• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி..... பாகம் -42

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal


ரகசிய கொலையாளி.....

பாகம் 42

ரஸியா ஹாஸ்பிடல்ல இருக்காங்களா இல்ல வீட்டிலையா..... என்றாள் மாயா.

வீட்ல இருக்கிறது அவ்வளவா சேஃப் கிடையாதுன்னு..... ஹாஸ்பிடல்ல தான் இருக்க சொன்னேன்.....

ஓகே ஓகே..... ஆனா மீனா எதுக்கு.....

இல்ல ரஸியாவோட அம்மா தான் லேடி கான்ஸ்டபிள் இருந்தா நல்லா இருக்குன்னு சொன்னாங்க..... அதனால பகல்ல மீனாவையும்..... ராத்திரி ரவியையும் இருக்க சொல்லி இருக்கேன்.....

ஓகே மாமா புரியுது..... ஆனா மீனா எதுவும் பிரச்சனை இல்லையா கேட்டுக்கிட்டீங்களா......

கேட்டேன் அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டா.

ஆமா நீங்க தான் அண்ணாவாச்சே..... தங்கச்சி கஷ்டப்பட்ட விட்ருவீங்களா.....

என்ன நீ இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.....

அது இல்ல மாமா.... இல்ல அது வந்து..... நீங்கதான் ஒரு முறை போன்ல சொல்லி இருக்கீங்க மீனா என்னை அண்ணனா நினைச்சு பேசுறாங்கன்னு.....

அப்படியா சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே......

இல்ல மாமா சொல்லி இருக்கீங்க.... இந்த ஸ்டேஷன்ல இருக்கிற எல்லாரும் பத்தியும் கூட சொல்லி இருக்கீங்க.....

அதெல்லாம் சொன்னனேன் எனக்கு ஞாபகம் இருக்கு...... யாரெல்லாம் வேலை செய்றாங்கன்றதெல்லாம் சொன்ன ஞாபகம் இருக்கு..... மீனா என்னை அண்ணன்னு கூப்பிடுறாங்க நான் அவங்களை தங்கச்சி மாதிரி நினைக்கிறேன் என்று சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம் இல்ல அதனால சொன்னேன்.....

வரவர உங்களுக்கு நிறைய ஞாபகம் மறதி போல மாமா.

இல்ல இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல.....

சரி சரி எனக்கு..... அந்த விக்டிம் காவிரியோட கால் டீடெயில்ஸ் கிடைக்குமா.

அதுல இருக்கிற நம்பர்ஸ் எல்லாமே செக் பண்ணி பாத்துட்டேன் மாயா..... நிறைய ஆபீஸ் கால்ஸ்....
அப்புறம் அவங்க அக்கா..... அப்புறம் ரஸியா..... அப்புறம் ரெண்டு மூணு அன்நோன் நம்பர் அது எல்லாமே செக் பண்ணியாச்சு......

மாமா இஃப் யூ டோன்ட் மைண்ட் எனக்கு நாளைக்கு அந்த லிஸ்ட் அனுப்ப முடியுமா.....

மாயா நாளைல இருந்து அது நம்மளோட கேஸ்..... இன்னைக்கு ராத்திரி 12 மணி வரைக்கும் தான் அது என்னோட கேஸ்..... நீ என்ன டீடெயில்ஸ் கேட்டாலும் நாளைக்கு காலைல உனக்கு தரேன்.

மாமா நானும் ப்ராமிஸ் பண்றேன்..... என்னோட இன்வெஸ்டிகேசன்ல நீங்களும் கூடவே இருப்பீங்க.....

மாயா இந்த கேஸ நீ தனியா சால்வ் பண்ணினாலும் எனக்கு பிரச்சனை இல்லை..... நீ கில்ட் ஃபீல் பண்ணாத.....

இல்ல மாமா இந்த கேஸ் முடிகிற வரைக்கும் உங்களோட ஹெல்ப் எனக்கு கண்டிப்பா வேணும்.....

நீ இந்த கேஸை சால்வ் பண்ணாலும் நான் சால்வ் பண்ண மாதிரி எனக்கு சந்தோஷம்தான்..... அதனால வீணா அத நினைச்சு கவலைப்படாதே.

நீங்க கூட இருந்தா தான் மாமா என்னால கேஸை சால்வ் பண்ண முடியும்.

ஓகே மாயா நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சால்வ் பண்ணலாம்..... ஒன்னு சொல்லவா

சொல்லுங்க மாமா......

நாளைக்கு நீயும் டியூட்டில ஜாயின் பண்ணனும்..... எனக்கும் வேலை இருக்கு..... அதனால......

அதனால.....

எங்க அம்மாவ வந்து மாமியை பார்த்துக்க சொல்லவா.....

ஆனா மாமா எங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்களே......

இதுவே அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் புரிஞ்சுக்க நல்ல ஒரு சந்தர்ப்பமாக அமையும் இல்ல.....

நீங்க சொல்றது கரெக்ட் தான் மாமா ஆனா எங்க அம்மா ஏற்கனவே உடம்பு முடியாம இருக்காங்க..... இந்த நேரத்துல அவங்களுக்கு இன்னும் டென்ஷன் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்..... நான் வேணும்னா என் சுப்பீரியர் கிட்ட பேசி இன்னும் ஒரு டூ டேஸ் எங்க அம்மாவுக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் லீவு கேட்கவா.....

இல்ல மாயா..... ஃபர்ஸ்ட் டே டூட்டில ஜாயின் பண்றத மட்டும் எப்பவுமே சேஞ்ச் பண்ணாத..... உனக்கு எங்க அம்மா வருவது பிடிக்கலைன்னா நான் வேணும்னா பாத்துக்கவா......

