ரகசிய கொலையாளி......
பாகம் -37
சார்..... புருஷோத்தமனுடைய டி.என்.ஏ ரிசல்ட் வந்துடுச்சு..... என்றான் ராஜேஷ்.
என்ன ரிசல்ட்?...... என்றான் மணிகண்டன்.
நெகடிவ் சார்......
ஓ..... ஓகே......
இப்போ என்ன சார் பண்றது?
அவரை ரிலீஸ் பண்ணிடுங்க..... ஆனா வெளியூர் போகக்கூடாதுன்னு சொல்லிடுங்க..... என்கொயரிக்கு கூப்பிடும் போது கண்டிப்பாக வரணும் சொல்லிட்டு பாஸ்போர்ட் வாங்கி வச்சுக்கோங்க.....
ஓகே சார்...... என்றான் ராஜேஷ்.
பை..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் மணிகண்டன்.
என்னாச்சு மாமா......
அதான் சொன்னேனே ஒரு சிக்கலான கேஸ் ன்னு......
அச்சச்சோ..... இவர் கற்பனையில் இருக்கும் மாயா கிட்ட சொன்னாரு போல..... எனக்கு என்ன கேஸ் ன்னே தெரியலையே..... என்று நினைத்து கொண்டாள் மாயா.
இந்த கேஸை பத்தி நீ என்ன நினைக்கிற மாயா.....
அது வந்து..... அது.....
அதைப் பத்தி இன்னைக்கு ஏன் மாமா பேசனும்..... அப்புறமா சொல்றேன்..... கிளம்பலாமா?
அதுக்குள்ளேவா?
மாமா..... நான் உங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் அப்புறம் கிஃப்ட் வாங்கித் தரணுமே.....
நீ தான் ஏற்கனவே வாங்கி வச்சிட்டேன்னு சொன்னீயே.....
இல்ல மாமா..... அது டெல்லியிலேயே இருக்கு..... வர அவசரத்தில் எடுத்து வர மறந்திட்டேன்.....
பரவாயில்லை மாயா..... அதுக்காகா வேற எல்லாம் வாங்க வேண்டாம்....
மாமா..... பிளீஸ்..... அட்லீஸ்ட் ஒரு கிஃப்ட்டாவது தரேன்..... ரெண்டு இல்லைன்னாலும்.....
சரி..... என்ன வாங்கித் தரப்போற?
உங்களுக்கு என்ன வேண்டும் ன்னு சொல்லுங்க.....
உன்னோட காதல்......
மாமா...... சொல்லுங்க மாமா..... விளையாடாதீங்க.....
உண்மையிலேயே தான் சொல்றேன் மாயா..... நான் உயிர் வாழ உன் காதல் மட்டும் போதும்......
மாயாவிற்கு கண்கள் கலங்கியது.
என் மேல அவ்வளவு லவ்வா மாமா உங்களுக்கு?
ஆமாம் டி..... நீ தான் என் உயிர்..... உனக்காக நான் இவ்வளவு நாளா தேடி கண்டுப்பிடிச்ச சஸ்பெக்ட்டை கூட விசாரிக்காம விட்டுட்டு வந்திட்டேன்.....
சரி..... போகலாம் மாமா..... பிளீஸ்..... அதற்கு மேல் அங்கிருந்தால் எங்கே அவளுக்கே தெரியாமல் அவன் மீது காதல் வந்து விடுமோ என்று பயந்தாள்.
( ஏற்கனவே அவளுக்கு அவன் மேல் காதல் வந்துவிட்டது என்பதை உணராமல்).
சரி..... எங்கே போகலாம்?
சொல்றேன்..... போங்க..... என்றாள் மாயா.
போகும் வழியில் ஒரு பிளான்ட்ஸ் நர்சரி இருந்தது.
மாமா..... அங்கே போங்க.....
சரி..... என்று சொல்லி அங்கே நிறுத்தினான்.
மாமா..... நான் உங்களுக்கு செடி வாங்கித் தரட்டுமா?
உன் இஷ்டம் டி......
சரி..... என்று சொல்லி அங்கிருந்தவரிடம் சொல்லி பூக்கள் வகையில் நான்கு( ரோஸ், பட்டன் ரோஸ், கிரோட்டன்ஸ், நித்திய மல்லி), செடி வகையில் நான்கு(கத்தரிக்காய் , முள்ளங்கி, தக்காளி ,மிளகாய்) மர வகையில் நான்கு கன்றுகள் ( மாமரம் , எலுமிச்சை, கொய்யா, நாவல் மரம்) மற்றும் தென்னங்கன்றுகள் 10 ( 5 செவ்விளநீர், 5 இளநீர்) என்று சொல்லி உரத்துடன் வாங்கினாள். மொத்தமாக 5000 ரூபாய் கொடுத்தாள் மாயா.
இந்த ஒரு ரோஜா செடி மட்டும் இப்போ எடுத்துக் கொண்டு போறோம்.... மற்றதை நாளைக்கு ஊர்ல இருந்து சாமான் எடுத்து வர வண்டி சொல்லி இருக்கேன்..... அதுலேயே போட்டு அனுப்பிடறீங்களா..... என்றாள்.
சரிங்க மா..... என்றார் அவர்.
பிறகு பைக்கில் ஏறி கிளம்பினார்கள்.
எதுக்கு மாயா இவ்வளவு வாங்கி இருக்க.....
மாமா..... எனக்கு செடி வளர்ப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்..... இப்போ நாங்க குவாட்ரஸ்ல இருக்கிறதால எதுவும் வாங்கி வளர்க்க முடியாது..... உங்க வீட்டில் தான் நிறைய இடம் இருக்கே..... நீங்க அங்க வச்சு வளர்க்கறீங்களா?.....
