• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -40

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal


ரகசிய கொலையாளி.....

பாகம் -40


இல்ல இப்போ சிபிஐ ஆஃபீஸரா கேட்கிறேன்..... சொல்லுங்க..... என்று சொல்லி சமாளித்தாள் மாயா.

ஓ..... ஓகே மேடம்..... என்று சொல்லி காவேரியின் கொலை கேஸை விளக்கமாக கூறினான். முதல் நாள் அவன் காவேரியின் சடலத்தை பார்த்ததில் இருந்து இன்று புருஷோத்தமனை ரிலீஸ் செய்தது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் மணிகண்டன்.

ஓ..... ஹூம்.... ஓ.... ஓகே..... ஹூம்
...... என்று கேட்டுக் கொண்டிருந்தாள் மாயா.

அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்துவிட்டு.....

மாமா..... எனக்கு ஒரு ஐடியா?..... இதை மட்டும் செஞ்சா கொலைக்காரனை நம்ம ஈஸியாக பிடிச்சிடலாம்.....

என்ன மாயா.....

ரஸியா தானே ஐ - விட்னஸ்.......

ஆமாம்.....

அப்போ நீங்க சாக்ஷி கிட்ட சொல்லி ரஸியாவுக்கு எல்லா ஞாபகம் வந்திருச்சு..... கொலைக்காரனை அவ அடையாளம் காட்ட போறா ன்னு நியூஸ்ல சொல்ல சொல்லுங்க..... அப்போ கண்டிப்பா அந்த கொலைக்காரன் வெளியே வருவான்.

நீ செம்ம ஐடியா டி. தேங்க்யூ சோ மச்.... நான் உடனே சாக்ஷிக்கு சொல்றேன்.

மாமா ஒரு நிமிஷம்.....

நீங்க சாக்ஷி கிட்ட கூட உண்மைய சொல்ல வேண்டாம். அவங்களும் அதை உண்மைன்னே நம்பட்டும். அப்போதான் அவங்க போடுற நியூஸ் ரியலா இருக்கும். பொய்யின்னு தெரிஞ்சா அவங்களே வந்து எக்ஸ்ட்ராவா எதையாவது சேர்த்து நியூஸ போடுவாங்க. அதனால கொலைக்காரன் இது ட்ராப்புதான்னு கண்டுபிடிச்சிடுவான்.....

கரெக்ட்டு தான் நீ சொல்றது.....
ஓகே டி..... அதே மாதிரியே சொல்றேன்..... சீக்கிரமா படுத்து தூங்கு காலையில பார்க்கலாம்...... உண்மையிலேயே உன்கூட சேர்ந்து வேலை பண்ண போறேன்னு நினைச்சா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு டி.

எனக்கும் தான் மாமா....

ஓகே டி.... பை..... குட் நைட்....

குட் நைட் மாமா.....

இருவரும் போனை வைத்து விட்டனர். மணிகண்டன் உடனே சாக்ஷிக்கு கால் செய்தான். மாயா சொன்னது போலவே கூறினான்.

சார்..... அவங்க அந்த கொலைகாரன் பேரை சொல்லிட்டாங்களா?

இல்ல சாக்ஷி..... அவங்களுக்கு சுயநினைவு திரும்பிடுச்சு.....

ஆனா சார் இந்த நியூஸ் நான் வெளியே விட்டேன்னா அந்த பொண்ணு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் இல்ல?

இல்ல இல்ல அத பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்.
நாங்க ஃபுல் போலீஸ் ப்ரொடக்சன் கொடுப்போம்.

அப்படின்னாலும் ரிஸ்க் எடுத்து.... எதுக்கு சார் இந்த நியூஸ் வெளிய விடணும்னு சொல்றீங்க.....

நான் சொல்றதை கேளுங்க சாக்ஷி ப்ளீஸ்..... என்றான் மணிகண்டன்.

