ரகசிய கொலையாளி.....
பாகம் -30
எனக்கு தெரியும் மிஸ்டர் மணிகண்டன்..... ஆனா வேற வழியில்லை.... மன்டே மார்னிங் சிபிஐ இன்ஸ்பெக்டர் வருவாங்க அவங்க கிட்ட கேஸை ஒப்படைச்சிடுங்க..... என்றார்.
சார் கேஸை நான் எடுத்து ஒன் வீக் கூட இன்னும் ஆகல..... அதுக்குள்ள.....
சாரி மணிகண்டன்..... இது பெரிய அளவில் சோஷியல் மீடியாவில் பரவியதால கிரைம் பிராஞ்ச்க்கு மாற்றம் செய்யப்பட்டதுன்னு போலீஸ் மினிஸ்டர் கிட்ட இருந்து ஆர்டர் வந்திடிச்சு..... இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது.....
சார்.....
இட்ஸ் மை ஆர்டர்...
யெஸ் சார்..... என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்தான்.
கோபத்தில் மணிகண்டன் தன் கையை சுவற்றில் அடித்தான்.
சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜேஷ்...
மணிகண்டன் எப்போதும் அந்த அளவிற்கு கோபப் பட்டு பார்க்காததால் அதிர்ச்சியாக நின்றான்.
சார்..... என்றான் ராஜேஷ்.
எல்லாம் ஓவர் ராஜேஷ்.... வாங்க நாம போய் தெஃப்ட கேஸை பார்க்கலாம்.....
என்னாச்சு சார்.....
கேஸை கிரைம் பிராஞ்ச்க்கு ஹேண்ட் ஓவர் பண்ணிட்டாங்ளாம்.....
வாட்.....
ஆனா.... ஏன் சார்.....
சோஷியல் மீடியாவில் பரவியதால இது பெரிய இஷ்யூ ஆகிடிச்சாம்.....
அச்சச்சோ.... நம்ம பண்ண பிளான் நமக்கே ரிவர்ட் ஆயிடிச்சா..... என்றான் ராஜேஷ்.
கிளம்புங்க ராஜேஷ்.....
சார்......
கிளம்புங்க போகலாம் ன்னு சொல்றேன் இல்ல
..... என்று சற்று கோபமாக சொன்னான்.
யெஸ் சார்..... என்று சொல்லி விட்டு இன்னோவாவை ஸ்டார்ட் செய்தான் ராஜேஷ். ஸ்டேஷனுக்கு சென்றனர் மணிகண்டன் மற்றும் ராஜேஷ்.
மணிகண்டன் தன் கேபினுக்குள் சென்று அமர்ந்தான். அவன் டென்ஷனாக இருப்பதைப் பார்த்த ரவி மீனா மற்றும் பன்னீர் செல்வம் என்ன விஷயம் என்று ராஜேஷிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
பன்னீர் செல்வம் கேபினுக்குள் சென்றார்.
சார்..... என்றார்.
வாங்க சார்..... என்றான் மணிகண்டன்.
நான் ஒண்ணு சொல்லட்டுமா சார்.....
அவரை நிமிர்ந்து பார்த்தான் மணிகண்டன்.
கவலைப்படாதீங்க சார்..... இந்த மூணு வருஷத்தில நீங்க ஒரு கேஸை எப்படி எல்லாம் ஹாண்டில் பண்ணுவீங்கன்னு பார்த்திருக்கேன்.... சிபிஐ க்கு இந்த கேஸ் போனாலும் .... அவங்களால உங்க உதவி இல்லாமல் இந்த கேஸை முடிக்க முடியாது..... என்றார்.
நீங்க என்னை சமாதானம் செய்ய தான் இப்படி சொல்றீங்க ன்னு தெரியும் சார்.....
இல்ல தம்பி..... உண்மையிலேயே தான் சொல்றேன்.....