ஓகே டி..... தேங்க்ஸ் ஃபார் தி கிஃப்ட்.
இந்த பர்த்டே என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பர்த் டே.....
எனக்கும் தான் மாயா.....
இருவரும் ஆறு மணி அளவில் சென்னைக்கு வந்தனர்.
இரண்டு தெரு தள்ளியே இறக்கி விடச் சொல்லிக் கேட்டாள் மாயா.
ஏன்டி.... நான் உன்னை வீட்ல விடறேனே.....
இல்ல மாமா..... வேண்டாம்..... அம்மா கோபப்படுவாங்க.....
ஓகே மாயா .... என்று சொல்லி விட்டு வண்டியை நிறுத்தினான்.
அவள் கீழே இறங்கி நின்றாள்.
மாமா..... ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?..... என்றாள் மாயா.
ஓகே மாயா..... என்று சொல்லி மணிகண்டனும் கீழே இறங்கி நின்றான்.
இருவரும் தங்கள் ஃபோனில் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
பை மாமா..... என்றாள் மாயா.
அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான் மணிகண்டன்.
உண்மையிலேயே உனக்கு பை சொல்ல கஷ்டமா இருக்கு டி..... என் வீட்டுக்கு இப்பவே வந்திடுறீயா?..... என்றான் மணிகண்டன்.
மாயாவால் அதற்கு மேல் முடியவில்லை. மெல்ல தன் கைகளை எடுத்து அவனுடைய முதுகில் கோர்த்து அவளும் அவனை அணைத்து கொண்டாள்.
மாமா.... நான் பிராமிஸ் பண்றேன்..... நான் தினமும் உங்களை கட்டாயமாக மீட் பண்ணுவேன்..... போதுமா?......
தேங்க்ஸ் மாயா..... என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் மணிகண்டன்.
பின்னர் பை டி..... என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
பை மாமா..... என்று அவள் சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி அடி எடுத்து வைத்தாள். மனதிற்குள் அன்று காலை முதல் இப்போது அவன் கொடுத்த முத்தம் வரை அனைத்தையும் நினைத்து கொண்டே நடந்து சென்றாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது என்று அவளின் புன்னகை தெரிவித்தது. தானாக சிரித்துக் கொண்டே நடந்து சென்றாள். நாமும் மாமா கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கலாமோ..... என்று நினைத்து கொண்டாள் மாயா.
ஊரில் கோவிலுக்கு சென்ற அந்த பக்கத்து வீட்டு பெண்மணி.....
அர்ச்சனை செய்ய சொல்லி சொன்னார்.
யார் பேருக்கு..... என்றார் ஐயர்.
தன் மகளின் பெயரை சொன்னார் அந்த பெண்மணி.
அர்ச்சனை முடித்து விட்டு பிரசாதம் கொடுத்த ஐயர் அந்த பெண்மணியிடம்.
உங்க ஆத்துக்கு பக்கத்து ஆத்துல இருந்தாளே அவா பேரு என்ன?..... என்றார்.
பூர்ணிமா..... சாமி.
ஹாங்..... பூர்ணிமா..... அவா பொண்ணு மாயா கோவிலுக்கு வந்திருந்தா......
என்ன சாமி நீங்க..... அம்மா பேரு ஞாபகம் இல்ல பொண்ணு பேரை கரெக்டா சொல்றீங்க......
அதுக்கு காரணம் இருக்கோன்னோ......
என்ன?
இன்னைக்கு காலைல தான் அவா பேருக்கு அர்ச்சனை செய்தேன்.....
ஓ..... கோவிலுக்கு வந்தாளா மாயா?
ஆமாம் ஆமாம்..... அவ அத்தை பையன் மணிகண்டனோட வந்தா.....
என்ன?..... மணி வந்தானா?
ஆமாம் மா...... அவன் தான் அடிக்கடி வந்து அந்த மாயா பேரு நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வானோ.....
அப்படியா?
ஏன் நோக்கு தெரியாதா.....
அவன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செஞ்சா எனக்கு எப்படி சாமி தெரியும்......
அதில்ல மா..... அவன் ஆத்துக்கும் வந்திட்டு போவானோ ன்னு நினைச்சேன்.....
இல்ல இல்ல.... அதெல்லாம் வரமாட்டான்..... அவங்க அம்மா சிவகாமி தான் வருவா.....
ஓ..... சரி சரி..... குழந்தைங்க நன்னா இருந்தாங்கன்னா போதும்..... அவா ஜோடி பொருத்தம் நன்னா இருந்துச்சு..... கடவுளோட அனுக்கிரஹம் அவங்களுக்கு கிடைக்கட்டும் ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினேன்..... என்று சொல்லி விட்டு சென்றார் ஐயர்.
வேகமாக வீட்டுக்கு வந்தார் அந்த பெண்மணி.
ஹலோ..... யாரு பூர்ணிமாவா?...... நான் ஊர்ல இருந்து பேசறேன்....என்றார் அந்த பெண்மணி.
ஆமாம் அக்கா..... தெரியுது சொல்லுங்க......
மாயா இங்கு வந்திருந்தா.....
தெரியும் அக்கா...... என் கிட்ட சொல்லிட்டு தான் வந்தா.....
ஓ..... சொல்லிட்டு தான் அந்த சிவகாமி பையனோட ஊருக்கு வந்தாளா?......
என்ன சிவகாமி பையனோடவா?...... என்று அதிர்ச்சியாக ஆனாள் பூர்ணிமா.
#############
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.