நீங்க சொல்றத வச்சு நான் பார்க்கும் போது உங்களுக்கு கொலைகாரன் இன்னும் கிடைக்கல அதனால அந்த பொண்ணு பேர சொல்லி அவனை வெளியே வர வைக்க பாக்கறீங்க.....சரியா சார்?..... என்றாள் சாக்ஷி.

நீங்க மீடியால வேலை செய்யறதனால சிக்ஸ்த் சென்ஸ் நல்லா யூஸ் பண்ணி திங்க் பண்றீங்க.... நீங்க சொல்றது கரெக்ட் தான்.... ஆனா இது கொலைகாரனை நாம் டிராப் பண்றதுக்காக போடுற நியூஸ்ன்னு அவன் கண்டுபிடிக்கவே கூடாது. உங்களோட சிக்ஸ்த் சென்சை யூஸ் பண்ணி இது ஃபேக் நியூஸ் என்று அவன் கண்டுபிடிக்காம நம்ம டிராப்ல வந்து அவன் மாட்டணும்..... என்றான் மணிகண்டன்.

ஓகே சார் கண்டிப்பா....
நான் நியூஸ் ரெடி பண்ணிட்டு உங்களுக்கு மெயில்ல அனுப்புறேன்..... அதை நீங்க பாருங்க..... நீங்க ஓகே சொன்ன அப்புறமா..... நான் டெலிகாஸ்ட் பண்றேன். ஓகேவா சார்......

ஓகே சாக்ஷி தேங்க்ஸ் பை.....

பை சார்.

வேலையை முடித்த மாயா தன் லேப்டாப்பை எடுத்து பேக் செய்துவிட்டு ரூமிற்கு சென்று படுக்க நினைத்தாள். அப்போது அவளுடைய அம்மா பூர்ணிமாவின் வாயில் நுரை தள்ளி இருந்தது. அதைப் பார்த்து அலறி விட்டாள் மாயா. உடனே தன் அம்மாவை உளுக்கினாள்.

அம்மா அம்மா என்ன ஆச்சு அம்மா..... எழுந்திருங்க அம்மா ப்ளீஸ்.....

பூர்ணிமாவின் உடலில் அசைவு இல்லை....பதறிப் போனாள் மாயா. உடனே தன் போனை எடுத்து மணிகண்டனுக்கு கால் செய்தாள்.

மாமா மாமா...... என்று பதட்டமாக பேசினாள் மாயா.

என்ன மாயாவது என்ன ஆச்சு..... என்றான்
அவனும் பதட்டமாக.

மாமா உடனே வீட்டுக்கு வாங்க ப்ளீஸ்.....

என்னாச்சு மாமா டென்ஷனாகாத......என்ன ஆச்சுன்னு சொல்லு முதல்ல.....

அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அம்மா வாயிலிருந்து நுறையா வருது.....

என்ன என்ன சொல்ற.....

சீக்கிரமா வாங்க மாமா எனக்கு ஒண்ணுமே புரியல ஒரே பதட்டமா இருக்கு.

நீ கவலைப்படாத நான் உடனே வரேன் அதுக்கு முன்னாடி ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..... நான் வரத்துக்கு முன்னாடி ஆம்புலன்ஸ் வந்துருச்சுன்னா நீ அவங்கள ஏத்திகிட்டு ஹாஸ்பிடல் போ..... நானும் வந்துடறேன்....

சரிங்க மாமா நான் வைக்கிறேன்.....

இல்ல இல்ல நீ போனை வைக்காத..... நீ ரொம்ப டென்ஷனா இருக்க.... அதனால நான் போன்ல லைன்லயே இருக்கேன்.... நீ ரெடியாகு.

சரிங்க மாமா..... ஆனா மாமா ரொம்ப பயமா இருக்கு எனக்கு..... அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது இல்ல.....

கவலைப்படாத மாயா..... மாமிக்கு ஒன்னும் ஆகாது..... அவங்க ஆசிர்வாதத்தோடு தான் நம்ம கல்யாணமும் நடக்கும்.

