• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் -38

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் -38

என்ன சிவகாமி பையனோடவா?..... என்றாள் பூர்ணிமா.

ஆமாம் பூர்ணிமா..... அதை உன் கிட்ட சொல்லலையா உன் பொண்ணு......

இல்லக்கா..... என்றாள் வருத்தத்துடன்.

உனக்கு இதெல்லாம் பிடிக்காது ன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்..... அதான் உன் கிட்ட சொல்லி உன் பொண்ணை கண்டிச்சு வைக்க சொல்லலாம் ன்னு நினைச்சேன்..... என்றாள் அந்த பெண்மணி.

சரிங்க அக்கா..... நான் பார்த்துக்கொள்கிறேன்..... நீங்க கால் பண்ணி சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

சரி பூர்ணிமா..... நான் வைக்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார் அந்த பெண்மணி.

பூர்ணிமாவிற்கு கண்கள் கலங்கியது.
ஏற்கனவே காலை தன்னை பார்க்காமல் தன்னிடம் ஆசிர்வாதம் வாங்காமல் மேலும் இரவு 7 மணி ஆகப்போகிறது..... இதுவரையிலும் ஃபோன் கூடப் பண்ணவில்லையே தன் மகள் என்ற வருத்தத்துடன் இருந்த பூர்ணிமாவிற்கு இந்த விஷயம் வேற கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிகப் படுத்தியது.

அப்போது உள்ளே நுழைந்தாள் மாயா.

முத்தம் வாங்கிய சந்தோஷத்தில் அந்த ரோஜா செடியை மணிகண்டனிடம் கொடுக்க கூட மறந்துவிட்டாள். அதை எடுத்து கொண்டு வந்து சேரில் வைத்து விட்டு.

அம்மா..... சாரி மா..... காலைல உங்க கிட்ட கூட சொல்லாம ஊருக்கு போயிட்டேன்..... சீக்கிரமா போனா தான் சீக்கிரமா வரமுடியும்..... அதுவும் இல்லாம நாளைக்கு காலைல சீக்கிரமா எழுந்து கோவிலுக்கு போயிட்டு ஃபர்ஸ்ட் டே டியூட்டிக்கு போகனுமே..... அதனால தான்..... என்றாள் மாயா.

அமைதியாக இருந்தார் பூர்ணிமா.

அம்மா..... என்னை பிளஸ் பண்ணுங்க அம்மா..... என்று சொல்லி அவருடைய காலைத் தொட்டு கும்பிட்டாள் மாயா.

நல்லா இரு..... என்று சொல்லி விட்டு கிட்சனுக்கு சென்றார் பூர்ணிமா.

டின்னர் சாப்பிட்டு விட்டு வந்திட்டியா?

இல்லம்மா..... உங்க கூட டின்னர் சாப்பிடலாம் ன்னு நினைச்சு தான் சீக்கிரமா வந்தேன். ஹோட்டலுக்கு போகலாமா?..... டேபிள் புக் பண்ணவா?

வேண்டாம் வேண்டாம்......

சரி..... அப்போ நானே குக் பண்ணி எடுத்து வரேன்.....

இல்ல வேண்டாம்...... எனக்கு பசிக்கில...... நான் பால் மட்டும் குடிச்சிட்டு படுக்கப் போறேன்..... உனக்கு வேணும்னா தோசை மாவு இருக்கு...... நான் ஊத்தித் தரேன்.....

இல்லம்மா..... இப்போ பசிக்கில..... அப்புறமா சாப்பிடறேன்..... நீங்க ஒரு தோசையாவது சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டுக்கோங்க மா..... என்றாள் மாயா.

நீ காலைல மதியம் எல்லாம் எங்க சாப்பிட்ட?

அது.... போகும் போதே வழியில வாங்கிக் கொண்டு போயிட்டேன்.....

இன்னும் எத்தனை பொய் சொல்லப் போற?

அம்மா.....

எனக்கு எல்லாம் தெரியும்..... நீ அந்த சிவகாமி பையனோட தான ஊருக்கு போயிட்டு வர..... பெத்த அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கல..... காலைல இருந்து ஒரு ஃபோன் பண்ணல..... அப்படி என்ன அவன் மேல உனக்கு..... அம்மாவும் புள்ளையும் சேர்ந்து உன்னை ஏமாத்தி நம்ம சொத்தை பறிக்க நினைக்கிறது கூடத் தெரியாமல் நீ அவன் கூட சுத்துற..... அசிங்கமா இல்ல உனக்கு..... இன்னைக்கு நீயும் நானும் உங்க அப்பா இல்லாம அனாதையா நிக்கிறதுக்கு காரணமும் அவங்க தான்..... என்று மூச்சிறைக்க பேசினாள்.

அம்மா..... போதும் நிறுத்துங்க..... அப்பா இறந்ததற்கு அவங்க மட்டும் காரணம் இல்ல..... நீங்களும் தான்.....

என்னடி உளருற..... என்று கத்தினார் பூர்ணிமா.

ஆமாம் மா..... அப்பா உங்களுக்கு சப்போர்ட் பண்றதா இல்ல தங்கச்சிக்கு சப்போர்ட் பண்றதா ன்னு தெரியாம மனசுக்குள்ளயே புழுங்கி டிப்ரஷனுக்கு போய் இறந்திட்டாரு..... நீங்களாவது நாத்தனார் தானே ன்னு விட்டுக் கொடுத்து போயிருக்கலாம்.... இல்ல அவங்களாவது அண்ணி தானே ன்னு விட்டுக் கொடுத்து இருக்கலாம்.....