மாமா..... அத்தைன்னு இல்ல..... உங்களையும் அம்மாவுக்கு பிடிக்காது......

மாயா...... நாளைக்கு எங்க அம்மாவ வர சொல்றேன்..... அவங்க வேண்டான்னு பிடிவாதமா மறுத்துட்டாங்கன்னா..... அதுக்கு அப்புறமா வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்.

ஓகே மாமா.....

அப்போது சிவகாமி மணிகண்டனுக்கு கால் செய்தார்.

சொல்லுங்கம்மா......

என்னப்பா போய் பாத்துட்டு ஃபோன் பண்றேன்னு சொன்ன..... பண்ணவே இல்ல..... மாமி எப்படி இருக்காங்க.....

பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லம்மா மாத்திரை எதுவும் தப்பா மாத்தி போட்டு இருக்காங்க அதனால அப்படி ஆயிருக்கு...... இப்போதைக்கு ஐசியூவில தான் இருக்காங்க. நானும் மாயாவும் அட்டெண்டர் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.....

சரிப்பா நாளைக்கு நான் வந்து பார்க்கலாமா..... அவங்க என்ன பாக்க ஒத்துப்பாங்களா.....

இப்பதான் நானும் மாயாவும் அதை பத்தி பேசிட்டு இருந்தோம்...... நாளைக்கு நீங்க தான் மாமியை பார்த்துக்கணும்..... மாயா நாளைக்கு தான் டூட்டில ஜாயின் பண்ற அதனால அவளுக்கு லீவு கிடைக்காது.... எனக்கும் கேஸ் விஷயமா போக வேண்டி இருக்கு.....

சரிப்பா எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல நான் பாத்துப்பேன் ஆனா அவங்க ஒத்துக்கணுமே......

இது தாம்மா நல்ல சந்தர்ப்பம்..... உங்களோட நல்ல குணத்தை அவங்க புரிஞ்சுக்கறதுக்கு.....

சரிப்பா நாளைக்கு காலைல நான் வரேன்..... நீங்க ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க.....

சரிங்க மாமா நீங்க வீடு பூட்டிகிட்டு பத்திரமா இருக்கீங்களா.....

ஆமாம் பா நீ கிளம்பின உடனே வீடு பூட்டிக்கிட்டு சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டு வந்து படுத்துட்டேன்...... அப்படியே கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்..... திடீர்னு எழுந்து பார்த்தால் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு..... என்னாச்சுன்னு தெரியலையே.... அதான் கேட்கலாம் உனக்கு கால் பண்ணேன்.

இப்ப தெரியுதா நான் ஏன் உங்களுக்கு கால் பண்ணலன்னு...... எனக்கு தெரியும் நீங்க மாத்திரை போட்டு கொஞ்ச நேரம் தூங்கிடுவீங்க..... அதான் நீங்களே கால் பண்ணும் போது சொல்லிக்கொள்ளலாம் என்று தான் நான் பண்ணல.....

சரிப்பா..... மாயா பக்கத்தில் இருக்காளா என்கிட்ட பேசுவாளான்னு கேக்குறியா......

இருங்கம்மா இதோ தரேன்......

இல்லப்பா நீ முதல்ல அவ கிட்ட கேளு என்கிட்ட பேச விருப்பமான்னு......

சரி மா.... என்று சொல்லிவிட்டு.
மாயா எங்க அம்மா லைன்ல இருக்காங்க நீ அவங்க கிட்ட பேசுவியான்னு கேட்டாங்க..... உனக்கு பேச விருப்பம் இருந்தா உன்கிட்ட ஃபோன் கொடுக்க சொன்னாங்க.....

கொடுங்க மாமா.....

ஹலோ அத்தை......

மாயா..... என் கண்ணு..... எப்படிம்மா இருக்க.....

நான் நல்லா இருக்கேன் அத்தை நீங்க எப்படி இருக்கீங்க.....

நல்லா இருக்கேன் மா..... நீ அம்மாவ பத்தி கவலைப்படாதம்மா..... நான் நல்லபடியா அங்களை பார்த்துக்கிறேன்..... நீ தைரியமா வேலைக்கு போ.....

சரிங்க அத்தை..... ஹெல்ப் பண்ணு கேக்குறதுக்கு முன்னாடியே நீங்க செய்ய நினைக்கிறீங்க இதிலிருந்து தெரியுது..... நீங்க எவ்வளவு நல்லவங்கன்னு..... அது எங்க அம்மா புரிஞ்சுக்கிற காலம் சீக்கிரமா வரும்னு நம்புறேன்.....

ரொம்ப சந்தோஷம் டா கண்ணு உன் கிட்ட பேசினதுக்கு.....

எனக்கும் தான் அத்தை......

சரிமா ரெண்டு பேரும் சாப்டீங்களா.....

சாப்பிட்டோம் அத்தை நீங்க.....

சாப்பிட்டேன் மா..... நாளைக்கு நேர்ல பார்க்கலாம்..... ரெண்டு பேரும் தூங்கி ரெஸ்ட் எடுங்க நாளைக்கு வேலைக்கு போகனும் இல்ல.....

சரிங்க அத்தை பை குட் நைட்..... என்றாள் மாயா.

பை மா..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் சிவகாமி.

பிறகு மணிகண்டன் மற்றும் மாயா இருவரும் வெகு நேரமாக தங்கள் குடும்பத்தை பற்றியும் கேஸை பற்றியும் பேசிவிட்டு அந்த சேரிலேயே படுத்து தூங்கினார்கள்.

#############

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.










 
Last edited: