• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி பாகம் 4

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி......
பாகம் -4
வாட்... குடிசை கட்டனுமா.....அப்படின்னா?...... என்றான் நவீன்.
டேய்..... வாயை மூடு.... டவுட் எல்லாம் அப்புறமா கேட்டுக்கோ..... சுவாரஸியமா கதைக்குள்ள போகும் போது தான் இப்படி எல்லாம் டவுட் வரும்.....என்றான் ராஜேஷ்.
சார்..... நீங்க சொல்லுங்க சார்..... என்றான் இளங்கோ.
எங்க அம்மாவும் நானும் மட்டும் தான் போயிருந்தோம்..... எங்க அப்பா தான் போலீஸ் ஆச்சே அவருக்கு லீவு கிடைக்கல..... எங்க அம்மாவோட அண்ணன் பொண்ணு தான் என் மாயா.
அப்போது ரவியின் ஃபோன் அடித்தது.
அவர் சைலென்டில் போட்டுவிட்டு கதையை கேட்டார்.
எங்க அம்மா என் கிட்ட கெஞ்சி கேட்டுக்கிட்டதால அந்த ஓலையை பின்னி குடிசை கட்டினேன்.
உங்களுக்கு ஓலை எல்லாம் பின்ன தெரியுமா அண்ணா?.... என்றாள் மீனா.
இல்ல அங்கு இருந்த யாரோ இதை இப்படி பண்ணு இதை இப்படி பண்ணு ன்னு சொல்லிக் கொடுத்தாங்க...... அங்க வேற நிறைய பேரு இதோ பாரு மாமா குடிசை கட்டுறாரு.... என்று கிண்டல் செய்தனர். நான் ரொம்ப கடுப்பாகி விட்டேன்.....
மாயாவை பாவாடை தாவணி கட்டி கூட்டிக்கிட்டு வந்தாங்க..... அவளை நான் செஞ்சு நிக்க வச்ச குடிசைல உட்கார வச்சாங்க. அப்போ கூட நான் அவ முகத்தை பார்க்கல. அவ உட்காரும் போது அந்த ஓலை அவ மேல சாய்ந்தது.....
மாமா..... அப்படின்னு பயந்து என்னை பார்த்து சொன்னா.
அப்போது தான் முதல்ல அவளைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்தா.
அந்த ஓலையை கயிறு போட்டு ஜன்னல்ல கட்டி விட்டு விட்டு நான் வெளியே வந்திட்டேன்.
அதுக்கு அப்புறமா நான் அந்த சைடு போகும் போது எல்லாம் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தா. முதல் முறையா கவனிக்கல..... அப்புறம் ரெண்டு முறை அவளை தாண்டி போகும் போது என்னை பார்த்து கொண்டே இருந்தா. ஏனோ அவ பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு..... அப்போ கூட இது லவ் ன்னு எனக்கு தோணல.... வேணும்னே நாலஞ்சு முறை அவ பார்க்கிறாளா ன்னு பார்க்க அந்த பக்கமா போய்கிட்டே இருந்தேன்.
இதை என் மாமா கவனிச்சிட்டார். என்னை தோட்டத்திற்கு கூப்பிட்டார். நானும் போனேன்.
என்ன மாமா.... என்றேன்.
+2 எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதி இருக்கியா?என்றார் என் மாமா.
எழுதி இருக்கேன் மாமா ன்னு சொன்னேன்.
ஆமாம் எதுக்கு குடிசையோட அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்துக்கிட்டே இருந்த.....
அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா..... ன்னு சொல்லும் போதே என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அடிச்சது என் மாமி.
ஏய்..... இருடி.... இரு.... நான் தான் பேசிக் கொண்டு இருக்கேன் இல்ல.... அதுக்குள்ள நீ ஏன் கையை ஓங்குற..... என்றார் மாமா.
இந்த பிச்சைக்கார பையனுக்கு என் பொண்ணு கேட்குதா..... நான் எல்லார் முன்னாடியும் வீட்டுக்குள்ளவே அடிச்சிருப்பேன்.... அதுக்குள்ள நீங்க பின்னாடி கூட்டியார்ந்திட்டீங்க.....
இருடி.... பொறுமையா இரு.....
