28

மீனா மாயாவின் மிஸ்டு கால் பார்த்துவிட்டு மறுபடியும் கால் செய்தாள். மாயாவும் அவளுடைய அம்மா பூர்ணிமாவும் ஃபிளைட்டில் சென்னை வந்துக் கொண்டிருந்ததால் மீனாவிற்கு லைன் கிடைக்கவில்லை. ஸ்விட்சிடு ஆஃப்..... என்று வந்தது.

ஃபிளைட்டில் சென்னை வந்துக் கொண்டிருக்கும் போது பூர்ணிமா மற்றும் மாயா பேசிக் கொண்டு வந்தனர்.

அம்மா.....

சொல்லுமா.....

வர சன்டே என் பர்த்டே இல்ல?

ஆமாம்......

அப்போ நம்ம ஊருக்கு போகலாமா?

திரும்பி அவளை முறைத்தார் பூர்ணிமா.

அம்மா..... பிளீஸ்...... எனக்கு நம்ம வீட்டை பார்க்கனும் போல இருக்கு......

இல்ல வேண்டாம்.....

அம்மா..... பிளீஸ்..... உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க வரவேண்டாம்.....

எனக்கு அங்க போனா உங்க அப்பா ஞாபகம் வரும்..... அப்புறம் அதை விட அதிகமா அவரோட தங்கச்சி ஞாபகம் வரும்..... உங்க அப்பா இறந்ததற்கு காரணமே அந்த சிவகாமி தான்.....

அம்மா..... அத்தை என்ன பண்ணாங்க......

மாயா..... வேண்டாம்..... அதைப் பத்தி பேசினா நான் டென்ஷன் ஆகிடுவேன் ன்னு உனக்கு தெரியும் தான?

சரி சரி ‌..... அதை விடுங்க..... நான் ஊருக்கு போயிட்டு வரேனே‌‌....

சரி..... அப்புறம் உன் இஷ்டம்..... பக்கத்து வீட்டில் இருக்குற அக்கா கிட்ட வீட்டு சாவி இருக்கும்.... நீ போய் பார்த்து விட்டு அன்னைக்கே வந்திடனும்.....

கண்டிப்பா மா..... எனக்கு நெக்ஸ்ட் டே டியூட்டில ஜாயின் பண்ணனும்....‌ அதனால சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வந்திடுவேன்.....

சரி சரி...... என்றார் பூர்ணிமா.

ஏன் தான் என் அம்மாவுக்கு என் அத்தையை பிடிக்கலையோ தெரியல..... அவங்க ஏழை அதனாலயா இல்ல எங்க அவங்க இவங்களை டாமினேட் பண்ணிடப்போறாங்களோ ன்னு பயந்து முதலிலேயே இவங்க இப்படி நடந்துக்கிறாங்களா ன்னு தெரியல..... மாமி ( பூர்ணிமாவின் தம்பி மனைவி) இவங்களை பத்தி ஜாடை மாடையா பேசறது மட்டும் பொறுத்துக்கிறாங்க..... ஆனா அத்தை எதுவுமே பேசலைன்னாலும் சண்டைப் போடறாங்க..... என்று நினைத்து கொண்டாள் மாயா.

பூர்ணிமா மாயாவின் தோளில் சாய்ந்து தூங்கி விட்டார். தன் அம்மாவை தன் மடியில் ஒரு தலையணை வைத்து அதன் மேலே படுக்க வைத்து கொண்டாள் மாயா. தன் அம்மாவிற்கு தன்னை தவிர யாரும் இல்லை..... அவர் மனம் புண் படும் படி நடக்கக் கூடாது.... அவருக்கு பிடிக்காத எதையும் செய்யக் கூடாது என்று தனக்குத்தானே சத்தியம் செய்து கொண்டாள் மாயா.

