ரகசிய கொலையாளி.....
பாகம் -34
மணிகண்டன் இளங்கோவிடம் பேசிவிட்டு ஃபோனை கட் செய்தான். அப்போது வாட்ஸ் அப்பில் மெஸேஜ் வந்திருந்ததை பார்த்தான்.
ஓப்பன் செய்தவன் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து போய் நின்றான்.
டைம் கூட பார்க்காமல் மாயாவிற்கு கால் செய்தான் மணிகண்டன். கால் வருவதைப் பார்த்து விட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் மாயா.
ஹலோ மாயா.....
மாமா..... என்றாள் மாயா.
எனக்கு இப்பவே உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு டி.... ஏன் இவ்வளவு நாளா என் கிட்ட பேசவில்லை..... என் மேல கோபமா டி......
இல்ல மாமா..... எனக்கு கிரைம் பிராஞ்ச்ல வேலை கிடைச்சிருக்கு..... அதான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன்.....
என்னடி சொல்ற..... சூப்பர்..... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..... நீயும் நானும் ஒரே லைன்ல இருக்கோம்.....
ஏனோ அவன் உரிமையுடன் இவளை வாடி போடி என்று பேசுவது அவளுக்கு பிடித்திருந்தது.
இன்னொரு சந்தோஷமான விஷயம் சொல்லவா மாமா?
என்ன மாயா..... சொல்லு.....
நான் சென்னையில் தான் இருக்கேன்..... எனக்கு போஸ்டிங் இங்கே தான் போட்டிருக்காங்க......
வாட்..... என்ன மாயா நீ..... இன்ப அதிர்ச்சியா கொடுக்கிற..... என்றான் சிரித்தபடியே.
ஆமாம் மாமா..... நாளைக்கு நம்ம ஊர் கோவில்ல மீட் பண்ணலாமா?
கண்டிப்பா டி செல்லம்..... நாளைக்கு மதியம் நம்ம ஊர்ல மீட் பண்ணலாம்.
மாமா....
சொல்லுடி.....
உன் கிட்ட புல்லட் பைக் இருக்கு இல்ல?
ஆமாம்.....
நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு காலைல அதிலே போகலாமா?
உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா.....
அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை இல்ல..... அம்மா கிட்ட நான் சொல்ல மாட்டேன்.....
இல்ல மாயா அது தப்பு..... நீ சொல்லிட்டு வா.....
மாமா..... நான் சொன்னா..... நாளைக்கு நம்ம மீட்டே பண்ண முடியாது..... ஓகே வா.....
இல்ல இல்ல..... நாளைக்கு மட்டும் நான் உன்னை பார்க்கலைன்னா செத்திடுவேன்.....
மாமா..... இன்னொரு முறை அப்படி சொன்னீங்கன்னா..... நான் உன் கிட்ட பேசவே மாட்டேன்......
இல்ல இல்ல சாரி..... இனிமே அப்படி பேச மாட்டேன்...... நாளைக்கு மீட் பண்ணலாம்..... நீ எப்படி வேண்டுமானாலும் மாமி கிட்ட சொல்லிட்டு வா.....
ஓகே டா மாமா..... என்று சொல்லி சிரித்தாள் மாயா.
நான் இப்போ ஒரு கேஸ் விஷயமா வெளியே போறேன்...... ஃபோனை வச்சிடவா?
ஓகே மாமா...... நான் உங்க ரெண்டு கிஃப்ட்டையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்......
நல்லவேளை ஞாபக படுத்தின..... இல்லன்னா உன்னை பார்க்க வர சந்தோஷத்தில கிஃப்ட்டை எடுத்துக்க மறந்திருப்பேன்......
ஹூம்.....
இரு இரு..... உனக்கெப்படி தெரியும் இரண்டு கிஃப்ட் ன்னு?..... என்றான் மணிகண்டன்.
அது வந்து.... அது வந்து மாமா.....
உங்க பர்த் டேவுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கேட்டேன் இல்ல அதுவும்.... அப்புறம் நாளைக்கு பர்த் டே கிஃப்ட்டும்..... அதான் ரெண்டும் ன்னு சொன்னேன்.
ஓ..... சரி சரி..... நீ என்ன வாங்கி இருக்க?
அது சர்ப்ரைஸ்..... நாளைக்கு தான் உங்களுக்கு தெரியும்.....
சரி..... எத்தனை மணிக்கு கிளம்பலாம்?
காலைல ஒரு 11 மணிக்கு?
ஏன் அவ்வளவு லேட்டா..... இயர்லி மார்னிங் போனா நல்லா இருக்குமே.....
நல்லா இருக்கும் தான்...... ஆனா..... என்று இழுத்தாள்.
மனதிற்குள் மணிகண்டனுக்கு இரண்டு கிஃப்ட்டுகள் வாங்க வேண்டுமே..... என்று நினைத்து அவ்வாறு சொன்னாள்.
என்ன மாயா.... இயர்லி மார்னிங் போகலாமா?
பின்னர் ஏதோ யோசித்தவள்.
சரி மாமா..... என்று மெஸேஜ் செய்தாள்.
5.30 மணிக்கு போகலாம்..... என்றாள்.
ஓகே மாயா..... பை..... குட் நைட்டு.....
பை மாமா..... குட் நைட்டு டா......
பேசிவிட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தான். தன் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று இருந்தது மணிகண்டனுக்கு..... ஆனால் சிவகாமி நன்றாக தூங்கி கொண்டு இருந்தார். அதனால் மறுபடியும் தன் ரூமுக்கு வந்து தன் அம்மாவின் ஃபோனிற்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினான் மணிகண்டன்.
அம்மா..... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மா..... மாயா ரொம்ப நாள் கழிச்சு என் கிட்ட பேசினா..... நாளைக்கு அவ பர்த் டே மீட் பண்ணலாம் ன்னு சொல்லி இருக்கா..... ஊருக்கு போகலாம் ன்னு சொன்னா..... அவ என் கூட பைக்ல வரேன் ன்னு சொன்னா..... என்றான்.
பிறகு இன்னொரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினான் மணிகண்டன்.
இப்போ கேஸ் விஷயமா வெளியே போறேன் மா..... அங்கிருந்து ஸ்டேஷனுக்கு போயிட்டு..... அங்கிருந்தே கிளம்பி போறேன்..... என்று அனுப்பினான்.
பிறகு மெதுவாக கதவை பூட்டி கொண்டு கிளம்பினான் மணிகண்டன்.
அடுத்த கால் மணி நேரத்தில் காவேரியின் பக்கத்து வீட்டிற்கு சென்றான்.
நவீன் மற்றும் இளங்கோ இருவரும் சல்யூட் அடித்தார்கள்.
தலை அசைத்த மணிகண்டன் அவன் அருகில் சென்றான். ஒரு சேரை போட்டு கொண்டு அவன் முன்னால் அமர்ந்தான்.
நவீன் அவனுடைய வாயில் இருந்த டேப்பை கழட்டினான்.
யாரு நீங்க..... எதுக்காக காவேரி வீட்டுக்குள்ள போகப் பார்த்தீங்க?
நவீனுக்கும் இளங்கோவிற்கும் மணிகண்டன் அவ்வாறு மரியாதையாக அவனிடம் பேசுவது பிடிக்கவில்லை. மனதிற்குள் கடுப்பாக ஆனார்கள்.
அமைதியாக இருந்தான் அவன்.
மறுபடியும் பேசினான் மணிகண்டன்.
இதோ பாருங்க..... நீங்க ஒழுங்கா கோ-ஆப்பிரேட் பண்ணலன்னா ஸ்டேஷனில் வச்சு வேற மாதிரி விசாரிக்க வேண்டி இருக்கும்..... என்றான்.