சார்..... பிளீஸ்..... என்னை கொஞ்சம் நேரம் தனியா விடுங்க.....
சாரி சார்.....
சார்.... பிளீஸ் சாரி எல்லாம் சொல்லாதீங்க...... ரொம்ப கஷ்டமாக இருக்கு...
ஓகே சார்......... என்று சொல்லி விட்டு வெளியே வந்தார் பன்னீர்செல்வம்.
மீனா பன்னீர்செல்வம் சாரிடம் பர்மிஷன் கேட்டு மாயா சொன்ன காஃபி ஷாப்பிற்கு சென்றாள்.
நேவி புளூ ஜீன்ஸ் மற்றும் ஒயிட் ஷர்ட், தலைமுடியை ஹை போனி டெயில், பிளாக் கூலர்ஸ்.... பிளாக் ஷூஸ்..... கால் மேல் கால் போட்டுகொண்டு தன் ஃபோனை பார்த்துக் கொண்டு இருந்தாள் மாயா.
மீனா யூனிஃபார்மில் வந்திருந்தாள்.
ஹலோ மேடம்.... என்றாள் மீனா.
நீங்க தான் மீனாவா?
ஆமாம் மேடம்.....
டோன்ட் கால் மீ மேடம்...
ஜஸ்ட் கால் மீ மாயா....
ஓகே மேடம்.... சாரி மாயா மேடம்....
சொல்லுங்க மீனா.... என்ன விஷயம்..... எதுக்கு என்னை பார்க்கனும் ன்னு சொன்னீங்க.....
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மீனா.
மீனா..... மீனா.....
சொல்லுங்க மாயா மேடம்....
ஹூ.... என்று பெருமூச்சு விட்டபடி....
என்னதான் மா உங்க பிரச்சனை.
பிரச்சனை எனக்கில்லை.... உங்க மாமாவுக்கு.
என் மாமாவுக்கு என்னாச்சு..... நாங்க டெல்லில இருந்து கிளம்பும் போது கூட நல்லா இருந்தாரே..... என்று சற்றே பதறினாள் மாயா.
மாயா மேடம்..... பிளீஸ்.... காம் டவுன்.... நான் சொன்னது உங்க தாய் மாமாவை பத்தி இல்ல.....
பின்ன யாரு.... துரைராஜன் மாமாவா..... என்றாள் சற்றே இலக்காரமாக....
துரைராஜன் ( மணிகண்டனின் அப்பா)
துரைராஜன் சாரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
சிவகாமி அத்தையோட ஹஸ்பண்ட்..... தெரியுமே.....
என்ன பிரச்சனை அவருக்கு.
அவர் உயிரோட இல்லைன்னு கூட உங்களுக்கு தெரியாதா?
ஓ..... இறந்திட்டாரா..... என்று சொல்லி சற்றே மனம் கலங்கினாள்.
வேறு யாரும் உங்களுக்கு ஞாபகம் வரலையா..... மாமா ன்னு சொன்னதும்.....
மீனா..... பிளீஸ்.... எனக்கு நிறைய வேலை இருக்கு
....... ஷாப்பிங் பண்ணனும்..... நாளைக்கு......
உங்க பர்த் டே..... எனக்கு தெரியும் மாயா மேடம்......
ஆச்சரியமாக பார்த்தாள் மாயா.
மேடம் ஒரு பதினைந்து நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் இடைமறிக்காம பொறுமையா கேட்க முடியுமா?..... என்றாள் மீனா.
சரி என்று தலை அசைத்தாள் மாயா.
மணிகண்டன் சொன்னது அனைத்தையும் சொன்னாள் மீனா.
ஆனா மீனா..... நான் இதுவரைக்கும் அவரை.....