மாமி என்னை அடிக்கும் போது எங்க அம்மா கரெக்டா வந்திட்டாங்க..... எங்க அம்மாவுக்கு கண்ணெல்லாம் கலங்கிடிச்சு..... வந்து என் முன்னாடி நின்னாங்க.
அண்ணா..... என்ன அண்ணா கம்முன்னு நிக்கிற.... அப்படின்னு கேட்டாங்க.....
அதற்கும் அவர் பதில் பேசல.....
பின்ன உன் பையன் பண்ணினதுக்கு தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா?...... அவர் தான் முதல்ல அறைஞ்சிருக்கனும்.....
அண்ணி..... நான் உங்க கிட்ட பேசல.... என் அண்ணன் கிட்ட தான் பேசறேன்......
ஒண்ணும் இல்லைன்னாலும் ரோஷம் மட்டும் பொத்துக்கினு வருதோ..... என்று என் மாமி சொன்னாங்க.....
சார்..... ஏன் சார் இன்னும் அவங்க இவங்க ன்னு மரியாதையா பேசறீங்க..... உங்க மேல தப்பே இல்லாம உங்களை அடிச்சிருக்காங்க அதுவும் உங்க அம்மா முன்னாடி..... அவ இவ ன்னு சொல்லுங்க..... என்றான் ராஜேஷ்.
இல்ல ராஜேஷ்..... யாரையுமே எனக்கு அப்படி பேச வராது..... எங்க அம்மா எல்லார் கிட்டேயும் மரியாதையா தான் பேசனும் ன்னு சின்ன வயசுலிருந்தே சொல்லி சொல்லி ..... இப்போ நம்ம கஸ்டடியில் இருக்கிற ஆளுங்களை கூட நான் மரியாதையா தான் பேசுவேன்.
ஆமாம் ஆமாம்..... நான் கூட பார்த்திருக்கிறேன்....
நீங்க மரியாதையா பேசுவதை..... என்று மீனா சொல்லும் போது வாசலில் ஜீப் சப்தம் கேட்டது.
அனைவரும் அவரவர் தொப்பிகளை மாட்டிக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.
டி எஸ் பி வந்திருந்தார். அனைவரும் எழுந்து நின்று சல்யூட் அடித்தார்கள்.
மணிகண்டன்....... மர்டர் கேஸ் டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சா?
எஸ் ஸார்.... போஸ்ட் மார்டம் பண்ணிக் கொண்டு இருக்காங்க..... ரிப்போர்ட் வந்தவுடன் பிராப்பர் இன்வஸ்டிகேஷன் அஃபீஷியலா ஸ்டார்ட் பண்ணிடுவேன் சார்..... என்றான்.
ஓகே..... ரிப்போர்ட் வரதுக்குள்ள அவங்க ஃபேமிலியை வர வழைச்சு அவங்களை என்கொயரி பண்ணிடுங்க.... என்றார்.
எஸ் ஸார்..... ஃபோன் நம்பர் கிடைச்சதும் இன்ஃபார்ம் பண்ணி வரச் சொல்லி என்கொயரி பண்ணிடறேன்.
இன்னுமா ஃபோன் நம்பர் கிடைக்கல....
இப்போ தான் சார் விக்டிம் கால் டீடெயில்ஸ் கிடைச்சிருக்கு..... அதுல பார்த்து அவங்க ரிலேட்டிவ்ஸ் கிட்ட பேசனும்..... என்றான் மணிகண்டன்.
ஓகே மணிகண்டன். சீக்கிரமா பண்ணுங்க.... இறந்த அந்த பொண்ணு கொஞ்சம் பெரிய லெவல்ல கனெக்ஷன்ல இருந்திருப்பாங்க போல..... மேலிடத்தில் இருந்து காலைல இருந்து நாலஞ்சு ஃபோன் வந்திடிச்சு..... அதுவும் இல்லாம மீடியா ஆளுங்க வந்திடவே இன்னும் பெரிய இஷ்யூவா ஆயிடிச்சு.....
ஓகே சார்..... ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்..... எவ்வளவு சீக்கிரமா இந்த கேஸை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க டிரை பண்றேன் சார்.
ஓகே மணிகண்டன்..... என்று சொன்னார் டி எஸ் பி.
