• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.... பாகம் -36

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி.....

பாகம் -36

ரொம்ப பசிக்குது மாமா..... என்றாள் மாயா.

டவுனுக்கு போய் ஹோட்டல்ல சாப்பிடலாமா?..... என்றான் மணிகண்டன்.

போகலாம் மாமா..... ஆனா அதுக்கு முன்னாடி வீட்டுக்கு போய் கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு போகனும்.....

நம்ம பைக்ல வந்திருக்கோமே.....

இல்ல இல்ல.... பேக் பண்ணி வச்சிட்டு பக்கத்து வீட்டு ஆன்டி கிட்ட சொல்லிட்டு போனா நாளைக்கு வண்டில ஏத்தி அனுப்பிடுவாங்க.....

சரி வா..... போய் பேக் பண்ணலாம்.

இல்ல மாமா..... அந்த ஆன்டியும் எங்க அம்மாவும் ரொம்ப ரொம்ப கிளோஸ்..... நீங்க என் கூட வந்தீங்க ன்னு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்.....

அதுக்காக நம்ம சொல்லாமலே இருக்க முடியுமா மாயா?

அது இல்ல மாமா..... நான் அம்மாவை கன்வின்ஸ் பண்ற வரைக்கும் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்..... இல்லன்னா அம்மா என்னை மறுபடியும் டெல்லிக்கு கூட்டிக்கிட்டு போயிடுவாங்க.....

அய்யோ வேண்டாம்..... உன்னை பார்க்கலைன்னா நான் என்ன ஆவேன் ன்னு எனக்கே தெரியாது.....

அவன் பேசியதை கேட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள் மாயா. பிறகு.....

மாமா..... வாங்க நாம் போய் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு வரலாம்..... நீங்க உங்க வீட்ல வெயிட் பண்ணுங்க..... நான் எனக்கு தேவையான திங்க்ஸை பேக் செஞ்சு வச்சிட்டு ஒன் ஹவர்ல வந்திடறேன்.....

ஓகே மாயா..... என்று சொல்லி விட்டு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஊருக்குள் கொண்டு வந்து விட்டான்.

மாயா அவளுடைய வீட்டிற்கு சென்று சில பொருட்களை பேக் செய்து வைத்தாள். அங்கு ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் போது அவளுடைய அப்பா நியாபகம் வந்தது. அவளுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. பின்னர் தன் அப்பாவின் ஃபோட்டோ முன்னாடி நின்று.....

அப்பா...... இன்னைக்கு என் பர்த் டே..... எனக்கு விஷ் பண்ணுங்க அப்பா.... என்று மண்டியிட்டு அழுதாள்.

பிறகு சிறிது நேரம் கழித்து தன்னையே சமாதானம் செய்து கொண்டு எழுந்தாள். பின்னர் தான் வயதிற்கு வந்தபோது அமர்ந்த இடத்தையும் மணிகண்டன் தனக்காக குடிசை கட்டியது பற்றியும் நினைத்து பார்த்துக் கொண்டாள். குடிசை அவள் மீது விழும் போது மாமா.... என்று சொல்லி பயந்ததையும்..... அவன் அந்த குடிசையை ஒழுங்காக கட்டியதும்...... அதன் பிறகு அவன் அவளை திரும்பி திரும்பி பார்த்ததையும் நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டாள். பிறகு அந்த பக்கத்து வீட்டு பெண்மணியிடம்.

ஆன்டி..... நான் தேவையான திங்க்ஸை அட்டை பெட்டியில் போட்டு வச்சிருக்கேன்..... நாளைக்கு வண்டி அனுப்பறேன்..... கொஞ்சம் ஏத்தி அனுப்ப முடியுமா?

அதனால என்ன மாயா..... நான் அனுப்பி விடறேன்...

சரிங்க ஆன்டி.... தேங்க்ஸ்.....

நீ மட்டுமா வந்த?

ஆமாம் ஆன்டி.....

அம்மா வரல?

இல்ல ஆன்டி அவங்களுக்கு உடம்பு சரியில்லை அதான் வர முடியல.....

சரிம்மா.... நான் ஃபோன் பண்ணி பேசிக்கிறேன்.....

ஓகே ஆன்டி.... பை.....

மாயா.....

சொல்லுங்க ஆன்டி.....

சிவகாமியையும் அவ பையன் மணியையும் பார்த்தியா?

சிவகாமியா?..... யாரு?

மறந்திட்டியா?.... உன்னோட அத்தை.....

ஓ..... அவங்களா..... இல்ல ஆன்டி.... நாங்க அவங்களை பார்க்கல......

ஏன்.... உங்க அம்மாவுக்கு பிடிக்காதுன்னா?.... என்று ஆரம்பித்து அவளுடைய வாயை கிள்ளினார் அந்த பெண்மணி.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஆன்டி..... எனக்கு வேலையே சரியாக இருக்கு..... டைம் ஆகுது..... நான் கிளம்பறேன்..... என்று சொல்லி விட்டு கிளம்பினாள் மாயா.

சரிம்மா..... அம்மாவை பேசச் சொல்லு என்று சொன்னார் அந்த பெண்மணி.

சரிங்க ஆன்டி என்று சொல்லி விட்டு வெயிட் செய்து கொண்டு இருந்த ஆட்டோவிலேயே தோட்டத்து வீடு என்று சொல்லக்கூடிய சிவகாமியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றாள்.

அங்கே மணிகண்டனும் வீட்டை சுத்தம் செய்து விட்டு மாயாவிற்காக காத்திருந்தான்.

மாயாவை பார்த்ததும்.....

மாயா..... ஒரு நிமிஷம் அங்கேயே இரு வரேன்..... என்று சொன்னான் மணிகண்டன்.