மாயா மேடம்.... நான் இன்னும் பேசி முடிக்கல..... என்று ஆரம்பித்து மணிகண்டனின் அம்மா சிவகாமி கூறிய அனைத்தையும் சொல்லி முடித்தாள். மேலும் டாக்டர் உடனே மாயாவை பார்த்து பேசி அழைத்து வரவில்லை என்றாள் உண்மையிலேயே மணிகண்டன் நிரந்தரமாக மனநிலை பாதிக்கப்படுவான் என்றும்..... அதன் பிறகு உண்மையிலேயே நீங்க வந்தாலும் அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது..... என்றும் கூறி முடித்தாள்.
லேசாகக் கண்கள் கலங்கியது மாயாவிற்கு. மணிகண்டன் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவள் வளர்ந்தபின் அது வயசு கோளாறு என்று புரிந்து கொண்டு தன் படிப்பிலும் கரீயரிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கிறாள். ஆனாலும் தன் அப்பா தனக்கு இல்லாமல் போனதிற்கு ஒரு வகையில் தன் அத்தை சிவகாமி தான் காரணம் என்று நினைத்து கொண்டிருக்கிறாள்.
நான் இப்போ என் செய்யனும் மீனா..... என்றாள்.
மாயா மேடம்..... என் மணி அண்ணனோட லவ்வரா நடிக்கனும்.....
வாட்.....
ஒருத்தரோட வாழ்க்கை நல்லா ஆகிறதும் அழியறதும் உங்க கையில் தான் இருக்கு.....
வாட் நான் சென்ஸ் யூ ஆர் டாக்கிங்.....
மாயா மேடம்..... மணி அண்ணா உங்க மேல உயிரையே வச்சிருக்காரு..... அவர் நிலைமையை கொஞ்சம் நினைச்சு பாருங்க.....
அதுக்காக நான் ஏன் என் லைஃப்ல ரிஸ்க் எடுக்கனும்.....
உங்க அத்தைக்கு அவரை தவிர வேற யாரும் இல்லை..... அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுச்சுன்னா அப்புறம் அவங்களோட நிலைமையை யோசிச்சு பாருங்க....
செஞ்ச பாவம் சும்மா விடுமா..... எங்க அம்மா நிம்மதியை கெடுத்தாங்க..... அதான் இப்போ கஷ்டப்படறாங்க....
அச்சச்சோ..... அப்படி சொல்லாதீங்க மாயா மேடம்..... நீங்க அவங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டகருக்கீங்க.....
எது என்னவோ.... தயவு செஞ்சு அவங்களை பத்தி பேசாதீங்க.... எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது.... அவருக்கு மென்டல் பிரஷர் கொடுத்து.... அவர் பாவம் எங்க அம்மா பக்கம் பேசறதா இல்ல தங்கச்சி பக்கம் பேசறதா ன்னு தெரியாம தவிச்சு.... மண்டையில் போட்டு குழப்பி..... டிப்ரஷனுக்கு போய் இறந்திட்டாரு....
அதுக்கு உங்க அத்தை மட்டும் தான் காரணம் ன்னு உறுதியாக சொல்றீங்களா?
மீனா..... என்றாள் சற்றே கோபமாக.
சாரி மேடம்..... நீங்களே சொல்றீங்க.... உங்க அம்மாவும் காரணம் ன்னு.... அப்புறம் பனிஷ்மெண்ட்டை உங்க அத்தைக்கு மட்டும் கொடுக்கறீங்களே..... அது ஏன்..
அப்போ என்ன.... எங்க அம்மா கிட்டேயும் பேசாம இருக்கனும் ன்னு சொல்றீங்களா?
அச்சச்சோ.... இல்ல மேடம்..... ஏதோ ஒரு காரணத்தால் உங்க அம்மாவை மன்னிச்சு அவங்களை ஏத்துக்கிட்டீங்க இல்ல..... அதே போல உங்க அத்தையும் மன்னிச்சிடுங்க..... ஏத்துக்கோங்க ன்னு தான் சொல்ல வந்தேன்..... என்றாள் மீனா.
###########
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.