சார்..... டீ எடுத்துக்கோங்க என்று சொல்லி இளங்கோ கொடுத்தான்.
நான் கேள்வி பட்டது உண்மைதான் போல..... என்றார் டி எஸ் பி.
என்ன சார்.... என்றான் மணிகண்டன்.
நீங்க கம்ப்ளெயின்ட் பண்ண வரவங்களை தவிர வேற யாரையும் உள்ளே விடறது இல்லை ன்னு......
சார் அப்போ கம்ப்ளெயின்ட் கொடுக்க தான் வந்திருக்காரா என்று ராஜேஷ் காதில் கிசுகிசுத்தான் நவீன்.
ஏய் வாயை மூடு டா..... என்று திட்டினான் ராஜேஷ் மிக மெதுவாக.
ஆமாம் சார்..... டீ கொடுக்க சாப்பாடு வாங்கி கொண்டு வர ன்னு ஆளுங்களை யாரையும் உள்ளே விடறது இல்லை..... இந்த மாதிரி யாராவது வந்தாங்கன்னா அவங்க கேட்டுக்கு வெளியே தான் இருக்கனும்...... நாங்க யாராவது போய் அவங்க கிட்ட இருந்து வாங்கி வருவோம்......என்றான் மணிகண்டன்.
நைஸ்...... அப்புறம் ஸ்டேஷன் கூட ரொம்ப கிளீனா இருக்கு..... கீப் இட் அப்.....பை ஆல்..... என்றார்.
தேங்க்ஸ் சார்....பை..... என்று சொல்லி மறுபடியும் சல்யூட் அடித்து டி எஸ் பி யை அனுப்பி வைத்தனர் அனைவரும்.
அவர் சென்றதும்...... நவீன் மணிகண்டனிடம் வந்து.....
சார்..... அப்புறம் என்னாச்சு?.... என்றான்.
போய் வேலையை பாருடா..... நாளைக்கு லஞ்ச் டைம் சொல்றேன்..... என்றான் மணிகண்டன்.
நவீனுடன் சேர்ந்து அனைவரும் அடுத்த நாள் மதியத்திற்காக காத்திருந்தனர்.
நவீன் வாங்கி வந்த லிஸ்டில் பார்த்து இறந்துபோன காவேரியோட அக்காவிற்கு கால் செய்தான் மணிகண்டன்.
ஹலோ...... நான் ஈ1 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எஸ்.ஐ பேசறேன்......
சொல்லுங்க சார்.....
உங்க பேரு யமுனா வா?
ஆமாம் சார்......
உங்க தங்கச்சி காவேரி தான......
ஆமாம் சார்..... ஆனா எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க..... என்றாள் புரியாமல் சற்று பதட்டமாக கேட்டாள் யமுனா.
மேடம்..... டென்ஷன் ஆகாதீங்க..... உங்க சிஸ்டர் இறந்திட்டாங்க....
வாட்..... என்று சொல்லி அழுதாள் யமுனா.
நேத்து ஈவினிங் கூட நான் பேசினேனே.
தெரியும்..... கால் ரெக்கார்ட்ஸ்ல பார்த்தேன்.
சார்..... எப்படி இறந்திட்டா?......
மர்டர்.....
வாட்.... என்று சொல்லி மறுபடியும் அதிர்ச்சி ஆனாள்.
சார்..... நான் என் தங்கச்சியை பார்க்க முடியுமா?..... என்று சொல்லி அழுதாள்.
போஸ்ட் மார்டம் பண்ணிக் கொண்டு இருக்காங்க..... நீங்க வந்து சைன் பண்ணி கலெக்ட் பண்ணிக்கலாம். கிரைம் சீன் ஸ்பாட் என்பதால அவங்க வீட்டுக்கு எடுத்து போகாதீங்க..... வேற எங்கேயாவது உங்க ரிட்சுவல்ஸை வச்சிக்கோங்க......
எந்த ஹாஸ்பிட்டல் சார்......
சென்னை கீழ்பாக்கம் கவர்மெண்ட் மார்ச்சுவரில போஸ்ட் மார்டம் நடக்குது ..... என்றான் மணிகண்டன் .
ஓகே சார் ..... என்றாள் யமுனா .
###########
தொடரும் .....
அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
29
28
Trichy
Viruviruppa pokuthu
Waiting for next