வாசலில் நின்று கொண்டு இருந்தாள் மாயா.

ஆலம் கரைத்து எடுத்துக் கொண்டு சென்று அவளுக்கு சுற்றி விட்டு நெற்றியில் பொட்டு வைத்தான்..... இப்போ உள்ளே போகலாம் வா.... என்று சொல்லி அவள் கையை பிடித்து அழைத்து கொண்டு உள்ளே சென்றான் மணிகண்டன்.

என்ன மாமா இதெல்லாம்?...... என்றாள் மாயா.

மாயா..... உன்னை முதல் முறையாக இந்த வீட்டிற்கு கூட்டிக்கிட்டு வரும் போது ஆரத்தி எடுக்கனும் ன்னு அம்மா சொல்லுவாங்க..... அதான் நானே செஞ்சேன்.....

உங்களுக்கு உங்க அம்மா ன்னா அவ்வளவு பிடிக்குமா?

என்ன கேள்வி இது..... யாருக்கு தான் அவங்க அம்மாவை பிடிக்காது?

இல்ல.... சொல்லுங்களேன்.....

ஆமாம் மாயா..... அப்பா இறந்து போன பிறகு அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க.... அப்போ அம்மாவை நினைச்சு நான் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டேன்.... அதான் அம்மாவுக்கு என்ன எல்லாம் பிடிக்குமோ ஆசைப்படறாங்களோ அதை எல்லாம் நான் முடிக்கனும் ன்னு.....

மாமா.....

நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.

என்ன சொல்லு மாயா?

உங்களுக்கு என்னை அதிகமாக பிடிக்குமா இல்ல உங்க அம்மாவையா?

சிரித்தான் மணிகண்டன்.....

என்ன மாமா .... கோபப் படுவீங்க.... இல்ல திட்டுவீங்க.... இல்ல பதிவானது சொல்லுவீங்க ன்னு பார்த்தா..... சிரிக்கறீங்க.....

மாயா.... நீ மட்டும் இல்ல..... இந்த உலகத்தில் இருக்குற எல்லா பொண்ணுங்களும் தன் புருஷன் கிட்ட கேட்குற கேள்வி தான் இது..... நீ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே கேட்டுட்ட அவ்வளவு தான்.....

இல்ல இல்ல.... நான் சும்மா தான் கேட்டேன்..... நீங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.....

நான் இந்த கேள்விக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பதில் சொல்றேன்.....இல்ல இல்ல நமக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு பதில் சொல்றேன்......

ஏன்...... உனக்கு குழந்தை பிடிக்கும் ன்னு கேட்பீங்க..... ரெண்டு பேரும் ன்னு சொன்னா..... இல்ல ஃபர்ஸ்ட் யாரு ன்னு சொல்லு.... அப்படின்னு சொல்லுவீங்க..... அதான?......

சிரித்தான் மணிகண்டன்.

தெரியும் மாமா.... எத்தனை படத்தில் பார்த்திருக்கேன்..... என்று சொல்லி அவளும் சிரித்தாள்.

மாயா.....

ஹூம்......

கண்ணை மூடு.....

எதுக்கு?

மூடு டி.....

சரி மாமா..... என்று சொல்லி அவள் கண்களை மூடியதும்..... அவளுடைய இரண்டு கைகளிலும் இரண்டு கிஃப்ட்களை கொடுத்தான்.

கண்களை திறந்தாள் மாயா.

மாமா..... என்ன கிஃப்ட்.....

நீயே ஓப்பன் செய்து பாரு.....

ஆர்வமாக பிரித்தாள் மாயா.

ஒரு பார்சலில் தங்க கொலுசும் இன்னொன்றில் அவள் சிறுவயதில் வேண்டும் என்று ஆசைப்பட்ட ஐந்தாங்கல் இருந்தது.

இது என்ன மாமா.... கல் மாதிரி இருக்கே.....

நீ விளையாடக் கேட்டியே அந்த ஐந்தாங்கல் தான் இது....

சிரித்தாள் மாயா..... நான் கேட்டது எனக்கே ஞாபகம் இல்லை..... இந்த கொலுசு கோல்டா?

ஆமாம் டி.....

ஏன் மாமா.....

இதுவும் நீ தான் கேட்ட மாயா.... உன் அப்பா கிட்ட.....

நானா?

ஆமாம்..... என்று சொல்லி அவள் சொன்னதை சொன்னான் மணிகண்டன்.

அப்பா.... எனக்கு தங்க கம்மல், வளையல், நெக்லஸ் எல்லாம் வாங்கி தறீங்க.... ஆனா கொலுசு மட்டும் தங்கம் வாங்கித் தர மாட்டீங்களா?

அம்மாடி..... அதெல்லாம் என்னால முடியாது.... உன்னை கட்டிக்க போறவனை வாங்கித் தரச் சொல்லு..... என்றார் மாயாவின் அப்பா.

போங்க அப்பா....
என்று வெட்கம் கலந்த கோபத்துடன் உள்ளே ஓடினாள் மாயா.

மணிகண்டன் இதைச் சொன்னதும் தான் அவளுக்கு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.

மாமா.... என்று சொல்லி கண்கள் கலங்கினாள்.

நான் உனக்கு போட்டுவிடவா?

சரி என்று தலை அசைத்தாள்.

மணிகண்டன் அவளுடைய கால்களில் அந்த தங்க கொலுசை போட்டுவிட்டான்.

அப்போது மணிகண்டனுக்கு கால் வந்தது.

சார்..... புருஷோத்தமனுடைய டி.என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டது..... என்றான் ராஜேஷ்.

#############

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.