• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி......பாகம் 41

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal

ரகசிய கொலையாளி......

பாகம் 41

அடுத்த பத்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் அடைந்தனர்.....
தீவிர சிகிச்சை பிரிவில் பூர்ணிமாவை அட்மிட் செய்திருந்தனர்.

கவலையுடன் அமர்ந்து இருந்தாள் மாயா.

அப்போது உள்ளே நுழைந்தான் மணிகண்டன்.

மாமா இன்று அழுது கொண்டு அவன் அருகில் சென்றாள் மாயா.

அவள் தோளை தடவி கொடுத்து சமாதானம் செய்தான் மணிகண்டன்.

நீ டென்ஷனா இருக்க இங்கேயே உட்கார்ந்துட்டு இரு நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்.....

இல்ல மாமா நானும் வரேன் ப்ளீஸ்..... அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு நான் கேட்கணும் ப்ளீஸ்.....

சரி வா போகலாம்.....

வெயிட்டிங் ஹாலில் அமரச் சொன்னார் நர்ஸ்.

அப்போது மணிகண்டனுக்கு சாக்ஷியிடம் இருந்து ஃபோன் வந்தது.

சாக்ஷி நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் அப்புறமா பேசறேன் என்றான் மணிகண்டன்.

ஓகே சார் உங்க மெயில் ஐடிக்கு நான் டெலிகாஸ்ட் பண்ண போற நியூஸை அனுப்பி இருக்கேன்..... நீங்க செக் பண்ணி பார்த்துட்டு எனக்கு சொன்னீங்கன்னா.... சேஞ்ஜஸ் இருந்ததுன்னா மாத்திட்டு..... அப்புறமா நியூஸ்ல டெலிகாஸ்ட் பண்ணிடுவேன்.

ஓகே சாக்ஷி ப்ளீஸ் கிவ் மி ஹாஃப் ஆன் ஹார்.... ஐ வில் செக் இட் அவுட் அண்ட் லெட் யூ நோ..... ( okay Sakshi please give me half an hour..... I will check it out and let you know ).

ஓகே சார் பை..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் சாக்ஷி.

என்னாச்சு மாமா..... என்றாள் மாயா.

இத பத்தி அப்புறமா பேசலாம் கேஸ் விஷயம்தான்.....

சரிங்க மாமா.....

பத்து நிமிடத்திற்கு பிறகு.

சார், மேடம் நீங்க ரெண்டு பேரும் உள்ள போகலாம் டாக்டர் கூப்பிடுகிறார்..... என்றார் நர்ஸ்.

பயத்துடன் உள்ளே சென்றாள் மாயா.

டாக்டர் பேசினார்.

பேஷண்டுக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன வேணும் என்றார்.

சார் நான் அந்த பொண்ணு....
என்றாள் மாயா.

நீங்க..... என்றார் டாக்டர் மணிகண்டனை பார்த்து.

சார் இது என்னோட மாமா...... என்றாள் மாயா.

ஓகே அவங்க உயிருக்கு எதுவும் ஆபத்து இல்ல..... நிறைய பில்ஸ் சாப்பிட்டுட்டு இருக்காங்க..... ஸ்டொமக் வாஷ் பண்ணியாச்சு...... இதுக்கு மேல பயமில்லை..... ஆனா ரொம்ப வீக்கா இருக்காங்க..... நீங்க ரெண்டு பேருமே போலிஸ்ன்றதுனால..... கம்ப்ளைன்ட் காப்பி இல்லாம நான் ட்ரீட்மென்ட் பண்ணிட்டேன்.

அப்படின்னு சூசைட் அட்டெம்ப்ட்ன்னு சொல்றீங்களா டாக்டர்......

ஆமாம்..... ஒரே மாத்திரையை இரண்டு மூன்று போட்டிருந்தாங்கன்னா அது ஆக்சிடெண்ட்னு சொல்லலாம்..... ஆனா இவங்க கிட்ட இருக்கிற எல்லா மாத்திரையும் இரண்டு மூன்று போட்டு இருக்காங்க..... நல்லவேளை அதுல எதுவும் ஹெவி டோஸ் இல்ல அப்படி இருந்திருந்தால் கட்டாயம் அவங்களை காப்பாற்றி இருக்க முடியாது...... என்றார் டாக்டர்.

