• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -39

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி.....

பாகம் -39


அப்போ..... நீ அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்க போற இல்ல?..... என்றார் பூர்ணிமா.

ஆமாம் மா..... ஆனா இப்பவும் சொல்றேன் அது உங்க சம்மதத்தோட தான்...... என்றாள் மாயா.

அதெப்படி டி பார்த்தவுடனே உங்களுக்கு எல்லாம் லவ் வந்திடுது..... அதுவும் மனநிலை சரியில்லாதவன் ன்னு வேற சொல்ற.... நாளைக்கு அவனுக்கு பயித்தியம் பிடிச்சிடிச்சுன்னா என்ன பண்ணுவ?

அம்மா..... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னா தான் அவருக்கு பயித்தியம் பிடிக்கும்..... நான் கூட இருந்தா தான் அவருக்கு நல்லது.....

நான் என்ன சொன்னாலும் உனக்கு புரிய போறது இல்லை..... காதல் உன் கண்ணை மறைக்குது..... என்று சொல்லி விட்டு போய் படுத்துக் கொண்டார் பூர்ணிமா.

அம்மா..... ஒரே ஒரு தோசை சாப்பிட்டு விட்டு அப்புறமா மாத்திரை போட்டுகொண்டு தூங்குங்க அம்மா...

சரி கொடு..... என்று சொன்னார் பூர்ணிமா.

ஓகே அம்மா..... என்று சொல்லி விட்டு தன் அம்மாவிற்கு தோசை வார்த்துக் கொண்டு வந்து கொடுத்தாள் மாயா.

நீ சாப்பிடலையா.....

இல்லம்மா..... எனக்கு பசிக்கில...... நீங்க சாப்பிடுங்க.....

இல்ல இல்ல வா..... நீயும் என் கூட உட்கார்ந்து சாப்பிடு...... என்று சொல்லி பாதி தோசையை அவளுக்கு ஊட்டிவிட்டார் பூர்ணிமா.

சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு. தன் அம்மாவிற்கு வேறு ஒரு தோசையை வார்த்துக் கட்டாயப் படுத்தி கொடுத்தாள் மாயா.

மாயா தன் அம்மாவிடம்.

அம்மா..... நாளைக்கு எனக்கு ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டிய கேஸை மெயில் பண்ணி இருக்காரு என்னோட சுப்பீரியர். நான் அதை எல்லாம் பார்த்து ரெஃபரென்ஸ் எல்லாம் எடுக்கனும்..... நீங்க மாத்திரை போட்டுகொண்டு தூங்குங்க நான் வரேன்..... என்றாள் மாயா.

சரிம்மா..... என்று சொல்லி விட்டு தன் ரூமிற்கு சென்று தன் கப்போர்டில் வைத்து இருந்த தன் கணவனின் ஃபோட்டோவை எடுத்து கொண்டு வந்து கையில் வைத்துக் கொண்டு பெட்டில் அமர்ந்து.

ஏங்க..... நீங்க இறந்துபோனதுக்கு நானும் ஒரு காரணம் ன்னு உங்க பொண்ணு சொல்றா?...... உண்மையாங்க?..... நீங்களும் அவ சொல்றது போல தான் நினைச்சிக்கிட்டு இருந்தீங்களா?..... என் சம்மதத்தோட தான் அந்த சிவகாமி பையனை கல்யாணம் பண்ணிக்குவேன் ன்னு சொல்றா..... என்னை எப்படியாவது கட்டாயப் படுத்தி பிளாக் மெயில் பண்ணி ஒத்துக் கொள்ள சொல்வாளோ.....
உங்க பொண்ணு செஞ்சாலும் செய்வா...... நான் தான் ஜாக்கிரதையா இருக்கனும்..... என்ன சொல்றீங்க..... என்று அந்த ஃபோட்டோவை பார்த்து பேசினாள்.

சிறிது நேரம் கழித்து......

ஏங்க நான் உயிரோட இருந்தா தான அவ என் கிட்ட சம்மதம் வாங்க முடியும்..... நான் இல்லன்னா.... என்று சொல்லி அவளுடைய அனைத்து மாத்திரைகளையும் போட்டுக் கொண்டார் பூர்ணிமா.

இது தெரியாமல் தன் காதில் ஹெட் ஃபோன்ஸ் போட்டுக் கொண்டு மெயிலில் இருக்கும் அட்டாச்சுமெண்டை பார்த்துக் கொண்டு இருந்தாள் மாயா.

#############

வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் அன்று முழுவதும் நடந்ததை கூறினான் மணிகண்டன்.

முதலில் இதுவும் அவன் கற்பனையோ என்று நினைத்து பயந்து சிவகாமி பின்னர் அவன் தன் ஃபோனில் மாயாவுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை காண்பித்ததும் நிம்மதி அடைந்தார். கடவுளுக்கு நன்றி கூறினார்.

அப்போது மாயா கால் செய்தாள்.

சொல்லு மாயா..... என்று சொல்லி ஃபோனை எடுத்து கொண்டு உள்ளே சென்றான் மணிகண்டன்.

மாமா..... இப்போ நான் உங்க கிட்ட சொல்லப் போற விஷயம் உங்களுக்கு ஹேப்பியா இருக்குமா இல்ல ஸேடா இருக்குமா ன்னு தெரியல......

நீ என்ன விஷயம் சொன்னாலும் அது உனக்கு ஹேப்பி ன்னா எனக்கும் ஹேப்பி..... உனக்கு ஸேடு ன்னா எனக்கும் ஸேடு.....