மணிகண்டன் தன் இன்னொரு ஃபோனில் இருந்து மாயா வீட்டு லொகேஷன் போட்டு ஆம்புலன்ஸ் புக் செய்தான். ரீச்சிங் இன் டென் மினிட்ஸ் என்று காண்பித்தது.

மாயா கவலைப்படாத 10 மினிட்ஸ்ல ஆம்புலன்ஸ் வருது.....

ஓகே மாமா.... நீங்க?

நீ ஆம்புலன்ஸ்ல ஏறிட்டு எந்த ஹாஸ்பிடல்னு சொல்லு நான் உடனே வந்துடுறேன்..... நான் வீட்டிலிருந்து கிளம்பிட்டேன்..... பைக்ல வந்துட்டு தான் இருக்கேன்..... ஹெட்ஃபோன்ஸ் போட்டு தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.....

ஓகே மாமா....

மாமா ஃபர்ஸ்ட் எய்ட் மாதிரி ஏதாவது தெரியுமா....

இல்ல மாயா எனக்கு எந்த ஐடியாவும் இல்லை..... அதுவும் இல்லாம எதனால அங்களுக்கு வாயிலிருந்து நுரை வருதுன்னு தெரியல..... மே பி ஃபிட்ஸ்சா இருக்கலாம் இல்ல மாத்திரை மாத்தி போட்டு இருக்கலாம் இல்லன்னா வேற ஏதாவது பிரச்சனையா இருக்கலாம்.....நம்ம வேற ஏதாவது ஃபர்ஸ்ட் எய்டு டிரீட்மென்ட் கொடுக்க போய்...... அதுவே வேற பிரச்சனை ஆயிடுச்சு நான் என்ன பண்றது..... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நம்ம அவங்களுக்கு காம்ப்ளிகேட்டட் ஆக்கிட கூடாது....

ஆமாம் மாமா...... நீங்க சொல்றது சரிதான்.

கை காலெல்லாம் சில்லுனு ஆகாம இருக்கணும்..... அதை மட்டும் பார்த்துக்கோ தேச்சு விட்டுக்கிட்டே இரு.....

சரிங்க மாமா..... என்று சொல்லித் தன் அம்மாவின் கை கால்களை நன்றாக தேய்த்து சூடேற்றினாள்.

அம்மா..... அம்மா ப்ளீஸ்மா...... எழுந்திரிங்க மா..... நான் உங்ககிட்ட இதுக்கு மேல சண்டை போட மாட்டேன்...... என்றாள் மாயா.

ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நின்றது.

மாமா......ஆம்புலன்ஸ் சத்தம் கேட்குது மாமா...... நான் போய் கதவை திறக்கிறேன்.....

சரி மாயா சீக்கிரமா போ......

ஸ்ட்ரெச்சர் எடுத்து வந்து பூர்ணிமாவை படுக்க வைத்து தூக்கி சென்றனர். மாயா வீட்டை பூட்டிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஏறி அவர்களுடன் சென்றாள்.

அண்ணா எந்த ஹாஸ்பிடலுக்கு போறோம்?..... என்றாள் மாயா அந்த ஆம்புலன்ஸ் இல் இருந்த ஒருவரை பார்த்து.

ஏவி ஹாஸ்பிடல் மா...... என்றார் ஆம்புலன்சில் இருந்தவர்.

மாமா ஏவி ஹாஸ்பிடல்னு சொல்றாங்க..... என்றாள் மாயா.

ஓகே மாயா எனக்கு தெரியும் அது எங்க இருக்குன்னு நான் வந்துடறேன்..... அனேகமா நீங்க வரதுக்குள்ளயே நாங்க வந்துருவேன்னு நினைக்கிறேன்..... என்றான் மணிகண்டன்.

சரிங்க மாமா..... என்றாள் மாயா.

############

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.