சென்னை வந்ததும் அவர்களுக்காக காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் வந்து சல்யூட் அடிக்க அவருடன் சென்று டாக்ஸியில் ஏறி சிபிஐ கோட்ரஸூக்கு சென்றனர்.

அங்கே ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் அந்த கான்ஸ்டபிள்.

மேடம்..... இப்போதைக்கு சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கு.... நெக்ஸ்ட் மன்த் ஒரு டபுள் பெட்ரூம் கோட்ரஸ் காலி ஆகும்..... அப்போது மாற்றி தருகிறோம்ன்னு டிஜிஐ சொல்லச் சொன்னார்.

ஓகே சார்..... நோ பிராப்ளம்..... நானும் அம்மாவும் மட்டும் தான்...... எங்களுக்கு சிங்கிள் பெட் ரூமே போதும்..... என்றாள் மாயா.

மேடம் திங்க்ஸ் எல்லாம் வந்ததும் சொல்லுங்க ஆள் கூட்டிக்கிட்டு வந்து அரேஞ்ச் பண்ணி தரேன்..... என்றார் அந்த கான்ஸ்டபிள்.

ஓகே சார்..... என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு.....

அம்மா..... நான் சன்டே ஊருக்கு போறேன் இல்ல அங்கிருந்து வண்டி வச்சு கொஞ்சம் பாத்திரம் அப்புறம் கட்டில் பிரோ எல்லாம் எடுத்து வந்திடவா.... எதுக்கு எல்லாம் காசு கொடுத்து வாங்கனும்.....

ஒரு நிமிஷம் யோசித்து விட்டு.....

சரிம்மா..... என்றார் பூர்ணிமா.

ஓகே அம்மா..... இப்போதைக்கு இந்த ரெண்டு நாளைக்கு நான் ஃபுட் ஆர்டர் பண்ணிடறேன்..... என்றாள் மாயா.

சரி என்று தலை அசைத்தார் பூர்ணிமா.

தன் ஃபோனை எடுத்து பார்த்தாள் மாயா. சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது.

சார்ஜ் போட்டு விட்டு தன் உடைகளையும் தன் அம்மாவின் உடைகளையும் கப்போர்டில் அடுக்கி வைத்தாள். பின்னர் தன் அம்மாவின் மாத்திரை மருந்துகளையும் அடுக்கி வைத்தாள்.

பூர்ணிமா பெட்டில் படுத்து கொண்டு தன் ஃபோனை பார்த்து கொண்டு இருந்தார். அப்படியே தூங்கிவிட்டார்.

##############

உண்மையிலேயே தான் சொல்றேன் ராஜேஷ்..... அந்த கொலைக்காரன் உண்மையிலேயே இவங்களுக்கு தடையம் கிடைஞ்சிருக்குமோ ன்னு பார்க்க நீங்க சொன்னது போல பகல்ல வரலாம்..... நீங்களும் நானும் தான் இந்த கேஸை விசாரிக்கிறோம் ன்னு கண்டிப்பா எல்லாருக்கும் தெரியும் இன்க்ளூடிங் தி கில்லர். ஸோ நம்ம பொய் சொல்லல ன்னு ப்ரூவ் பண்ண ரெண்டு ஃபாரன்ஸிக் ஆட்களையும் அங்கே கூட்டிக்கிட்டு போகலாம்...... என்றான் மணிகண்டன்.

அப்போ நாளைக்கு நீங்களும் வரீங்களா சார்.....

ஆமாம்......

ஓகே சார்..... என்றான் ராஜேஷ்.

சாக்ஷி உங்களுக்கு அவுட் லைன் ரிப்போர்ட ரெடி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?

ஒன் ஹவர் சார்.....

குட்..... அப்போ நீங்க நாலு மணிக்கு டெலிகாஸ்ட் பண்ணுங்க.....

சார்..... அந்த டைம் வேறு எந்த பிரோக்கிராமோட கிளாஷ் ஆகுமா ன்னு தெரியல.....