ப்பா..... உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது போல.....

சரி..... விஷயத்தை சொல்லு..... மாமி என்ன சொன்னாங்க..... நீ சொன்னீயா என் கூடத் தான் ஊருக்கு வந்த ன்னு?

நீங்க வேற மாமா..... அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு என் கூட பயங்கர வாக்குவாதம்..... நானும் விடல..... நான் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணா அது மணி மாமாவைத் தான் ன்னு சொல்லிட்டேன்......

மாயா..... அம்மா கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது.......

அய்யோ மாமா..... ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்காதீங்க..... நான் இன்னும் சொல்லி முடிக்கல.....
எங்க அம்மா கிட்ட..... அவங்க சம்மதத்தோட தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்குவேன் ன்னு சொல்லிட்டேன்.....

குட்.....

தேங்க்ஸ்.....

மாயா..... உங்க அம்மா ஒத்துக்கலைன்னா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.....

மாமா..... என்று அதிர்ச்சியாக சொன்னாள்.

உண்மையிலேயே தான் சொல்றேன் மாயா.....

அப்போ என்னை மறந்திடுவீங்களா?

இல்ல..... உன்னை என் வாழ் நாள் முழுவதும் லவ் பண்ணிக்கிட்டே இருப்பேன்..... என்றான் மணிகண்டன்.

உண்மையிலேயே மணி மாமாவுக்கு மனநிலை பாதிக்க படல...... எனக்கு தான் போல..... இந்த மாதிரி பேசி பேசி என்னை பயித்தியமா ஆக்கிடுவாரு போல இந்த மாமா..... என்று நினைத்து கொண்டாள் மாயா.

என்ன மாயா..... அமைதியாக ஆயிட்ட.....

என்னை எங்க பேச விடறீங்க.....

ஏன் நான் என்ன பண்ணேன்......

அதான் லவ்வாலேயே என்னை டார்ச்சர் பண்றீங்களே...... என்று சொல்லி சிரித்தாள் மாயா.

மாயா..... அப்படி சொல்லாத..... எனக்கு கஷ்டமா இருக்கு.....

எதுக்கு?

டார்ச்சர் பண்றேன் ன்னு.....

அச்சோ சத்தியமா முடியல மாமா...... இப்படி எல்லாம் பேசனீங்கன்னா எங்க அம்மா ஓகே சொன்னாலும் நான் யோசிப்பேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க..... என்று சொல்லி சிரித்தாள் மாயா.

மாயா..... விளையாட்டு கூட அப்படி சொல்லாத பிளீஸ்..... என்றான் மணிகண்டன்.

மாமா..... சாரி டென்ஷன் ஆகாதீங்க..... சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.....
சரி அதை விடுங்க..... என்ன விஷயம் ன்னு கேளுங்க?

சரி சரி சொல்லு......

எனக்கு சிபிஐல இருந்து அலாட் பண்ணப் பட்ட கேஸ் நீங்க ஹேண்டில் பண்ற காவேரி கொலை கேஸ் தான்......

வாட்......

ஆமாம் மாமா..... இப்போ தான் எனக்கு மெயில் வந்தது..... அப்புறம் கேஸ் டீடெயில்ஸ் கூட......

ஓ..... ஓகே......

இப்போ சொல்லுங்க..... நீங்க ஹேப்பியா சேடா.....

அமைதியாக இருந்தான் மணிகண்டன்.

ஓகே மாமா புரிஞ்சிடிச்சு..... நீங்க அமைதியாக இருக்கீங்க ன்னா உங்களுக்கு சேடு தான் ன்னு புரியுது.....

மாயா.....

விடுங்க மாமா..... நான் நாளைக்கு என் சுப்பீரியர் ஆஃபீஸர் கிட்ட சொல்லி இந்த கேஸ்ல இருந்து விலகிக்கிறேன்.....

மாயா..... நான் சொல்றதை கொஞ்சம் கேளு......

சொல்லுங்க.....

நாளைக்கு யார் கிட்ட இந்த கேஸை கொடுக்கனுமோ..... கஷ்டப்பட்டு இவ்வளவு கண்டுப்பிடிச்சோமே ன்னு நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணினேன்...... ஆனா அந்த கேஸ் என் பொண்டாட்டிக் கிட்ட தான் போகப் போகுது ன்னா நான் ஏன் கவலைப் படப்போறேன்..... அதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான்......

உண்மையிலேயே வா?

ஆமாம் டி......

தேங்க்ஸ் மாமா..... நீங்க எங்க ரொம்ப ஃபீல் பண்ண போறீங்களோன்னு பயந்தேன்.....

உன் கூட சேர்ந்து வேலைப் பண்ணப் போறேன் ன்னு நினைச்சு சந்தோஷத்தில பேச்சு வரல டி.....

நீங்களும் நானும் எப்படி ஒண்ணா வேலை செய்ய முடியும்..... நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட் நான் கிரைம் பிராஞ்ச் டிபார்ட்மெண்ட்......

இல்ல அந்த கேஸை ஹேண்டில் பண்ற போலீஸ் சிபிஐ ஆஃபீஸருக்கு அசிஸ்ட் பண்ணனும்......

ஓ..... ஓகே..... சரி சரி கேஸை பத்தி சொல்லுங்க..... என்றாள் மாயா.

அதான் உன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே..... என்றான் மணிகண்டன்.

#############

தொடரும்.....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.