மாயாவிற்கு கண்கள் கலங்கியது. என் அம்மா ஏன் இப்படி செய்தார் என்று நினைத்து மிகவும் வருந்தினாள்.

இன்னும் ஒன் ஹவர்ல கண் விழிச்சுருவாங்க அதுக்கு அப்புறம் நீங்க போய் பார்க்கலாம்..... என்றார் டாக்டர்.

ஓகே டாக்டர் தேங்க்யூ சோ மச்..... என்றாள் மாயா.

வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா டாக்டர்..... என்றான் மணிகண்டன்.

ப்ராப்ளம் எதுவும் இல்ல..... ஆனா இன்னைக்கு நைட்டு மட்டும் அப்சர்வேஷன் ல இருந்தா பெட்டர்ன்னு சஜஸ்ட் பண்ணுவேன்.....

ஓகே டாக்டர் நோ இஷ்யூஸ்....

கம்ப்ளீட்டா ரெக்கவர் ஆன அப்புறமே அனுப்புங்க டாக்டர்.....

அந்த சூசைட் ட்ரை பண்ணதுனால.... ஒரு மூணு செஷன் கவுன்சிலிங் வர வேண்டி இருக்கும்......

ஓகே டாக்டர்.....

அவங்க ஐ சி யு உள்ள அப்செர்வேஷன்ல இருக்கறதுனால..... அட்டெண்டென்ஸ் அங்க அளவுடு இல்ல..... சோ.... வெயிட்டிங் ஹால்ல தான் நீங்க ஸ்டே பண்ற மாதிரி இருக்கும்..... புஷ்பாக் சேர்ஸ் இருக்கு..... அட்டெண்டர் பெட்டலாம் இல்ல.....

இட்ஸ் ஓகே டாக்டர்..... நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் தேங்க்ஸ்.....

டாக்டர் ரூமில் இருந்து வெளியே வந்தனர் மணிகண்டன் மற்றும் மாயா.

மாமா.....

சொல்லு மாயா.....

நீங்க என்கூட ஸ்டே பண்ணுவீங்களா.....

கண்டிப்பா ஸ்டே பண்றேன்..... இதுல என்ன உனக்கு சந்தேகம்.....

இல்ல தெரிஞ்ச மொழிதான் இருந்தாலும் எனக்கு இந்த இடம் புதுசு அதனால யோசிக்கிறேன்..... உங்கள டிஸ்டர்ப் பண்ணவும் கஷ்டமா இருக்கு.....நைட் ஃபுல்லா சேர்ல உக்காந்துட்டு இருக்கணும்.....

என்ன பேச்சு பேசுற மாயா..... அவங்க உனக்கு அம்மா என்றால் எனக்கு அம்மா மாதிரி தான்..... மாமி ன்னு சொல்றதால..... நான் மூணாவது மனுஷன் இல்ல...... நம்ம எல்லாருமே ஒரே குடும்பம் தான்..... அவங்களுக்கு உடம்பு சரி இல்லாம இருக்கும் போது நான் எப்படி விட்டுட்டு போவேன்..... உனக்கு இங்கு படுக்க கஷ்டமா இருந்தா நீ வேணா வீட்டுக்கு போய் தூங்கு நான் அங்களை பார்த்துக்கிறேன்.

ஏன் மாமா கோபப்படுறீங்க......

கோபம் எல்லாம் இல்ல மாயா. எனக்கு உன் மேல கோபமே வராது..... நீ தங்கரீங்களா கேட்டதுனால எனக்கு கஷ்டமாயிடுச்சு...... உரிமையா என்கூட இருங்கன்னு சொல்லாம..... தங்கரிங்களானு கேட்டியே அதனால......

சாரி மாமா நான் உங்களை சரியா புரிஞ்சுக்கல.....

இட்ஸ் ஓகே..... ஏதாவது சாப்பிட்டியா.....