சார்..... ஸ்டேஷனிற்கு எதுக்கு கூட்டிக்கிட்டு போகனும்..... இங்கேயே அவனுக்கு கொடுக்க வேண்டிய டிரீட்மெண்ட்டை கொடுக்கலாம்..... என்றான் இளங்கோ.
இளங்கோ..... என்றான் மணிகண்டன்.
சாரி சார்..... இவன் கிட்ட எல்லாம் எதுக்கு கெஞ்சறீங்க..... தூக்கி போட்டு நாலு உதை உதைச்சா எல்லாத்தையும் சொல்லிடுவான்.....
இளங்கோ..... என்று சற்று சத்தமாகவே சொன்னான் மணிகண்டன்.
சாரி சார்...... என்று சொல்லி விட்டு வேறு வழியின்றி அமைதியாக இருந்தான் இளங்கோ.
நீங்க சொல்றீங்களா..... என்றான் சற்றே கோபமாகவும் பொறுமையாகவும் சொன்னான் மணிகண்டன்.
அதைப் புரிந்து கொண்ட அவன்.
என் பேரு புருஷோத்தமன்.
சார்..... இவன் தான்..... காவேரி கிட்ட..... என்று சொன்னான் ராஜேஷ் வீடியோ காலில்.
திரும்பி பார்த்தான் மணிகண்டன்.
எத்தனையோ முறை அக்கியூஸ்டு மட்டும் அல்ல யாராக இருந்தாலும் அவர்கள் பேசும் போது குறுக்கே பேசக் கூடாது என்று சொல்லி இருக்கிறான் மணிகண்டன்.
ராஜேஷூம் வீடியோ காலில் மணிகண்டன் முறைப்பதைப் பார்த்து விட்டு.
சாரி சார்..... என்றான்.
ஓ..... அந்த காவேரி சொன்ன கட்டுக் கதையை நீங்களும் நம்பறீங்களா?
அனைவரும் அமைதியாக இருந்தார்கள். மணிகண்டன் பார்க்க இளங்கோ வீடியோ ரெக்கார்டு செய்தான்..... நவீன் ஆடியோ ரெக்கார்டு செய்தான்.
அந்த காவேரிக்கு செக்ஸ் ன்னா ரொம்ப பிடிக்கும்..... ஆனா அவ புருஷனுக்கு அதில பிரச்சனை..... அவ மேல உயிரையே வச்சிருந்தான் ன்னு சொல்லி இருக்கா......
உங்க கிட்ட சகஜமாக பேசுவாங்களா காவேரி..... என்றான் மணிகண்டன்.
சிரித்தான் புருஷோத்தமன்.
சொல்லுங்க......
அவளுக்கு எப்போ எல்லாம் செக்ஸ் வச்சிக்கனுமோ அப்போதெல்லாம் என்னைத் தான் கூப்பிடுவா...... அப்படி ஒருநாள் நான் அவ வீட்டுக்கு போகும் போது ஏதேச்சையாக ராஜா அம்மா பார்த்திட்டாங்க..... உடனே நான் தான் அவ கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணேன் ன்னு சொல்லி என்னை எல்லார் முன்னாடியும் அசிங்க படுத்தி போலீஸ்ல பிடிச்சு கொடுத்திட்டா......
உண்மையை கேட்கிறதுக்கு அவங்க உயிரோட இல்லைன்னு இப்படி சொல்றீயா..... என்றான் இளங்கோ.
சிரித்தான் புருஷோத்தமன். அவ தான் விருப்பப்பட்டு என் கூட இருந்தா ன்னு ப்ரூவ் பண்ண என் கிட்ட ஆதாரங்கள் இருக்கு.....
அப்படி இருந்திருந்தா....
அதை வச்சு போலீஸ் ஸ்டேஷனில் நீ தப்பு பண்ணல ன்னு ப்ரூவ் பண்ணி வெளியே வந்திருக்கலாம் இல்ல..... என்றான் ராஜேஷ்.
என்ன ஆதாரங்கள் உங்க கிட்ட இருக்கு?..... என்றான் மணிகண்டன்.
#############
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.