ரகசிய கொலையாளி.....
பாகம் -32
வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி அவரை தூங்க சொல்லிவிட்டு ஹாலில் லேப்டாப் வைத்து பேசினாள் மாயா.
மாயாவின் அம்மா சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டு கொண்டு தூங்கச் சென்றார். மாயா பசி இல்லை என்று சொல்லி விட்டு 9.30 க்கு மீட்டிங் லிங்கை கிளிக் செய்து மீட்டிங்கில் சேர்ந்தாள்.
ஹலோ டாக்டர்.....
நான் மாயா.... சிபிஐ இன்ஸ்பெக்டர்.
ஓ.... ஓகே..... குட் ஈவினிங்.....
சொல்லுங்க மா....
என்ன தெரிஞ்சிக்க வேண்டும் உங்களுக்கு?
டாக்டர்..... எனக்கு மணி மாமா பத்தி தெரிஞ்ச்சிக்கனும்..... சாரி டாக்டர் மிஸ்டர் மணிகண்டன் பத்தி மெடிக்கலி ஃபுல்லா சொல்ல முடியுமா?
நீங்க தானே அவரோட மாமா பொண்ணு மாயா?
ஆமாம் டாக்டர்.....
அவர் உங்களை ஏழு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்காரு.....
வாட்...... அன்பிலீவபிள் டாக்.....
இது எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தான் மாயா.... மஏபஈ அதுக்கு மேலேயும் கூட இருக்கலாம்..... என்றார் டாக்டர்.
இப்போ நான் அவரை கண்டிப்பா மீட் பண்ணி தான் ஆகனும் ன்னு சொல்றீங்களா?
அது உங்களோட இஷ்டம்..... அவர் நல்லா இருக்கனும் ன்னு நீங்க நினைச்சீங்கன்னா.... அவரை இமிடீயேட்டா பார்ப்பது நல்லது..... இல்லன்னா அவர் உங்களோட உருவத்தை கற்பனை செய்து கொண்டு அதனோடு வாழ ஆரம்பித்து விடுவார்.... அப்புறம் நீங்க உண்மையிலேயே அவர் முன்னால் போய் நின்றாலும் அவருக்கு அன்னியமாகத்தான் தெரிவீர்கள்.
ஓ..... ஓகே.... புரியுது டாக்டர்.....
ஆனா டாக்டர்....
என்ன மாயா சொல்லுங்க.....
எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கிறது லவ் பண்றது இதிலெல்லாம் சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்ல..... அதனால அவருக்கு நல்லா ஆகனும் ன்னு மட்டும் தான் நினைக்கிறேன்.... அவர் சரியானதும் நான் என் லைஃபை சூஸ் பண்ணிக்கலாம் இல்ல.... அவரால என்னோட பர்சனல் லைஃப் அஃபெக்ட் ஆகாது இல்ல.....
உங்களுக்கு மணிகண்டனை பற்றி சரியா தெரியலை ன்னு நினைக்கிறேன் மாயா.....
என்ன சொல்றீங்க டாக்?
ஆமாம் மா.... மணிகண்டன் ரொம்ப ரொம்ப நல்ல பையன்..... உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.... உனக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா அதை கண்டிப்பா செய்ய மாட்டான்..... அதனால நீ கவலைப் பட வேண்டாம் மாயா.
ஓகே டாக்.... தேங்க் யூ ஸோ மச்..... நான் நாளைக்கு மணி மாமாவை மீட் பண்றேன்.....
ஓகே மாயா.... அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே டூ யூ.....
டாக்.... உங்களுக்கு எப்படி தெரியும்.....
உன்னோட மணி மாமா தான் உன்னை பத்தி பேசிக்கிட்டே இருப்பாரே..... அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்.
ஹாஹாஹா.... தேங்க்ஸ் டாக்.... என்றாள் மாயா.
டிரீட்மெண்ட் செஸ்ஷன்ல எடுத்த சில வீடியோஸ் இருக்கு..... அதை என் அசிஸ்டன்ட் கிட்ட சொல்லி அனுப்ப சொல்றேன்..... அதைப் பார்த்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கு அவர் எப்படி எல்லாம் உங்க கிட்ட பேசினதா எதை பத்தி எல்லாம் பேசி இருக்கார் ன்னு தெரியும்.... அதை அப்படியே பேசனீங்கன்னா எந்த விதமான கன்ஃபியூஷனும் இருக்காது.....
ஓகே டாக்.... தேங்க் யூ ஸோ மச்..... என்றாள் மாயா.
ஏனோ அவளுக்குள் ஒரு வினோதமான உணர்வு.... ரொம்ப நாள் கழிச்சு தன் மணி மாமாவை பார்க்க போகிறோம் என்று. இருந்தாலும் அதை அவளே சாதாரணமான அன்பு பாசம் மட்டும் தான் என்று கடிவாளம் போட்டுக் கொண்டாள்.
ரீசென்டாக எடுத்த இரண்டு வீடியோ செஸ்ஷன் மட்டும் மாயாவின் ஈமெயிலிற்கு வந்தது. மற்றவை எல்லாம் பேக்கப்( back-up )செய்த பிறகு அனுப்புவதாக டாக்டர் மதனகோபாலின் அசிஸ்டன்ட் ஈமெயில் செய்திருந்தார்.
தேங்க் யூ ஸோ மச் சார்.... என்று ரிப்ளை செய்து விட்டு தன் ஹெட் ஃபோன்ஸில் கனெக்ட் செய்து அந்த வீடியோ செஸ்ஷனை பிலே செய்தாள் மாயா.
############
சீக்கிரமாகவே வீட்டிற்கு சென்றான் மணிகண்டன்.
என்னாச்சு பா.... என்றார் சிவகாமி.
