• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் -35

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் -35

என்ன ஆதாரம் இருக்கு..... என்றான் மணிகண்டன்.

இந்த மாதிரி எல்லாம் எதாவது பிரச்சனை வரும்னு தான் நான் அவக் கூட இருக்கும் போது அவளுக்கு தெரியாம ஃபோட்டோ எடுத்துப்பேன். அவளா தான் என் கிட்ட வருவா.... முழு வீடியோ இல்லைன்னாலும் அவளே என் கிட்ட வந்து எனக்கு முத்தம் கொடுக்கிறது வரைக்கும் எடுத்திருக்கேன்......

சரி.... ராஜேஷ் சொன்னது போல இதை எல்லாம் போலீஸ் கிட்ட காட்டி நீங்க தப்பு பண்ணல ன்னு ப்ரூவ் பண்ணி இருக்கலாமே......

எனக்கு கோர்ட்ல கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் அபராதம் யாரு கொடுத்தா ன்னு நினைக்கறீங்க?..... அந்த காவேரி தான்...... என் கூட இருக்கிறது அவளுக்கு பிடிச்சிருந்தது..... எனக்கும் தான்..... அதான் அந்த ஏரியா வேண்டாம்..... நீ வீடு காலி பண்ணி போயிடு.... நான் அங்கு வரேன்..... எப்பவாவது யாரும் இல்லாத போது சொல்றேன்..... நீ பின் பக்கமாக என் வீட்டுக்கு வா..... திரும்ப பின் பக்கமாக போயிடு ன்னு சொல்லுவா......
அந்த மாதிரி நிறைய முறை வந்து போயிருக்கேன்..... ஆனா ஒரு நாலு மாசமா நான் வரல..... வேலை விஷயமா வெளியூர் போயிருந்தேன்..... அப்புறம் போன வாரம் வந்திட்டேன் ன்னு கால் பண்ணி சொன்னேன்...... சரி.... நான் சொல்லும் போது வா..... அப்படின்னு அவ சொன்னா...... என்றான் புருஷோத்தமன்.

சரி..... உங்களுக்குள்ள தான் எல்லாம் சுமூகமா இருக்கே..... அப்புறம் எதுக்கு நீ காவேரியை கொலை செஞ்ச...... என்றான் ராஜேஷ்.

நினைச்சேன்..... இது தான் நடக்கும் ன்னு......

என்ன சொல்ற?

ஆமாம்..... உங்களுக்கு உண்மையான குற்றவாளி கிடைக்கலைன்னா..... யாராவது ஒருத்தனை தூக்கி உள்ள போடுவீங்க..... அந்த ஒருத்தன் நானாக இருக்கக் கூடாது ன்னு தான் நினைச்சேன்......

அப்புறம் எதுக்கு இப்போ நீ காவேரி வீட்டுக்கு போன......

போன வாரம் ஒருநாள் நான் வந்திட்டு போனேன்..... அப்போ அவளுக்கு உடம்பு சரியில்லை.... எதுக்கு இப்போ வந்த..... நான் தான் சொல்றேன்னு சொன்னேன் இல்ல?.....இன்னைக்கு வேண்டாம் ன்னு சொன்னா..... சோஃபாவில் அமர்ந்து டீ குடிச்சிட்டு போனேன்..... அப்போது என்னோட கர்ச்சீப்பை விட்டுட்டு போயிட்டேன்..... அதுல என் இனிஷியல்ஸ் இருக்கும்.... வீட்டுக்கு போயிட்டு கால் செய்த போது..... இங்கு தான் இருக்கு.... நான் என் ரூம் டிராயர்ல வைக்கிறேன்.... நெக்ஸ்ட் டைம் வரும்போது வாங்கிக்கோ.... என்றாள் காவேரி. அதை வச்சு நான் தான் அவளைக் கொன்ற குற்றவாளி ன்னு நீங்க நினைக்கப் போறீங்க ன்னு அதை எப்படியாவது எடுத்துக் கொண்டு போகலாம் ன்னு வந்தேன்..... இதுவே ஒரு டிராப் ன்னு தெரியாம வந்து மாட்டிக் கொண்டேன்......

அப்போ..... காவேரி வயித்துல வளருவது உன் குழந்தை தானா?

என்னது காவேரி பிரெக்னென்டா இருந்தாளா?.....
எனக்கு தெரியாதே..... என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே..... அவ வேண்டாம் ன்னு சொல்லும் போது கூட அவளுக்கு மாதாந்திர பிரச்சனைன்னு இல்ல நினைச்சேன்..... என்றான் புருஷோத்தமன்.

சரி.... நீக்க டி.என்.ஏ டேஸ்டுக்கு சேம்பிள் கொடுக்கனும் .....

நான் டெஸ்டுக்கு கொடுக்கிறேன் சார்..... ஆனா நீங்க சந்தேக படுவது போல என்னால காவேரி பிரெக்னென்டா ஆகி இருக்க வாய்ப்பே இல்லை.....

ஏன்..... எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ற?..... என்றான் இளங்கோ.

காவேரி வயித்துல கரு எத்தனை மாசம்?

2.5 இல்லன்னா 3 மாத கரு ன்னு டாக்டர் சொன்னாரு.... என்றான் மணிகண்டன்.

என் கூட காவேரி இருந்த போதெல்லாம் பாதுகாப்பு உறையை அணியாம என்னை அவ கிட்ட சேர்க்க மாட்டா..... அதுவும் இல்லாம நான் நாலு மாசமா வரவே இல்லையே..... அப்புறம் எப்படி அது என் குழந்தையாக இருக்க முடியும்?...... என்றான் புருஷோத்தமன்.