வாடி வா.... ஒருநாள்லையே உன்னை மயக்கிட்டானா அந்த பையன்...... இதுக்கு தான் நான் இந்த ஊருக்கு வரக்கூடாது ன்னு நினைச்சேன்......

அம்மா..... நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லம்மா...... அவங்க ரெண்டு பேரும் யாரும் இல்லாம தனியா வாழ்ந்து கொண்டு இருக்காங்க..... மணி மாமாவுக்கு.....

என்னது மணி மாமாவா..... இன்னொரு முறை அந்த மாதிரி பேசின..... உன் தோலை உரித்திடுவேன்.....

அம்மா..... உங்களுக்கு இருக்குற வீராப்பு திமிரு எல்லாம் எனக்கும் இருக்கு..... நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல..... நீங்க சொல்றதை கேட்டு தலை ஆட்ட..... நானே ஒரு போலீஸ் அதிகாரி.... என் கிட்டயே எது நல்லது எது கெட்டது ன்னு சொல்லி தரீங்களா?
ஒருத்தரை பார்த்தாலே எனக்கு தெரியும் அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா ன்னு?.....
மணி மாமா ரொம்ப ரொம்ப நல்லவர்..... என் மேல உயிரையே வச்சிருக்காரு..... இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க..... நான் கல்யாணம் ன்னு ஒண்ணு பண்ணினா அது மணி மாவைத் தான்..... அதுவும் உங்க சம்மதத்தோட தான்..... இதுக்கு மேல நான் என்ன விளக்கம் சொன்னாலும் உங்களுக்கு காதுலேயும் ஏறாது உங்க மூளைக்கும் எட்டாது....
நீங்களே அவங்க நல்லவங்க தான் ன்னு புரிஞ்சிக்கிற காலம் வரும்..... என்றாள் மாயா.

தன் மகள் இதுவரை தன்னை எதிர்த்துப் பேசியதே இல்லை..... அதிலும் அவர்களுக்காக தன்னை எதிர்க்கிறாளே என்று ஆச்சரியத்திலும் கோபத்திலும் அமைதியாக நின்று கொண்டு இருந்தார் பூர்ணிமா.

ரூமுக்கு சென்றவள் திரும்பி வந்து தன் அம்மாவிடம்......

நான் உங்களுக்கு இன்னைக்கு காலே பண்ணல ன்னு சொன்னீங்களே..... அங்கே வீட்டுக்கு போன பிறகு நம்ம அங்கே வாழ்ந்தது எல்லாம் ஞாபகம் வந்துச்சு.... அப்பாவை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்..... உங்களுக்கு கால் பண்ண நினைச்சேன்..... கண்டிப்பா பேசும் போது அழுதிடுவேன்..... உங்களுக்கும் அதனால அழுகை வரப் போகுது ன்னு நினைச்சு பண்ணல..... அதுவும் இல்லாம நீங்க மாத்திரை போட்டுகொண்டு தூங்குவீங்களே ன்னு நினைச்சேன்.... நீங்களே எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணுவீங்க ன்னு நினைச்சேன்...... இப்போ வரைக்கும் நீங்க‌ எனக்கு விஷ் பண்ணல..... காலில் விழும் போது கூட நல்லா இரு ன்னு மட்டும் தான் சொன்னீங்க..... பர்த் டே விஷ்ஷஸ் சொல்லல..... எத்தனை பேர் விஷ் பண்ணாலும் அப்பா அம்மா விஷ் பண்ற மாதிரி ஆகுமா அம்மா..... அப்பா தான் விஷ் பண்ண முடியாத இடத்துக்கு போயிட்டாரு..... நீங்க விஷ் பண்ற மன நிலையில இல்ல..... என்றாள் கண்கள் கலங்க.

மாயா..... என்று சொல்லி தன் மகளைக் கட்டிக் கொண்டார் பூர்ணிமா.

சாரி மாயா....
ஹேப்பி பர்த்டே டூ யூ..... என்று சொல்லி அவளுடைய இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தார் பூர்ணிமா.

அம்மா.... தேங்க்ஸ் மா.... எங்கே இன்னைக்கு உங்களோட விஷ் எனக்கு கிடைக்காதோ ன்னு நினைச்சு பயந்திட்டேன்.....

இல்ல மாயா..... அந்த பையனை சொன்னீயே உன் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்னு..... அப்போ நான்.... நான் யாருக்காக வாழறேன்...... அவனை பார்த்த ஒரே நாள்ல அவனோட பாசம் உனக்கு புரியுது..... நீ பொறந்ததில் இருந்து உனக்காகவே வாழற என்னை உனக்கு தெரியல இல்ல......

அம்மா..... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க..... நீங்க என் மேல வச்சிருக்கிற பாசத்தை விட மணி மாமா என் மேல அதிகமா பாசம் வச்சிருக்காரு ன்னு நான் சொல்லி இருந்தா தான் தப்பு..... அவர் என் கூட கற்பனையிலேயே வாழ்ந்து இருக்கார்..... நான் இல்லன்னா அவர் செத்திடுவார்..... என்று ஆரம்பித்து மீனா மற்றும் டாக்டர் மதனகோபால் கூறியது அனைத்தையும் சொல்லி முடித்தாள் மாயா.

###########

தொடரும்......

அ . வைஷ்ணவி விஜயராகவன் .