இல்ல சாக்ஷி..... ஃபிளாஷ் நியூஸ் மாதிரி சொல்லுங்க..... ஏற்கனவே இந்த மர்டர் பத்தி உங்க சேனல்ல வந்திருக்கு இல்ல.....

எஸ் ஸார்..... ஆனா பெரிசா எதுவும் சொல்லல..... பூட்டிய வீட்டில் பெண் படுகொலை ன்னு மட்டும் தான் சொன்னோம்..... அதுக்கு அப்புறம் எங்களுக்கு எந்த விஷயமும் சரியா தெரியாததால அதுவும் இல்லாம ஃபோட்டோவும் கிடைக்காததால எங்களால டெலிகாஸ்ட் பண்ண முடியல..... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரஸியா அந்த இறந்த பொண்ணோட ஃபிரெண்டு அவ்வளவுதான்.‌.. எதுக்கு அவளை இதில் இழுக்கனும் ன்னு நினைச்சு அந்த தகவலையே நான் யாருக்கும் சொல்லல.....

ஹூம் புரியுது..... சரி..... எவ்வளவு சீக்கிரமா சொல்றீங்களோ அப்போது தான் உங்களால தடையங்கள் பத்தி சொல்ல முடியும்.

ஹூம்.... ஓகே சார்..... நான் எம்.டி கிட்ட பர்மிஷன் வாங்கி டெலிகாஸ்ட் பண்றேன்..... என்றாள் சாக்ஷி.

ஓகே லெட்ஸ் டிஸ்பர்ஸ்..... என்று மணிகண்டன் சொன்னவுடன் அனைவரும் பிரிந்து அவரவர் வேலைகளை செய்ய சென்றனர். நவீன் மற்றும் இளங்கோவை வீட்டிற்கு சென்று நன்றாக தூங்கிவிட்டு ஈவினிங் காவேரி வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு வாடகைக்கு கேட்டு செல்லச் சொன்னான் மணிகண்டன். ராஜாவிடம் ( காவேரியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்) அந்த வீட்டு ஹவுஸ் ஓனரின் நம்பர் வாங்கி பேசி இன்னொரு சாவி அவருடைய சொந்தக்காரர் வீட்டில் இருந்து வாங்கி இளங்கோ மற்றும் நவீனிடம் கொடுத்தான் மணிகண்டன்.

பிறகு மீண்டும் ஸ்டேஷனுக்கு சென்றனர் மணிகண்டன் மற்றும் ராஜேஷ்.

மீனா ஒரு ஈவ் டீஸிங் கேஸ் ஃபைலை பார்த்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்த லேண்ட் லைன் ஃபோனில் பேசி கொண்டு இருந்தாள்.

அப்போது அவளுடைய செல் ஃபோன் அடித்தது. சைலென்டில் போட்டுவிட்டு அந்த காலை பேசி முடித்து விட்டு ஃபோனை எடுத்து பார்த்தாள்.

மாயா மேடம் மிஸ்டு கால் என்று வந்தது.

மீனா மாயாவுக்கு கால் செய்தாள்.

சொல்லுங்க மேடம்.....

உங்க நம்பரில் இருந்து தான் எனக்கு ரெண்டு மிஸ்டு கால் வந்திருக்கு..... அதான் கால் பண்ணேன்.....

மேடம்..... நீங்க தான் காலைல எனக்கு பண்ணீங்க அப்புறம் பேசறேன் ன்னு சொல்லி வச்சிட்டேன்.... உங்க மிஸ்டு கால் பார்த்துவிட்டு தான் நான் கால் பண்ணேன்.... உங்களுக்கு நாட் ரீச்சபிள் ன்னு வந்துச்சு.....

ஓ..... நீங்களா..... என்ன விஷயம்..... என்னால உங்களை நேரில் பார்த்து எல்லாம் பேச முடியாது..... வேணும்னா நீங்க வாங்க..... நான் பிஸி.....


#############

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.