நவீன் மற்றும் இளங்கோ இருவரும் இன்னும் இரண்டு நாட்களுக்கு அங்கேயே தங்கச் சொல்லிவிட்டு இரண்டு கான்ஸ்டபிள்களை வரச்சொன்னான்.

அவர்களிடம் மணிகண்டன் புருஷோத்தமனை கைது செய்து கஸ்டடியில் வைக்க சொல்லி விட்டு பின்னர் அவனுடைய பிளட் மற்றும் ஹேர் சேம்பிளை கலெக்ட் செய்து காவேரி போஸ்ட் மார்டம் செய்த டாக்டர் குணசேகரனிடம் அனுப்பச் சொன்னான். அவர்கள் அவனை அழைத்து சென்றனர்.

பிறகு மணிகண்டன் ஸ்டேஷனிற்கு சென்றான்.
அங்கே சிறிது நேரம் தூங்கினான். ஐந்து மணி அளவில் எழுந்து ஸ்டேஷனிலேயே குளித்து விட்டு ரெடியாகி தன் வண்டியை எடுத்துக் கொண்டு மாயா அனுப்பிய லொகேஷனுக்குச் சென்றான். அவன் ஸ்டேஷனில் இருந்து போகும் பிளான் இருந்ததால் அவளுக்கு வாங்கிய இரண்டு கிஃப்ட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மாயாவும் ரெடி ஆகி..... தன் அம்மாவிற்கு ஃபிரிட்ஜின் டோரில் ஸ்டிக் நோட் எழுதி வைத்தாள்.

அம்மா நீங்க மெஸேஜ் அனுப்பினா பார்க்க மாட்டீங்க.... ஒரு கேஸ் விஷயமா வெளியே போறேன்..... அப்படியே ஊருக்கு போயிட்டு ஈவினிங் வந்திடுவேன்.... டின்னருக்கு ரெண்டு பேரும் வெளியே போய் சாப்பிடலாம்.....அது தான் என்னோட பர்த் டே டிரீட் உங்களுக்கு..... நீங்க கிஃப்ட் வாங்கலைன்னு தெரியும்..... சீக்கிரமா போய் வாங்கி வையுங்க.... நான் சீக்கிரமா வந்திடுவேன்..... என்று எழுதி வைத்து இருந்தாள் மாயா.

சுடிதார் அணிந்து கொண்டு மெல்ல நடந்து வந்தாள் மாயா. அந்த போலீஸ் குவாட்ரஸை தாண்டி வெளியே நின்றிருந்தான் மணிகண்டன்.

அவள் அவனை பார்த்து.....

மாமா..... என்றாள்.

உடனே மணிகண்டனிற்கு கண்கள் கலங்கியது.

மாயா..... எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து.....
என்று சொல்லி அவளை ஹக் செய்தான்.

மாயாவிற்கு அவன் மேல் காதல் வரவில்லை என்றாலும் அவனுடைய அணைப்பை அவள் எதிர்க்க வில்லை. அமைதியாக நின்று இருந்தாள்.

போகலாம் மாமா..... என்றாள் மாயா.

போகலாம் மாயா..... வா.... என்று சொல்லி தன் பைக்கில் ஏறச் சொன்னான்.

அவள் ஏறி அமர்ந்தாள். அவன் தோள் மீது கை வைத்து இருந்தாள். மணிகண்டனுக்கு சந்தோஷமாக இருந்தது. இருவரும் தங்கள் ஊருக்கு சென்றனர்.

பொழுது விடிந்து விட்டது. மணி காலை 8.20.
அங்கிருந்த கோவிலுக்கு போகச் சொல்லி கேட்டாள் மாயா.

ஓகே டி..... என்று சொல்லி விட்டு அவளை அங்கு அழைத்து சென்றான். கோவிலில் மாயாவின் பெயரை நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தான் மணிகண்டன்.

மாமா..... உங்களுக்கு என் நட்சத்திரம் தெரியுமா?

என்னம்மா இப்படி சொல்லிட்ட..... தம்பி இங்க வரும்போது எல்லாம் உன் பெயருக்கு அர்ச்சனை செய்யும்..... எனக்கே உன் பேரு நட்சத்திரம் எல்லாம் மனப் பாடமா தெரியும்..... என்றார் அந்த கோவில் பூசாரி.

அர்ச்சனை முடித்து விட்டு கோவிலை சுற்றி வரும் போது மணிகண்டனிடம் பேசி கொண்டு நடந்தாள் மாயா.

அடிக்கடி இங்கு வருவீங்களா மாமா?

ஆமாம் மாயா..... எப்போதெல்லாம் உன் ஞாபகம் வருதோ அப்போதெல்லாம் ஊருக்கு வந்திடுவேன்.... நிறைய முறை அம்மா கிட்ட சொல்லிட்டு வருவேன்.... நிறைய முறை சொல்லாம வருவேன்.... ஆனா வீட்டுக்கு போயிட்டு சொல்லிடுவேன்..... அம்மா கிட்ட எதுவும் மறைக்க மாட்டேன்.

ஏனோ மாயாவிற்கு குற்ற உணர்வு இருந்தது. ஏனென்றால் அவள் அவளுடைய அம்மாவிடம் நான் வேலை விஷயமா வெளியே போறேன் என்று எழுதி வைத்து விட்டு வந்ததால் அப்படி தோன்றியது.

கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு வந்து கோவில் வாசலில் அமர்ந்தனர் இருவரும்.

மாமா..... எனக்கு ரொம்ப ரொம்ப பசிக்குது மாமா.... என்றாள் மாயா.

##########

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.