இல்ல மாமா வேண்டாம் பசிக்கல......

சரி வா கேண்டின் போய் காபி மட்டுமாவது குடிச்சிட்டு வரலாம்....

ஓகே மாமா எனக்கு ரொம்ப தலை வலிக்குது டென்ஷன்ல தலைவலி வந்துடுச்சு.....

இருவரும் கேண்டிலுக்கு சென்று காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தனர்.

அப்போது தன் மெயிலில் சாக்ஷி அனுப்பி இருந்த நியூஸ் மெசேஜை பார்த்தான் மணிகண்டன்.
மாயாவும் அவனுடன் சேர்ந்து அதைப் பார்த்தாள்.

மிகவும் நன்றாக பேசி இருந்தாள் சாக்ஷி. அவளுக்கு யாரோ இன்பார்மர் கூறியது போல பேசியிருந்தாள்.
ரஸியாவின் பெயர் சொல்லாமல் ஏதோ ஒரு பெண் அந்த கொலையை நேரில் கண்டாள் என்றும்..... அதிர்ச்சியின் மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சுயநினைவுக்கு வந்ததாகவும்..... கூடிய விரைவில் அந்தப் பெண்ணின் மூலம் உண்மையான கொலைகாரனை போலீசார் அரெஸ்ட் செய்து விடுவார்கள் என்று பேசினாள். அந்த கொலைகாரனால் சாட்சி சொல்ல இருக்கும் அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்று போலீசார் அந்தப் பெண்ணுக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். கொலைகாரனின் பெயரை அந்தப் பெண் கூறி விட்டதாக தகவல்..... ஆனால் போலீசார் அதை வெளியிடவில்லை..... கோர்ட்டில் அந்தப் பெண் ஆஜர் படுத்தப்பட்டு..... நீதிபதியின் முன்
சொல்லும்போது மக்கள் மற்றும் மீடியாவிற்கு உண்மையான குற்றவாளியை பற்றி தெரிய வரும்..... என்று போலீசார் கூறி விட்டனர்.

பர்ஃபெக்ட்டா இருக்கு மாமா..... என்றாள் மாயா.

ஆமாம் ரொம்ப திறமையான பொண்ணு.....

அப்படின்னா நீங்க உண்மைய சொல்லிட்டீங்களா அவங்க கிட்ட?

ஆமாம் மாயா..... அவளே கண்டுபிடிச்சிட்டா.....

ஓ..... பிரில்லியன்ட் தான்.....

ஆமாம் ஆமாம்.....

சரி சரி அத விடுங்க.....இப்போ யாரு ரஸியா கூட பாதுகாப்புக்கு இருக்கிறாங்க.

இன்னொரு பெண்ணை புகழ்வது அவளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்து ஸ்மைல் செய்தான் மணிகண்டன். பிறகு அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தான்.

ரவி மற்றும் மீனாவை அனுப்பி இருக்கேன்.

ஏன் மீனாவை அனுப்பிச்சீங்க அவ பிரக்னண்டா இருக்கா இல்ல?

அது எப்படி உனக்கு தெரியும்.....

அது வந்து அது......

மாயா சொல்லு எப்படி தெரியும்......

மாமா அந்த கேஸ் வந்து என்கிட்ட ட்ரான்ஸ்ஃபர் ஆகுதுன்னு தெரிஞ்ச உடனே..... யாரெல்லாம் அந்த கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்காங்க..... எந்த ஸ்டேஷன்...... அந்த ஸ்டேஷன்ல இருக்கிறது யாரு அப்படின்னு..... நான் ஸ்மால் இன்வெஸ்டிகேஷன் பண்ணி வச்சிருந்தேன் அதுல தெரிஞ்சுகிட்டேன்..... என்று சொல்லி சமாளித்தாள் மாயா.

ஓகே ஓகே.... நீயும் பிரில்லியன்ட் தான் மாயா.

சிரித்தாள் மாயா.

இருவரும் காபி குடித்துவிட்டு அட்டெண்டர் வெயிட்டிங் ஹாலுக்கு சென்று அமர்ந்தனர்.

###########

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.