ஒண்ணும் இல்லை அம்மா....
டல்லா இருக்கீயே பா.....
லேசாகக் தலை வலிக்குது அம்மா.....
இருப்பா சூடா இஞ்சி டீ போட்டுக் கொண்டு வரேன்....
சரிம்மா..... என்று சொல்லி தன் கட்டிலில் படுத்து கொண்டான் மணிகண்டன்.
டீயை சிவகாமி கொண்டு வருவதற்குள் தூங்கி விட்டிருந்தான் மணிகண்டன்.
மணி மணி..... என்றார் சிவகாமி.
நன்றாகவே தூங்கி இருந்தான். எழுப்ப மனமில்லாமல் டீயை எடுத்துக் கொண்டு போய் கிட்சனிலேயே வைத்து விட்டு மீனாவிற்கு கால் செய்தார் சிவகாமி.
மீனா.....
சொல்லுங்க அம்மா.....
மாயா......
நான் எல்லாம் பேசிட்டேன் அம்மா.... நீங்க கவலையே படவேண்டாம்..... நாளைக்கு கண்டிப்பா மணி அண்ணாவும் மாயா மேடமும் மீட் பணாணுவாங்க.....
ரொம்ப தேங்க்ஸ் மா.... டாக்டர் சொன்னதும்..... எனக்கு ஒண்ணுமே புரியல..... என்ன பண்றது ன்னு குழப்பத்தில இருந்தேன்..... கடவுள் தான் எனக்கு உதவ உன் மூலமாக வந்திருக்கார்......
உங்களை மாதிரி நல்லவங்களை கடவுள் எப்பவுமே கைவிட மாட்டார் அம்மா..... தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை வேற வீட்டு பொண்ணாக ஆக்காதீங்க.....
சரிம்மா.....
அண்ணா வீட்டுக்கு வந்திட்டாரா?
வந்தான் தலை வலிக்குது ன்னு சொன்னான்.... டீ கொண்டு வரதுக்குள்ள தூங்கிட்டான்.....
ஒண்ணும் இல்ல மா.... கேஸ் விஷயமா ஒரு பிரச்சனை.... அதான் அண்ணா கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாரு..... அதுவும் இல்லாம இந்த கேஸால சரியா தூக்கம் இல்ல..... அதான் இப்போ தூங்கிட்டு இருப்பாரு..... நாளைக்கு மாயா மேடத்தை பார்த்ததும் எல்லாம் சரி ஆகிடும் பாருங்க.....
சரிம்மா..... நீ உடம்பை பார்த்துக்கோ.... மாத்திரை எல்லாம் வேளாவேளைக்கு போடு.... எதாவது சாப்பாடு சாப்பிடனும் ன்னு தோணுச்சு ன்னா எனக்கு கால் பண்ணு.... நான் செஞ்சுத் தரேன்.....
சரிங்க அம்மா.... தேங்க்ஸ்.....
என்னை தேங்க்ஸ் சொல்ல வேண்டாம் ன்னு சொல்லி விட்டு நீ சொல்ற.....
ஆமாம் ஆமாம் மறந்திட்டேன்.... தேங்க்ஸ் வாபஸ்.... என்று சொல்லி சிரித்தாள் மீனா.
சிவகாமியும் சிரித்தார்.
#############
நைட்டு டியூட்டியில் இருந்த சிவா வழக்கம் போல எல்லாம் செய்தார்.... டீ குடிப்பது...... தம் அடிப்பது.... ஃபோனில் பாட்டு கேட்பது..... டிபன் சாப்பிடுவது.... ஃபோன் பேசுவது..... என்று அனைத்தையும் செய்தார்.
ராஜேஷ் கேட்டுக் கொண்டதால் அவனுக்கும் கால் செய்து கனெக்ட்டில் வைத்திருந்தான் இளங்கோ.....
ராஜேஷ் அவன் வீட்டிலிருந்து வீடியோ காலில் இளங்கோ மற்றும் நவீன் வீட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அப்போது வழக்கம் போல பதினோரு மணி அளவில் கண் சொறுகியது..... தன் மனைவியிடம் பேசுவது போல இளங்கோவிடம் பேசினான் சிவா.
தூக்கம் வருது டி.....
நீங்க வழக்கமாக பண்றதை மட்டும் செய்யுங்க சார்.... மாத்தி எதுவும் செய்யாதீங்க..... என்றான் இளங்கோ.
வழக்கமா இந்த டைம் தானடி தூங்குவேன்.....
உண்மையிலேயே தூக்கம் வருதா சார்....
இல்லடி.....
சரி சார்.... கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க..... மே பீ அவன் அட்டாக் பண்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.....
தெரியும் டி.... நீ கவலைப்படாதே.....
உங்க சட்டை காலரில் வைத்த கேமராவை சரியா வச்சிக்கிட்டு தூங்குங்க..... சப்போஸ் திடீர்னு உங்களை அட்டாக் பண்ண வந்தா நாங்க உங்களுக்கு சொல்றோம்.... ஹெட் ஃபோன்ஸ் காதிலேயே இருக்கட்டும்....
ஓகே டி..... பை....
சூப்பரா பெர்ஃபார்ம் பண்றீங்க சார்.....
சரி டி.... பை.....பை.... என்றான் சிவா.
பை சார்..... என்றான் இளங்கோ.
இவ கிட்ட பேசினா லேசுல ஃபோனை கீழே வைக்கிறாளா பாரு..... என்று புலம்பினான் சிவா.
இளங்கோ மற்றும் நவீன் செக் செய்து கொண்டு இருந்த போது...... ஒரு கருப்பு உருவம் சிவாவை தாண்டிச் சென்றது......
நவீன்.... அந்த கேமராவில் பாரு..... என்றான் இளங்கோ.
############
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.